நண்பர்களுக்கு நன்றி

இன்று இந்த ப்ளாக் தனது பத்தாயிரமாவது ஹிட்டை சிரம் தாழ்த்தி ஏற்றுக் கொண்டது. உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.

இந்த பத்தாயிரமாவது ஹிட்டைப் பெற பத்து மாதங்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருந்தது என்ற உண்மை பலருக்குத் தெரியாது.

முதலில் நான் நண்பர்கள் சாய், கிரி, அபராஜிதன், வரசித்தன் அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். அவர்கள் இல்லாவிட்டால் ஹிட்டுகளின் எண்ணிக்கை பாதிக்குப் பாதி குறைந்திருக்கும்.

மீதமிருக்கும் பாதியில் பாதிக்குக் காரணகர்த்தா யார் என்று தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள். திரு ஜெயமோகன் அவர்கள்தான் அது! மேற்கண்ட படத்தில் பரபரப்பான தினம் என்று ஒன்று பதிவாகி இருக்கிறது அல்லவா?- அதுகூட நண்பர் ஆர்வி அவர்கள் ஒரு கடிதம் மூலமாக இங்கு இருந்த ஒரு பதிவை ஜெயமோகன் அவர்களுக்கு அறிமுகப்படுத்தி அது அங்கு ஒரு கட்டுரையாக வெளி வந்ததன் விளைவுதான்.

உங்களுக்குப் பிடித்த பதிவுகளைச் சுட்டிக் காட்டி பேசுவதை, சுட்டிக் காதல் என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். நிறைய பேர் ஒரு விஷயத்தை சுட்டிக் காட்டிப் பேசுவது தேடு பொறிகளின் பார்வையில் அதன் முக்கியத்துவத்தைக் கூட்டுவதால்தான் இந்தப் பெயர். ஆனால் இதிலும் ஒரு விஷயம் இருக்கிறது என்று விபரம் தெரிந்தவர்கள் சொல்கிறார்கள்.

ஒரு பெண் பின்னால் அழகான, டீசண்டான இளைஞர்கள் போனால் அது அவளுடைய அழகுக்குப் பெருமை சேர்ப்பதாக இருக்கக் கூடும். ஆனால் என் போன்ற அவலட்சணக் கிழங்கள் கோலும் பல் செட்டுமாக அவளது முந்தானையை துப்பட்டாவைப் பிடித்துக் கொண்டு ஓடினால் அவளைப் பார்த்து நாலு பேர் சிரிக்க மாட்டார்கள்? குப்பையாய்க் கிடக்கிற தளங்கள் சுட்டி கொடுத்தால் எவ்வளவு பெரிய தளமாக இருந்தாலும் அந்தத் தளத்தின் மதிப்பு குறையவே செய்யுமாம். அந்த வகையில் திரு ஜெயமோகன் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

விஷயத்துக்கு வருகிறேன். எது எப்படியோ, நான் என்னை பாதித்த கட்டுரைகள் என்ற வகையில் ஜெயமோகன் அவர்களின் சில கட்டுரைகளை இங்கு சுட்டிக் காட்டியிருந்தேன். அதை அவரது தளத்தில் பின் தடமாகப் பார்த்து இங்கே வந்து விழுந்தவர்கள் ஒரு இரண்டாயிரம் பேராவது இருப்பார்கள். அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

ஐயாயிரத்தில் இரண்டாயிரம் போனால் மூவாயிரம். அதில் ஒரு இரண்டாயிரம் என்பது நானே இந்த ப்ளாகைத் திறந்து திறந்து மூடிய எண்ணிக்கை என்பதை ஒரு ஏழு வயது குழந்தைகூட கண்ணை மூடிக் கொண்டு சொல்லி விடும்.

மிச்சம் ஒரு ஆயிரம் இருக்கிறதே, அது என்ன?

