சத்தியமாய் ஜென் இல்லை!

கிழிந்த போர்வையால் போர்த்தது போல் இருக்கிறது

அழுக்குத் துணியால் துடைத்தது போலிருக்கிறது
சாலை
உலர்ந்தும் ஈரம் காயாதத் துணிகளின்மேல் நாளைவிழும்
வெயில்

கடந்தும் நீங்காத நினைவுகளாய்

Advertisements

12 thoughts on “சத்தியமாய் ஜென் இல்லை!

  1. நிழல் விழும் நினைவுச்சாலை

    ஸென்னே இல்லையா?ஸென் கவிதை என்று சொல்லும்போதே அங்கு ஸென் அற்றுப்போகும். ஆக இது ஸென்.
    ஜெமோ அளவுகளை இறுக்கிக்கொண்டே போகிறார்.யாப்பிலக்கணம் போல இலக்கிய இலக்கணம் கற்று விதி வழுவாமல் எழுத வேண்டுமோ.
    ராமன் ராஜாவின் அண்மைய கட்டுரை நன்றாக நியாயமாக இருக்கிறது.

  2. இது நல்லா இருக்கே! நான் அறிவாளி இல்லைன்னு ஒத்துக்கிட்டா அறிவாளி ஆயிடுவேன் போல!!

    நீங்க கூடதான் நல்லா எழுதறீங்க- “நிழல் விழும் நினைவுச்சாலை”- அருமையான படிமம் (படிமம்தானே அது?)

    அப்பப்ப கவிதை எழுதுங்க, ரசிக்க நாங்க இருக்கோம்- ஜெமோ நம்ம நல்லதுக்குதானே சொல்றாரு: கேட்டுக்குவோம், ஆனா ஞானம் வரும் வரைக்கும் காத்துக்கிட்டிருந்தா அதுக்கு முன்னால சாவு வந்திரும்னு பயமா இருக்கு- அதனால இந்தக் குறைப் பிரசவங்களை வெச்சு மனசைத் தேத்திக்க வேண்டியதுதான். சரிதானே நான் சொல்றது?

    ராமன் ராஜாவின் கட்டுரையை இன்னும் படிக்கவில்லை: போன தடவை காமடி பண்ணணும்கற ஆவலிலே கொஞ்சம் மிகையா எழுதிட்டாருன்னு நினைக்கிறேன். அது தவிர இந்த உளவியல் மருத்துவம் விஷயத்துல நம்மில் நிறைய பேருக்கு நிறைய அவநம்பிக்கை இருக்கிறது. என் நண்பர் ஒருவர், “நான் வரும் வழியில் ஒரு பையன் அவன் வீட்டு வாசலில் நின்று கொண்டு கன்னா பின்னாவென்று கத்திக் கொண்டு இருக்கிறான். அவனைக் கட்டி வைத்து ஒரு தடவை நாலு சாத்து சாத்தினால் எல்லாம் சரியாகிப் போய் விடும்,” என்றார்.

    அதே போல் என் உறவினர் ஒருவரும், மனச்சிதைவு உற்ற தன் சகோதரரை சோம்பேறி என்றுத் திட்டி அவர் கதறக் கதற வீட்டை விட்டு வெளியில் தள்ளினார். அரை மணியில் அவர் சத்தமில்லாமல் உள்ளே வந்து தன் இருட்டு அறைக்குள் அடைந்து விட்டார், பாவம்.

  3. நீங்க ஜென் இல்லையென்றால் நாங்க சும்மா விட்டு விடுவோமா?
    இதோ ஜென்னாக மாற்றிய உங்கள் கவிதை!

