தேவை இந்தத் தொழில்நுட்பம்

ஏதோ ஒரு முனைப்பில் இன்டிப்ளாக்கரில் இணைந்து விட்டேனே ஒழிய அதில் ஒன்றும் பெரிதாகப் பதிவுகளை இணைப்பதாகவோ ஓட்டுப் போடுவதாகவோ செய்யக் காணோம். தமிழிஷ், இப்போது இன்ட்லி, போல இருக்கும் என்று நினைத்துக் கொண்டு சேர்ந்தேன்- அப்புறம்தான் தெரிகிறது நாம் நம் பதிவுகளை மட்டும்தான் சேர்க்க முடியுமாம்!

என் வீட்டிலேயே கண்ணாடி இருக்கும்போது சீவி சிங்காரித்துக் கொண்டு, “எல்லாரும் என்னைப் பாருங்கள்!” என்று தெருவில் ஊர்வலம் போகிற அளவுக்கு நான் முட்டாளும் அல்ல, கோமாளியும் அல்ல. அதற்கெல்லாம் எல்லை இந்த ப்ளாகின் பதிவுகளோடு அடங்கி விட வேண்டும்- அதுதான் நல்ல பிள்ளைக்கு அடையாளம்.

“சரி, இன்டிப்ளாக்கரில் நீ எதுவும் ப்ரொமோட் பண்ணிக் கொள்வதில்லை, இது தமிழுக்கு நீ செய்கிற சேவைதான், ஒத்துக் கொள்கிறேன், இப்போது அதை சொல்லி உன்னை ப்ரொமோட் பண்ணிக் கொள்ளத்தான் இந்தப் பதிவா, இது உனக்கே ஓவரா இல்லையா?” என்று கேட்டால், இல்லை நண்பர்களே, இந்தப் பதிவு வேறு காரணங்களுக்காக எழுதப்பட்டது.

எனக்கு நேற்று ஒரு மெயில் வந்தது- “தொழில் நுட்பத்தின் மூலம் எது வேண்டுமானால் கிடைக்குமென்றால் உனக்கு என்ன வேண்டும்?” என்று- அதை எழுதிப் பதிவு பண்ணி இன்டிப்லாக்கரில் சேர்த்தால் அதிக ஓட்டுகள் பெரும் அரசியல்வாதிகள் இருவருக்கு பிரிண்டர்கள் இலவசமாகக் கிடைக்குமாம்.

எனக்குக் கிடைக்கப் போவதில்லை என்று தெரியும், இருந்தாலும், ரொம்ப நாளாக ஒரு ஆசை, ஏக்கம். அதை சொல்ல இது நல்ல சமயம் என்று நினைத்துக் கொண்டு திறந்தாச்சு நம்ம வலைமனையை. இனி இடுகைதான்.

எனக்கு வாழ்க்கையில் பெரிய பிரச்சினை என்னவென்றால் அது என்னுடைய மகா கேவலமான, கடுகைவிட சிறுத்துப் போன நினைவுத்திறன்தான். ஏறத்தாழ இரண்டு நாட்களுக்கு முன்னர் நடந்த அனைத்துமே மறந்து விடுகின்றன- வீட்டில் என் மனைவி பணிக்கிறக்  காரியங்கள் அதைக் கேட்ட ஐந்தே நிமிடங்களில் மறந்து போவது இதில் கூடுதல் தலைவலி.

அதுவாவது பரவாயில்லை- நினைவுகளை நாம் மறந்தாலும் நனவுலகம் நம்மை விடுவதில்லை: எக்காரணத்தையோ உண்டாக்கிக் கொண்டு நம் பிரக்ஞையில் தன்னை நுழைத்துக் கொண்டு விடுகிறது. ஒரு பொருளை மறந்து போய் விட்ட காரணத்தால் அது தொலைந்து போய் விடுவதில்லை, இல்லையா?- திருட்டுப் போனால் ஒழிய.

