ட்விட்டர்- படித்ததில் பிடித்தது

சென்ற வாரத்தின் எனக்குப் பிடித்தட் ட்வீட்டுகளை இதுவரை இடுகை இடவில்லை. ஏன் என்ன என்று ஒருத்தரும் கேட்கவில்லை. அதற்கெல்லாம் அசந்து விடுவோமா என்ன?

வந்துட்டேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏன் !

ஷேக்ஸ்பியரின் நாடகங்களைக் கூட சேரியில்தான் படமாக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள் போல. ஸ்பீல்பெர்கைக் கூட திட்டுவார்கள். ஒரே குஷ்டமய்யாMon Aug 09 00:58:35 via web

’அப்பா, படம் வரைஞ்சிருக்கேன், பாரு, ப்யூட்டிஃபுல் சொல்லு’ என்கிறாள் மகள், வருங்காலத்தில் பெரிய இலக்கியவாதியாக வருவாள்போல!Sun Aug 08 03:35:39 via web

சப்டைட்டிலும் அதற்கு அடிக்குறிப்பும் போடுமளவு ஆழமான படம் எடுங்களேன் என்றால் என் சட்டையையும் பேன்டையும் மாற்றிமாற்றி பார்க்கிறார் இயக்குநர்.Mon Aug 09 01:16:54 via Echofon

காசு,கடவுள் என்கிற இரண்டு கோட்பாடுகளில்தான் உலகம் இயங்குகிறது. இரண்டுமே என் புரட்சிகர தோழர்களுக்கு பிடிப்பதேயில்லை!Tue Aug 10 10:51:41 via Echofon

ஈ ஓட்டும் குறிப்பு: அமெரிக்கக் கொசுக்களை ரெண்டு கையால் தட்டிக் கொல்வதை விட ஒரே கையால் அபகரிப்பது எளிது.Tue Aug 10 17:54:01 via web

‘ஒரே நேரத்தில் தெலுங்கு, தமிழ் ஆங்கில்த்தில் பேசி அசத்திய ஸ்டாலின்’ #தினத்தந்தி – ‘ஹலோ’ என்று சொல்லியிருப்பாரோ?Wed Aug 11 08:56:46 via web

முரசொலி வீக்லியாக வர ஆரம்பித்து விட்டது. சினிமா செய்திகள்; கலர் படங்கள். ரகளை. பெயர்தான் குமுதம் என்று இருக்கிறது. முரசொலியே பெட்டர் இல்ல?Thu Aug 12 04:11:08 via web

கடலெண்ணெய் லிட்டர் 100 ரூபாய், பெட்ரோல் லிட்டர் 50 ரூபாய். இனி பஜ்ஜியை பெட்ரோலில் சுடுவார்கள் போல #விலைவாசிThu Aug 12 05:43:48 via web

எறிகற்கள் கிடைக்காத அபலைகளுக்கெல்லாம் ட்விட்டரே கதி.Fri Aug 13 07:50:29 via Echofon

என் ட்விட்டை யாரும் படிக்காதீங்க. நீங்கல்லாம் படிக்கணும்னு நான் ட்விட்டலை. #வருங்கால-ட்விட்டியவாதியாக-ப்ராக்டீஸ்.!!Fri Aug 13 15:26:22 via web

18 thoughts on “ட்விட்டர்- படித்ததில் பிடித்தது

 1. //சென்ற வாரத்தின் எனக்குப் பிடித்தட் ட்வீட்டுகளை இதுவரை இடுகை இடவில்லை. ஏன் என்ன என்று ஒருத்தரும் கேட்கவில்லை.//

  அடடா.. கேக்காம விட்டாலாவது இவரு கழுத்தறுக்க மாட்டாருன்னு நம்ம்ம்ம்ம்ம்பி ஏமாந்துட்டனே…

  //கடலெண்ணெய் லிட்டர் 100 ரூபாய், பெட்ரோல் லிட்டர் 50 ரூபாய். இனி பஜ்ஜியை பெட்ரோலில் சுடுவார்கள் போல//

  அப்போ கார கடலெண்ணையிலயா ஓட்டுவாய்ங்க?

