எழுதிய பதிவை அழிப்பது எப்படி?

பிரபலமான வலைப் பதிவர்களே தாங்கள் எழுதிய பதிவுகளைப் பின்னொரு நாளில் அழிப்பதைப் பார்த்திருக்கிறோம். நானே கூட ஓரிரு முறை அப்படி செய்திருக்கிறேன்.

ஆனால் பதிவு செய்து அழித்தபின்னும் அந்த பதிவு புதைக்கப்படாத பிணம் போல கூகுள் ரீடரில் நமது குற்றத்துக்கு சாட்சியாக உட்கார்ந்து கொண்டிருக்கிறதே, அதை என்ன செய்ய?

தப்பு செய்தாலும் சரியாக செய்ய வேண்டும், இல்லையா?

நீங்கள் எழுதிய பதிவை அழிக்கக் கூடாது- அதற்கு பதிலாக அந்த இடத்தில் அதே உரலியில் வேறு ஒரு விஷயத்தை இட்டு விட வேண்டும்… அப்போது நீங்கள் முதலில் எழுதிய பதிவு ரீடரிலிருந்து காணமல் போய், திருத்தி எழுதிய பதிவு அந்த இடத்தில் வந்து விடும்- கொலையை மறைக்க தப்பான தடயத்தை விட்டுச் செல்கிறோம் இல்லையா, அந்த மாதிரி.  உதாரணத்துக்கு இந்த மாதிரி பதிவு பண்ணி வைக்கலாம்:

“வட போச்சே!

மேலதிக விவரங்கள் இங்கே …

Advertisements

10 thoughts on “எழுதிய பதிவை அழிப்பது எப்படி?

 1. அடடா.. இந்த மெத்தட்ல தான் நான் எல்லாருக்கும் ஆப்படிச்சுக் கொண்டிருந்தேன்.. அதுக்கும் வேட்டு வச்சுட்டீங்களே.. நியாயமா?

  அதுசரி கணினி ஹாஸ்பிடல்ல இருந்து டிஸ்சார்ஜ் ஆயிருச்சா? இல்ல, பிசிக்குரியவர் இன்னிக்கும் அப்பீட்டா?

  1. இன்றோ நாளையோ எதிர்பார்க்கிறேன்.

   நீங்க நினைச்ச மாத்திரி பிசிகுரியவர் அவசர வேலையா ஊருக்குக் கிளம்பிட்டாரு. எல்லாம் உங்க ஆசி.

   1. அப்ப உங்க கணினியோட நிலைமை இன்னிக்கோ நாளைக்கோன்னு இருக்கு!

    நீங்க சொல்றதப் பாத்தா உமை மாதிரி தெரியலையே!?! ஏதோ நீங்களே அவரை கடத்திட்டுப் போய் மொட்டமாடில கட்டி வச்சுட்டு அவரோட பிசில வெளயாடற மாதிரில்ல இருக்கு? டவுட்டா இருக்கே?

     1. ஆகா… என்ன ஒரு அதிர்ஷ்டம் உங்களுக்கு… இன்னிக்குப் பாத்து வீட்டுக்கு ஒரு விசிட்டர் வந்து மூணு மணிநேரம் அறுவை… என்னைய ஓட்டு ஓட்டுன்னு ஓட்டிட்டாங்க… (கடைசில நானும் பொறுக்காம அவங்கள ஓட்டினதுல வீட்ட விட்டு ஓடிட்டாங்க!)

      ஓகே. மை விண்டோஸ் செவன் இஸ் பேக்!.. சாப்ட்வேர் போட்டுட்டு இருக்கேன். உங்க பிசி எப்பிடி?

      1. நம்ம பிசி வந்தாச்சு. இந்த தடவை விண்டோஸ் செவென் போட்டிருக்கேன். முன்ன பின்ன பாத்ததில்ல. பழகித்தான் தெரிஞ்சிக்கணும். பாக்கலாம்.

       உங்க வீட்டுக்கு வந்த விருந்தாளியை விசாரிச்சதா சொல்லுங்க. உங்க உறவு மேலும் வலுவடைய உளமார்ந்த வாழ்த்துகள் 🙂

       1. வெல்கம் டு விண்டோஸ் செவன். எல்லாம் பழகப் பழகத்தான் புரியும். வாழ்த்துக்கள்.

        ஆகா என்னா ஒரு கொலைவெறி..

  1. நானும் இப்போ ஒரு மாசமாத்தான் செவன் யூஸ் பண்றேன்.. அதுக்கு முன்னாடி ஒரு பத்து மாசமா விஸ்டா யூஸ் பண்ணதால பெருசா பிரச்சன இல்ல. இன்னும் பிரச்சன வரல, வந்தா பாப்போம்.. அதனால உங்க ஐயங்கள தெளிவு பண்ண முடியுமாநியது இன்னும் ஐயமாத்தான் இருக்கு.. முயற்சிக்கிறேன்…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s