உளவியல் குறித்த விழிப்புணர்வின் தேவை

நண்பர் வரசித்தன் அவர்கள் ஒரு பின்னூட்டத்தில்- உளவியல் சிக்கல்களை மேலை நாடுகளில் எப்படி அணுகுகிறார்கள் என்பதையும், பொதுவாக உளவியல் பார்வையில் பொதுவாக ஆரோக்கியமான நடைமுறை நிலவுகிறது என்பதையும் எழுதி இருந்தார். அதில் பல ஆச்சரியப்படத்தக்க விஷயங்கள் இருக்கின்றன- “இங்கு ஒரு மருத்துவர் கிழமைக்கு 36 மணித்தியாலந்தான் தொழில் புரிய முடியும்.அதற்கு மேல் வேலை செய்தால் அவர் முடிவுகள் தவறலாம் என்கிறார்கள்” (நம் ஊரில் விரும்பியே பதினெட்டு மணி நேரம் வேலை செய்கிறார்கள் என்று நினைக்கிறேன்!).

இன்னும் கொஞ்சம் திருத்தி எழுதியிருந்தால் அருமையான பதிவாக வரும்- இருந்தாலும், அவருக்கு இருக்கிற கடும் காலக்கெடுவுக்கு இடையில் அவர் தெளிவு படுத்தியிருக்கும் விஷயங்கள் நமக்கு மிக அவசியமானவை என்பதால் தனி பதிவாக இருக்கிறேன்- அவர் இதை செம்மைப்படுத்தும் பொது நீக்கி விட உத்தேசித்திருக்கிறேன்.

வரசித்தன் அவர்களுக்கு நன்றி.

—————————————————————————————–

விஞ்ஞானம் பொதுவில் இருப்பதை தனிமனிதனுக்கு கொண்டு வருகிறதென்பதன் அர்த்தம் அது பெரும்பாலான தனி மனிதர்களுக்கு இருப்பதை என்கிற அர்த்தம். ஒரு பொதுக் கருத்தல்ல.தனி மனித வேறுபாட்டை விஞ்ஞானம் சொல்லுகிறது.

புகைத்தல் பெரும்பாலானவர்களுக்கு உடலுக்குத் தீங்கு விளைவிக்கும். புகைத்தபடியே நூறு வயது வாழ்பவர்கள் இருக்கிறார்கள்.

அப்படி வாழ்பவரைச் சூழ வாழ்பவர்கள் சிலர் புகைத்தால் நூறு வயது  வாழலாம் என்று சொல்லக் கூடும்.

விஞ்ஞான ஆய்வுகள் என்பவை ஆயிரக்கணக்காண மனிதர்களின் அனுபவங்களின் தொகுப்பு. அதைத்தான் சொல்கிறேன்.
மருத்துவ விஞ்ஞானம் வார்த்தைக்கு வார்த்தை தரவுகளை த்தந்துவிட்டு ஆளுக்கு ஆள் வேறுபடும் என்றுதான் சொல்லுகிறது.
நடைமுறைப்படுத்துவதில்தான் சிக்கல் வருகிறது.

தனிமனித உரிமை, தேர்ந்தெடுக்கும் உரிமை, அறியும் உரிமை, நோயாளியின் உரிமை போன்றனவற்றை
விஞ்ஞானத்தோடு சேர்க்கும்போதுதான் அது முழுமையாகிறது.
மருத்துவத்தில் மருத்துவர்களும் தனிப்பட்டவர்கள். ஒரு நல்ல சுகாதார சேவை நோயாளிகளையும் மருத்துவர்களையும் ஆரோக்கியமாக வைத்திருக்க முயலும்.காரணம் மனிதர்களுக்கான பொதுவிதிகள் மருத்துவர்களுக்கும் பொருந்தும் என்பதாகும்.
இங்கு ஒரு மருத்துவர் கிழமைக்கு 36 மணித்தியாலந்தான் தொழில் புரிய முடியும்.அதற்கு மேல் வேலை செய்தால் அவர் முடிவுகள் தவறலாம் என்கிறார்கள்.

