ட்விட்டர்- குறுஞ்செய்திகளின் உலகம்

இன்று துவங்கி வாரா வாரம் டிவிட்டரில் நான் ரசித்ததை நகலெடுத்து இங்கு ஒட்டலாம் என்று நினைக்கிறேன். பெரிய பெரிய பத்திரிக்கைகளே இப்படி ஓசியில் பிழைப்பு நடத்தக் கூச்சப் படாதபோது நமக்கு மட்டும் என்ன பெரிய இது வேண்டிக் கிடக்கிறது!!!

@orupakkam @nchokkan ஆயுர்வேத ஷேவிங் ஜெல்லைப் பற்றிய சுஜாதாவின் கமெண்ட்: நுரை வருவதற்குள் நரை வந்துவிடும் போல இருக்கிறது 🙂Fri Jul 30 17:32:34 via web

நேர்காணல் ஒன்றில், திரைப்படம் ஒன்றுக்கு வசனம் எழுதுவது கஷ்டமா என்ற கேள்விக்கு சாருவின் பதில்: ‘அது எவ்ளோ கஷ்டம்னு எனக்குத்தான் தெரியும்.’Sat Jul 31 02:34:12 via web

உறவினர் திருமணம். கிளம்பும்போதுதான் அழைப்பிதழைப் பார்த்தேன். சீர்காழி சிவசிதமபரத்தின் கச்சேரியாம். ஆசிகளைத் தபாலில் அனுப்பி விட்டேன்.Sun Aug 01 05:03:35 via web

எதிர்வீட்டுக்காரர் திருப்பதி போய்வந்தார். தேவஸ்தான முத்திரையோடு பிரசாத பார்சல் தந்தார். பிரித்தால் உள்ளே லட்டு, வடை, ஒரு Dora ஸ்டிக்கர்Mon Aug 02 04:36:00 via web

கடல்நீரைக் குடிநீராக்குவதில் விஞ்ஞான முறைப்படிக் கலைஞர் ஊழல் செய்ய வாய்ப்பு. கடல்நீரில் 60ppb தங்கம் உள்ளது. விசாரிக்கவேண்டிய விஷயம்தான்.Mon Aug 02 07:52:19 via web

|ஆடிபெருக்கை முன்னிட்டு ரூ.1 கோடி |மதுபானம்:”டாஸ்மாக்’கில் “ஸ்டாக்’|| இத்தயார் நிலை வேறு எத்துறையிலுண்டு.குடிமகன்களின் நலன் காக்கும் அரசு!Mon Aug 02 11:06:26 via Seesmic Web

ராஜேஷ்குமார் கனவில் வந்தார். ஜெயமோகனின் பதிவுகளை வாசிப்பதாகவும் ஒவ்வொன்றும் தனித்துவமான கிரைம் சப்ஜெக்ட்தான் என்றும் பாராட்டினார்.Tue Aug 03 02:30:41 via web

கேள்வியையே பதிலாகத் தருபவர்களுக்கு என்னுடைய பதில் ஒன்றுதான்: “ஏன்?”Tue Aug 03 05:16:14 via web

‘சிற்சில கிளிஷேக்களைக்கூட விட்டுவிடாமல் அதையும் படமாக்கியிருப்பதில் வெற்றி கண்டிருக்கிறார் இயக்குநர்’ இது பாராட்டாமாம். எகொஇ சரவணன் :((((Tue Aug 03 21:05:39 via web

‘உன்னுடையெ க்ரியேட்டிவிட்டிக்கு நீ எங்கேயோ இருக்க வேண்டியவன்’ என்றான் நண்பன். ‘அங்கெல்லாம் சம்பளம் கம்மி’ என்றுவிட்டேன்.Wed Aug 04 07:01:38 via web

இன்னைக்காவது வேலை செஞ்சு வேர்வை சிந்தி உழைச்சு சம்பாரிச்சு மதியம் சாப்பாடு சாப்பிடணும்.. நண்பரே எத்தனை நாளைக்குதான் ஓசில வாங்கிதருவாரு!Thu Aug 05 05:24:04 via Echofon

