ஒற்றைப் புள்ளி

.

Advertisements

40 thoughts on “ஒற்றைப் புள்ளி

 1. சென்ற வாரத்தில் மட்டும் ஏழு பேர் இந்த ப்ளாகிலிருந்து பின்னூட்டங்களை மின்னஞ்சல் மூலம் பெற வசதி செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் பதிவுகளுக்கான வாசகர்களின் எண்ணிக்கையில் ஒன்றுகூடக் கூடியதாகத் தெரியவில்லை. இந்த ரேட்டில் போனால், பதிவு படிப்பவர்களைவிட பின்னூட்டங்களைப் படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகி விடும் என்பது நிச்சயம்.

  அதனால் என் பதிவுகளைப் பின்னூட்டங்களாகப் போடலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன் (உங்கள் பின்னூட்டங்களைப் பதிவாகப் போட்டவனுக்கு இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை என்பது ஞாபகம் இருக்கட்டும்)

  எங்கே போனாலும் விடறதா இல்ல! :))

  1. சாய், ஒரு சின்னத் தப்பு பண்ணிட்டீங்க. .
   இதையே நீங்க
   மடக்கி
   மடக்கி
   எழுதி இருந்தா,
   அதை நான்
   ஒரு கவிதையா
   இடுகை செஞ்சிருப்பேன் 😦

 2. புள்ளி ராஜா?நீங்க….

  patch adams படத்தில் catatonic வந்துவிட்ட ஒருவர் ஒரு கையை உயர்த்தியபடியே இருப்பார்.கையுயர்த்துவதற்கேற்றாற்போல கேள்விகளைக்கேட்டு கூட இருப்பவர்கள் சிரித்துக்கொள்வார்கள்.
  ஒற்றைப்புள்ளிக்கேற்றாற் போல அவரவர் நினத்துக்கொள்ளலாம்.
  நாடகப்பட்டறைகளில் இப்படி ஏதாவது தருவார்கள். நடுவில் கண்ணுக்குத்தெரியாத ஒரு பொருள் இருக்கிறது ஒவ்வொருவருவரும் பாவனை செய்துவிட்டு வரவேண்டும்.நான் அதைத்தூக்கி அடிஅடியென்று அடித்துவிட்டு வந்தேன்.தவில்.

  இந்தபுள்ளிக்கு முன்னால் 1000பக்கமுள்ள ஒரு நாவல் ஒன்றை எழுதிவிட்டு நேற்று ஒரு முற்றுப்புள்ளி வைத்து முடித்துவிட்டு அந்தப்புள்ளியை இங்கும் இட்டிருக்கிறாரென்கிறேன் நான்.
  இல்லை அப்படியில்லை அவர் பப்பிலியோமோ தியாக்குவாரசமோ எழுத்துக்களை படிப்பதில்லை என்றுதான் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் என்கிறார் இன்னுமொரு நண்பர்.

  இன்னுமொருவர் கொஞ்சம் சந்தேகப்பிராணி. ஒரு புள்ளி வைத்த ஒரு பதிவை இட்டுவிட்டு அதற்கு காப்புரிமை போட்டுவிடப்போகிறாரோ என்கிறார்.அதற்குப்பிறகு எவர் புள்ளிவைத்தாலும் நட்பாஸுக்கு கட்டணம் செலுத்தவேண்டிவரலாம்.ஒரு புள்ளிக்கு ஒரு பைசா போட்டாலும் மில்லியன் தேறும்.இப்படியெல்லாம் அந்த பிஸ்னஸ் பார்ட்டி பயப்படுகிறார். கடவுளே புள்ளிகள் தீர்மானிக்கும் வாழ்க்கை.

  1. ஆஹா! அற்ப ஒற்றைப் புள்ளியை உன்னதப் பெரும் புள்ளியாக்கத் திட்டம் போட்டுக் கொடுத்து விட்டீர்களே!!

   “ஒரு புள்ளி வைத்த ஒரு பதிவை இட்டுவிட்டு அதற்கு காப்புரிமை போட்டுவிடப்போகிறாரோ என்கிறார்”

   இனி யாரும் புள்ளி வெக்கக் கூடாது. டாக்டரே சொல்லிட்டார்.

