டுவிட்டரில் தேத்தியது…

இந்த வாரம் உருப்படியாக எந்தப் பதிவையும் தரவில்லை என்பதை நினைத்துப் பார்க்கிறேன், வருத்தமாக இருக்கிறது. நேரமில்லாதது ஒரு பிரச்சினைதான் என்றாலும், அதை சரியாகப் பயன்படுத்திக்கொள்ள இயலாததே பெரும்பிரச்சினையாக இருக்கிறது. பார்க்கலாம், இந்த வாரம் என்ன செய்ய முடிகிறதென்று.

சரி, விஷயத்துக்கு வருவோம்- இந்த வார ட்வீட்களில் பிடித்தது:

RT: @karthickbala: Common Wealth Gamesனா பொது சொத்துல விளையாடறதா?Sat Aug 14 12:10:47 via Echofon

குடிப்பதை நிறுத்தி விட்டேன். அரை பெக் அதுவும் ரெமி மார்ட்டின் குடிச்சாலே பால்பிடேஷன் வருது. அதுதான் காரணம்.Sun Aug 15 10:39:00 via web

காந்தியின் தண்டி யாத்திரை மாபெரும் அளவில் நடந்தேறி, பார்வையாளர்கல் அனைவரும் பங்கு பெற்ற வீதி நாடகம் என்றார் நண்பர். அவர் காந்தியன்பரும் கூடSun Aug 15 15:45:25 via web

இந்தியா வல்லரசாகாமல் இருப்பதற்கு கொலம்பஸ்சே காரணம். அவர் இந்தியாவை கண்டுபிடிக்காமல் அமெரிக்காவை கண்டுபிடித்தது முட்டாள் தனம் #குடிமகன்Sun Aug 15 17:20:05 via web

வேலை செய்ய சொல்லி ஒரே தொல்லை. இன்றோடு இந்த பிரச்சனை ஓயுமா என்று தெரியவில்லை.Thu Aug 19 09:52:49 via web

நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் – ஏண்டா டேய், நீ கேவலமா நினைக்கறதெல்லாம் ஒரு பொண்ணு தன் வாயால பேச முடியுமா என்ன?Fri Aug 20 01:19:05 via web

கதறக்கதற – இந்த வார்த்தைக்குப் பிறகு ‘அதை’த்தவிர தமிழ்லே வேறெந்த வார்த்தையும் வராதா?Fri Aug 20 19:18:43 via web

இந்த வாரம் ஏழுதான் தேறியது.

ஹூம்… இப்படி ஒரு பிழைப்பு.

Advertisements

10 thoughts on “டுவிட்டரில் தேத்தியது…

 1. //இந்தியா வல்லரசாகாமல் இருப்பதற்கு கொலம்பஸ்சே காரணம். அவர் இந்தியாவை கண்டுபிடிக்காமல் அமெரிக்காவை கண்டுபிடித்தது முட்டாள் தனம்//

  கொலம்பஸ் இந்தியாவைக் கண்டுபிடிச்சிருந்தாலும் “இந்தியா” வல்லரசாகியிருக்க முடியாது. இந்தியர்கள்ல முக்கால்வாசிப் பேர கொன்னுபுட்டு இந்தியாவுக்கு “அமெரிக்கா”ன்னு பேர் வச்சிருப்பானுக வெள்ளைக்காரங்க…

  1. அப்போ அமெரிக்காக்காரங்க எல்லாம் படிச்சுட்டு இந்தியாவுக்கு வேலை தேடிப் போவாங்களா, இல்ல அப்பவும் இந்தியாக்காரங்க படிச்சுட்டு வேலை செய்ய அமேரிக்கா போவாங்களா? கொஞ்சம்போல குழப்புதே…

   1. வெள்ளைக்காரங்க போகலைன்னா செவ்வமெரிக்கர்கள் படிச்சிருக்க மாட்டாங்களே? அப்புறம் எப்படி அமெரிக்காவுக்கு வேலை தேடி வருவாங்க?

    1. ஐயோ, ஐயோ… நான் அந்த இந்தியர்களை சொல்லலீங்க, இந்த இந்தியர்களை சொன்னேன்… அதே மாதிரி அமெரிக்காவும் இந்த அமேரிக்கா இல்ல அந்த அமேரிக்கா!

 2. இந்தியா வல்லரசாக முடியாமல் இருப்பதற்கு விஜயகாந்த் காரணம்.யாரும் வல்லரசு பற்றி பேசுகிறபோது சினிமா பற்றிபேசமுடியாது என்று ஐ நாவில் சொல்லி வாயை அடைத்து விடுகிறார்களாம்

  1. நியாயமான கருத்து. ஆனா வல்லரசு பத்திப் பேசக் கூடாதுன்னு தடுக்கற பான் கீ மூனைத் திட்டாம நம்ம காப்டன் மேல பழியப் போடறது தப்புன்னு 99 .93 சதவிகித தமிழர்கள் நினைக்கிறாங்களாம்…

  1. இந்தப் பின்னூட்டத்தைப் பாத்ததும் எனக்கு பல்ப்பிட்டேஷன் வருது… நம்ம அனானி, பினாமி, பேமானி எல்லாம் கும்மறதுக்கு வந்துறப் போறாங்க! 😦

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s