இந்த மாதிரி தேடி வந்த பாவப்பட்ட ஜனங்கள்தான்-

அவர்கlளிடமும் என்னை மன்னித்து விட வேண்டுகிறேன்.

இந்த பிளாகை நான் எழுதுகிறேன் என்றுதானே நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? தப்பு. இதில் பதிவுகளை நான் எழுதினாலும் இது படிக்கப்படுவதற்குக் காரணம் நான் அல்ல- நண்பர்கள் அபராஜிதன் மற்றும் வரசித்தன் அவர்கள்தான் இங்கு சூப்பர் ஸ்டார்கள். நம்பிக்கை இல்லை என்றால் கீழே பாருங்கள்-

பதிவுகளைப் பெறத் தங்கள் மின் அஞ்சல் முகவரியைப் பதிவு செய்து கொண்டுள்ளவர்கள் இரண்டே இரண்டு பேர். பின்னூட்டங்களைப் பெறுபவர்கள் ஏழு பேர்! இந்த மாதிரியான அநியாயத்தை வேறு எங்காவது பார்த்திருக்கிறீர்களா? தமிழ் தவிர வேறெந்த மொழியிலும் எழுத்தாளர்கள் இவ்வகையான அவமானங்களை ஊமையாக சகித்துக் கொண்டு எழுதுவதில்லை.

இருந்தாலும் அந்தப் பின்னூட்ட ரசிகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. அவர்களும் இதைப் படிக்க வேண்டுமென்றால், இதைப் பின்னூட்டத்தில் போட்டால்தான் உண்டு.

ஹ்ம், அதையும் செய்கிறேன். என் நேரம்!

Advertisements

24 thoughts on “நண்பர்களுக்கு நன்றி

 1. ஐயா, இது உங்களுக்காக-

  “இன்று இந்த ப்ளாக் தனது பத்தாயிரமாவது ஹிட்டை சிரம் தாழ்த்தி ஏற்றுக் கொண்டது. உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.

  இந்த பத்தாயிரமாவது ஹிட்டைப் பெற பத்து மாதங்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருந்தது என்ற உண்மை பலருக்குத் தெரியாது.

  முதலில் நான் நண்பர்கள் சாய், கிரி, அபராஜிதன், வரசித்தன் அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். அவர்கள் இல்லாவிட்டால் ஹிட்டுகளின் எண்ணிக்கை பாதிக்குப் பாதி குறைந்திருக்கும்.

  மீதமிருக்கும் பாதியில் பாதிக்குக் காரணகர்த்தா யார் என்று தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள். திரு ஜெயமோகன் அவர்கள்தான் அது! மேற்கண்ட படத்தில் பரபரப்பான தினம் என்று ஒன்று பதிவாகி இருக்கிறது அல்லவா?- அதுகூட நண்பர் ஆர்வி அவர்கள் ஒரு கடிதம் மூலமாக இங்கு இருந்த ஒரு பதிவை ஜெயமோகன் அவர்களுக்கு அறிமுகப்படுத்தி அது அங்கு ஒரு கட்டுரையாக வெளி வந்ததின் விளைவுதான்.

  உங்களுக்குப் பிடித்த பதிவுகளைச் சுட்டிக் காட்டி பேசுவதை, சுட்டிக் காதல் என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். நிறைய பேர் ஒரு விஷயத்தை சுட்டிக் காட்டிப் பேசுவது தேடு பொறிகளின் பார்வையில் அதன் முக்கியத்துவத்தைக் கூட்டுவதால்தான் இந்தப் பெயர். அந்த வகையில் நான் என்னை பாதித்த கட்டுரைகள் என்ற வகையில் ஜெயமோகன் அவர்களின் சில கட்டுரைகளை இங்கு சுட்டிக் காட்டியிருந்தேன். அதை அவரது தளத்தில் பின் தடமாகப் பார்த்து இங்கே வந்து விழுந்தவர்கள் ஒரு இரண்டாயிரம் பேராவது இருப்பார்கள். அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

  ஐயாயிரத்தில் இரண்டாயிரம் போனால் மூவாயிரம். அதில் ஒரு இரண்டாயிரம் என்பது நானே இந்த ப்ளாகைத் திறந்து திறந்து மூடிய எண்ணிக்கை என்பதை ஒரு ஏழு வயது குழந்தைகூட கண்ணை மூடிக் கொண்டு சொல்லி விடும்.