   நீங்க நல்லா இருப்பீங்க டாக்டர். 🙂

 3. பதிவு தேத்துறதுல நீங்க ஒரு ஐடியா மணிங்கோ…

  (நான் உங்கள் பின்னூட்டங்களை மெயிலில் படிப்பதில்லை. பீட் ரீடரில் ஒவ்வொரு இடுகைக்குமாக இணைத்து படிக்கிறேன். எனவே என் வயிற்றில் மண்ணள்ளிப் போட்டுவிட வேண்டாம்) உங்கள் பதிவுகளில் இரண்டாவது அதிக பின்னூட்டம் இட்டுவரும் ஒரு நட்சத்திர வாசகரை இழந்துவிடாதீர்கள்…

 4. ” இரண்டாவது அதிக பின்னூட்டம் இட்டுவரும்…”

  அப்ப உங்களைவிட அதிகமான அளவில் பின்னூட்டங்களை இடுபவர் யார்?

  யார்? யார்? யார்?

  ♫♫பதிவும் நானே பின்னூட்டமும் நாஆஆனேஏஏஏ♫♫

  1. அதிகம் எழுதறது நீங்களும் நானும்தான்.. ஆனா பெருசா எழுதறது நம்ம டாக்டர் சார்தானே.. நாங்க எழுதறது ஹைக்கூன்னா, டாக்டர் எழுதறது காவியம். இல்லையா?

   1. சார், அவரு டிக்னிடிக்கு அவரு வந்து இங்க ஒரு வார்த்தை எழுதறதே நாம் பண்ணின புண்ணியம். அவரைக் காவியம் அது இது என்றெல்லாம் கிண்டல் பண்றது மகா பாபம். இதை நான் உளப்பூர்வமாய்க் கண்டிக்கிறேன்.

    1. ஐயையோ.. நான் கிண்டல் எல்லாம் பண்ணலீங்கோவ்… ஏன் காவியம்-கரைத்து கெட்டவார்த்தையா? கம்பர் கொவிச்சுக்கப் போறாரு. பீ கேர்புல்.

     (ஏன்சார் இப்படிப் போட்டுக் குடுக்கறீங்க…)

     1. நாங்க சின்னப் பசங்களா இருக்கறப்ப ஒரு விளையாட்டு விளையாடுவோம்.

      ஒரு அப்பாவி மாட்டிக்கிட்டான்னா, அவன் கையைப் புடிச்சிக்கிடுவோம்.

      “டேய், இவன் அடிச்சா அழ மாட்டான்டா, என்ன பெட்டு?’ அப்படின்னு ஒருத்தன் கேட்பான்.

      “அடப்போடா, நீ மட்டும் முதுகுல மூணு மொத்து மொத்தினியானா அவன் செத்தே போயிடுவான், பெட்டு வெக்க உனக்கு தில்லு இருக்கா?”ன்னு இன்னொருத்தன் கேப்பான்.

      இங்க என்னாங்கடா நடக்குதுன்னு அந்த அப்பாவி அடி வயித்துல கலக்கத்தோட நின்னுக்கிட்டிருப்பான்.

      பாவம் டாக்டரு, அவர் உயிரை வெச்சு விளையாடப்படாது. அவர் நம்ம உயிரை வெச்சு விளையாடினா என்ன ஆகும், யோசிச்சுப் பாருங்க…

      1. //பாவம் டாக்டரு, அவர் உயிரை வெச்சு விளையாடப்படாது. அவர் நம்ம உயிரை வெச்சு விளையாடினா என்ன ஆகும், யோசிச்சுப் பாருங்க…//

       இதுக்குத்தான் அப்பவே சொன்னேன் கொத்து விடாதீங்கன்னு.. இப்ப பாருங்க உங்களுக்கே ஆப்பு வருது.