மருத்துவத்துறையில் மேலைத்தேயத்தில் எழுதப்படுகிற கட்டுரைகளைப்படித்து விட்டு அதை விவாதிக்க முற்படுவது அவ்வளவு  பொருத்தமில்லாதது.

உதாரணத்துக்கு அவர்கள் சாதாரண தொற்று நோய்களைக் கட்டுப்படுத்திவிட்டு அதீதமான நோய்களுக்கு என்ன செய்யலாம் என்பதை விவாதிக்கிறார்கள்.

மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இங்கு அளிக்கப்படும் சேவைகள் அளப்பரியது. அவர்கள் அதற்கும்  மேலாக என்ன செய்யலாம் என்று யோசிக்கிறார்கள்.

உதாரணத்துக்கு எனக்கு ஒரு பதிவைப் படித்துவிட்டு தலையைச் சுவரில் முட்டி உடைத்துக் கொள்ள வேண்டும் போல் வருகிறது என்றால் நான் ஒரு நம்பரை அழைக்கலாம் அவர்கள் என்னைச்சமாதானப்படுத்துவார்கள். (இது ஜோக்கல்ல)

உளவியல் மருத்துவத்தில் DSM இல் இதைப்பார்க்கலாம்-ஒரு வரை பல கோணங்களில் அணுகுகிறார்கள்.

Axis IV indicates factors contributing to, or affecting, the current psychiatric disorder and treatment outcomes. These include:
Lack of an adequate support system
Social issues
Educational problems
Problems with work
Financial difficulties
Legal problems
Other psychosocial and environmental problems(
(http://panicdisorder.about.com/od/diagnosis/a/DSMAxis.htm)

(DSM பற்றிய ராமன் ராஜாவின் கட்டுரை பாலன்ஸில்லாமல் தோன்றியது இதனால்தான் -சில நோய்கள் சில அச்சில் வரும்)
முதலாவது கோணம் அவருடைய மனநலப்பாதிப்பு.

ஒருவருடைய சிக்கலை அவரூடாக புரிந்துகொள்ளத்தான் இன்றைய விஞ்ஞானம் முயல்கிறது.இங்கு நாலாவது பார்வையில் சொல்லப்பட்ட சிக்கல்களைத்தீர்ப்பதற்கு பலசேவைகள் இருக்கின்றன.உதாரணத்துக்கு மனநோயாளிகளுக்கு உதவித்தொகை. அது மாத்திரமல்லாது அந்தப்பணத்தை உறவினர்கள் கையாடாமல் இருப்பதற்கு அவருடைகட்டணங்களை /money management கையாளுவதற்கு ஒரு சேவை.

இவையெல்லாம் சாத்தியமாவதற்கு தனிமனித உரிமை/நோயாளியின் உரிமை இறுக்கமாகப் பேணப்படுதலும் நாட்டின் வருமானம் சில மனிதரிடம் தேங்காமல் சமமாக ப்பங்கிடப்படுவதும் இறுக்கமான சட்டங்களும் காரணம்.

அதனால்தான் இங்கு ஆட்களுக்கு கற்பனை செய்ய நேரமிருக்கிறது. எம்மவருக்கு கற்பனை செய்ய நேரமேது .இவர்கள் ஸென்னைப் பற்றியும் எழுதலாம் நினைக்கலாம் .துறவிகளுக்கு நேரம் இருந்தது. இருக்கிறது. அதனால் அவர்கள் தேனீர் குடிக்கும்போது தேனீரைக் குடிக்க முடியும்.தேனிரைக் குடிக்கும்போது நட்பாஸ் இப்படிச் சொல்லியிருக்கிறாரே என்று நினைத்தால்தானே எங்களுக்கு நேரம் மிச்சமாகும்.

சிலர் படைப்பாளியாகவும் இலக்கியம் படித்த பேராசிரியர்கள் ரசிகர்களாகவும் இருப்பதற்கு இந்த நேரமும் வாழ்க்கையும் (அந்த அக்ஸிஸ் வகையில் பார்த்தால்) காரணமாயிருக்கும் என்று சொல்லலாம்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s