இன்னொரு சிறிய அறிவிப்பு

நான் இன்செப்ஷன் குறித்து எழுதும்போது யோக வாசிட்டம் பற்றிப் பேசினேன் இல்லையா?

அந்தப் புத்தகத்தை ஒருவரிடம் இரவல் கொடுத்திருந்தேன், அதை இன்று மதியம் வாங்கி வந்து விட்டேன். யோக வாசிட்டக் கதைகள் வலையில் பரவலாக இல்லை.

நானே அதை எனக்குத் தெரிந்த அளவில் செய்வது என்று தீர்மானம் செய்திருக்கிறேன். தத்துவங்களைப் பெருமளவில் குறைத்து, ஒரு அறிவியல் அல்லது அதீதக் கற்பனைக் கதையை எழுதுகிற மாதிரி எழுதும் எண்ணம் இருக்கிறது, பார்க்கலாம்.

கதைகள் மரணமொக்கையில் பதிவாகும்.

Advertisements

12 thoughts on “இன்னொரு சிறிய அறிவிப்பு

 1. எழுதுங்கள். நன்றாக இருக்கிறது.வாசிக்க ஆவலாய்ருக்கிறேன்.
  இன்னொன்று மரணமொக்கையில் சொல்வனம் விமர்சனத்தில் ராமன் ராஜாவின் கட்டுரை பற்றி ஒன்றும் சொல்லவில்லை.

 2. பல பணிகளுக்கிடையே இங்கே வந்து பின்னூட்டமிட்டதற்கு நன்றி – நான் முன்னமே சொன்னது போல் கணினியில் செலவிடும் நேரம் குறைவாகவே இருக்கிறது.

  இங்கு என்ன வேண்டுமானாலும் எழுதலாம்- ஐந்து நிமிட வேலை, மீறிப் போனால் பத்து நிமிடம். திரு ராமன் ராஜா அவர்களின் கட்டுரை குறித்தெல்லாம் எழுதுவதென்றால் குறைந்தது ஒரு மணி நேரம் யோசிக்கவும் எழுதவும் தேவைப்படும். அடுத்த சொல்வனம் கூட வந்து விடும் போலிருகிறது- முடிந்தால் இன்று இரவு எழுதுகிறேன்.

  உங்கள் ஆதரவுக்கு நன்றி…

 3. உங்கள் நேரமின்மை வியாதிதான் எனக்கும் வியாதி கூடிக்கொண்டு செல்லுகிறது.
  அதைப்பற்றி கட்டாயம் எழுதவேண்டுமென்றில்லை.
  ஆனால் அவருடைய கடந்த கட்டுரைக்கும் இந்தக்கட்டுரைக்கும் நிறைய வேறுபாடு.
  அறிவியல் தளத்திலிருந்து நுகர்வோர் தளத்திற்கு இறங்கிவிட்டார்.மேலோட்டமாகச்சொல்லி எல்லாவறையும் புறங்கையால் தள்ளிவிட்டுச்சிரிக்கிறார்.ADHD அடம்பிடிக்கும் குழந்தை என்கிறார்.நான் மருத்துவக்கண்ணோட்டத்தில் பார்க்கிறேன் .அதுதான் உங்கள் பார்வை எப்படியிருக்கும் என்றறிய ஆவல்

  1. வம்பா? 🙂

   நான் எதையும் நல்லபடியாகத்தான் பார்க்க ஆசைப்படுகிறேன். அப்படி ரொம்ப மனசு நொந்து ஒரு விஷயத்தைக் குறித்து கண்டபடி (ஆமாம், சென்சார் எதுவும் செய்யாமல், மனக்கண்ணில் ‘கண்ட’ படி) எழுதிவிட்டால், அப்புறம் தர்ம நியாயங்கள் விழித்துக்கொண்டு என்னை மன்னிப்பு கேட்க வைத்து விடுகிறது. என்ன செய்ய?

   ஒரு கதை சொல்கிறேன் கேட்கிறீர்களா?

