கண்ணம்மாவின் கன்னக்குழி

(இந்தப் பதிவை எழுதியவர் நண்பர் திரு வரசித்தன் அவர்கள். இதை நான் மிகுந்த பிரமிப்புடன் பதிவேற்றுகிறேன். )

சிலகாலத்துக்கு முன்னர் ஒரு படம் பார்த்தேன். படத்தின் கதை பாட்ஷாவின் கதை போல இருந்தது. உடனடியாக நான் என்ன நினைத்தேன், இந்தப் படத்தைச் சுட்டுத்தான் பாட்ஷா எடுத்திருப்பார்கள் என்று.
ஆனால் பாட்ஷா வந்து பத்து வருடத்துக்குப் பிறகு வந்திருந்த படம் அது. அந்தக் கதையின் மூலம் ஒரு சித்திரக் கதை என்றுப் போட்டிருந்தார்கள். சித்திரக்கதை பாட்சா வந்து இரண்டு வருடங்களுக்கு பிறகு வந்ததாம் (இன்னொரு மூலம் இருக்குமோ!).

படம்: A History of violence .

என்னுடைய கேள்வி என்னவென்றால் ஏன் நான் அந்தக் கதையைச் சுட்டுத்தான் பாட்ஷா எடுத்திருக்க வேண்டும் என்று உடனே நினைத்தேன்? ஏன் மாறி யோசிக்கவில்லை? தமிழ்ச் சினிமா அப்படி என்னை யோசிக்க வைத்து விட்டதோ?

சினிமா ஒரு கலை. கலைக்குப் பொருந்துவது சினிமாவுக்கும் பொருந்துந்தானே? ஆகவே சினிமாவில் படைப்புகளும் இருக்கும், தழுவல்களும் இருக்கும். பிரதியாக்கம் மொழிபெயர்ப்பு எல்லாம் இருக்கும்.

மோனாலிஸா ஓவியத்தை காப்பி பண்ணினால் மோனாலிசாவாகத்தான இருக்கும். எங்களுக்குப் பொருந்தாது. ஆனால் அதன் கான்செப்ட்ஐ எடுத்து எங்கள் பெண்ணை வைத்து ஒரு ஓவியந் தீட்டலாம்.அதே வெளிச்சம், வண்ணங்கள், சிரிப்பு- ஆனால் பெண். அதற்கு கண்ணம்மா என்று பெயர் வைக்கலாம், ஆனால் அதை மோனாலிசா என்று சொல்ல முடியாது.

நன்றி- http://www.coolbuddy.com/jokes/monalisa.htm

திரைப்படங்களும் அப்படித்தான்.

இங்கே கவலைக்கான காரணம் …யாராவது ஒரு நம்மவர் கண்ணம்மாவை அவருக்கேயுரிய பாணியில் வரைந்து உலகம் முழுவதும் கண்ணம்மாவின் கன்னக்குழி என்று (மோனாலிஸா சிரிப்பு போல) ஒரு உதாரணம் ஆகக் கூடாதா என்ற அங்கலாய்ப்புத்தான்.

திரைப்படம், இலக்கியம், ஓவியம் போன்ற கலைகள் வெறும் செய்தியை, கதையை, கருத்தைத்தான் சொல்லுகின்றன என்றில்லை என்று நினைக்கிறேன். அவை அதற்கும் மேலாக, அறிவுத்தளத்துக்கும் மேலாக ,உணர்வுத் தளத்துக்கும் மேலாக முழுமையாக ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. தங்கம் புடம் போடப்படுவதைப் போல. மனித இயல்பு மிஞ்சும்.மீதி எரிந்து போய்விடும்.

திரைப்படம் என்பதும் அத்தகையதே. அதுவும் அத்தகையத் தாக்கத்தை ஏற்படுத்தவேண்டும். ஒரு திரைப்படம் தழுவலோ கட்டிப்பிடிக்கப்பட்டதோ என்பது இப்படி நிலைகளைக் கடந்த பாதிப்பை ஏற்படுத்தும்போது மறந்து விடுகிறது. மோனாலிசாவின் பாதிப்பில் விளைந்த கண்ணம்மா. அதனால்தான் அளவுகோல்கள், விமர்சனங்களையும் மீறி சில படங்களை காப்பி என்று தூக்கி எறிய முடிவதில்லை.

ஆனால் கமல் போன்றவர்கள் இப்படித் தழுவி எடுக்காமல் எங்கள் மண்ணைக் குழைத்து ஏன் சினிமா எடுக்கக்கூடாது என்பதுதான் ஆதங்கம்.

நன்றி- http://varmah.blogspot.com/2009/02/blog-post_17.html

கமலைப் பொறுத்தவரை கமல் என்கிற நடிகர்தான் அவர் படங்களில் துருத்திக் கொண்டு நிற்கிறார். பாத்திரங்களுக்காகத்தான் அவர் படங்களை ஹாலிவுட்டிலிருந்தும் எடுக்கிறார். அந்த வகையில் அந்தப் பாத்திரத்தை என் வழியில் செய்து காட்டுகிறேன் என்கிற ஆர்வந்தான்.ஆனால் தான் ஒரு பாத்திரத்தை உருவாக்கவேண்டும் என்ற ஆர்வம் குறைந்து விட்டது. நடிகன் படம் எடுப்பதால் வருகிற சிக்கல் இது.