       நான் ரொம்ப முன்ஜாக்கிரதைக்காரன். டாக்டர் சாரைப் பத்தி பின்னூட்ட ஆரம்பிச்ச பிறகு, எந்த டாக்டர்கிட்டே போனாலும் “நீங்க டாக்டர் வரசித்தன் (அ) டாக்டர் கிருஷ்னேந்திரன் இல்லையே” அப்படின்னு கேட்டு கன்பர்ம் பண்ணிகிட்டுதான் பீஸ் குடுக்கறது வழக்கம்..

       நீங்களும் இதையே பாலோ பண்ணுங்க..

       1. சொன்னா கேக்க மாட்டீங்க? டாக்டரோட டிட்டினிட்டியை இப்படியா ஏலம் போடுவீங்க? விட்டா அவர் டாக்டர் விஜய்கூட சேந்து ப்ராக்டீஸ் பண்றதா சொல்லுவீங்க போல இருக்கே!

        இது நல்லா இல்ல, அவ்வளவுதான் நான் சொல்ல முடியும்.

        1. ஆகா.. என்ன சொன்னாலும் கேக்க மாட்டேங்கிரீங்களே.. கோத்து விடுறதிலேயே குறியா இருக்கீங்க… அதுசரி, டாட்டர் விஜய் இன்னும் ப்ராக்டிஸ் பண்ணி முடிக்கலியா?

         1. இப்பவும் அவர் ப்ராக்டிஸ் பண்ணி தன்னால ஆன மட்டும் முடிச்சுக்கிட்டுதான் இருக்காரு, ஏன் கேக்கறீங்க?

 5. ஒரு சிறு அறிவிப்பு:

  இங்க வந்தவங்கள்ள யாரோ மூணு பேர் பிரஸ் திஸ் என்கிற பொத்தானைப் பயன்படுத்தி இந்த ஒற்றை புள்ளி பதிவைத் தங்கள் வலை தளத்துக்குக் கடத்திக் கொண்டு போய் இருக்கிறார்கள்.

  டாக்டர் சொன்ன மாதிரி கேஸ் போடலாமா வேண்டாமா என்று காப்புரிமை சட்ட வல்லுனர்களைக் கலந்தாலோசிக்க உள்ளோம்.

  ஏனென்றால் இது சாதாரணப் பதிவல்ல. எதிர்காலத்தில் இதற்கென்று ஓர் சரித்திரம் இருக்கிறது.

  அதை நான் விட்டுக் கொட்டுப்பதாயில்லை.

  1. வந்தவங்க பின்னூட்டத பாத்துட்டு இவ்ளோ பெரிய பதிவா?? அப்பிடின்னு ஏமாந்து போய்ட்டாங்க போலிருக்கு.. பாவம்.. நீங்க பேசாம பின்னூட்டத்துக்கு காப்பிரைட் வாங்கிடுங்க சார்…

   1. ஏங்க, இதையெல்லாம் படிக்கறதுக்கு இந்த ஊருல யாராவது இந்தப் பக்கம் வருவாங்கங்கறீங்க? ஐயோ! ஐயோ! உங்களை நினைச்சா சிப்பு சிப்பா வருது!!! :))

 6. ஒரு தந்திரந்தேன். நம்மளோட பதிவை ஏதானு சந்தர்ப்பம் பாத்திருந்து சட்டென்று பின்னோட்டத்தில செருகிப்புடுவேன்.இன்னிக்கு சூடான வேகமாக வள்ர்ந்து வரும் பதிவு சாரோடது என்று வேட்பிரஸ் சொல்லுது.காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ளவேண்டும் பாருங்கள்.நிறையப்பேர் வாசிக்கட்டுமே என்ற நட்பாசை மன்னிக்க நப்பாசைதான்.
  நட்பாஸுக்கு கொஞ்சாநாள் எடுத்திருக்கிறது புரிய.
  முதலமைச்சர் எவ்வழி குடிமக்கள் அவ்வழி……
  என்னா சார் டிக்னிடி அது இத்துன்னிட்டு பதவியால் வருவது டிக்னிட்டி இல்லை சார்.டாக்டர்கள் நோயாளரின் டிக்நிடியை மறந்துவிடுவதுதானே இன்றைய நம்மநாட்டு மருத்துவத்தின் சிக்கல்.வாழ்வால் வருகிற டிக்னிட்டி …
  வாழ்வு இன்னும் இழுபறியாய் டிக்னிடியே இல்லாமல் இழுபட்டுக்கிடக்குது சார்.எனக்கு மட்டுமில்லை ஒட்டுமொத்தமா.டிக்னிட்டியை இழந்த சனத்துக்கு டிக்னிட்டியைத்தருபவன் தான் உண்மையான டிக்னிட்டி காரன்.