   ஒரு குடும்பம் இருந்ததாம். அங்கிருந்து ஒரு பெண் வேறு வீட்டுக்குப் போனாளாம்- அந்த வீடும் இவளுக்கு ஒரு வகையில் சொந்தம்தான். அங்கே அவள் கஷ்டப்பட்டு பிள்ளை பெற்று வளரத்து ஒருவாறு வாழ்ந்து வருகையில் ஒரு நாள் புக்ககத்தில் அவர்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கும் இவள் பிள்ளைகளுக்கும் சண்டை வந்து விட்டதாம். படாத கஷ்டம் பட்டதாம் அவள் குடும்பம்- இன்னதென்று சொல்ல முடியாது.

   அவளுக்கு இருந்த ஒரே நம்பிக்கை அவளது தாய் மாமன் வந்து ஏதாவது உதவி செய்வான் என்பதாம். அவன் வீட்டுப் பிள்ளைகளும், “ஆய்! ஊய்!” என்று ஆதரவுக் குரல் கொடுக்காமல் இல்லை. ஆனால் அந்த அளவில் தாய் மாமன் நின்று விட்டார்- “உன் மாமியை மீறி நான் என்னப்பா செய்யட்டும்? என் அன்பும் ஆதரவும் உனக்கு எப்போதும் உண்டு,” என்று ஆசீர்வாதம் மட்டும் மறக்காமல் தந்தார்.

   ஒரு வழியாக பிரச்சினைகள் எல்லாம் ஒருவாறு அடங்கிய நிலையில் அவள் பிள்ளைகள் இருப்பதில் ஏதாவது தேற்றி வாழ வழி பார்க்கலாம் என்று முடிவு பண்ணினார்களாம். தாய் மாமன் பிள்ளைகள் இன்னும் “ஆய்! ஊய்!” என்று ஆதரவுக் குரல் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்- ஆனால் அந்தக் குரல்களைக் கொண்டு அவள் அன்றாட ஜீவனம் நடத்த முடியுமா? ஏதோ சாப்பிட்டோம், தூங்கினோம் என்று வாழ்வாதாரங்களைத் தக்க வைத்துக் கொண்டு இருந்தார்கள்.

   அப்போது அவளது பிள்ளைகளில் ஒருவன், கொஞ்சம் விளையாட்டுப் பையன் என்று வைத்துக் கொள்ளுங்கள்- குழந்தைகள் பிறக்கும்போதே சிரிப்பைத் தொலைத்து விட்டா பிறக்கிறார்கள்? அதைக் காலம்தானே துடைத்தெறிய வேண்டும்!- தொலைக்காட்சிப் பெட்டியில் எது எதையோ பார்த்து விட்டு நண்பர்களோடு சேர்ந்து ரசிப்பதும் அது குறித்து விவாதிப்பதுமாகப் பொழுது போக்கிக் கொண்டிருந்தானாம்.

   அது தூரத்தில் நின்று “ஆய்! ஊய்!” என்று குரல் கொடுத்துக் கொண்டிருந்த தாய் மாமன் பிள்ளைமார்களுக்குக் கேட்டு விட்டது. வந்ததே கோபம்! “நீ இருக்கிற இருப்புக்கு என்னடா விளையாட்டு!” என்று முகத்தில் அடிக்கிற மாதிரிக் கேட்டான் அவர்களில் ஒருவன்.

   பாவம், இவன் என்ன செய்வான்? மற்றவர்களுக்கு இருக்கிற சராசரி உணர்வுகள் கூட எனக்கு இருக்கக் கூடாதா என்று கேட்கவா முடியும்? ஆத்திரமும் அழுகையும்தான் அவனுக்கு இருக்க வேண்டிய நேர்மையான உணர்ச்சிகள் என்று விதிக்கப்பட்டிருக்கிறது.

   ஆத்திரப்பட வழியில்லை. அழத்தான் முடியும்.

   அழுதான்: http://kiruthikan.blogspot.com/2010/08/blog-post_18.html

   இது போன்ற குரூர வதைகளின் குரூரம் கூட நியாயமானதாகத்தான் இருக்கிறது. அந்த நியாயத்தை நிறுவுவது அதைவிடக் குரூரம்.

   இன்று மதியம் இதைப் படித்ததிலிருந்து இது என் மனதை உறுத்திக் கொண்டிருந்தது: கொட்டித் தீர்த்து விட்டேன்.