  மிச்சம் ஒரு ஆயிரம் இருக்கிறதே, அது என்ன?

  இந்த மாதிரி தேடி வந்த பாவப்பட்ட ஜனங்கள்தான்-

  அவர்களும் என்னை மன்னித்து விட வேண்டுகிறேன்.

  இந்த பிளாகை நான் எழுதுகிறேன் என்றுதானே நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? தப்பு. இதில் பதிவுகளை நான் எழுதினாலும் இது படிக்கப்படுவதற்குக் காரணம் நான் அல்ல- நண்பர்கள் அபராஜிதன் மற்றும் வரசித்தன் அவர்கள்தான் இங்கு சூப்பர் ஸ்டார்கள். நம்பிக்கை இல்லை என்றால் கீழே பாருங்கள்-

  பதிவுகளைப் பெறத் தங்கள் மின் அஞ்சலைப் பதிவு செய்து கொண்டவர்கள் இரண்டு பேர். பின்னூட்டங்களைப் பெறுபவர்கள் ஏழு பேர்! இந்த மாதிரியான அநியாயத்தை எங்காவது பார்த்திருக்கிறீர்களா? தமிழ் தவிர வேறெந்த மொழிகளிலும் எழுத்தாளர்கள் இவ்வகையான அவமானங்களை ஊமையாக சகித்துக் கொண்டு எழுதுவதில்லை.

  இருந்தாலும் அந்தப் பின்னூட்ட ரசிகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. அவர்களும் இதைப் படிக்க வேண்டுமென்றால், இதைப் பின்னூட்டத்தில் போட்டால்தான் உண்டு.

  ஹ்ம், அதையும் செய்கிறேன்…

  நன்றி மக்களே!

  1. அடச்சே.. இது பதிவின் மீள் பின்னூட்டமா? முதல்முறையா பெருசா பின்னூட்டியிருக்கீங்களேன்னு ஆவலோடு படிக்க வந்தா…

 2. பத்துலட்சம் ஹி்ட் பெற வாழ்த்துக்கள்!

  கணக்குத்துறை என்பதால் இப்படி நிறையக்கணக்கெல்லாம் போட்டு அடடா…என்ன ஒரு ஆராய்ச்சி.ஏன் சார் நீங்க சின்ன வயசிலேயிருந்து இப்படித்தானா? உங்களுக்கு வாத்தியார் 90 மார்க் போட்டால் போய்ப்பேசி நீங்களே குறைச்சுக்கொள்வீங்களோ.

  நாங்கெல்லாம் பதிவுபோட்டால் அதுதானாகவோ வலிந்ந்த்தோ திரட்டிக்குப்போய் சீண்டுவாரில்லாமல் கிடக்கும்.உங்கள் பதிவைக்கண்டுபிடிக்க எனக்கு மாசங்களாச்சுது.நட்பாஸ் யாரு பாஸ்கர் யாரு ஒரேகுழப்பம்.

