போஹுமில் ஹ்ராபால்

இந்த வாரம் கணினியை அதிகம் பயன்படுத்த முடியாத நிலைமை. வேறு வேளைகளில் ஈடுபட வேண்டியதாகப் போய் விட்டது. எங்கிருந்தாவது எதையாவது வெட்டி ஒட்டும் இந்த வலை மனைக்குக் கூட வெட்டி வேலை செய்ய வரவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!

அண்மையில் இந்தக் கட்டுரையை ந்யூ யார்க் டைம்ஸில் படித்தேன்- பெர்டோல்ட் பிரெக்ட் பற்றி சில திடுக்கிடும் உண்மைகள் தெரிய வருகின்றன, அந்தக் கட்டுரையில். ஆனால் அதுவல்ல செய்தி.

மிலான் குண்டெரா என்பவர் போஹுமில் ஹ்ராபால் என்பவரை (இவங்கல்லாம் யாரு?) குறித்து எழுதியது:

அதை சொல்வதற்குமுன் ஒன்று- போலித்தனமில்லாத ஜனநாயகம் மலர்ந்திருந்த செக்காஸ்லோவாக்கியாவில் கம்யூனிச ஆட்சியாளர்களால் சக எழுத்தாளர்கள் ஊமையாக்கப் பட்டனராம். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஊமையாக்கப்படாத கலைஞர்கள் ஊமை வேடம் தரித்தனராம். ஆனால் இந்த போஹுமில் ஹ்ராபால் மட்டும் கடை வழக்கம் போலத் திறந்தே இருக்கும் என்று கல்லா கட்டினாராம். இதற்கு மற்ற எலக்கியவாதிகள் அவருக்குக் கண்டனம் தெரிவித்ததை நம் குண்டெரா கண்டிக்கிறார்-

“ஹ்ராபால் எழுதிய படைப்புகள் படிக்கக் கிடைக்கிற உலகம் அவரது குரல் கேட்பதற்கில்லாத உலகைவிட முற்றிலும் வேறானதாக இருக்கும். நமது செயல்களைவிட, நமது அடையாளப் போராட்டங்களைவிட, நமது உரத்த கண்டனக் கூட்டங்களைவிட, ஹ்ராபாலின் ஒரு புத்தகம் மக்களின் கருத்து சுதந்திரத்துக்கு அதிகம் வென்றெடுக்கும்”

வாழ்க்கையும், கலையும், சிந்தனையும் அரசியல் போராட்டத்துக்குப் பயன்பட வேண்டுமா, இல்லை அரசியல் போராட்டத்தின் பொருள் நிஜ வாழ்க்கை, கலை, சிந்தனை இவற்றுக்கு சேவகம் செய்வதாக இருக்க வேண்டுமா என்றால் குண்டெரா ரத்தமும் சதையுமாய் முன் நிற்கிற வாழ்க்கை, அதைப் பற்றிப் பேசுகிற கலையும் சிந்தனையும்தான் எந்த விதமான முன்மாதிரி அரசியல் அமைப்பை அடைவதற்கான பாதையையும் விட முக்கியம் என்கிறார்.

இதனால் அறியப்படுவது யாதெனில், எழுத்து என்பது மனிதனிடம் மனிதன் பேசும் பேச்சாக இருக்க வேண்டும்- தூரத்துத் தொடுவானைத் தொட்டு எதிரொலிக்கும் கூச்சலாக இருக்கக் கூடாது: அந்தத் தொடுவானம் தொலைவில் தெரியும் லட்சியமாக இருந்தாலும் சரி, நாம் தாண்டி வந்து விட்ட கடந்த காலத்தின் அவல அத்தியாயமாக இருந்தாலும் சரி.

இவையல்லாமல், நிகழ் காலத்தில் நம்மை விலங்குகளாய்ப் பிணைக்கிற அரசியல் மற்றும் சமூக நிர்ப்பந்தங்களாக இருந்தாலும் சரி, அதேதான்.

ஆதிக்கம் செலுத்துபவனுக்கும், அடிமைப்பட்டவனுக்கும் இடையே இருக்கிற இரும்பு வேலியைத் தாண்டி இருவரின் ஆன்மாவும் ஒன்றாயிருப்பதைக் காட்டி அவர்களிரு இதயங்களையும் இணைக்கும் பாலமாக இருக்க வேண்டும் எழுத்து 🙂

Advertisements

One thought on “போஹுமில் ஹ்ராபால்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s