   சூடு ஆறியதும், நியாயங்களின் குரல் ஓங்கி ஒலிக்கும்: இதை நீக்கினாலும் நீக்கி விடுவேன். நம்ம நிலைமை அப்படி.

   அதனால்தான் ஒருத்தரைக் குறை சொல்லி எழுதத் தோன்றினாலும் எழுதுவதில்லை: எழுதிய பின், உன் உணர்ச்சிகள்தானே உன்னை இப்படி எழுத வைத்தது என்று உண்மை உள்ளத்தைத் தைக்கிறது. நியாயத்தைப் பற்றி நான் என்ன கண்டேன்!

   என்னென்னவோ சொல்லி விட்டேன், தவறாயிருந்தால் மன்னித்து விடுங்கள்.

 4. உங்கள் கருத்தும் கவலையும் நியாயமானதே. Actor -observer difference. களத்தில் நிற்பவர்களுக்கும் புலத்தில் நின்று பார்ப்பவர்களும் ஒரு நிகழ்வை இரு விதமாக விளங்கிக்கொள்வார்கள். நாங்கள் உணர்வதற்கும் எம்மைப்பார்த்துக்கொண்டிருப்பவர் உணர்வதற்கும் வேறுபாடு இருக்கிறது.இன்றைக்கு அனேகரால்(ஆபத்தில்லாதவாறு) எழுதக்கூடிய விஷயங்களாக இருப்பது மேலோட்டமான விஷயங்கள்தான். இலக்கியம் கூட படைப்பது சிரமம்.கஷ்டங்களை எடுத்துச்சொன்னால் அவர்களுக்கு அதுவே கஷ்டமாகிவிடும். ஆனால் அவர்கள் எழுதிக்கொண்டிருக்கட்டும்.மனத்தை ஆற்றி பழைய தெம்பைக்கொண்டுவரும்.

  நீங்கள் உங்களுக்குப்பட்டதை எழுதுங்கள். அது உங்கள் கருத்து.ஓ இப்படியும் யோசிக்கலாமே என்று பார்வை கொஞ்சம் மேம்படும். அதில் மனவருத்தப்பட என்ன இருக்கிறது.
  நீங்கள் குறைநிறைகளை எழுதவேண்டும் அப்பொழுதுதானே எழுதுபவர்கள் வளரமுடியும்.மரணமொக்கை சொல்வனம் விமர்சனப்பக்கமல்லவா? நியாயம் அனியாயத்தைவிட, தரவுகளையே தவறாகத்தந்தால் அதைச்சுட்டிக்காட்டலாமா?

  நான் வாயைக்கொடுத்துக்காரியத்தைக்கெடுத்துவிட்டேனோ.

  1. மிக்க நன்றி- தவறுகளை சுட்டிக் காட்டுவதும், அதை ஏற்றுக்கொள்வதும்தான் மனிதன் மேன்மையடைய வழி. என் தவறையும் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. இன்று திருத்தி விடுகிறேன் 🙂

 5. அடக்கடவுளே மேலே ஏதாவது தவறுகளைச்சுட்டிக்காட்டினேனா என்ன.தவறுகளைச்சுட்டிக்காட்டாமல் விடுவது இன்றையகாலத்தில் தவறில்லாமால் இருக்கிறது.ஏனென்றால் தவறைக்காட்டபோய் அகாலத்தில் தவறவேண்டி நேரலாம்.உங்கள் சூழ்நிலையைப்பொறுத்தது வீணாக அலட்டிக்கொள்ளவேண்டாம்.எழுத்து மன உளைச்சலைத்தருமானால் ஏன் எழுதுவான். சிலருக்கு மற்றவர்களை இறக்கி எழுதினால்தான் தூக்கமே வருகிறது.சும்மாவே அப்படி எழுதப்படுவதனால் தவறுகளைச்சுட்டிக்காட்டினாலும் காழ்ப்புணர்ச்சி என்றுவிடுகிறார்கள். திருத்துவதை விட்டு பகைமை உணர்ச்சி வளர்க்கிறார்கள்.
  நீங்கள் உங்கள் நிலையை உணர்ந்து ஏற்றாற்போல செயற்படுங்கள். நா ஏதோ ஒரு பேச்சுக்கு சொல்லிவிட்டேன்.நான் சொல்வதெல்லாம் சரியல்ல.
  மற்றது உங்கள் தவறுகளை த்திருத்திவிட்டீர்களென்றால் தவறுகளைத்திருத்துவது எப்படி என்று ஒரு பதிவு போடுங்கள்.
  நேரத்த்தோடு விளையாடுகிறேன். அடுத்தவாரம் சந்திக்கிறேன்.