  கிரி இன் ’’எப்போதும் பெண்’’ இல்தான் உங்கள் வாசல் அதாங்க சுட்டி இருந்தது.ஆரம்பத்தில் கிரி யோசித்திருப்பார். யாரடா இது எப்போதும் பெண்ணை ஒருத்தன் எப்போதும் பார்க்கிறான் என்று.
  லிவ்லிப்லணெட் ப்ளொக்ஸ்பொட்டிலும் ஒன்றிருக்கிறது.உங்கள் ஆங்கிலப்பக்கம் எனக்குகொஞ்சம் கூட.இப்படிதேடிக்கண்டுபிடிப்பது மாதிரி பக்கத்தை ஒளித்துவைத்துவிட்டு அதற்கு கணக்கு வழக்கெல்லாமா பார்க்கிறீர்கள்.
  பின்னூட்டத்தை மக்கள் பார்ப்பது உங்கள் wit/humour பதில்களுக்காக.அதுவும் அபராஜிதனுக்கும் உங்களுக்குமிடையில் நடப்பது நகை கதம்பம். விவேக் போல இழுத்து அ..பராஜிதனா ஆஆ(கிரிசாரின் கேள்விக்கு)…..பேசிவைத்துச்செய்யறீங்களா.
  அதுசரி தேடலில் தத்துவம் சரி அது என்ன கை..

  அக்கப்போர் அன்பு
  அரசியல்அழகு- அஹிம்சை
  கவிதை கால்பந்து
  கிரி க்யூட் சிந்தனைகள்
  வடசென்னைவரசித்தன் வரலாறு-வாழ்க்கை விளையாட்டு
  இப்படி நீங்களாய்ச்செய்ததா.? அல்லது கம்பன் வீட்டுகட்டுத்தறிபோல உங்கள் பதிவின் குறிச்சொற்கள் கூட ஏதோ சொல்லவருகிறதா? ஆஆஆ

  நட்பாஸிசம் எங்கும் பரவட்டும்

  1. உண்மையை சொல்கிறேன். எனக்கு இந்தப் பத்தாயிரம் ஹிட்டுகள் ஒரு பொருட்டே அல்ல. உங்களைப் போன்ற ஒரு மனிதாபிமானமுள்ளவர், அபராஜிதன் போன்ற வருங்கால நோபல் பரிசு வின்னர், கிரி போன்ற ஒரு நண்பர்: எனக்கு இது போதும்.

   பேரும் புகழும் குவியாடியின் (லென்ஸ்) வழியே விழும் வெளிச்சம் போல. பிரகாசமாக இருந்தாலும் அது யார் மீது விழுகிறதோ, அவரை அந்த வெளிச்சம் தன் சுயம்பிரகாசம் என்ற ஆணவத்தில் உறையச் செய்து, அவரது சுயத்தையே எரித்துப் பொசுக்கி விடும். தன்னடக்கமும் உஷாராகவும் இல்லாதவர்கள் சாம்பல்தான். என்னால் அதை எல்லாம் தாங்க முடியாது. எனவே எனக்கு அந்த ஆசை எல்லாம் இல்லை.

   உங்களைப் போன்ற நல்லவர்கள் என்னையும் ஒரு பொருட்டாக நினைக்கிறீர்கள் என்ற எண்ணமே என் ஒவ்வொரு தினத்தையும் சந்தோசம் மிகுந்ததாக ஆக்குகிறது. அது போதும்.

   மிக்க நன்றி.

    1. ஐசெல்லாம் இல்லீங்க… நிச்சயம் நடக்கத்தான் போகுது.

     ஒழுங்கா படிச்சு உருப்பட்டா நோபல். இல்லாங்காட்டி எங்களை மாதிரி நோ பல்!

     ரெண்டுல ஒண்ணு உங்களுக்கு காரண்டி!

   1. பேரும் புகழும் என்பது குவிவாடி நல்ல தொரு உவமானம்.ஆளைப்பெரிதாகவும் காட்டும்.உண்மைதோற்றமும் தெரியாது.
    நீங்கள் எரிக்காத ஆளாய் ஒரு முன்னுதாரணமாய் விளங்குவீர்கள்.
    புகழுக்கு பின்னால் ஓடாதவர்களுக்குப்பின்னால் புகழ்வரும்.