உதாரணம் ஆன்டனி: ஏய் உன்ன ‘மம்மி’ ஆக்கவா? கிளியோ: சீ #cleAjokesFri Aug 06 04:24:34 via web

அந்த லைட் மியூஸிக் பாடகருக்கு இன்னும் பணம் தரலைன்னு எப்படிச் சொல்றே ? அதான் கொக்கு நறநற கோழி நறநறன்னு பாடுறாரே- ஹாஹாஹா செம ஜோக்கு…;-)Fri Aug 06 13:23:06 via Echofon

@kavi_rt >பொழைப்பு< அட… பஞ்சாயத்து நடத்தற பொழைப்புல இருக்க சொகம் உங்களுக்கு புரியாது. அது ஒரு புனிதபிம்ப நிலை. யூ கமிங் தேர்?Fri Aug 06 14:03:30 via web

@kavi_rt இதெல்லாம் கவிதையா? “லட்டு <enter> பூந்தி <enter> கவிதை! <enter> – நகுலன்” இப்படிப் போட்டாலாவது ஒத்துக்கலாம் 🙂Fri Aug 06 14:07:38 via web

கேள்வி எழுப்பும் வரை பதில் தூங்கத்தான் செய்யும்.Sat Aug 07 04:41:46 via Echofon

இனி ட்விட்டர் குறித்த சில எண்ணங்கள்.

நீங்கள் டிவிட்டரிலேயே வாழ வேண்டிய அவசியமில்லை- நான் காலை ஒரு கால் மணி நேரம், இரவு ஒரு பத்து நிமிடம்: அவ்வளவுதான் டிவிட்டரில் செலவிடுவது (அவ்வப்போது எட்டிப் பார்ப்பது இந்தக் கணக்கில் இல்லை ஹி… ஹி… )

ட்விட்டர் உலக சக்ரவர்த்தி யார் என்று கேட்டால் என்னைப் பொறுத்தவரை snapjudgeதான். ஆயிரம் பேருக்கு மேற்பட்டவர்களைத் தொடர்கிறார்- அவர்களை வகை வகையாகப் பட்டியலிட்டு நமக்கு அரும்பெரும் சேவை செய்கிறார்- நான் படிக்கும் டிவிட்டுகளில் பெரும்பாலானவை அவரது பட்டியல்களில் ஒன்றைத் தொடர்ந்துதான்- அவர் புண்ணியத்தில் என் பொழுதுகளில் எண்பது சதவிகிதம் காப்பாற்றப்பட்டு விட்டது.

எல்லாரையும் தொடர வேண்டிய அவசியமில்லை: நீங்கள் வாசிக்க விரும்புபவரை தேவையான பட்டியலில் சேர்த்துக் கொள்ளுங்கள், அது போதும். இது என் பட்டியல்.

தமிழ் டிவிட்டர்கள் ட்வீட்டுகளுக்கு வலப்புறம் இருக்கும் நட்சத்திரக் குறியீட்டைக் க்ளிக்கி பேவரிட் செய்வதில்லை என்பது பெரிய குறை. இப்படி செய்தால் இரு வசதிகள்: நமக்குப் பிடித்த ட்வீட்களைப் பகிரக் கொடுக்கலாம்; இந்த ட்வீட்களின் பதிவோடையை நம் ரீடருக்குள் வரவழைத்து காலத்துக்கும் சேமித்துக் கொள்ளலாம்- அந்த வகையில் இது புக்மார்க் மாதிரி செயல்படுகிறது. அந்த வகையில்தான் சென்ற ஏழு நாட்களின் ட்வீட்களில் நான் ரசித்தவற்றை இப்போது சிரமில்லாமல் எடுத்துத்  தருகிறேன்.

favstar.fm என்று ஒரு தளம் இருக்கிறது. அதைக் கொண்டு நாம் நமக்குப் பிடித்தவருக்குப் பிடித்த ட்வீட்டுகளை  ஒரே  கிளிக்கில் வாசிக்கலாம்.

