வில்லியம் சரோயன்

இது-

அல்லது இது

ஏதோவொன்று- இது போல்…

http://www.williamsaroyansociety.org/store

உன் வாழும் நாட்களை வாழ்- அந்த நற்போதில் உன்னையும் உன் வாழ்வு தொடும் எந்த உயிரையும் அவலமோ மரணமோ தொடாத வண்ணம். எங்கும் நன்மையே தேடு, அதைக் கண்ணுரும் போதில், அதைத் தன் மறைவிடத்தினின்று மீட்டெடு, அது வெட்கம் விடுத்து சுதந்திரமாய் இருக்கட்டும்.

பொருளையும் உடலையும் எள்ளளவும் பொருட்படுத்தாதே- மரணத்தைத் தம்மில் கொண்ட இவை மறைந்தே போகும். அத்துணைப் பொருட்களிலும் எது அழிக்கவொண்ணாததாய், பிரகாசித்திருக்கிறதோ அதைத் தேடியெடு. இந்த உலகின் ஈனத்தனத்தாலும் அச்சுறுத்தலாலும் துரத்தப்பட்டு துக்கித்து வெட்கி மறைந்த ஒழுக்கம் எந்த இதயத்தில் இருந்தாலும் அதற்கு ஊக்கம் கொடு. அப்பட்டமாய்த் தெரிவதை அலட்சியப்படுத்து, தெளிந்த கண்களுக்கும் கருணை நிறைந்த நெஞ்சுக்கும் தக்கவை அன்று அவை.

எவனுக்கும் ஆளாய் இருக்காதே, எவனுக்கும் ஆண்டையும் ஆகாதே. ஒவ்வொருவனும் உன்னுடைய இன்னொரு வார்ப்பு என்பதை மறவாதே. எவனுடையக் குற்றமும் உனதின்று வேறல்ல, எவருடைய ஒழுக்கமும் தனித்திருப்பதல்ல. தீக்குணத்தையும் அசுரத்தனத்தையும் கேவலமாய்க் கருது, தீயவர்களையும் அசுரர்களையும் அல்ல. இவற்றைப் புரிந்து கொள். கருணையும் மென்மையும் நிறைந்தவனாக இருக்க வெட்கப்படாதே, ஆனால் நீ வாழும் நாட்களில் கொலை செய்ய வேண்டிய வேளை வந்தால், கொல், வருந்தாதே.

உன் வாழும் நாட்களை வாழ்- அந்த அற்புத காலத்தில் இந்த உலகத்தின் துன்பத்தையும் துயரத்தையும் நீ கூட்டாத வண்ணம், அதன் அளவில்லா ஆனந்தத்தையும் அதிசயத்தையும் நீ கண்டு சிரிக்கும் வண்ணம்.

– வில்லியம் சரோயன்.

ஆங்கில மூலம் இங்கே.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s