சரவெடி சனி

அன்ட்ரே பிரெடனும் பால் எலுவார்டும் படம் பார்ப்பதென்றால் வேறு என்னவோ என்று நினைத்துக் கொண்டிருந்தார்கள் போலிருக்கிறது.

அவர்கள் இருவரும் ஒரு திரையரங்குக்குச் செல்வார்களாம்- கதை புரிகிறவரை காட்சிகளை மட்டும் சுவாரசியமாகப் பார்த்துக் கொண்டிருப்பார்களாம்- யார் யார் என்ன செய்கிறார்கள் என்று விளங்கி விட்டதென்றால், “கதையை சொல்லி காரியத்தைக் கெடுத்து விட்டான், வா, வேறு படம் பார்க்கலாம்,” என்று வெளிநடப்பு செய்வார்களாம். அடுத்தது கதை புரியாதவரை வேறு படம், என்று அடுத்தடுத்து வெவ்வேறு திரையரங்குகள் என்று யாரும் இதுவரை எடுத்திராத அந்த உன்னதத் திரைப்படத்தைத் தேடிப் போவார்கள்.

“படம் பார்த்தல்,”  என்று ஒரு பதிவு போடலாம் என்று நினைக்கிறேன். நண்பர்களே, முன்கூட்டியே சொல்லவில்லை என்று திட்டக் கூடாது- அதுதான் சொல்லிவிட்டேன். வருகிற சனிக் கிழமையன்று தமிழ்த் திரைப்படங்களை இந்த மாதிரி சேனல் மாற்றி மாற்றி பார்க்கப் போகிறேன். அனுபவம் எப்படி இருந்தது என்பதை எழுதுகிறேன்.

இவர் சினிப்லெக்ஸில் பத்து படங்கள் பார்த்து விட்டு எழுதிய மாதிரி என்னால் எழுத முடியாது என்று நினைக்கிறேன். என் சிற்றறிவையும், கோடம்பாக்கத்துத் திரைப்படங்களின் தரத்தையும் பொருத்திப் பார்த்தால் ஒரே ஒரு படத்தை மட்டும் பார்த்துவிட்டு, “ஒண்ணுமே புரியல!” என்று எழுதப் போகிறேன்- அதுதான் நடக்கப் போகிறது.

நீங்கள் சனிக்கிழமையன்று ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றுக் கேட்டுக் கொள்கிறேன்- தப்பித் தவறிகூட இந்தப் பக்கம் தலை காட்டி விட வேண்டாம்.

Advertisements

2 thoughts on “சரவெடி சனி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s