    மனிதாபிமானியா?
    மருத்துவத்தில் medical negligence என்பது ஒரு குற்றம்.omission,commission செயல்,செயல்பாடின்மை இரண்டுவகையான குற்றங்கள்.செயற்படாமை மருத்துவத்தில் பாரதூரமான குற்றம்.நோயாளி இறந்து கொண்டிருந்தால் தடுக்க மருத்துவர் எதையாவது செய்தாகவேண்டும்.இல்லாவிட்டால் அவர் குற்றவாளியாகிவிடுவார்.மருந்தைத்தவறாககொடுப்பது செயல்குற்றம்.

    மருத்துவத்தில் அப்படி.இது சமுகத்துக்கும் பொருந்தும்.ஆனால் இன்றைய உலகில் செயற்பாடற்றிருப்பது குற்றமல்ல தோற்றம் உருவாகியிருக்கிறது.
    நான் மனிதாபிமானம் உள்ளவன் என்றால் மனிதர்களைப்பாதிக்கும் செயல்களைச்செய்யாதவன் என்ற அளவில் சரி. ஆனால் மனிதர்களைபாதிக்கிற பல செயல்கள் நிகழுவதை பார்த்துக்கொண்டு பேசாமல் இருக்கிறேன்.அது செயல்படாக்குற்றம்.மனிதாபிமானி எல்லாமனிதர்களுக்குமாக குரல் கொடுப்பான்.செயற்படுவான்.அவன் தூக்குத்தண்டனைக்கைதியையும் ஒரு மனிதனாகப்பார்ப்பான்.ஆகக்குறைந்தது வருந்தவாவது செய்வான்.என்னைப்போன்ற சராசரிகளை மனிதாபிமானியென்றால் அபராஜிதன் இதுதான் மனிதாபிமானம் என்று நினைத்துவிடப்போகிறார்.

    அளவுக்குமீறிய தன்அடக்கமும் கூடாது சார் அது குழிவு வில்லை போல.எரிக்கவேண்டியதை எரிக்காது

    1. கொஞ்சம் யோசித்து எழுத வேண்டி இருந்ததால் கால தாமதமாகி விட்டது. மன்னிக்கவும்.

     செயல்படாமல் இருப்பதும் ஒரு நிலைப்பாடுதான். என் நினைவு சரியாக இருந்தால் கம்யூனிஸ்ட் போலந்து, செக்கொஸ்லாவேகியா போன்ற தேசங்களில் கலைஞர்கள் அடக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தங்கள் படைப்புகளைக் கை கழுவினார்கள்.

     ஒரு மனிதன் நியாயமான அளவில் தன் உணர்வுகளைத் தெரிவிக்க ஓரளவாவது சுதந்திரம் இருக்க வேண்டும். அப்படி இல்லாத சூழ்நிலைகளில் அதீதமான மனிதர்களாலேயே அதை செய்ய முடியும். அவ்வளவு ஏன், இன்றைய தினசரியில் தான் தன் குடும்பத்தை கவனிக்காமல் பொதுவாழ்வில் ஈடுபட்டது எந்த அளவுக்கு நியாயம் என்று நெல்சன் மண்டேலாவே ஐயப்படுவதாக செய்தியைப் படித்தேன்.

     ஆனால் ஒன்று. அந்த காலகட்டங்களில் நீங்கள் சிதறல் போன்ற சிறுகதைகளை எழுதி இருக்கிறீர்கள். அது போதும். அடுத்தவரது உணர்வுகளைப் பிரதிபலிக்கிறவர் மனிதாபிமானி இல்லை என்றால் வேறு யாரை அப்படி சொல்ல முடியும்?

     .

  2. @வரசித்தன் சார்,

   நட்பாஸ் சாரை நான் கண்டுபிடித்ததற்கு நீங்கள் தான் காரணம். உங்கள் ‘ஹலூசினேஷன்’ பதிவின் நபி பின்னூடத்தின் பின்தான்.. நாங்கள் மெயில்கள் மூலம் தொடர்பாடினோம்.. ஆனால் நான் அவரது ரசிகன் ஆனது அவர் கூகிள் ரீடரில் பகிரும் செய்திகளைப் பார்த்த பின்னர்தான்.