    கிழிந்த போர்வையாய் வானம்
    அழுக்குத் துணியால் துடைத்த
    சாலை
    உலர்ந்தும் ஈரம் காயாத
    மனிதர்கள்
    நாளை விழும் வெயிலுக்காய்
    சூடாக தவிக்கும் மனசு
    பெய்து நின்றும்
    நீங்காத நினைவுகளே
    எச்சம்
    – ஒரு சின்ன பின்குறிப்பு மொழிபெயர்ப்பு / அகராதி / பிழை திருத்தம்.
    சத்தியமாய் இது ஜென் இல்லை = சத்தியமாய் இது ஜெ(யமோக)ன் இல்லை !
    ஜென்னாய் மாற்றிய = ஜெ(யிப்பவனாய்) மாற்றிய
    என்று படித்துக் கொள்ளவும்.

  4. வீரா, செம்மைப்படுத்தி விட்டீர்கள்: செம்மொழி மாநாட்டை உங்களைப் போன்றவர்கள் இருப்பதால்தான் கோவையில் நடாத்தினார்களோ என்னவோ! எனக்கு நான் எழுதியதைப் படிக்கும்போது வெட்கமாய் இருக்கிறது. நீங்கள் எழுதியது ஜென் என்று சொல்லிக்கொள்ளாமலே கன்னாக இருக்கிறது (உண்மையில் எனக்கு ஜென் என்றால் என்ன என்று தெரியாது- ஜென் ஹாபிட்ஸ், தி ஜென் ஆப் மோட்டார் சைக்கிள் மெயிண்டனன்ஸ் என்று ஏதோத படித்திருக்கிறேன், எதுவும் மண்டையில் ஏறவில்லை.

    சிந்தாகுலத்தில் ஒரு பதிவு இது குறித்து வருமா?

  5. மோட்டார் சைக்கிள் இங்கு எண்ண செயல்பாடுகளை குறிக்கிறது.
    ஜென்னைப் பற்றி ஜெமோ எழுதியது இராமனைப் பார்த்து ஐயோ இவன் வடிவு என்பதோர்
    அழியா அழகுடையான் என்று வியப்பதோடு நின்று விட்டது.
    ஜென்னைப் பற்றி சரியாக வரையறை சொல்ல அனைவரும் அச்சப்படும் சூழல்.
    காரணம் சரியான விவாத களங்களில் ஜென்னைப் பற்றி சொல்ல தயங்குவதால்.
    ஜென்னைப் பற்றி எழுதியதுமே ஜெமோ பின்னூட்டங்களை ஒரு வேளை இதனால் தான் நிறுத்த முடிவு செய்தோரோ தெரியாது.
    சிந்தாகுலத்தில் எண்ணங்களைப் பற்றி எழுதி வருகிறேன். இதைப் பற்றி கண்டிப்பாக எழுதுவேன்.
    ஜென் கவிதைகளைப் போல் தமிழில் குறும்பா என்ற வடிவத்தில் சுஜாதா முயற்சி
    எடுத்தார். ஜெமோ கூறியது போல் ஜென் கோட்பாடு கவிதைகளுக்காக உருவாக்கப் படவில்லை. ஜென்னின் நோக்கமே வேறு.
    குறும்பா ஜென் இல்லை. ஆனால் ஜென்னுடைய கவிதை வடிவம் குறும்பாவில் உள்ளது.
    என்று சொல்லலாம்.
    திருடன்
    விட்டு சென்று விட்டான்
    ஜன்னலில் நிலவொளியை என்பது ஒரு குறும்பா.

    • நீங்கள் சொல்வது நன்றாக இருக்கிறது: “குறும்பா ஜென் இல்லை. ஆனால் ஜென்னுடைய கவிதை வடிவம் குறும்பாவில் உள்ளது.”

      இவ்வளவு அழகான, முழு சுதந்திரம் தரும் வடிவம் தமிழில் இருக்கும்போது நாம் எதற்காக ஏறத்தாழ இரும்புச் சங்கிலி போன்ற ஜென்/ ஹைக்கூ வடிவங்களைக் கொண்டாட வேண்டும் என்று தெரியவில்லை.

      நான் ஒரு காலத்தில் ஹைக்கூ எழுதும்/ ரசிக்கும் யாஹூ க்ரூப்பில் இருந்தேன்- மிகக் கடினமான வடிவம் அது. எதை எழுதினாலும் மூ இங்கு இல்லை என்று சொல்வார்கள். ரொம்ப மெனக்கெட வேண்டும்.

