கழுவிலேற்றுபவர்களின் காலம்

அண்மையில் குண்டேராவின் எழுத்துகள் குறித்த ஒரு புத்தக மதிப்புரையில் தெரிவிக்கப்பட்ட சில கருத்துகளை இடுகையாக செய்திருந்தேன்-  போகூமில் ஹ்ராபால். அதில் அவர் சொன்ன ஒரு விஷயம் விட்டுப் போய் விட்டது.

யாராவது எதையாவது உருப்படியாக ஒழுங்காகத் தொடர்ந்து செய்து வந்தால், அவருக்கென்று ஒரு அடையாளம் வந்து விடுகிறது. அது பரவலாகப் பலராலும் ரசிக்கப்படும்போது அவருக்கென்று ஒரு பேர் புகழ் எல்லாம் கிடைத்து விடுகிறது. இதில் தவறேதும் இல்லை என்று ஒப்புக் கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.

அந்த வகையில் புகழ் பெற்ற ஒருவரைப் பகடி செய்வதை தப்பு சொல்ல முடியாது- அது ஆரோக்கியமான போக்குதான். இந்த வகையிலான பகடிகள், நேர்த்தியாக செய்யப்பட்டால், அது ஒரே ட்ராக்கில் பயணப்படுவதிலிருந்து ஒரு எழுத்தாளனைக் காப்பாற்றக் கூடும்.  இதற்கு உதாரணமாக அண்மையில் எஸ் ராமகிருஷ்ணனின் திரை விமரிசனங்களைப் பேயொன் பகடி செய்து எழுதிய நம்மைப் படிக்கும் புத்தகங்கள் என்ற பதிவை சொல்லலாம்.

ஆனால் இப்போதைய போக்கு எப்படி இருக்கிறது என்றால், கஷ்டப்பட்டு தனக்கென ஒரு பார்வையையும் நடையையும் உருவாக்கிக் கொண்டவர்களைப் பகடி என்ற பெயரிலோ, விமரிசனம் என்ற பெயரிலோ சில பேர் கொலைவெறியுடன் போட்டுத் தாக்குகிறார்கள். அவர்களின் நோக்கம் என்ன என்று புரியவில்லை- சின்னப்பசங்களில் ஒருவன் பாவப்பட்ட வேறு ஒரு பையனின் ட்ரௌசரை சராலென்று உருவுவான். அதைப் பார்த்து மற்ற பசங்களெல்லாம் கிக்கீக்கீ என்று சிரிப்பார்கள். இந்த மாதிரியான புகழுக்காக இப்படி செய்கிறார்களா, அல்லது ஒரே மாதிரி இருப்பதைப் பார்த்து வெறுத்துப் போய், “இப்படி எப்போது பார்த்தாலும் ஒரே மாதிரி எழுதிக் கொண்டிருக்கிற ஆளின் பேனாவைப் பிடுங்கி ஒடித்துப் போடுவதுதான் நாம் செய்யக்கூடிய இலக்கிய சேவை,” என்று நினைத்து இப்படி செய்கிறார்களா, தெரியவில்லை.

எது எப்படி இருந்தாலும், நிறைய படித்து, எழுத்து என்றால் இப்படிதான் இருக்க வேண்டும், இலக்கியம் என்பது இப்படிதான் பேசப்பட வேண்டும் என்று சொல்லக் கூடியவர்களும் இந்தக் கூட்டத்தில் எவ்விதமான அபத்த உணர்வும் இல்லாமல் கூட்டத்தோடு கூட்டமாகக் கும்மி அடிப்பதுதான் பார்ப்பதற்குக் கஷ்டமாக இருக்கிறது.

சமகால விவாதம் செல்லும் திசை சரியில்லை என்பதை எளிதில் அனுமானித்து விடலாம்- இவர்கள் விவாதிக்கிற விஷயங்கள் இன்னும் இரண்டு ஆண்டுகளில் மறக்கப்பட்டுப் போய் விடும். அது மட்டுமில்லை, இவர்கள் உருகி உருகியோ கொதித்துக் கொந்தளித்தோ எந்தக் கருத்தை முன்வைக்கிறார்களோ, அது அவர்களாலேயே கைவிடப்பட்டுப் போய் விடும். வேறு எதையாவது பேசப் போய் விடுவார்கள்.

என்ன நடக்கிறது இங்கே?