  நகைச்சுவை உணர்வு மனிதர்களைப்பிணைப்பது.தன்னைத்தானே கிண்டல் செய்துகொள்ளக்கூடிய தன்மை பெருந்தன்மை.அது பரந்தஅறிவோடும் ஆற்றலோடும் சேர்ந்துவருகிறபோது மற்றவர்களின் ஈகோக்களை ஈ go ஆக்கிவிடும்.
  அங்கே தோன்றுவதுதான் நட்பாசிஸம்

  1. //.இன்னிக்கு சூடான வேகமாக வள்ர்ந்து வரும் பதிவு சாரோடது என்று வேட்பிரஸ் சொல்லுது//

   நீங்க சொன்னப்புறம்தான் அதை செக் பண்ணிப் பாத்தேன். உண்மைதான். நம்ம ப்ளாக் மூணாவது இடத்துல இருக்கு. இந்த இனிய தகவலுக்கு நன்றி டாக்டர்.

   (இந்த விஷயம் நமக்குள்ள இருக்கட்டும், விஷயம் தெரிஞ்சா தினம் ஆயிரத்து ஐநூறு ஹிட்டு வாங்கற நம்ம நண்பர் கிரி போங்கிருவார் : வழக்கமா நாம ஒரு நாளைக்கு சராசரியா முப்பது நாப்பது ஹிட்டு வாங்குவோம். ஒரு வாரமா யாரு கண்ணு பட்டதோ நூறு ஹிட்டு வாங்குது. அதை நானூறு மடங்கு வளர்ச்சின்னு கணக்கு பண்ணிடுச்சு வர்ட்பிரஸ் :). பாவம், மெசின்தானே, இந்தத் தப்பை எல்லாம் பெரிசு பண்ணாம விட்டுருவோம்)

   1. ஆகா… மூணாவதா? வாழ்த்துக்கள்.. இப்படி ஏதாவது ஸ்பெஷலா நடந்தா அதுக்கொரு இடுகை போட்டு நட்சத்திர வாசகர்களை கவுரவப்படுத்தர பதிவுலக கலாச்சாரம் மறந்துட்டீங்களா சார்?

 7. //.இன்னிக்கு சூடான வேகமாக வள்ர்ந்து வரும் பதிவு சாரோடது என்று வேட்பிரஸ் சொல்லுது…//

  நிஜமாவா? இந்த மாதிரி புள்ளி, நமுட்டு சிரிப்பு இதையெல்லாம் பதிவுன்னு நம்பி படிக்கறாங்களா என்ன! 🙂 (நமீதா சிரிப்புன்னு நினைச்சுட்டாங்களோ?)

  ஒரு படத்தில வெண்ணிற ஆடை மூர்த்தி பிரின்சிபால். கருணாஸ் ஸ்டூடண்ட். அவங்களோடப் பழகறேன்னு போய் மூர்த்தி சார் அடி உதை எல்லாம் வாங்குவாரு.

  பாவம், விதி யாரை விட்டது… 🙂

  1. //வாழ்வு இன்னும் இழுபறியாய் டிக்னிடியே இல்லாமல் இழுபட்டுக்கிடக்குது சார்.,, ஒட்டுமொத்தமா டிக்னிட்டியை இழந்த சனத்துக்கு டிக்னிட்டியைத்தருபவன் தான் உண்மையான டிக்னிட்டிகாரன்.//

   இது ரொம்ப சீரியசான விஷயம். யாரும் காமடி பண்ணக் கூடாது.

   (இதையே இன்னும் கொஞ்சம் விவரமா எழுதி இருந்தாருன்னா சிறப்புப் பதிவுன்னு ஒண்ணு தேத்தி இருக்கலாம். ஹ்ம்ம்…நாம குடுத்து வெச்சது அவ்வளவுதான்)

  1. மரியாதை எல்லாம் வேண்டாம் சார். நட்பாஸ்னு கூப்பிடலாம்.