      அது இருக்கட்டும், நீங்கள் எழுதிய குரும்பாவில் அப்புறம் என்ன ஆச்சு என்ற தகவலே இல்லையே? திருடன் விட்டுச் சென்ற தடயத்தை வைத்து போலீஸ் அவனைப் பிடித்தார்களா? எப்படி துப்ப்புத் துலக்கினார்கள்?

  6. உண்மையான அறிவாளி தன்னை அறிவாளி என்று சொல்லமாட்டான் ஏனென்றால் அவனுக்குத்தான் தெரியும் தான் அறியாதது எவ்வளவு என்று.
    விஞ்ஞானம் பொதுவில் இருப்பதை எடுத்து தனிமனிதனுக்கு பொருத்துகிறது.அதை statistically significant என்று சொல்லுகிறது.சாதாரண மனிதர்கள் தம்மில் தெரிவதை தான் உணர்வதை பொதுவுக்கு விரிவிக்கிறார்கள்.
    உலகம் தட்டை என்பது பகுதறிவுக்கு சரியாகவே இருந்தது ஒரு காலத்தில் .இப்போது அறிவியல் என்ற தலைப்பில் உலகம் தட்டையானதே உருண்டையாக இருப்பது என்று சொல்வது ஏகாதிபத்தியத்தின் வேலை என்று எழுதினால் கட்டி வைத்து அடித்தால் சரிவரும் என்று நீங்களும் சொல்லுவீர்கள்.
    ”’உலர்ந்தும் ஈரம் காயாத
    மனிதர்கள்’’ -ஈரம் – இதயத்தில் இருக்கும் ஈரம்?; உலர்ந்து காய்ந்த மனிதர்கள் மம்மிகள். பலவிதமான சாயல் தெரிகிற வரிகள் அருமை

    ஞானம்தான் அடையவேண்டுமென்றால் இந்த விவாதங்கள் பெருஞ்சுவர்.மனத்தை, அகங்காரத்தை உறுதியாக்கும் வேலையது அல்லவா?.
    இந்தியத்தத்துவவாதியாக வரவேண்டுமென்றால் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளலாம்.அல்லது ஒன்லைன் சத்சங்கம்/ சகஜ சமாதி அது இது என்றாலும் ஓகே.அவரவர் வாழ்க்கை அவரவர் அர்த்தங்கள்.
    பாலகுமாரன் போலி ஆன்மிகம் என்றவுடன் கொக்கென்று நினைத்தாயா கொங்கணவா என்ற வரிகள் ஞாபகத்துக்கு வருகிறது.
    விவாதம் படித்தபின் தியானத்தில் உட்கார ஜெமோ தோன்றினால் ராமகிருஷ்ணர் போல ஞான வாளை எடுத்து வெட்டிவீழ்த்தவேண்டுமோ.

    • “விஞ்ஞானம் பொதுவில் இருப்பதை எடுத்து தனிமனிதனுக்கு பொருத்துகிறது.அதை statistically significant என்று சொல்லுகிறது.”- உண்மைதான், ஆனால் பொதுவாகச் சொல்வது பொருத்திப் பார்க்கும்போது மனிதனுக்கு மனிதன் மாறுபடும் என்று நினைக்கிறேன். அதை நாம் அவ்வப்போது மறந்து விடுகிறோம்- வாலுக்குப் பட்டுக் குஞ்சலம் தேவையா என்று கேட்பவர்களும் மிக்நீசியர்களில் இருக்கலாம் இல்லையா? 🙂

      நீங்கள் சொன்ன மாதிரி கவிதை நன்றாக இருக்கிறது- அதை நண்பர் வீரராகவன் தன் மனையில் மீள்பதிவு செய்து இன்னும் நிறைய பேருக்குக் கிடைக்கப் பண்ண வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

      என்னை பொறுத்த வரை கவிதைக்கும் கட்டுரைக்கும் உள்ள வேறுபாடு இதுதான்: நாம் காதலிக்கிற நண்பிக்கும் கல்யாணம் பண்ணிக்கொண்ட காதலிக்கும் உள்ள வேறுபாடு போன்றது அது. ஒரு நண்பியைக் காதலிக்கிறோம் என்றால், அவரது ஒவ்வொரு வார்த்தையும், பார்வையும் நம் ஒருத்தருக்கு மட்டும் சொல்லாத கதை பல சொல்லும் இல்லையா?

