பெர்ஸி செகைன்- ஜூடோ ஆசான்

சில பேருடைய வாழ்க்கை புயல் வீசுகையில் ஒரு புகல் போல் இருப்பதற்காகப் பணிக்கப்பட்டிருக்கின்றது. பெர்ஸிவால் யசூசி செகைன் அப்படிப்பட்ட ஒருவர்.

ஆயிரத்து தொள்ளாயிரத்து இருபதாம் ஆண்டு ஒரு ஜப்பானியாருக்கும் பிரிட்டிஷ் பெண்ணுக்கும் பிறந்த செகைன் உருவத்தில் சிறியவர். திட சித்தர்.

1900ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு யூகியோ டானி என்பவர் வந்தார். அவர் தன்னோடு மோதிப் பார்க்க யாராவது வருகிறீர்களா என்று பொது அரங்குகளில் சவால் விடுவாராம். எப்படிப்பட்ட பலசாலியாக இருந்தாலும் சரி, டானியிடம் தோற்றுத்தான் போக வேண்டும். அவரிடம் ஜுடோ கற்ற கஞ்சி கொய்சூமிதான் செகைனின் குரு.

இரண்டாம் உலகப் போரில் செகைன் விமானப்படையில் இங்கிலாந்துக்காகப் போரிட்டார். ஹாலந்துக்குமேல் அவரது விமானம் பறந்து கொண்டிருந்தபோது அது சுட்டு வீழ்த்தப்பட்டது. சிறைக்கைதியாக மிச்ச காலத்தைக் கழித்தார்.

சிறையில் இருக்கையில் தன் சக கைதிகளுக்கு ஜுடோ கற்றுத் தந்தாராம். அதற்கு எப்படி சிறையில் அனுமதி கிடைத்தது என்று ஆச்சரியமாக இருக்கிறது. அதில் வேறு மூன்று தடவை தப்பியோட முயற்சி செய்து பிடிபட்டிருக்கிறார் இவர்.

எது எப்படியோ போர் முடிந்ததும் முழு நேர ஜூடோ ஆசிரியராக மாறி விட்டார் செகைன். எண்பது வயது வரை ஜூடோ பயிற்சியாளராக இருந்திருக்கிறார்.

நாம் யார் யார் எங்கெங்கு எப்படிப்பட்ட சூழ்நிலையில் வாழ்கிறோம் என்பது நம் கையில் இல்லை. ஆனால் நம் திறமைகளை வளர்த்துக் கொண்டு, நாமும் வாழ வேண்டும், நம்மைச் சுற்றி உள்ளவர்களின் வாழ்க்கைக்கும் சுவை சேர்க்க வேண்டும், இல்லையா?

செகைன் அப்படிப்பட்ட ஒரு ஆசானாக இருந்திருக்கிறார். அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.

Advertisements

4 thoughts on “பெர்ஸி செகைன்- ஜூடோ ஆசான்

 1. உண்மைதான்… ஜூடோ பற்றி கிரிக்கெட் தவிர தளத்தில் எழுதலாம் என்று கொஞ்சம் கூகுள் செய்தபோது ஜுடோவின் தந்தையான ஜிகொரோ கானோ என்பவர் குறித்து சில தகவல்கள் கிடைத்தன- அவர் சொல்கிறார், எதிராளி எவ்வளவு எளியவனாக இருந்தாலும், பலத்தை மட்டும் பிரயோகிக்காமல் விதிகளைப் பின்பற்றி அவனைத் தோற்கடிக்க வேண்டுமாம்- அப்போதுதான் அவன் மனது தோல்வியை ஏற்றுக் கொள்ளுமாம்.

  அவர் வகுத்த ஜோடோவின் ஐந்து கொள்கைகள்-

  Jigoro Kano’s Five Principles of Judo:
  1. Carefully observe oneself and one’s situation, carefully observe others, and carefully observe one’s environment,
  2. Seize the initiative in whatever you undertake,
  3. Consider fully, act decisively,
  4. Know when to stop,
  5. Keep to the middle.

  சுவாரசியமாக இருக்கிறது.

 2. விளையாட்டில் புகுந்து விளையாடுகிறீர்கள்.சுவையான நடை.பலவிதமான நடைகளை வைத்திருக்கிறீர்கள்.விளையாட்டுக்களில் இந்த ஜூடோ வகையறாக்களில்தான் நாட்டம்.. மற்றவை ….ஜூடோ ஒரு வாலித்தனமான விளையாட்டு. எதிரியின் பலத்தை வைத்துத்தான் அவனை விழுத்துவார்கள். எழுதுங்கள்

 3. 🙂 உங்கள் பின் நவீனத்துவ கவிதையை இப்போதுதான் படித்தேன். சூப்பர்.

  ஜூடோ பற்றி எழுதி அனுப்பி இருக்கிறேன். போடுவாரா பார்க்கலாம்! 🙂

  நீங்கள் தரும் ஊக்கத்துக்கு நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s