பரப்பியல்தான் சரி

யாரும் கேட்கவில்லை, இருந்தாலும் சொல்கிறேன். இந்தப் பரப்பியல் குறித்த விவாதம் படு காமடியாகப் போய் விட்டது. உண்மையிலேயே புரிந்து கொள்ளாமல் பேசுகிறார்களா, இல்லை புரியாத மாதிரி நடிக்கிறார்களா என்பது தெரியவில்லை (இல்லை, நான்தான் புரிந்து கொள்ளாமல் பேசுகிறேனா என்பது வேண்டாத கேள்வி. அது வாதத்துக்கு வலு சேர்க்காது என்பதால் அதை நிராகரிக்கிறேன்! 🙂 )

பாபுலர் என்பதற்கு பரப்பு என்பதுதான் சரியான சொல் என்று குழந்தை கூட சொல்லிவிடும். எப்படி என்று கேட்கிறீர்களா?

தி நகர் போய் பாருங்கள். அங்கே விதவிதமான இசை மற்றும் திரைப்படக் குறுந்தகடுகள், ஆங்கிலப் புத்தகங்கள் இவற்றை கூறு கட்டி பரப்பி வைத்துக் கொண்டு உட்கார்ந்திருப்பார்கள். இவற்றைப் பற்றிப் பேசுவதுதான் பரப்பியல்.

“யோவ் லூசு, ரங்கநாதன் தெருவில் காய்கறிகளைக் குவித்து வைத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறார்கள். இதைப் பற்றி எல்லாம் பேசினால் அது குவிப்பியலா?” என்று கேட்பீர்களேயானால் உங்கள் அறியாமையை நினைத்து மௌனமாய் சிரித்துக் கொள்வதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை.

மக்கள் கேட்கிறார்கள் என்ற காரணத்தினாலேயே சட்டத்தை மீறியாவது பரப்பியல் சார்ந்த விஷயங்கள் பிளாட்பாரங்களை தங்கள் பரப்பாகக் கை கொண்டு, துண்டு போட்டு அவர்களிடம் சென்று சேர்ந்து விடுகின்றன. இங்கே “அபரிதமாக உற்பத்தியாகி வெளிப்படையாக விற்பனைக்காக சாலையோரக் கடைகளில் பரப்பி வைக்கப்படும் அளவுக்கு பாப்புலர் ஆனவை” என்ற நிலையையும் பரப்பியல் என்ற சொல் சுட்டுகிறது என்பது பரப்பியலின் கூடுதல் பலம்.

பரப்பிசை, பரப்புத் திரைப்படங்கள், பரப்பு வணிகம் இவை போன்றவற்றையெல்லாம் பரப்பியல் அறிஞர்கள் விவாதிக்கலாம். உதாரணத்துக்கு ஒன்று- சிவா விஷ்ணு கோவில், அயோத்தியா மண்டபம் இவற்றின் வாசலில் இருக்கிற பிளாட்பாரங்களில் பூணூல் மஞ்சள் கயிறு போன்றவை கிடைக்கின்றன. ஆனால் மற்ற கோவில்களில் கிடைப்பதில்லை: இதன் சமூக, வர்த்தக காரணிகள் நியாயங்கள் என்னென்ன என்பதை பரப்பியல் சமூக ஆய்வாளர்கள் ஆராய்ச்சி பண்ணலாம். கே கே நகர் எம்ஜிஆர் மார்க்கெட்டில் பத்து கடைகளுக்கு ஒரு கடை நாட்டு மருந்து கடையாக இருக்கிறது. அங்கே மட்டும் நாட்டு மருந்துகளின் விற்பனை பெருமளவில் பரவ என்ன காரணம், இதையும் அவர்கள் ஆயலாம். அவ்வளவு ஏன், கேகே நகரில் ஈ எஸ் ஐ மருத்துவமனையை ஒட்டிய பிளாட்பாரங்களில் ஏராளமானவர்கள் குடியிருந்தார்கள், இப்போது எல்லாரும் விரட்டப்பட்டு விட்டனர். இத்தனை நாட்களாக இல்லாமல் இப்போது மட்டும் இவர்கள் இடையூறாகக் கருதப்படுளவுக்கு அந்தப் பகுதி எவ்வகையான மாற்றத்துக்கு ஆளாகி இருக்கிறது?- இதையும் பரப்பியல் வல்லுனர்கள் ஆயலாம். சீரியசாக சொல்கிறேன், சென்னை நகரின் தேவைகள் மனிதர்களைக் கூடத் சமூகக் கட்டமைப்புக்கு வெளியே பிளாட்பாரங்களில் உதிரிகளாக பரப்பி வைத்திருக்கிறது. இதை எல்லாம் பரப்பியலாளர்கள் பார்த்தே ஆக வேண்டும், இல்லையா?

பரப்பியல் என்ற சொல்லை பாப்புலர் என்ற பதத்தைக் குறிக்கப் பயன்படுத்தினால் ஏராளமான சாத்தியங்கள் இருக்கின்றன. அதன் நீட்சியாக எது எது எங்கே எங்கே பாப்புலர், எவ்வகையான பரப்புகளில் ஒரு விஷயம் செல்வாக்காக இருக்கிறது (ஆர்ய கௌடா சாலையில் எத்தனை போளி கடைகள்!), எவ்வகையான பரப்புகளில் அதற்கு ஆதாரமான விஷயங்கள் அப்புறப்படுத்தி ஒதுக்கி வைக்கப்படுகின்றன (கட்டுமானத் தொழில், சாலையோரப் பணியாளர்கள்: a demand that generates excessive supply, இது இருப்பதால்தானே இவர்களுக்கு இந்த நிலை. அதனால் இதுவும் பரப்பியல் சார்ந்ததே) என்று பல திசைகளில் பேசலாம்.

