கனவு காணுங்கள்

Guardian

நான் தற்போது மிசியோ காக்கு (Michio Kaku ) எழுதிய “Physics of the Impossible ” என்ற புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்து இருக்கிறேன். அவர் ஒரு விஞ்ஞானியாம்- ஒரு பல்கலைக் கழகத்துல நாற்காலி எல்லாம் வைத்துக் கொண்டிருக்கிறார் என்றால் அவர் பெரிய ஆள்தான் என்று நினைக்கிறேன். அது தவிர பத்திரிக்கைகளில் எழுதுகிறார், புத்தகங்களும் எழுதி இருக்கிறார். அப்படி எழுதிய ஒரு புத்தகம்தான் இது.

நாம் முடியாது என்று சொல்கிறோம் இல்லையா, அட்டமா சித்திகள் மாதிரி விஷயங்களை-

  1. அணிமாஅணுவைப் போல் சிறிதான தேகத்தை அடைதல்.
  2. மகிமாமலையைப் போல் பெரிதாதல்.
  3. இலகிமாகாற்றைப் போல் இலேசாய் இருத்தல்.
  4. கரிமா – மலைகளாலும், வாயுவினாலும் அசைக்கவும் முடியாமல் பாரமாயிருத்தல்.
  5. பிராத்தி – மனத்தினால் நினைத்தவை யாவும் தன் முன்னே அடைய, அவற்றைப் பெறுதல்.
  6. பிராகாமியம் – கூடு விட்டுக் கூடு பாய்தல்.
  7. ஈசத்துவம்நான்முகன் முதலான தேவர்களிடத்தும் தன் ஆணையைச் செலுத்தல்.
  8. வசித்துவம் – அனைத்தையும் வசப்படுத்தல். (நன்றி விக்கிப்பீடியா)

இதுவெல்லாம் எந்த அளவுக்கு அறிவியல் விதிகளின்படி சாத்தியமாக இருக்க முடியும் என்று விவாதிக்கிறார் காக்கு: நீங்கள் ரொம்ப பகுத்தறிவோடு நினைக்கிற மாதிரி, “இதெல்லாம் மூட நம்பிக்கை” என்று சொல்வதில்லை அவர்.

synchronicityயோ என்னவோ, இந்தப் புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருக்கும்போது இந்த செய்தி கிடைத்தது: அட்டமா சித்திகளில் எட்டாவது சித்தியான வசித்துவம் நமக்கு ஏறத்தாழ கை வந்து விட்டது: இதற்காக மூச்சை அடக்குவது மூச்சாவை அடக்குவது என்று எந்த கஷ்டமும் பட வேண்டாம்: நமக்கு உதவுவதற்கான உபகரணங்கள் (எவ்வளவு பொருத்தமான சொல்: தமிழா உன்னை அடிச்சுக்க ஆள் இல்லைடா!) சந்தைக்கு வந்து விட்டன: LA Timesஐப் பாருங்கள்- Mind reading is on the market .

தியானம் செய்வதன்  மூலம் zombie கூட்டங்களை நிர்மூலம் செய்கிறது மாதிரியான கேம்கள் தொடங்கி, சக்கர நாற்காலியை நினைத்த திசையில் செலுத்துவது வரைக்குமான தொழில் நுட்பம் சந்தைக்கு வந்து விட்டதாம். ஆச்சரியமாக இல்லை?

நான் எழுத நினைத்த விஷயத்துக்கு வருகிறேன்.

நம் ஊரில் தரமான அறிவியல் புதினங்கள் (அவற்றின் நோக்கங்கள், லட்சணங்கள்) குறித்த ஒரு விழிப்புணர்வே ஏற்படுத்த வேண்டும் போலிருக்கிறது: தற்போது ஒரு குறிப்பு மட்டும் தருகிறேன்.

மிச்சியோ காக்கு தனக்கு உந்து சக்தியாக இருந்து தன்னை அறிவியல் குறித்துப் பயில வைத்து, தன்னை விஞ்ஞானியாக மாற்றியது என்று எதை சொல்கிறார் தெரியுமா? Flash Gordon கதைகளை.

தான் மட்டுமல்ல, தன்னைப் போன்ற பல விஞ்ஞானிகளும் இது போன்ற அதீத அறிவியல் ஆதாரமற்ற கற்பனைப் புனைவுகளால்தான் அறிவியலுக்கு வந்ததாக சொல்கிறார் அவர். நம்ப முடியாத விஷயங்களில் நம்பிக்கை ஏற்படுத்துவதே அறிவியல் கதை, கட்டுரைகளின் கடமை என்று பெரிய  குண்டைப் போடுகிறார் அவர் (நம்ம அப்துல் கலாம் சொன்ன மாதிரி- “கனவு காணுங்கள்!” என்கிறார்).

இதைப் பாருங்கள்:

அவர் உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறபோது ஒரு அறிவியல் சந்தை (Science Fair) நடந்ததாம். காக்கு என்ன செய்தார் தெரியுமா? பக்கத்திலிருந்த ஒரு தொழிற்சாலைக்குப் போய் நூற்று எண்பது கிலோ ட்ரான்ஸ்பார்மர் வயர்- ஸ்க்ராப்பில் கிடந்தது- இரவல் வாங்கி வந்து தன் பள்ளியின் மைதானத்தில் ஏறத்தாழ இருபத்திரெண்டு மைல் சுற்றளவுக்குக் கட்டினாராம். ஒரு வீட்டுக்கு உபயோகப்படுகிற மின்சாரத்தை அதைக் கொண்டு செய்த உபகரணத்தில் செலுத்தி, நம்பினால் நம்புங்கள், பூமியின் காந்த வெளியை விட இருபதாயிரம் மடங்கு தீவிரமான காந்த வெளியை உருவாக்கினாராம் இந்தச் சின்னப் பையன்!

தற்போது ஆறு பில்லியன் டாலர் செலவில் lhc என்று ஒன்றை செய்திருக்கிறார்களே, அது மாதிரி ஒரு இயந்திரம்தானாம் இதுவும்.

எதற்கு சொல்கிறேன் என்றால், உங்கள் வீட்டில் இப்படி எல்லாம் செய்கிறேன் என்று உயர்நிலைப் பள்ளியில் படிக்கிற பையன் நினைப்பானா, அல்லது நினைக்கதான் விட்டு விடுவீர்களா?

யோசித்துப் பாருங்கள், இந்த மனநிலை எப்படி சாத்தியமாகிறது என்று.

!அவரது புத்தகங்களைத் தரவிறக்கம் செய்து படிக்க முடியும் என்பது ஆறுதலான செய்தி)

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s