   //அல்லது கம்பன் வீட்டுகட்டுத்தறிபோல உங்கள் பதிவின் குறிச்சொற்கள் கூட ஏதோ சொல்லவருகிறதா?//

   ஆகா.. உயர்வு நவிற்சியணி…

   //பின்னூட்டத்தை மக்கள் பார்ப்பது உங்கள் wit/humour பதில்களுக்காக.அதுவும் அபராஜிதனுக்கும் உங்களுக்குமிடையில் நடப்பது நகை கதம்பம். //

   ஆஹா.. பின்னூட்டங்களை நீங்களும் தொடர்கிறீர்களா? செத்தேன்.. இந்தத் தளத்தில் இவ்வாறு (பெரிய விஷயங்களை) பின்னூட்டக்கூடாது என நான் முடிவு செய்ததற்கு நீங்கள்தான் காரணம். (பின், வாசகர்கள் நலன்கருதி ?! என் முடிவை நான் மாற்றிக்கொள்வது வழக்கமாகிவிட்டது) எனது பின்னூட்டங்களைப் படித்துவிட்டு.. எனது “மேலிட”த்தில் போட்டுக்கொடுக்க மாட்டீர்களே? அல்லது ஏற்கனவே போட்டுக் கொடுத்து விட்டீர்களா? மேலிடம் தெரியாதமாதிரி நடிக்கிறதா? நான் (மேலிடம் கோபப்படும் வகையில்)தவறாக ஏதாவது பின்னூட்டுகின்றேனா? அவ்வாறு இருந்தால் மேலிடத்திற்கு சொல்லுமுன் எனக்குச் சொல்லிவிடுங்கள்.. திருந்திக்கொள்கிறேன்.(இப்பத்தி உங்களுக்கு மட்டும் புரியும் என நம்புகிறேன்.. வேறு யாரும் தவறாக என்ன வேண்டாம்.)

   //நட்பாஸிசம் எங்கும் பரவட்டும்//
   பாஸிசம் மாதிரி, இதென்ன நட் பாஸிசம்?

   1. கிண்டல்களை முதலில் பார்த்தபோது எனக்கு அசௌகரியமாக இருந்தது.
    பாஸ் அவர்களுக்கு ஆற்றலோடு நிறையபக்குவம் இருக்கிறது என்பதை தெரிந்துகொண்டேன்.அதனால்தான் தானும் தன்னையே கிண்டல்செய்து கொள்ளுகிற தன்மை கைவரப்பெற்றிருக்கிறது.
    அவரைப்பற்றிய அபிப்பிராயத்தை மேலும் அதிகரிக்கிறது.
    அவரைப்பாதித்தாலும் அவர் சிரித்து அதைமறந்துவிடும் பழக்கம் இருக்கிறதுபோல இருக்கிறது.அதனால் எல்லைகள் எதுவென்று இப்படிக்கிண்டல் சந்தர்ப்பங்களில்தெரியாது.அவரும் சேர்ந்து தன்காலைவாருவார்.

    யார் இவர் இப்படிஅளவு மீறுகிறாரே என்று உங்களைப்பார்க்கிறவர்கள் யோசிப்பார்கள்.

    1. அபராஜிதன் அவர்கள் கிண்டல் பண்ணுவதை நானும் ரசிக்கிறேன், வரவேற்கிறேன். அவர் அளவு மீறுகிறார் என்று நான் நினைக்கவில்லை.

     இந்த ப்ளாகில் எனக்குப் பிடித்த பதிவு எது தெரியுமா? அதை நான் வாரம் ஒரு தடவையாவது படித்துப் பார்க்கிறேன். இதுதான் அது –
     https://livelyplanet.wordpress.com/2010/05/05/tim-ferris/

     என்ன விஷயம் என்பதை வெட்டி ஒட்டி விடுகிறேன்: காசா பணமா!