      என்னைத்தான் பார்த்தாளா என்பது தொடங்கி, “போடா லூசு” என்று திட்டினாலும் கூட, அவள் இதை எவ்வளவு ஆசையாக சொல்லியிருக்கிறாள்! என்று ஆனந்தப் படுவதும், அப்புறம், “உண்மையிலேயே என்னை லூசு என்று நினைக்கிறாளா? ஐயோ- அப்படியானால் அவளுக்கு இது வெறும் டைம் பாஸ்தானா!” என்று மருகுவது வரை, மனம் பித்துப் பிடித்து அலைகிறது இல்லையா- அந்த வேலையை கவிதை செய்ய வேண்டும்.

      கவிதையைப் படித்து முடித்த அப்புறம் மனதில் எழும்பும் எண்ணங்கள், உணர்வுகள்தான் அதைக் கவிதையா கவுஜ்ஜா என்று தீர்மானிக்கின்றன. அப்படிப் பார்த்தால் நல்ல ஜென் கவிதையைப் படிப்பதற்கு ஒரு நல்ல ஜென் மனிதனால்தான் முடியும். ஜென்னை அடையாளம் காணும் விஷயத்தில் முழுப் பொறுப்பும் வாசகனைச் சேர்ந்ததே. இதில் எழுத்தாளனைக் குற்றம் சொல்வது அவ்வளவு சரியானதாகத் தோன்றவில்லை.

      குளத்தில் விழுந்தது
      கல்.

      என்று நான் எழுதினால் அதில் ஜென் இல்லை என்று சொல்ல முடியுமா? அப்படியானால் குளத்தில் கல் விழும் கணத்தில் ஜென் எங்கே ஏற்படுகிறது? இதை நிகழ்த்திக் காட்டிய இயற்கையிலா அல்லது வளரும் வட்டங்களாய்ப் பரவும் நீர் அலைகளில் தன் மனதில் இயக்கங்களை அந்த கணத்தில் தரிசிப்பவன் மனதிலா?

      ஜெமோ ஸ்கேலைக் கையில் வைத்திருக்கிற கறாரான ஆசிரியர்- அதனால்தான் அவர் வகுப்பில் மாணவர்களின் அலறல் சத்தம் அதிகமாகக் கேட்கிறது போலிருக்கிறது!

      கட்டுடைக்கும் வேலை தொடரட்டும்!!!

  7. விஞ்ஞானம் பொதுவில் இருப்பதை தனிமனிதனுக்கு கொண்டுவருகிறதென்பதன் அர்த்தம் அது பெரும்பாலான தனிமனிதர்களுக்கு இருப்பதை என்கிற அர்த்தம்.ஒரு பொதுக்கருத்தல்ல.தனிமனித வேறுபாட்டை விஞ்ஞானம் சொல்லுகிறது.
    புகைத்தல் பெரும்பாலானவர்களுக்கு உடலுக்குத்தீங்கு விளைவிக்கும்.புகைத்தபடியே நூறுவயது வாழ்பவர்கள் இருக்கிறார்கள்.
    அப்படி வாழ்பவரைச்சூழ வாழ்பவர்கள் சிலர் புகைத்தால் நூறு வாழலாம் என்று சொல்லக்கூடும்.
    விஞ்ஞான ஆய்வுகள் என்பவை ஆயிரக்கணக்காண மனிதர்களின் அனுபவங்களின் தொகுப்பு.அதைத்தான் சொல்கிறேன்.
    மருத்துவ விஞ்ஞானம் வார்த்தைக்கு வார்த்தை தரவுகளைத்தந்துவிட்டு ஆளுக்கு ஆள் வேறுபடும் என்றுதான் சொல்லுகிறது.
    நடைமுறைப்படுத்துவதில்தான் சிக்கல் வருகிறது.
    தனிமனித உரிமை, தேர்ந்தெடுக்கும் உரிமை,அறியும் உரிமை, நோயாளியின் உரிமை போன்றனவற்றை
    விஞ்ஞானத்தோடு சேர்க்கும்போதுதான் அது முழுமையாகிறது.