ட்விட்டரைப் பழகிப் பாருங்களேன்…

குறிப்பு: இங்கு ட்வீட்களைப் பதிக்க கருங்குருவி நூற்குறிப்புக்குட்டியைப் பயன்படுத்தி உள்ளேன்.

Advertisements

33 thoughts on “ட்விட்டர்- குறுஞ்செய்திகளின் உலகம்

 1. ஆகா… எழுத நேரம் இல்லங்கறதுக்காக இப்படியா?? மத்த எழுத்தாளர்கள் உங்களால்தான் கெட்டுப் போகப் போறாங்க.. பாத்து…

    1. நேரம் இல்லைதான்… ஆனாலும் உண்டு பண்ணிக்கிட்டேன்!

     உண்மைய சொன்னா இந்த பிசிக்கு உரியவரு ஊருக்குப் போயிருக்காரு- இன்னிக்கு புல்லா கணினியே கதி!

     நாளைக்குப் பழைய நிலை: இந்த வாரம் நம்ம கணினி வந்திரும்னு நினைக்கிறேன், பாக்கலாம்.

     1. அப்போ கணினி இல்லாமதான் பதிவு போடறீங்களா??

      பிசிக்குரியவருக்கு புண்ணியமா போகும். எங்கள காப்பாத்துறாரே! (ஆனா இன்னிக்கு மிஸ் பண்ணிட்டாரு)

      (ஜஸ்ட் பார் சிரியஸ்.. நாட் சீரியஸ்!)

      1. ௧. நான் என் மனைவின் அண்ணன் பிசியை அவர் இல்லாதபோது கள்ளத்தனமாக பயன்படுத்துகிறேன்.

       ௨. அவர் என்னதான் ஸ்ட்ரிக்டா இருந்தாலும் என்கிட்டே இருந்து உங்கள மாதிரி ஆளுங்களைக் காப்பாத்த முடியாது. ஏன்னா நாங்க எதையும் ப்ளான் பண்ணி செய்யறவங்க.

         1. நாங்க பவுன்சர்லையும் சிக்சர் அடிக்கறவங்க! இந்த அடியெல்லாம் நமக்கு சர்வ சாதாரணம்..

          (யம்மா.. என்னா அடி?)

 2. ரெம்ப நாளுக்கப்புறம் உங்க தளத்துல பின்னூட்டம் எனக்கு வேலை செய்யுது. நன்றி.

  இந்த டுவீட் சேவை மாபெரும் சேவை. என்னைப் போல சோம்பேறிக்கு உங்க சேவை ஒரு வரப்பிரசாதம். தொடருங்கள் ப்ளீஸ்.

  1. அதுவா கிரி சார், ரெண்டு வாரத்துக்கு முதல் அல்-கொய்தா காரனுக தங்களோட அமைப்புக்கு எதிரா பிரச்சாரம் செய்யுராருன்னு சொல்லி பாஸ்கர் சாரோட ப்ளாக்க ஹேக் பண்ணி கமெண்ட்ஸ தூக்கிட்டானுக.. அப்புறம் ஒரு வழியா போராடி போன வாரம்தான் மீட்டெடுத்தாரு(தேன்).. நீங்க என்னடான்னா.. ஒரு வாரமா எட்டி கூட பாக்காம, கமென்ட்ஸ் வேல செய்யலன்னு ரீலு விடறீங்க…

   ஆக்சுவலா.. பாஸ்கர் சார் வீட்டுல ஆணி ரொம்ப அதிகமாம்.. அதுதான் புடுங்கறாரு.. டிஸ்டர்பன்ஸ் இருக்கக் கூடாதுன்னு கமென்ட்ஸ் க்ளோஸ் பண்ணிட்டாரு. அவரை டிஸ்டர்ப் பன்னுரதையே தொழிலா கொண்ட ஒரு நலன்விரும்பி(?!)தான் ஈமெயில்ல உருட்டி மிரட்டி கமென்ட்ஸ் இனேபில் பண்ண வச்சாருன்னு நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..