     ஒரு மாற்றத்துக்காக இன்றைக்கு நம்மை இணையதளம் போன்ற பொதுவெளிகளில் விரும்பத்தகாத பின்னூட்டங்கள் இட்டு வெறுப்பு காட்டுபவர்களை எப்படி கையாள்வது என்பதைப் பாப்போம்:

     இவை குறிப்புகள்தான்- இங்கே முழுமையும் படிக்கவும்: Mashable

     எத்தனை பேர் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள் என்பதைவிட எத்தனை பேர் புரிந்து கொள்கிறார்கள் என்பதே முக்கியம்: ஆயிரம் பேர் இருந்தால் போதும், அவர்கள் மூலம் உங்கள் செய்தி எண்ணற்றவர்களைச் சென்றடையும்.

     நூற்றுக்குப் பத்து பேர் நீங்கள் சொல்வதை எல்லாம் தன்னைக் குறித்து சொன்னதாகவே நினைப்பார்கள். அதற்குத் தயாராக இருங்கள். ஒவ்வொருத்தருக்கும் பதில் சொல்லிக்கொண்டு இருப்பது வீண் வேலை, என்கிறார் பெர்ரிஸ்- தராதரம் பார்த்து பின் வினையாற்றுங்கள்.

     எல்லாரும் விரும்ப வேண்டும் என்று நினைப்பது உங்களை சராசரி ஆளாக மாற்றி விடும்: அடிக்கடி மன்னிப்பு கேட்பது, எப்படியாவது ஒத்த கருத்தை உருவாக்கிக் கொள்வது, இதெல்லாம் வேண்டாதவர்களுடன் வழக்காடவும், நீங்கள் விரும்பும் விஷயங்கள் ஒதுக்கப்படவுமே வழி வகுக்கும்.

     நீ உருப்படியாக ஏதாவது செய்கிறாய் என்றால் நூற்றுக்கு தொன்னூத்தைந்து பேர் உனக்கு எதிர்மறை கருத்து தெரிவிப்பவர்களாகவே இருப்பார்கள்.- முப்பத்தைந்து மொழிகளில் என்னைத் திட்டுகிறார்கள் என்கிறார் பெர்ரிஸ்.

     முன்னேற வேண்டுமானால் முட்டாளாக இருக்க பயப்படக் கூடாது- உங்கள் மீதான விமரிசனங்களை ரசிக்கப் பழகுங்கள், சொல்லப்போனால் திட்டுபவர்களை வளர்த்து விடுங்கள்.
     வாழ்ந்து காட்டுங்கள்: அதுதான் உங்கள்மீது கடுப்பாக இருப்பவர்களை இன்னும் கடுப்பேற்றி தோற்கடிக்க சிறந்த வழி- எனது வசவுகள் உங்களை பாதிக்கவில்லை என்றால், அது எனக்குத் தோல்விதானே?

     அமைதியாக உன் வேலையைப் பார்: நீ இந்த உலகத்தின் மீது எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தப் போகிறாய் என்பதில் கவனம் செலுத்து, மற்றவர்கள் உன்னை பாதிக்காதபடிக்கு அமைதி காக்கவும்.

     அபராஜிதன் என்னைப் பார்த்து நானே பிரமிக்காதபடிக்கு ஒரு மருத்துவராக இருக்கிறார் (என் அகங்காரத்தைப் பங்க்சர் செய்ய கிண்டலாக ஒரு குத்து குத்தி ஊசி போடுகிறாரே!). மாங்கு மாங்கென்று மண்டையைக் குடைந்து ரொம்ப சீரியஸாக எதையாவது எழுதி வைத்து விட்டு காலரை நிமிர்த்திக் கொண்டு உட்காரும்போதுதான் வரும் நண்பர் அபராஜிதனின் முதல் கமெண்ட்- “புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!”

     வாழ்க அன்னார் சேவை!