    மருத்துவத்தில் மருத்துவர்களும் தனிப்பட்டவர்கள்.ஒரு நல்ல சுகாதார சேவை நோயாளிகளையும் மருத்துவர்களையும் ஆரோக்கியமாக வைத்திருக்க முயலும்.காரணம் மனிதர்களுக்கான பொதுவிதிகள் மருத்துவர்களுக்கும் பொருந்தும் என்பதாகும்.

    இங்கு ஒரு மருத்துவர் கிழமைக்கு 36 மணித்தியாலந்தான் தொழில்புரிய முடியும்.அதற்கு மேல் வேலை செய்தால் அவர் முடிவுகள் தவறலாம் என்கிறார்கள்.

    மருத்துவத்துறையில் மேலைத்தேயத்தில் எழுதப்படுகிற கட்டுரைகளைப்படித்து விட்டு அதை விவாதிக்கமுற்படுவது சற்றும் பொருத்தமில்லாதது.
    உதாரணத்துக்கு அவர்கள் சாதாரண தொற்று நோய்களைக்கட்டுப்படுத்திவிட்டு அதீதமான நோய்களுக்கு என்ன செய்யலாம் என்பதை அவர்கள் விவாதிக்கிறார்கள்.
    மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இங்கு அளிக்கப்படும் சேவைகள் அளப்பரியது.அவர்கள் அதற்கு மேலாக என்ன செய்யலாம் என்று யோசிக்கிறார்கள்.

    உதாரனத்துக்கு எனக்கு ஒரு பதிவைப் படித்துவிட்டு தலையச்சுவரில் முட்டி உடைக்கவேண்டும் போல் வருகிறது என்றால் நான் ஒரு நம்பரை அழைக்கலாம்.
    அவர்கள் என்னைச்சமாதானப்படுத்துவார்கள்.(இது ஜோக்கல்ல)

    உளவியல் மருத்துவத்தில் DSM இல் இதைப்பார்க்கலாம்-ஒரு வரை 05கோணங்களில் அணுகுகிறார்கள்.

    Axis IV indicates factors contributing to, or affecting, the current psychiatric disorder and treatment outcomes. These include:

    Lack of an adequate support system
    Social issues
    Educational problems
    Problems with work
    Financial difficulties
    Legal problems
    Other psychosocial and environmental problems(
    (http://panicdisorder.about.com/od/diagnosis/a/DSMAxis.htm)
    (DSM பற்றிய ராமன் ராஜாவின் கட்டுரை பலன்ஸில்லாமல் தோன்றியது இதனால்தான் -சில நோய்கள் சில அச்சில் வரும்)

    முதலாவது கோணம் அவருடைய மனநலப்பாதிப்பு.
    ஒருவருடைய சிக்கலை அவரூடாக புரிந்துகொள்ளத்தான் இன்றைய விஞ்ஞானம் முயல்கிறது.இங்கு நாலாவது பார்வையில் சொல்லப்பட்ட சிக்கல்களைத்தீர்ப்பதற்கு பலசேவைகள் இருக்கின்றன.உதாரணத்துக்கு மனநோயாளிகளுக்கு உதவித்தொகை. அது மாத்திரமல்லாது அந்தப்பணத்தை உறவினர்கள் கையாடாமல் இருப்பதற்கு அவருடைகட்டணங்களை /money management கையாளுவதற்கு ஒரு சேவை.

