எரிக் ஜோய்சல்- காகிதத்தில் செய்த சிற்பங்கள்.

உலகில் எத்தனையோ விஷயங்கள் நடக்கின்றன. பலதரப்பட்ட மனிதர்கள். அவர்களின் பலவகையான நாட்டங்கள் நிகழ்வுகளாய் அரங்கேறி முடிந்தபின், இவர்களின் கூர் முனை கால ஓட்டத்தில் மழுங்கடிக்கப்பட்டு வரலாறு என்னும் புனைவு தேசங்களின், அரசர்களின், குடிகளின் மண்ணாசை பொன்னாசை என்ற அளவில் பதிக்கப்படுகிறது.

உதாரணத்துக்கு ஒரு ஐம்பது வருடம் கழித்து நேற்று தனது ஐம்பத்து மூன்றாவது வயதில் நுரையீரலில் ஏற்பட்ட புற்று நோயால் காலமான எரிக் ஜோய்சல் குறித்து வரலாறு என்ன சொல்லும் என்று நினைத்துப் பாருங்கள்.

பாரீசில் 1956ஆம் ஆண்டு பிறந்தவர். சட்டமும் வரலாறும் படித்தவர். அதன்பின் களிமண், மரம் மற்றும் கல்லாலான சிற்பங்களை செதுக்கியவர். நாமெல்லாம் விளையாட்டாய் நினைக்கிற ஒரிகாமி என்ற காகிதத்தை மடித்து உருவம் தருகிற கலையைப் பார்த்ததும், கத்தியின்றி ரத்தமின்றி புரட்சி ஒன்று வருகுது என்று இம்ப்ரஸ் ஆகி, ஒரிகாமி கலைக்குத் தன்னை அர்பணித்துக் கொண்டார். கல்யாணம் செய்து கொள்ளவில்லை. புகழ் கிடைத்திருந்தாலும் படுகிற பாட்டுக்குத் தக்க வருமானம் இல்லை. ஆனாலும் கூட ஊருக்கு வெளியே, ஒரு விவசாயக் குடிசையில் இருந்துகொண்டு காகித ஓடங்கள் செய்தார். ஏன் இப்படி என்ற கேள்விக்கு என்ன பதில் இருக்க முடியும்?

காகித ஓடங்கள் என்று சும்மா சொன்னேன். அவர் செய்த ஒரிகாமி சிற்பங்களுக்கு பதினைந்துக்கு இருபத்தைந்து அடி பரப்புள்ள காகிதங்கள் தேவைப்படக் கூடுமாம். ஜோய்சலின் படைப்புகளைப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது. காகிதத்தை கத்தரித்து ஒட்டாமலா இவ்வளவும் செய்தார் என்று மலைப்பாக இருக்கிறது.

ஜோய்சல் செய்த காகித சிற்பங்கள் இங்கே.

ஜோய்சல் வலைத்தளம்.

ஒரிகாமி கலை பற்றிய திரைப்படம்- மடிப்புகளுக்கிடையே.

வெட்டாமல் ஒட்டாமல் மடிப்புகளால் செய்யப்படுகிற சிற்பங்கள் என்பதால் சில உருவங்களை வடிமைப்பதற்கு பல மாதங்கள் யோசனை செய்ய வேண்டி இருக்குமாம்.

அவரிடம் ஒரு சிற்பம் செய்வதற்கு நீ எவ்வளவு நாட்கள் வேலை செய்கிறாய் என்று கேட்டதற்கு, முப்பத்தைந்து ஆண்டுகள் என்று பதில் தந்தாராம். “நான் இந்த இடத்துக்கு வர அவ்வளவு காலம் பாடுபட வேண்டியிருந்திருக்கிறது,” என்பது அவரது பதில்.

உண்மைதானே? ஒவ்வொரு மனிதனும் ஒரு வாழ்நாள் சாதனை. அது ஓரிரு நாட்களில் நிறைவு பெறுவதில்லை. அவன் கதைக்கு மரணம் ஒரு முற்றுப்புள்ளி வைக்கலாம்- ஆனால் நிர்மாணிக்கப்படாத தன் சுயத்தைத் திருத்தி எழுதும் ஒவ்வொருவனும் தோற்றாலும், தன் முயற்சியில் தினமும் அவன் காணும் நிறைவை மரணம் ஒன்றும் செய்ய முடியாது.

நாம் வாழ்ந்துதான் நம்மை அறிகிறோம்- நம் செயல்களே நம் சான்றுகள். அந்த வகையில் காசு பணம் பேர் புகழ் என்று தேடாமல் தன் திறன்கள் அழைத்த திசைக்குத் தன் வாழ்வைப் போக விட்ட ஜோய்சல் ஒரு அசாத்திய படைப்பாளி.

அன்னாரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

Advertisements

6 thoughts on “எரிக் ஜோய்சல்- காகிதத்தில் செய்த சிற்பங்கள்.

  1. ‘எளி’மையான கலை இல்லையா, அதனாலதா அப்படி இருக்குமோ என்னவோ!

   நீங்க பெருச்சாளி செஞ்சு சாதனை படைக்க வாழ்த்துக்கள்!

  1. கொஞ்சம் விளையாட்ட பதில் சொல்றேன், தவறாக நினைத்துக் கொள்ள மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

   வருகைக்கும் இடுகைக்கும் நன்றி.

  2. http://www.wired.com/wiredscience/2010/10/feeling-sad-makes-us-more-creative/

   சோகமான மனநிலை படைப்பூக்கம் தருகிறதாம். ஒரு சமயம் இதற்காகவே படைப்பாளிகள் சோகமயமான சூழ்நிலையை உருவாக்கிக் கொள்கிறார்களோ என்னவோ!

 1. பகிர்விற்கு நன்றி ஜி!
  நம்மில் பலர் வாழ்க்கையை அதன் பாட்டிற்கு எழுத அனுமதிக்கிறோம். சிலர்தான் சில்லறை இச்சைகளைப் புறம் தள்ளி வாழ்க்கையை அவர்கள் கையால் எழுதுகிறார்கள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s