புலம்பலை ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டு விஷயத்துக்கு வருகிறேன்: குந்தெரா, இது கழுவிலேற்றுபவர்களின் காலம், (Age of Persecutors) என்று கரெக்டாக அடையாளம் சொல்லி இருக்கிறார். குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்த சச்சரவைப் படிக்கும்போது, உருப்படியாய் ஒரு விஷயத்தை செய்கிற ஒருவன், தெரிந்தோ தெரியாமலோ, தனது குறைகள் காரணமாகவோ அல்லது ஏதோவொன்று, அதை முன் வைத்து அவன் செய்த உப்பு பெறாத உதவாக்கரை தவறுக்கு அல்லது குறைக்கு, நன்றாக பேசத் தெரிந்த ஒருவனை முன்னால் அனுப்பி, அவன் பின்னால் கும்மி கொட்டிக் கொண்டு ஒரு பெரிய கூட்டம் வரும்போது நீங்களும் நினைத்துக் கொள்ளுங்கள்- நானும் ஏதாவது ஒன்றை உருப்படியாக செய்திருந்தால் இவர்கள் இன்று என் வீட்டு வாசலில் நின்றுக் கொண்டிருப்பார்கள் என்று.

Advertisements

2 thoughts on “கழுவிலேற்றுபவர்களின் காலம்

 1. கழுவிலேற்றுவது என்கிற சொல்லாடல் உணர்ச்சிமயமானது என்பது ஒருபுறம் இருக்க (ரசிகரா?), ‘கழுவிலேற்றும்’ செயலை விட யார் ‘கழுவிலேற்ற’ப்படுகிறார்கள் என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். அவர்களுடைய எழுத்தில் எது, ஏன், எப்படி பகடி செய்யப்படுகிறது என்று பார்க்க வேண்டும். பகடி எழுத்தில் வன்மம் இருந்தால் அது வெளிப்படையாகத் தரிசனம் தரும். அதை சரியாக இனங்காணும் வாசகப் பார்வையும் நடுநிலைமையும் நமக்கு வேண்டும். பெரும்பாலும் டெம்ப்ளேட் எழுத்துதான் பாதிக்கப்படுகிறது. இதில் யாருக்கு நஷ்டம்?

  பகடியை பேனாவை ஒடித்துப் போடும் செயலாகப் பார்க்காமல் படைப்பூக்கமுள்ள செயல்பாடாக, எழுத்தில் ஒரு வகையாகப் பார்ப்பது ஆரோக்கியமானது. ஒரு எழுத்தாளர் இன்னொரு எழுத்தாளரை உதஎ என்றழைத்து அவர் இவரை பதிலுக்கு சாரு என்றழைத்து (அது தற்செயலாக அவருடைய பெயராகவே இருந்தாலும்) வரிகளை மேற்கோள் காட்டி வன்ம நகைச்சுவையைப் பொழிவதை விட பகடி எழுதுவது மேல்.

  1. தெய்வமே! நமஸ்காரம் சார்- நீங்கள் சொல்வதோடு நான் முழுதும் ஒத்துப் போகிறேன்.

   “அந்த வகையில் புகழ் பெற்ற ஒருவரைப் பகடி செய்வதை தப்பு சொல்ல முடியாது- அது ஆரோக்கியமான போக்குதான். இந்த வகையிலான பகடிகள், நேர்த்தியாக செய்யப்பட்டால், அது ஒரே ட்ராக்கில் பயணப்படுவதிலிருந்து ஒரு எழுத்தாளனைக் காப்பாற்றக் கூடும். இதற்கு உதாரணமாக அண்மையில் எஸ் ராமகிருஷ்ணனின் திரை விமரிசனங்களைப் பேயொன் பகடி செய்து எழுதிய “நம்மைப் படிக்கும் புத்தகங்கள்,” என்ற பதிவை சொல்லலாம்,” என்றுதான் இந்தப் பதிவிலேயே எழுதி இருக்கிறேன்.

   பகடி பற்றி மட்டுமல்லை, இந்தப் பதிவு வன்மைமாகத் தாக்கி எழுதுபவர்கள் பற்றியதுகூட அல்ல. என்னைப் பொருத்தவரை அதுகூடத் தப்பில்லை- ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு தொனி. ஆனால் ஒரு எழுத்தாளரை வேறொருவர் திட்டும்போது அதில் ஆர்வமாகக் கலந்து கொள்கிறக் கூட்டத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

   எஸ்ரா எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த டெம்ப்ளேட்டை உருவாக்கியிருக்கிறார்… அதைப் பகடி செய்பவரும் சாதாரண ஆள் அல்ல: நன்றாகத்தான் எழுதுகிறார். ஆனால் “கிழிச்சுட்டாரு”, “ஆளு அவ்வளவுதான்” “நீங்க கோடு போட்டா நான் ரோடு போடுவேன்” இப்படியெல்லாம் கும்முவதன் நோக்கம் எழுத்து குறித்தல்ல, எழுதுபவனின் பேர் குறித்து- இவனை எப்படி ஆகா ஓகோன்னு சொல்லப் போச்சு?
   என்ற வன்மம். இந்த இயல்பு பற்றிய குழப்பம்தான் இந்தப் பதிவு.

   மிக்க நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s