ஆனால் இந்த வலை உலகு இருக்கிறதே, அங்கு ஒன்றை மறந்து போனோமென்றால் அதை இழந்தது மாதிரிதான். எத்தனையோ விஷயங்களைப் படிக்கிறேன், அத்தனையையும் நினைவில் வைத்துக் கொள்வது நடக்கிற காரியமா?

அதனால் கூகுல் புக்மார்க்சில் அந்த உரலியை சேமித்து வைக்கிறேன்: டெலிஷியஸ் மாதிரி இல்லாமல் அது பக்கம்/ பதிவின் உள்ளீடுகளையும் தேடித் தகவல்களைக் கொண்டு வந்து தருகிறது என்பதனால். ஆனால் இதில் ஒரு பிரச்சினை என்னவென்றால் ஓரளவுக்கு மேல் சேர்த்து வைத்துக் கொண்டு விட்டோம் என்று வைத்துக் கொள்ளுங்கள், எதை கேட்டாலும் பத்து இருபது தரவுகளைத் தேடித் தருகிறது.

அவற்றை ஒவ்வொன்றாய்த் திறந்து படிக்க ஆரம்பித்தால், ஏதேதோ தொடுப்புகளைக் கிளிக்கிக் கிளிக்கிக் கடைசியில் வந்த விஷயம் மறந்து (போதாக் குறைக்கு இன்னும் பல பக்கங்களை புக் மார்க் செய்து), “அடடா, இந்த மாய வலைக்குள் என் பொழுதுகளைத் தொலைத்து விட்டேனே!” என்று ஆச்சர்ய முகம் காட்டித் தொய்ந்த இதயத்துடன்  கணினியை அணைக்க வேண்டி இருக்கிறது.

இதில் இன்னொரு கொடுமை என்ன தெரியுமா? நாம்  சேமித்த பக்கங்கள் போதாதென்று, நம் பதிவுகள்,  வலையுலக நண்பர்கள், டெலிஷியஸில் நாம் தொடர்பவர்கள், கூகுல் ரீடர் ஐட்டம்கள் என்று எல்லாவற்றையும் தேடித் தர லிஜிட் என்ற தேடு தளத்தை வேறு பயன்படுத்தினேன்.  அப்போதும் முன் போல் மிகையான தரவுகள் வந்து கண்ணைக் கட்டுகின்றன என்றப் பிரச்சினைதான்.

இதை எப்படி சரி செய்வது என்றே தெரியவில்லை.

யாராவது இதற்கு  நல்ல ஒரு தொழில்நுட்பத் தீர்வைக் கண்டு பிடித்துக் கொடுத்தால் நன்றாக இருக்கும்.

அது என் மூளை வேலை செய்கிற மாதிரி associative linking கொண்டதாக இருந்தால் நலம். நமது tag’களைக் கொண்டு Google Wonderwheel வடிவில் அந்த தேடுதளம்  தரவுகளைத் தந்தால் தேடுவது எளிதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

Advertisements

14 thoughts on “தேவை இந்தத் தொழில்நுட்பம்

 1. என்ன சார்.. இந்த சின்ன வயசுலேயே உங்களுக்கு ஷார்ட்(!?) டெர்ம் மெமரி லாஸா? உங்க யூசர் நேம் பாஸ்வோர்ட் எல்லாம் எப்படி நினைவிருக்கு?? (அடடா.. அதுங்கள மறந்தாலாவது நாம கொஞ்ச நாள் நிம்மதியா இருக்கலாம்..)

  ஓகே. நான் ஜப்பான் சாப்ட்வேர் என்ஜிநியர்ஸ்கூட டிஸ்கஸ் பண்ணிட்டு நெக்ஸ்ட் மீட் பண்றேன்…

  1. லாங் டெர்ம் மெமரி லாஸ்தான்- அது ஷார்ட் டைம்லயும் வேலையைக் காட்டுது. என்ன செய்ய?

   யூசர் நேம் பாஸ்வர்ட் எல்லாம் என்னோட செல்போன்ல ரெமைண்டேரா பதிவு பண்ணி வெச்சிருக்கேன். என்ன இருந்தாலும் நாம் பதிவரில்லையா?