  1. அப்படி எல்லாம் இல்லை- நீங்கள் என்ன சொல்ல வேண்டுமோ அதை சொன்னீர்கள், சரியான சமயத்தில் சொன்னீர்கள். மிக்க நன்றி. நான் ஒரு வகையான பட்ச வாதத்தால் பீடிக்கப்பட்டிருந்தேன். நீங்கள் சுட்டிக் காட்டியதும் இப்போது கொஞ்சம் குணமாகி விட்டதுபோல் தெரிகிறது: தொடரட்டும் உங்கள் பணி. இந்த சேவை எங்களுக்குத் தேவை!!! 🙂

 6. உங்கள் விமர்சனக்கட்டுரையில் நன்றி சொல்லும் காட்சியை நீக்கிவிடுங்கள் ப்ளீஸ்.அது அந்தக்கட்டுரையின் நோக்கத்தை இல்லாமல் செய்து விடுகிறது.சுயவிளக்கம் என்பதும் கொஞ்சம்
  நீங்கள் என் வற்புறுத்தலுக்கு இணங்கியதுபோல தோற்றம் வருகிறது.
  நீங்கள் எழுதிய சில த்ரவுகளைச்சேர்த்திருந்தாலே ராமன் ராஜா கட்டுரையில் பலன்ஸ் வந்திருக்கும்.அப்போதுதான் சரியா தவறா என்ற விவாதம் தொடங்கும்.இல்லையென்றால் விவாதம் பொருளாதாரப்பின்னணியை மாத்திரம் மையங்கொள்ளும்.தடுப்பூசிக்கொள்ளை,மருந்துக்கொள்ளை வரிசையில் டிஎஸெம் கொள்ளை என்றாகிவிடும்.
  ஸ்கிசோப்ரெனியா வியாதி சவாலாக விளங்குகிறது.
  வரக்கூடியவர்களை அடையாளங்கண்டு முன்னரேயே சிகிச்சை வழங்கலாமா என்ற யோசிக்கிறார்கள்.அதன் விளைவுதான் psychosis risk syndrome. அதில் அபாயங்கள் இருக்கின்றன இல்லையென்றில்லை.மருந்துகளை விட எண்ணவழிச்சிகிச்சை மூலம் அவர்கள் வாழ்க்கையின் ஸ்ட்ரெஸ் ஐக்கையாளப்பழக்கலாம்.எல்லா மருத்துவர்களும் மருந்து சிபார்சு செய்வதற்கான அதிகாரத்தை அவர்களில் இல்லாதாக்கலாம்.
  இப்படி அதில் சொல்லப்பட்ட பல விடயங்களில் ஆழமான பார்வைகள் இருக்கின்றன.
  இவை பற்றி நானும் எழுத வேண்டும் என்று நினைத்தேன்.உங்கள் பார்வையையும் அறிந்து கொண்டால் நன்றாயிருக்கும் என்று நினைத்தேன்.

  இன்னொன்று இங்கே டிஎஸெம் விட கேஸ்/முத்தின கேஸ் என்ற வகையீடுதான் கிடைக்கிறது.
  இப்படிச்சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாதல்லவா?.அங்கத்தில் குறைபாடுள்ளவர்களை மாற்றுத்திறனாளிகள் என்கிறோம். கண் நோய் பற்றி எழுதும் ஒரு கட்டுரைக்கு அரைக்குருடு குருடு என்று தலைப்பிடுவோமா.காதுக்கும் அப்படியே.
  ஆனால் மனநோயைப்பற்றி எழுதும்போது அப்படித்தலைப்பிடமுடிகிறது. ஆங்கிலத்தில் மனக்குறைப்பாட்டு நோய்கள் பற்றிய வார்த்தைகளை இப்படிப்பயன்படுத்தி எழுதியிருந்தால் http://www.sane.org/stigmawatch/stigmawatch.html என்ற அமைப்பு கேள்வியெழுப்பியிருக்கும்.