     (அவரும் ப்ளாக் எழுதுவாரில்ல, அப்ப வெச்சுக்கறேன்!)

    2. @டாக்டர்,

     //கிண்டல்களை முதலில் பார்த்தபோது எனக்கு அசௌகரியமாக இருந்தது.
     பாஸ் அவர்களுக்கு ஆற்றலோடு நிறையபக்குவம் இருக்கிறது என்பதை தெரிந்துகொண்டேன்.அதனால்தான் தானும் தன்னையே கிண்டல்செய்து கொள்ளுகிற தன்மை கைவரப்பெற்றிருக்கிறது.
     அவரைப்பற்றிய அபிப்பிராயத்தை மேலும் அதிகரிக்கிறது.
     அவரைப்பாதித்தாலும் அவர் சிரித்து அதைமறந்துவிடும் பழக்கம் இருக்கிறதுபோல இருக்கிறது.//

     உண்மைதான்..

     //அதனால் எல்லைகள் எதுவென்று இப்படிக்கிண்டல் சந்தர்ப்பங்களில்தெரியாது.அவரும் சேர்ந்து தன்காலைவாருவார்.
     யார் இவர் இப்படிஅளவு மீறுகிறாரே என்று உங்களைப்பார்க்கிறவர்கள் யோசிப்பார்கள்//

     மிகவும் உண்மை. நானே பல சமயங்களில் உணர்ந்திருக்கிறேன். இனி திருத்திக்கொள்ள முயற்சிக்கிறேன். சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றி.

     1. ஏங்க, நாமல்லாம் திருந்தற ஜன்மம்’னு நினைக்கறீங்க?

      அது எப்படிங்க சிரிக்காம இப்படியெல்லாம் பேச முடியுது?

      பாவம், டாக்டர் நம்பி கிம்பி ஏமாந்துரப் போறாரு!

   2. அது யாருங்க மேலிடம்?

    எனக்குத் தெரிஞ்ச வரைக்கும் ஆம்பிள்ளைகளுக்கு ஒருத்தர்தான் மேலிடம்.

    பதினாலு வயசுக்குள்ள எல்லாம் முடிஞ்சிருச்சா!

    இதில எல்லாம் இவ்வளவு ஸ்பீடு இருந்தா பூமி தாங்காது சாமீ…

    1. ஐயையோ.. என்ன இது மதுரைக்கு வந்த சோதனை… நான் அப்படியெல்லாம் இல்லைங்கோ.. மேலிடங்கிறது யாருன்னு வரசித்தன் சாருக்கு தெரியும். நீங்க தப்பா புரிஞ்சுகிட்டு மானத்த வாங்குறீங்களே…

     1. சரி சரி. கண்டுக்காம விட்டுடறேன்.

      (மீனாட்சியைக் கேட்டதாக சொல்லுங்கள்.) இந்த ரகசியம் நமக்குள் இருக்கட்டும்:

 3. வாழ்த்துக்கள்… பத்தாயிரம் ஹிட்ஸ்-ஆ?? சூப்பர்… உங்களுடைய பதிவுகள் பிரபலமாவதற்கு, உங்களைத் தாழ்த்திக்கொண்டு உங்களையே கிண்டல் செய்யும் தந்திரமும் ஒரு முக்கிய காரணம்…

  ஹிஹிஹி.. இதுதான் ஹிட் அனாலிசிஸ்-ஆ? விஜயகாந்த் மாதிரி புள்ளிவிபரம் சொல்லிகிட்டே போறீங்க… மெயில்-அ பின்தொடர்பவர்கள் ரெண்டு பேர்.. அப்போ, என்னைய மாதிரி ஆர்.எஸ்.எஸ்??

  1. ஓஹோ… அடிக்கும்போது வலிக்காத மாதிரி பாவ்லா பண்ணினா அது ஒரு தந்திரமா? தெரியாம போச்சே!

   அதுக்காக அடிக்கறவாங்க விட்டுறவா போறீங்க!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s