கேள்வியின் நாயகனே…

பெரும்பாலும் சுட்டிகள்தான் இந்தப் பதிவில் இருக்கப்போகின்றன.

உலகின் ஏழு முக்கியமான கணிதப் புதிர்களில் ஒன்றான P=NP என்ற சமன்பாடு குறித்து விடை கண்டுபிடித்து விட்டதாக நம் ஊரில் IIT , மும்பையில் படித்த வினய் டியோலாலிகரின் பெயர் இன்று பிரசித்தமாகி விட்டது.  இந்த புதிருக்கு விடை காண்பவருக்கு ஒரு மில்லியன் டாலர் பரிசு காத்திருக்கிறது. ஹ்யூலட் பாக்கார்ட் நிறுவனத்தில் விஞ்ஞானியாகப் பணியாற்றும் இவரது தீர்வை இன்னும் மற்ற விஞ்ஞானிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. இருந்தாலும் இவரது அணுகுமுறை சிறப்பாகவும் பல இடங்களில் கையாளத்தக்க புது வழிகளைத் திறப்பதாகவும் இருக்கிறது என்று விஞ்ஞானிகள் பாராட்டுகிறார்களாம்- The Big Questions

இந்த விஷயத்தில் நான் ஏதும் அறியாதவனாக இருப்பினும், தமிழில் இது போன்ற விஷயங்கள் பேசப்பட வேண்டியது அவசியம் என்பதால் என் ப்ளாகில்  இதை குறித்து வைத்துக் கொள்கிறேன்- அவ்வளவுதான்.

யாரும் மூச்சு விடாமல் இருப்பதை விட, ஒருத்தராவது இது பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது என்று சொல்வது மேல் அல்லவா?

நான் புரிந்து கொண்டது சரியாக இருந்தால், P =NP என்பது உண்மையா இல்லையா என்ற கேள்விக்கு பொருள் என்னவென்றால்- ஒரு கேள்வி இருக்கிறது. அதற்கு விடை சொல்ல முடியும். ஆனால் அந்த விடையை சரி பார்க்க வேண்டுமல்லவா?

P =NP சரிதான் என்றால் விடை இருக்கிற கேள்விகள் அனைத்தையும் சரி பார்த்து சொல்லி விட முடியும். அப்படி இல்லை என்று சொன்னால், நான் தருகிற விடை சரியானதாக இருக்கலாம், ஆனால் அது சரியா தவறா என்று உங்களால் சரி பார்த்து சொல்ல முடியாது!

கேட்பதற்கு எளிதாக இருந்தாலும் விடை காணக் கடினமானதாக இருக்கிறதாம் இது- கணிப்புத்துறையினர்- Association for Computing Machinery – நபரொருவர் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் இதற்கான விடைகளை சமர்ப்பிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்திருக்கின்றனர், என்பதைப் பார்த்தால் எத்தனை பேர் முட்டி மோதி மண்டையை உடைத்துக் கொண்டிருக்கின்றனர் என்பது குறித்து ஒரு ஐடியா கிடைக்கிறது, இல்லையா?

நமக்கே இதற்கான விடை தெரிகிறது: புதிர்கள் என்று இருந்தால் அவற்றில் பலவற்றுக்கு விடை என்று ஒன்று இருக்கும். ஆனால் அத்தனையையும் சரி பார்க்க முடியாது, சரிதானே? எளிதாக இருக்கிறது இந்த எண்ணம், அதனால் தான் நிறைய பேர் இதனோடு போராடுகிறார்கள்: சொல்லப் போனால் நம்மைப் போன்ற சாமானியர்களால் விடை காணக்கூடிய புதிர் இது என்று கூட இந்த சுவையான கட்டுரையில் சொல்கிறார்கள்: படித்துப் பாருங்கள், அபாரமாக இருக்கிறது இது.

நம் ஊர்க்காரர், சரி பார்க்க முடியாத விடைகள் இருக்கின்றன என்பதை கணித சமன்பாடுகள் மூலம் நிறுவி இருக்கிறார் என்று தெரிகிறது: அதைதான் சரி பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் மற்ற விஞ்ஞானிகள்.

மிக எளிய விளக்கம் இங்கே.

இது குறித்து இங்கே எளிமையாக, ஆனால் இன்னும் அதிகமாக, எழுதி இருக்கிறார்கள்: AOL

அதை விட சற்று விவரமான விளக்கம் இங்கே: MIT– இந்த பிரச்சினையின் தீவிரத்தையும் அதற்கான விடையின் பயன்பாடுகளையும் அழகாக சொல்லியிருக்கிறார்கள்.

அதி தீவிரமாக, கணிதத்தில் தேர்ச்சி உள்ளவர்களுக்கு உவப்பான முறையில் இது குறித்து இங்கே இருக்கிறது.- Gödel’s Lost Letter and P=NP

இது விஷயமாக தமிழில் யாராவது எழுதி இருந்தால் சொல்லுங்கள், உங்களுக்கு நன்றி சொல்லி படித்துப் புரிந்து கொள்ள முயற்சி செய்கிறேன்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s