  எழுதுபவர்களிடம் இன்னும் இந்த விழிப்புணர்வு வரவில்லை.
  நேரமில்லை இல்லையென்று சொல்லி சொல்லி எழுதிவிட்டுவிடுகிறேன்.
  நன்றி.

 7. நான் dsm குறித்து எழும் விவாதங்களை ஒரு ஆறு மாதங்களாக என்று நினைக்கிறேன், கவனித்து வருகிறேன். மேல் நாடுகளில் இப்படிப்பட்ட விவாதங்கள் பொதுத் தளத்தில் நடப்பது மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால் நம் ஊரில் அப்படி எதையும் காணோம். அனேகமாக அது அமலானதும் நாமும் அதை நடைமுறைப் படுத்துவோம் என்று நினைக்கிறேன். சரிதானா நான் சொல்வது?

  அந்த வகையில் திரு ராமன் ராஜாவின் கட்டுரை, ஒரு விவாதத்தைத் தொடங்கி வைக்கிறது என்ற வகையில் பாராட்டப்பட வேண்டிய ஒன்றே என்று நினைக்கிறேன்.

  என் வருத்தம் அவர் அதன் நிறை குறைகளை முழுதுமாக அலசவில்லை என்பதே. கொஞ்சம் விளையாட்டுத்தனமாக, இந்தப் பிரச்சினையின் தீவிரத்தன்மையை, தெரிந்தோ தெரியாமலோ குறைத்து மதிப்பிட்டு, வேடிக்கையாக எழுதி விட்டார். அந்த வகையில்தான் அவர் முத்தின கேஸ் என்று எழுதியிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். நான் அவர் எழுதியதை நியாயப் படுத்தவில்லை.

  விளையாட்டுப் பேச்சு, நகைச்சுவை கட்டுரைகள் இவற்றில்தான் ஒரு சமுதாயத்தின் சென்சார் ஆகாத பார்வை தெளிவாகத் தெரிய வரும் என்று தோன்றுகிறது. அந்த வகையில் அவர் நம் சமுதாயத்தின் உணர்வுகளைத்தான் பிரதிபலித்திருக்கிறார். நீங்கள் சொல்வது போல் இதை ஆஸ்திரேலியாவில் செய்திருக்க முடியாது- ஏன், இன்னும் கொஞ்ச நாளில் இங்கேயே செய்ய முடியாது.

  உண்மையில் மன அளவில் பாதிக்கப்பட்டவர்கள் இங்கே வேடிக்கைக்குரியவர்களாகத்தான் இருக்கிறார்கள். அதை இது போன்ற சொல்லாடல்கள் உறுதி செய்வது வருந்தத்தக்கது. அந்த வகையில் நீங்கள் சொல்வது சரியே.

  என்னை நீங்கள் வற்புறுத்தியதாக நான் கருதவில்லை. அறிவுறுத்தியதாகத்தான் நினைக்கிறேன். நான் பெரும்பாலும் உணர்ச்சிகளின் அடிப்படையில் எழுதுபவனாதலால், நான் எழுதும் விஷயங்களில் ஒரு சந்தேகம் வருவதைத்தான் நான் விரும்புகிறேன். அதனால் இயன்ற அளவில், என் எண்ணங்களோடு உணர்ச்சி வேகம் குறித்த தகவலையும் தருவதை வழக்கமாக வைத்துள்ளேன் 🙂

  அந்த வகையில்தான் நான் அப்படி எழுதியது. இருந்தும், திருத்தி எழுதுவது நம் வாடிக்கை என்பதனால், உங்கள் பெயரை மட்டும் இருட்டடிப்பு செய்து விட்டேன்.

  நன்றி- நீங்கள் தொழில்முறைத் தேர்வுகளில் முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். கூடவே, நீங்கள் ஒரு கொடி காட்டினால் போதும், நான் இந்த ப்ளாகுக்கு ஸ்டடி ஹாலிடேஸ் விட்டு விடுகிறேன். 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s