   ஜப்பான் அங்கிள் கிட்ட நா 私の祖母は順調にどのような場合は、すべてていることを求めるように頼ま கேட்டதா சொல்லுங்க, என்ன?

 2. செல் போனா? அப்ப ஓகே… தூக்கிடலாம். ஒண்ணும் பிரச்சன இல்ல…

  ஜப்பான் அங்கிள் கிட்ட கேட்டேன். அவரு சீனா அத்தைகிட்ட கேக்க சொல்றாரு.. உங்க கேள்வியையும் கேட்டேன்.. அதுக்கு “うーん。私はグランドの母親のことは知らない。しかし、あなたはこれについて私の最大の学生Abarajithanを求めることができます。” னு சொன்னாரு… இப்ப ஓகேயா?

 3. என்னங்க உங்க சீன அத்தை ஜப்பான் எழுத்துகளில பேசறாங்க? நாடு கடத்திட்டாங்களா??

  நியாயமா பாத்தா அவங்க இப்படிதான் தூய சைநீஸ்ல பேசணும்னு மாசெதூங்கு சொல்றாரு: 我看見我不认识的祖母。 但是對我的最大的學生您能询问誰Abarajithan

  介意它!!! 心に!!!

  1. ஐயோ… நான் உங்க கேள்விய கேட்டது ஜப்பான் மாமாகிட்டே…..

   அத்தை இப்பதான் கால் பண்ணாங்க.. அவங்க சொன்னாங்க “我们已经完成的项目,他(Baskar)需要工作。但由于美国在市场上竞争,我们不能放弃我们的现在进行。我可以给他的软件如果他给10000万元。”

   1. திட்டறதுதான் திட்டறீங்க, தமிழிலேயே திட்டுங்க.

    நமது அறிவார்ந்த விவாதங்களை ஒண்ணு விடாம வாசிக்கிற அன்பர்கள் நம்மை மாதிரி பன்மொழிப் புலவர்கள் இல்லை, இல்லியா? அவங்களை நாம ரொம்ப சோதிக்கப்படாது.

    1. நம்ம அன்பர்களுக்கு நம்ம சிதம்பர ரகசியம் (translate.google.com) தெரியாதுன்னா நெனைக்கிறீங்க??

     நான் ஒன்னும் திட்டல சார். “ப்ராஜெக்ட் முடிஞ்சிடிச்சாம்.. அமெரிக்காவோட கம்பெடிஷன் காரணமா இப்போதைக்கு வெளியிட முடியாதாம். ஒரு மில்லியன் யுவான் மட்டும் கொடுத்தா தர்றோம்”-ங்கிறாங்க நம்ம அத்த.. டீலா.. நோ டீலா?

     1. டவுட்டு- சீனாவில இருக்கற யுவன்கள் போறாதுன்னு நம்மகிட்ட மில்லியன் யுவான்களை அனுப்பச்சொல்லிக் கேக்கறாங்களே, அவங்களுக்கே அது நியாயமா? அத்தனை பேரை வெச்சுக்கிட்டு என்ன பண்ணப் போறாங்களாம்?

       1. தாங்க்ஸ் பார் த இன்பர்மேஷன். பட் அய்யாம் சாரி. டோன் மிஸ்டேக் மீ. வோன் மோர் டவுட்டு.

        சீன கரன்சி உங்ககிட்ட எப்படி சார் இருக்கும்?

        நோட்டு அடிக்கறேளோ? தட் யுவர் ப்ராஜக்டு?

        1. என்கிட்ட இல்லாமதானே உங்ககிட்ட கேக்குறேன். நீங்களே இப்படி சொன்னா எப்படி? (கொஞ்சம் அசந்தா தொழில மாத்திடுவீங்களே…)

 4. அடச்சீ!

  ரொம்ப சீரியஸா உக்காந்து மூளைய கசக்கி யோசிச்சு எப்படியாவது பிரிண்டர் வாங்கிடணும்னு பெரிசா பதிவு பண்ணினா, என்னை இப்படி மொக்கை கமெண்ட் போட வெச்சு இமேஜை சுக்கு நூறாக்கிட்டீங்க…

  வட போச்சே 😦

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s