   1. கிரி அவர்களே, அபராஜிதன் அவர்கள் சொல்றதை நம்பாதீங்க. நாங்க லாடனுக்கே லாடம் கட்டுவோமில்லே! யாருக்கும் பயப்படாது இந்த சிங்கம் (உங்களுக்கு தனிப்பட்ட முறையில அனுப்பற மெயிலை எல்லாம் நான் கேட்டுக்கிட்டபடி அப்பப்ப அழிச்சிடறிங்க தானே?)

    இதப் படிச்சா, “நீயே ஒரு ஆணி! நீ இன்னாத்த ஆணி புடுங்கறது?” அப்படின்னு எங்க வீட்டுக்காரம்மா சத்தம் போடும்- அதனால ஒரு பாதுகாப்புக்கு இந்த பின்னூட்டத்தை ஒளிச்சு வெக்கலாம்னு பாக்கறேன்…

    நண்பர் அபராஜிதனுக்கு நம்மளைப் பத்தித் தெரிய வேண்டியது நிறைய இருக்கு- நீங்க அவசரப்பட்டு இதைப் பத்தி பதிவு கிதிவு போட்டுறாதீங்க. ஹி ஹி …

      1. ஆகா.. நல்ல ஹின்ட்டு.. இத அப்பிடியே லாடனுக்கு பார்வர்ட் செய்ஞ்சுட வேண்டியதுதான்.. கிரி சாரோட மெயில அவுரு “பாத்துப்பாரு!” என்ன சொல்றீங்க?

       1. என்னது, லாடனோட நீங்க தொடர்பு வெச்சிருக்கீங்களா- பார்வர்டு பண்றேன்னு சொல்றீங்களே?

        வாங்க வாங்க, ஒபாமா உங்களை அவசரமாப் பாக்கணுமாம்..

        1. என்ன இது.. ஒசாமா பத்தி பேசினா நீங்க ஒபாமாகிட்டே கோத்து விடறீங்க? அவரும் நம்ம தோஸ்த் தான்.. ஒண்ணும் பன்னமாட்டாரு…

         //யாருக்கும் பயப்படாது இந்த சிங்கம் //

         ரிப்பீட்டு…

         1. !
          ஒபாமாவுக்கு இந்த விப்பீட்டு தெரிஞ்சா ரிவீட்டுதான்: உங்க வீட்டுக்கு ஆட்டோ வராது: ஹெலிகாப்டரே அனுப்புவாரு, பெரிய மன்சன்.

          1. ஹா ஹா.. உங்க டைமிங் சூப்பர்…

           ரிவிட்டா? அவருக்கு ரிவிட் அடிக்க மட்டும்தான் தெரியும். எங்களுக்கு வெல்டிங் டிங்கரிங் முதற்கொண்டு எல்லாம் தெரியும்.

           அவருக்குத் தெரியாதுங்கற நம்பிக்கைலதான் இதெல்லாம். (நம்பிக்கைதானே வாழ்கையோட அச்சாணி?)

  2. கமெண்ட் எழுதணும்னு கட்டாயம் இல்லீங்ணா…

   இவன் குறைவா டுவிட்டுவதே பெரிய சேவைன்னு பக்கத்தால இருக்கறவரு சொல்லுவாரு.. அவரைக் கண்டுக்காதீங்க.

   நிச்சயமா வாரா வாரம் இந்த வேலையை செய்யறேன்- எனக்கும் ஒரு வாரத்து டுவிட்டுகளை ரிவைஸ் பண்ணின மாதிரி ஆச்சு.

   “வட போச்சே!”க்கு அடுத்தபடி “வரலாறு முக்கியம் அமைச்சரே: என்பதுதான் தமிழ் ப்ளாகுகளில் அதிக அளவில் காணப்படும் பின்னூட்டமாம்- ஐ நா சபையிலே பேசிக்கிட்டாங்க.

   நிச்சயமா நானும் நீங்க கேட்டுக்கிட்டபடி வரலாறைத் தவறாம பதிவு செய்யறேன்.