   இல்ல இன்னும் நெருக்கமா பீல் பண்ணினா நட்டுன்னு கூப்பிடலாம்.

   இல்ல நம்ம கேங்குல அடியாளா வேலை செய்ய ரெடியா இருந்தா பாஸ்னு கூப்பிடலாம்.

   ஆனா இதை எல்லாம் விவாதம்னு சொல்றது உங்களுக்கே ஓவரா தெரியல? :))

 8. முரணியக்கம் பற்றியது

  பாஸ் மன்னிக்கவும்.போட்டுவிடாதீங்க
  .
  நான் ஒரு ஆர்வக்கோளாறில் பின்னூட்டந்தானே என்று எழுதுவது
  சரியாகத்தோன்றுபவையை பயன்படுத்தி நீங்கள் எழுதுங்கள்(மூலம்text book)
  பிழையானவைபயன்படுத்தினால் விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல.சட்டப்படி பதிவுக்கும் பின்னூட்டத்துக்கும் செக்‌ஷன்கள் வேறு.வருஷங்களும் வித்தியாசம்
  பின்னூட்டியதில் பல வாக்கிய அமைப்பு குழப்பமாக இருக்கிறது.புள்ளி போடவேண்டிய இடத்தில்போடவுமில்லை(பயத்தில்).அதனால் ஏற்படும் கருத்துமயக்கங்களும் இருப்பதுபோல இருக்கிறது..
  உண்மையில் அவசரப்பட்டு அழுத்திவிட்டேன். நீக்கினாலும்நல்லது
  கல்லூரிகள் பற்றிய முரண்பாடுகளை/ஒரு பக்க பர்வை என்று ஜெமோ வைக்கலாம் ஏனென்றால் கல்லூரிகள் சமுகத்தைப்பிரதிபலிப்பவை சமுகத்தின் கூறு. தீர்ப்பு சொல்ல முடியாது ஆனால் தீர்வு காணவேண்டியது……இப்படித்தான் பத்தியில் சொல்லவந்தது..அது …தவறுக்கு மன்னியுங்கள்
  இனி இரண்டு அல்லது நாலு வரிகளில் பின்னூட்டத்தை முடித்துவிடுவேன்.

  1. உங்களுக்கு இருக்கிற பல நூறு வேலைகளுக்கு இடையே மெனக்கெட்டு நீங்கள் இத்தனையும் எழுதி இருக்கிறீர்கள். இது தமிழுக்கு புதிது, இன்றைய கால கட்டத்தில் அவசியமான ஒன்றும் கூட. அதனால் இது காணாமல் போவதில் எனக்கு உடன்பாடில்லை.

   நீங்கள் நீக்க சொல்லி வலியுறுத்தினால் மட்டும்தான் நான் நீக்குவேன். அதுவும் இதை சீர்திருத்தி உங்கள் தளத்தில் இன்றைக்கு இல்லா விட்டாலும் என்றைக்காவது ஒரு நாள் பதிவு போடுவதாக நீங்கள் உறுதி தர வேண்டும். நீங்கள் பதிவு செய்தபின் நான் அதன் சுட்டியை இங்கே சேர்த்துக் கொள்கிறேன்.

   மிக்க நன்றி- நீங்கள் எழுதியது எனக்கு புது வெளிச்சம் கிடைத்தது போல் இருக்கிறது: ஏறத்தாழ இதே விஷயத்தை உளவியல் கண்ணோட்டத்தில் இல்லாமல் தத்துவ நோக்கில் நான் ஒரு நண்பருடன் விவாதித்துக் கொண்டிருந்தேன். 🙂