    இவையெல்லாம் சாத்தியமாவதற்கு தனிமனித உரிமை/நோயளியின் உரிமை இறுக்கமாகப்பேணப்படுதலும் நாட்டின் வருமானம் சிலமனிதரிடம் தேங்காமல் சமமாகப்பங்கிடப்படுவதும் இறுக்கமான சட்டங்களும் காரணம்.

    அதனால்தான் இங்கு ஆட்களுக்கு கற்பனை செய்ய நேரமிருக்கிறது.எம்மவருக்கு கற்பனை செய்ய நேரமேது.இவர்கள் ஸென்னைப்பற்றியும் எழுதலாம் நினைக்கலாம்.துறவிகளுக்கு நேரம் இருந்தது.இருக்கிறது. அதனால் அவர்கள் தேனீர்குடிக்கும்போது தேனீரைக்குடிக்கமுடியும்.தேனிரைக்குடிக்கும்போது நட்பாஸ் இப்படிச்சொல்லியிருக்கிறாரே என்று நினைத்தால்தானே எங்களுக்கு நேரம் மிச்சமாகும்.

    சிலர் படைப்பாளியாகவும் இலக்கியம் படித்த பேராசிரியர்கள் ரசிகர்களாகவும் இருப்பதற்கு இந்த நேரமும் வாழ்க்கையும் (அந்த அக்ஸிஸ் வகையில் பார்த்தால்) காரணமாயிருக்கும் என்று சொல்லலாம்.
    படிக்க லீவைப்போட்டுவிட்டு பின்னூட்டம் போட்டுக்கொண்டு ஸென் மாத்திரமல்ல ஸெண்ஸே இல்லாமல் இருக்கிறேன்

    • நீங்க படிங்க வரசித்தன் சார். உங்களைத் தொல்லைப் படுத்தக் கூடாது- அது தப்பு. அதனால் இதறுகு நான் மறுமொழி எதுவும் சொல்லப் போவதில்லை. ஆனால் இது புழக்கடையில் இருப்பலாகாது என்பதால் இதை சிறப்பு பதிவாக முகப்பில் வைக்கப் போகிறேன்.

      நன்றி.

  8. ’’ஆனால் பொதுவாகச் சொல்வது பொருத்திப் பார்க்கும்போது மனிதனுக்கு மனிதன் மாறுபடும் என்று நினைக்கிறேன். அதை நாம் அவ்வப்போது மறந்து விடுகிறோம்-

    நீங்க சொன்னதைத்தானே கொஞ்சம்பூசிச் சொல்லியிருக்கிறேன்.அதற்கு எதற்கு முகப்பதிவு.
    மற்றது
    ’’ மருத்துவத்துறையில் மேலைத்தேயத்தில் எழுதப்படுகிற கட்டுரைகளைப்படித்து விட்டு அதை விவாதிக்கமுற்படுவது சற்றும் பொருத்தமில்லாதது’’- சற்றும் என்பது தவறு.
    பொருத்தமில்லாதது அல்லது கொஞ்சம் பொருத்தமில்லாதது என்று சொல்லலாம்.
    விவாதங்கள் நிறைய நிகழ்ந்தால் பல தளங்களில் நிகழலாம்.
    இது பின்னூட்டம்.

  9. ஒ, நீங்கள் நான் வேறு இடத்தில் எழுதியதை சொல்கிறீர்களா? நான் சரியான வெண்குழல் விளக்கு- தாமதமாகத்தான் புரிகிறது.

    இந்த விவாதத்தில் இதற்கான விளக்கம் கொஞ்சம் விரிவாக செய்ய வேண்டி இருக்கும்- எனக்கு இப்போது அலுவலகம் செல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது. மாலை திரும்பியதும் என்ன சொல்ல முடியும் என்று யோசிக்கிறேன். 🙂

    நீங்கள் முன்னர் எழுதிய பின்னூட்டத்தை பதிவாக்குகிறேன்- நிறைய விஷயங்கள் இருக்கின்றன அதில்.

    நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s