இன்னுமொரு காரணம், புது இயக்குனர் புதிய கதைகளுடன் உயிரோட்டமாக வருகிறார்கள். அவர்களுடைய வாழ்க்கையோடு இயைந்த கொட்டிக் கிடக்கின்ற அனுபவங்களை படத்தில் சேர்க்கிறபோது அது தரமானதாகி விடுகிறது. கமல் மணிரத்னம் போன்றவர்கள் இவற்றைக் கடந்து நீண்ட தூரம் வந்துவிட்டார்கள். அதனால்தான் கிராமக் கதையை மற்றவர்கள் இயல்பாகத் தர விருமாண்டியை கமல் பெரும்பீடிகையுடன் மிகுந்த கஷ்டப்பட்டுத் தர வேண்டி வந்தது. நகரத்தான் கிராமத்தைக் கற்பனை செய்து அந்த வாழ்வை உருவாக்க கற்பனாசக்தியும் உழைப்பும் தேவைப்படும்.

அதைவிட இப்படி படங்களிலிருந்து உருவுவதில் பெரிய சிக்கலில்லை. எலும்புக்கூட்டை எடுத்து அதற்கு நம்மவரின் சதையை ஒட்டுவது. சூழலை வலிந்து உருவாக்குவது. அதனால் பல வேளைகளில் இரண்டுங் கெட்டாந்தன்மைத்திரைப்படங்களாக வெளி வந்து விடுகின்றன. சினிமா உயிரோட்டமாக பல நுணுக்கமான காட்சி அமைப்புகள் சேர்க்கப்பட வேண்டியிருக்கும். இப்படியான வாழ்க்கையின் நுண்ணிய அசைவுகளை அவதானிக்கும் சந்தர்ப்பங்கள் கமல் போன்றவர்களுக்கு உயரே செல்லச் செல்ல குறைந்து போகும். பல நிலை உதவி இயக்குனர்கள் தேவைப்படுவார்கள். உண்மையான இலக்கியம் தேவைப்படும். அதன் பிறகுதான் காட்சியை உருவாக்க முடியும்.

அதனால்தான் கமல் திறமை காட்டும் வியப்பையூட்டும் படங்களை தன் நடிப்புக் கூடாக,தன்னை முன்னிலைப்படுத்தும் பாத்திரங்களைக் கொண்டு வர முயற்சிக்கிறார். உண்மையான படைப்பைத் தருவதற்கு கமல் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும்.அந்த நேரத்தில் இப்படி தமிழ் பிராண்ட் படங்கள் மூன்றை உருவாக்கி விடுவார். பொருளாதாரம்தான் இறுதியில் தீர்மானிக்கிறது.

நன்றி- http://spotmidmovies.blogspot.com/

ராவண் சிறந்த படமாக வெளியாருக்குத் தெரிவதில் ஆச்சரியமில்லை. அவர்கள் மணிரத்னத்தின் முந்தைய படங்களைப் பாத்திருக்க மாட்டார்கள். மணிரத்தின உத்தி எங்களுக்கு பழகிவிட்டது. அவர்களுக்கு இந்திய நுண்ணரசியல் தெரியாது.
ஆனால் நம்மவர்கள் அரசியலின் கரங்களை வாழ்வில் உணருபவர்கள் சினிமாவில் தோன்றும் அரசியல் பொருந்தாவிட்டாலும் அந்த முரண்பாடுகளுக்கான விளக்கங்களைத் தராதபோது அது அன்னியமாகத் தெரியும்.அவற்றையெல்லாம் விட்டு விட்டு அழகியலைப் பார் என்றால் எப்படிப் பார்ப்பார்கள்.
ராவண் சிலகாலம் கழித்து வேறோர் அரசியல் பின்னணியில் பார்க்க நன்றாகத் தெரியும்.

தமிழ் உலகத்தரம் என்று சும்மா சொல்லாமல் மண்ணின் கதையை படமாக்க வேண்டும்.அதை மற்றவர்கள் தழுவவேண்டும்.

சினிமா பற்றிக்கொஞ்சம் அதிகப்பிரசங்கித்தனம், அலட்டல்?

மன்னிக்க வேண்டும், ஒரு மாதத்துக்கு ஒரு முப்பதுபடங்கள் பார்ப்பதென்பதை தவிர வேறு தகுதியில்லை

Advertisements

10 thoughts on “கண்ணம்மாவின் கன்னக்குழி

  1. ஏங்க, நீங்க எதுனா பதிவு கிதிவு வெச்சிருக்கீங்களா? அப்படின்னா, ஐயா, சாமி, ஒரு பதிவு போடுங்க சாமி!

   நாங்க பதிவு தேத்த அஞ்சாத சிங்கம் , தெரியுமில்ல!

   1. சார் நான் ஏற்கனவே சொல்லியிருக்கேன்.. இன்னும் நாலு வருஷத்துல நம்ம இன்னிங்க்ஸ் ஆரம்பிக்கும்னு.. இதுக்கு மேலேயும் ஒரு பெரிய மனுஷன கட்டாயப்படுத்தறது அவ்வளவு நல்லாயில்ல.. இல்லையா?

    1. ஏதோ மிச்ச மீதி, வெந்தது வேகாதது, கெட்டது கெடாதது, பழையது புளிச்சதுன்னு இருந்தாக் குடுப்பீங்கன்னு ஒரு நம்பிக்கையிலே கேட்டுட்டேன் சாமி, கோவிச்சுக்காதீங்க.

        1. அட! அப்பாவியா கேக்கறதப் பாரேன்! நீங்களும் ஒரு ப்ளாகு ஆரம்பிங்க, நாங்களும் திருப்பிக் கொடுக்குறோம்னா வழிக்கு வர மாட்டேங்கறீங்களே…ரொம்ப உஷாரா இருக்கீங்க போல?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s