   1. http://www.varasiththan.com/2010/05/blog-post_28.html கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என ஒரு பதிவில் இந்த சிந்தனைக்கோட்பாட்டைப்பற்றி எழுதியிருக்கிறேன் அறிமுகமாகத்தான். அதிலுள்ளவை இதிலுள்ளன.நடைமுறையிலுள்ள ஒரு சிக்கலோடு பொருத்துகிறபோது அது கொஞ்சம் சூடாகிதெளிவாகிறது.உள்மனக்கருத்துமுரண்பற்றி அனேகர் அறியவேண்டும்தான்.அதுபற்றி உங்கள் அனுபவங்களையும் சேர்த்து எழுதி
    சீர்திருத்தி வெளியிடுங்கள்.திட்டமிட்டு எழுதும் நிலையில் இல்லை.பதிவாகசெம்மைப்படுத்தும் பொறுப்பு உங்களது.நன்றி

    1. நன்றி. எனக்கே முன் இருந்த முனைப்பு விட்டுப் போய் விட்டது. தனி மனித விமரிசனங்களை அலசுவது என்ன நியாயம் என்றுத் தோன்றுகிறது? ஏதோ ஆத்திர அவசரத்தில் பதிவு பண்ணி விட்டேன். இனி அதை மாற்றி பொது கருத்தாக உங்கள் கருத்துகளையும் எனது கருத்துகளையும் இணைத்து பதிவு பண்ணலாம் என்று நினைக்கிறேன். இந்தப் பின்னூட்டம் நீங்கள் எழுதியதற்கு ஒரு சான்றாக இங்கேயே இருக்கட்டும் என்று தோன்றுகிறது. இல்லை, நீங்கள் இங்கே இருக்க வேண்டாம் என்று சொன்னால் தூக்கி விடலாம்.

     மிக்க நன்றி- என்னை ஆழமாக சிந்திக்கத் தூண்டி இருக்கிறீர்கள். 🙂

     1. பாஸ் இருக்கட்டும் பி.ஊட்டம். ஜெமோவைவிடுவோம்.முன்பு உங்கள் பின்னூட்டங்களைப்பார்க்கும்போது கேட்கத்தோன்றியது.இப்போது கேட்கிறேன்.உளவியல்-cognitive distortions என்றவகையில் தவறான சிந்த்னையோட்டங்களைப்பற்றி எழுதினேன்.நீங்கள் அவற்றை மீள உங்கள் வாழ்வுசார்ந்த அனுபவங்களினூடாக பரந்தவாசிப்பினுடான உதாரணங்களினூடாக எழுதவேண்டும்.அப்போது அது இன்னும்புரிபடும்.உண்மையில் அதை எழுதனேர்ந்தபோது எனக்குள்ளும் மாற்றத்தை கொண்டுவந்தது.
      வலைதளத்தில் ரெஃபெரென்ஸ் எல்லாம் கிடைக்கிறது.
      இந்தcognitive distortion பதிவை தொடக்கமாகக்கொள்வோமா.judgemental,overgeneralization இப்படி…அதற்காக உங்கள் வாழ்க்கையை stress ஆக்காமல் நிதானமாய் commitment ஆக்காமல் தோன்றும்போது மனதில் படுவதை எழுதுங்கள்.தமிழில் உளவியல் நல்லபுரிந்துணர்வோடு வளர உதவியாக இருக்கும்.அன்பான வேண்டுகோள்.

      1. செய்யலாமே!

       http://lesswrong.com/

       இந்தத் தளம் நீங்கள் அறிந்திருப்பீர்கள். பலவிஷயங்கள் பிடிபடாவிட்டாலும் நான் இதை விரும்பி வாசிக்கிறேன்.

       நீங்கள் சொன்னது போல் செய்யலாம்.

       முயற்சி செய்கிறேன்.

       ஊக்கத்துக்கு நன்றி.

       🙂

 9. ஒரு புள்ளிக்கு இவ்வளவு பின்னூட்டமா, கோடு போட்ட ரோடு போடறதா கேள்வி பட்டுருக்கேன் ஆன புள்ளி வெச்சா வீடு கட்டறத இப்பதான் பாக்கறேன்.

 10. தென்றல், பதிவு எழுதி முடிக்கறதுக்குள்ள அதுக்கு பின்னூட்டம் போட்டு அதோட கதையை முடிச்சுடராங்கப்பா…

  புள்ளியாவது கோலமாவது! பின்னிடறாங்க பின்னி! :)))

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.