சோவியத் ரஷ்யாவில் அதை சொன்னான் இதை சொன்னான் என்பதெல்லாம் வெட்டிப் பேச்சு. அவர்கள் வெளியிட்ட அறிவியல் புத்தகங்களில் உள்ள அலகுக் குறிகள் எல்லாம் அபத்தமாய் இருக்கும். அவற்றை நாம் நிராகரிக்கவில்லையா?

பரப்பியல்தான் சரி. எல்லாரும் ஏத்துக்குங்கப்பா.

Advertisements

8 thoughts on “பரப்பியல்தான் சரி

 1. பரப்பியல் என்றால் propaganda பரப்புதல் என்கிற அர்த்தம் வருகிற உணர்வு வருகிறது.அந்த உணர்வை எப்படி தமிழில் சொல்லுவது?
  இப்படி சரியான சொல்லு கண்டு பிடிக்கும் வரை அந்த ‘வஸ்து’பற்றி யாரும் பேசக்கூடாது என்று சட்டம் கொண்டுவந்தால் என்ன.
  populi Latin for PEOPLE

  1. சரி, அப்படியானால் ஒளிபரப்பு, ஒலிபரப்பு என்ற சொற்களைப் பயன்படுத்துகிறோமே… சன் டிவி எந்திரன் இசைப்பேழை வெளியீட்டு விழாவை நேரடி ஒளிபரப்பு, சே!, தப்பான உதாரணம், தொலைக்காட்சியில் ஒரு நிகழ்வை ஒளிபரப்பு செய்கிறார்கள் என்றால் அதற்கு பிரச்சார நோக்கம் இருப்பதாக சொல்ல முடியுமா? சிலியில் இப்போது சுரங்கத்தில் சிக்கிக் கொண்டவர்களை மீட்பதை ஒளிபரப்புகிறார்கள், இதில் என்ன பிரச்சாரம் இருக்கிறது?

   ஒளிபரப்பு, ஒலிபரப்பு போன்ற சொற்கள், பரவலாக்கத்தை முன்வைத்து பிரயோகிக்கப்படுகின்றன என்று நினைக்கிறேன். “வதந்தியைப் பரப்பாதீர்கள்,” என்று சொல்லும்போது நாம் யாரும் வதந்தியைப் பிரச்சாரம் செய்யக்கூடாது என்று புரிந்து கொள்வதில்லை, வதந்தியை பரப்பக் கூடாது, பாப்புலரைஸ் பண்ணக் கூடாது என்றுதான் புரிந்து கொள்கிறோம், இல்லையா?

   வெகுஜனம்/ வெகுசனம் என்ற சொல்தான் நியாயமாகப் பொருத்தமானது, ஆனால் அது சம்ஸ்கிருத மொழியிலிருந்து வந்தது என்று தோன்றுகிறது.

 2. நீங்கள் சொல்வது ஒரு வகையில் சரி.

  வதந்தி பரவுவது ஒன்று வதந்தி பரப்புவது ஒன்று. ஒளி பரவுவது ஒன்று ஒளியை பரப்புவது ஒன்று. ஒன்று நிகழ்வது மற்றது நிகழ்த்தப்படுவது. புகழ் பரவலாம்.புகழ் பரப்பப்பட்டால் அது பிரச்சாரம்.
  வெகுஜனக்கலைகள் தீப்பிடிப்பது போல பரவுபவை. இசை என்னும் தீ பரவுவதா பரப்பப்படுவதா?
  ஒளிபரப்பு பிரச்சாரமில்லை.ஆனால் என்னசெய்வது இயற்கை அப்படி அண்டெனா வைத்து ஒளியைப்பரப்பினால்தான் அது டீவியில் தெரிகிறது.தெரிந்தெடுக்கப்பட்டுத்தான் அவை ஒளி அலைகளாக பரப்பப்படுகின்றன.
  முரண்பாடு என்னவென்றால் நல்ல இசை என்று யாரும் பிரசாரம் செய்யமுடியாது.இசை தனக்குத்தானே பிரசாரம் செய்துகொள்ளும்.கொண்டு சேர்ப்பது ஊடகங்கள்.
  பரப்பப்படுவது என்பதில் இருக்கின்ற நிகழ்த்தப்படும் தன்மை அதுதான் என்னை உறுத்துகிறது.
  பரவலாக இரசிக்கப்படுவது என்றால் பரவலிசை.

  வெகுஜனம் பாவனையில் உள்ளது
  எனக்குத்தெரியாது ஏதோ த்ரியாத்தனமாய் உளறுகிறேன்

  1. உண்மைதான். பரப்பு என்பதைவிட பரவல் என்பது சரியாக இருக்கிறது. நாம் ஆங்கில மூலத்திலிருந்து தமிழுக்கு யோசிக்காமல் இவ்வகை செயல்களைத் தமிழில் இயல்பாக எப்படி சொல்வோமா, அதைக் கண்டறிய வேண்டும் என்று நினைக்கிறேன்.

   சரி, நம்மை யார் கேட்டார்கள்! 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s