   1. ஓகே. நீங்க அன்பா கேட்டுக்கொண்டபடி நான் இனி அடிக்கடி பின்னூட்டமிட்டு உங்க ஆணிய டிஸ்டர்ப் பண்ணமாட்டேன். நீங்க தவறாம வரலாற்ற பதிவு செய்யுங்க…

    1. சாமி, அது கிரி சார் கிட்ட சொன்னது- இங்க வந்து விழுந்திருச்சி.

     நீங்க பாட்டுக்கு எவ்ளோ வேணா கமெண்ட் பண்ணுங்க… உங்களுக்கு இல்லாததா!

     1. அதுதானே! ஒரு நிமிஷம் ஹாய் கோர்ட்டுக்கு போலாமான்னுகூட யோசிச்சுட்டேன்!

      என்ன இது? ஒரு சாதாரண ஆசாமியப் போயி சாமின்னுட்டு.. நான் அவன் இல்லை!!

     2. அதுதானே! ஒரு நிமிஷம்
      ஹைகோர்ட்டுக்கு போலாமான்னுகூட யோசிச்சுட்டேன்!

      என்ன இது? ஒரு சாதாரண ஆசாமியப் போயி சாமின்னுட்டு.. நான் அவன் இல்லை!!

      1. சீ சீ நல்லா இருக்காது…

       ஹைகோர்ட்டே ஹைகோர்ட்டுக்குப் போவதா!

       (என் சார், என்னைய என்ன உலுக்கு வேணா உலுக்குங்க, தப்பில்ல- நான் வேலை வெட்டி இல்லாத அராத்து. மேலிருப்பானப் போய் அப்படி மடக்கி மடக்கி கேள்வி கேக்கறீங்களே, அவரு ஆராய்ச்சி பண்ணுறத விட்டுட்டு ஊருக்கு வந்துரப் போறாருங்க… பாவம் மனுஷன், உங்ககிட்ட போயி மாட்டிக்கிட்டாரு!)

       1. //ஊருக்கு வந்துரப் போறாருங்க… //

        அடடா.. அவரு ஊர்ல இல்லையா?

        //பாவம் மனுஷன், உங்ககிட்ட போயி மாட்டிக்கிட்டாரு!//

        அடடா.. ஒரு சின்ன கல்குலஷன் பிழையால ஆரம்பிச்ச கேள்வி, அவரோட கமென்ட் பாப்புலேஷனை இப்படிக் கூட்டும்னு நான் சத்தியமா எதிர்பாக்கல சார்.

        //நான் வேலை வெட்டி இல்லாத அராத்து. //

        பட் உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு..

        1. ஒரு முடிவோடதான் வந்திருக்கீங்களா? வரிக்கு வரி மேற்கோள் காட்டி திருப்பி அடிக்கறீங்க!
         நீங்க அபராஜிதன் இல்ல சார், அயரா ஜித்தன்!

 3. சரி ஓகே.. இன்னிக்கு ஓவரா அடிச்சிட்டோம்… பாஸ்கர் சார் நொந்து நூடில்ஸாயிருப்பாரு.. அனேகமா அந்த பீசி அவுட்டுன்னு நெனைக்கறேன்.. இனிமே அந்த பிசிக்குரியவரு ஹெல்ப் பண்ணுவாருன்னா நெனக்கறீங்க?

  சரி ஓகே. இன்னிக்கு மேட்ச் ஓவர்.. இன்னொரு நாள் பாக்கலாம். பை பை..

  1. ரொம்ப நன்றி- நேற்று மாலை என்னால் கணினியைக் கைப்பற்ற முடியாத நிலை. அதனால் பதில் எழுத தாமதமாகி விட்டது.

   அவ்வளவுதானா? இன்னும் இருக்கா?

   (பின்னூட்டம் போட்டா பதில் இன்னிக்கு ராத்திரிதான் வரும்: இன்று நான் பணிக்கு செல்ல வேண்டியிருக்கிறது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s