  //காசு,கடவுள் என்கிற இரண்டு கோட்பாடுகளில்தான் உலகம் இயங்குகிறது.//
  காசேதான் கடவுளடா…

  டிஸ்கி: என்னோட கமெண்டுக்கு யாரும் பதில் போடாதீங்க.. (பாஸ்கர் சார், உங்களுக்கும்தான்..) நீங்க பதில் போடணும்னு நான் கமென்ட் அடிக்கல..

 2. உங்க முன்னெச்சரிக்கை உணர்வைப் பாராட்டும் அதே வேளையில், நீங்க சும்மா இருந்தா நாங்க விட்டுருவோம்ன்னு நினைக்காதீங்கன்னு அன்போடு பின்னெச்சரிக்கை செய்கிறேன். அடாது மழை பெய்தாலும் விடாது பிலிம் போடுபவன் #சென்னைத்தமிழன்.

  காரைக் கடலெண்ணையில ஓட்டுவாங்களா மாட்டாங்களான்னு தெரியாது, ஆனா இந்த ப்ளாக்கு வழக்கம் போல விளக்கெண்ணையில்தான் ஓடும்.

  காசேதான் கடவுள்னா கடவுள்தான் காசா? அடா புடா போட்டாலும் நாங்க கேள்வி கேப்போம், பதில் போடுவோம்.

  1. //அடாது மழை பெய்தாலும் விடாது பிலிம் போடுபவன் #சென்னைத்தமிழன்//

   என்னா ஒரு பழமொழி.. சென்னைத்தமிழன் மானம் காக்க பின்னூட்டமிட்ட திரு. பாஸ்கர். வாழ்க.. வாழ்க…

   //இந்த ப்ளாக்கு வழக்கம் போல விளக்கெண்ணையில்தான் ஓடும்//

   படிச்சா பேதி வரும்னு சிம்பாலிக்கா சொல்றீங்க..

   //கடவுள்தான் காசா?//

   ஆமா சார், இப்பெல்லாம் கடவுள்தான் பலபேருக்கு ஏ.டி.எம்..

   //அடா புடா போட்டாலும் நாங்க கேள்வி கேப்போம்//

   அட(டா) நான் சும்மா சொன்னத இப்புடி பிடிச்சுகிட்டீங்களே.. நீங்க கூட உங்க பழமொழில அ”டா”து வி”டா”துன்னு விடாம டா போடுறீங்களே.. இது நியாயமா?

 3. //படிச்சா பேதி வரும்னு சிம்பாலிக்கா சொல்றீங்க..//

  இந்த பீதி தேவையில்லாதது என்பதற்கு எந்த பாதிப்பும் இல்லாமல் நிற்கிற நீங்களே சான்று….

  டா போட்டதுக்கு மன்னிச்சுக்குங்கங்க…

  //அங்கது மழை பெய்தாலும் விங்கது பிலிம் போடுபவன் #சென்னைத்தமிழன்//

  இப்போ திருப்தியா!

 4. //இந்த பீதி தேவையில்லாதது என்பதற்கு எந்த பாதிப்பும் இல்லாமல் நிற்கிற நீங்களே சான்று…//

  நாங்கெல்லாம் ரொம்ப முன்னெச்செரிக்கைகாரங்க.. உங்களோடது மாதிரி வில்லங்கமான ப்ளாக்ஸ் படிக்கறதுக்கு தனியா சில டீம்ஸ் வச்சிருக்கோம். அவங்க ஹாஸ்பிடல், போஸ்ட்மார்ட்டம் செலவையெல்லாம் என்னோட பேங்க் அக்கவுன்ட் பாத்துக்கும்..

  //அங்கது மழை பெய்தாலும் விங்கது பிலிம் போடுபவன் #சென்னைத்தமிழன்//

  ஹாஹஹா.. என்னால முடியலே..

  1. அதை அப்படியே மெயின்டெயின் பண்ணுங்க…

   (கூட்டமா வந்து கும்மாம இருந்தா சரி!- என் கவலை எனக்கு 😦 அவ்வ்வ்வவ்…))

   1. சேச்சே.. நான் எப்பவுமே எனக்குப் பிடிச்சத தனியாதான் செய்வேன்.. கும்முறதும் அப்பிடித்தான்..

    ஒண்ணு சொல்றேன் கேட்டுக்கங்க.. நான் ஒரு கமென்ட் போட்டா நூறு கமென்ட் போட்ட மாதிரி.

    (வாசிக்கறதுக்கு சம்பளம் கொடுக்கவே நான் வேலைக்கு போகனும்போல இருக்கு.. இதுல கமென்ட் போடுறதுக்கும் டீமா?? ஸ்ஸ்ஸப்பா என்னமா சமாளிக்க வேண்டியிருக்கு..)

    1. //வாசிக்கறதுக்கு சம்பளம் கொடுக்கவே நான் வேலைக்கு போகனும்போல இருக்கு.. இதுல கமென்ட் போடுறதுக்கும் டீமா??//

     ஹலோ…

     அது நான் பேச வேண்டிய டயலாக்!

       1. இதுக்குத்தான் காசு மிச்சமாகுதேன்னு கோயில் வாசல்ல தேங்காய் பொறுக்குறவங்களயெல்லாம் வேலைக்கு வைக்கக்கூடாதுங்கறது..

        (பாருங்க.. டீம் மெம்பர்ஸ் எல்லாருமே அவங்க பாஸ் மாதிரியே நடந்துகிட்டா டீம் எப்படி விளங்கும்?!?!)

        (இனிக்கும் நீங்க ப்ரீயா சார்?)

        1. என்னை என்ன வேணா சொல்லுங்க- என் சங்கத்தாரை அவமானப்படுத்தினா பொங்கிடுவேன் பொங்கி!

         ஒரு முக்கியமான வேலையா அரை நாள் விடுப்பு எடுக்க வேண்டியதா போச்சு . ஆச்சு கிளம்பியாச்சு.

         1. இப்படி ஒரு லீடர் கிடைக்க சங்கம் குடுத்து வைச்சிருக்கணும்..

          ஏதோ முக்கியமான வேலைங்கறீங்க.. இங்க வந்து கமென்ட் பண்ணி வெளையாடுறீங்க.. புரியலையே?!

          1. அதான் அப்பவே சொன்னேனே சார்-

           //அங்கது மழை பெய்தாலும் விங்கது பிலிம் போடுபவன் #சென்னைத்தமிழன்//

       2. கீழ்க்காணும் கமெண்டின் இரண்டாவது பத்தியை சீரியஸாக எடுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயற்சிக்கவோ என் வீட்டுக்கு ஹெலிகாப்டர் அனுப்பவோ வேண்டாம் என நிர்வாகத்திடம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..

        1. கவலைப் படாதீங்க, இதையெல்லாம் உங்களையும் என்னையும் தவிர வேற யாரும் படிக்கப் போறதில்லே!

         (அதென்ன ஹெலிகாப்டர்? ஆட்டோதானே அனுப்புவாங்க?)

         அப்புறம் அந்தக் கீழ்க்காணும் பத்திய கீழே காணோமே… கீ இன் பண்ணும்போது கீழ விழுந்துடுச்சா?- (ஹா ஹா! இனி ரத்தம்தான்!!!)

         1. ஆட்டோ எல்லாம் பழசு.. இன்னும் சங்க காலத்துலயே இருந்து சங்கத்த பத்தி பேசினா எப்படி? ஹெலிகாப்டர் தான் லேட்டஸ்ட் பேஷன்..

          அப்புறம் அந்த கீழ்க்காணும் பத்தி.. நான் கமென்ட் பண்ணும்போது அது கீழதான் இருந்துது.. கமென்ட் பண்ண அப்புறம் மேல போயிடிச்சு..

          (என்னா சார் இது.. வோர்ட்பிரஸ்ல நம்ம கமென்ட கூட நம்மளால அழிக்க முடியல..)

          1. எழுதிய பதிவை அழிப்பது எல்லாம் பெரிய பெரிய எழுத்தாளர்கள் மட்டுமே செய்யக் கூடிய வேலை…

           பின்னூட்டக்காரர்களுக்கு அதற்கான வளர்ச்சி கிடையாது என்பதால்தான் வோர்ட்ப்ரஸ் இப்படி ஒரு ஏற்பாடு பண்ணி வைத்திருக்கிறார்கள் 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s