பிரிகேடியர் டென்னிஸ் ரெண்டெல்- எலியல்ல, சிங்கம்

உலக சினிமா ரசிகர்கள் அண்மையில் வெளிவந்த தி இன்க்லௌரியஸ் பாஸ்டெர்ட்ஸ் (The Inglourious Basterds) என்ற திரைப்படத்தை மறந்திருக்க முடியாது. அதில் சித்தரிக்கப்பட்டிருக்கத் தகுந்தவர்களில் ஒருவரான பிரிகேடியர் டென்னிஸ் ரெண்டெல் தனது எண்பத்தொன்பதாவது வயதில் காலமானார்.

டுனீசியாவில் ஒரு புகைவண்டி நிலையத்தைக் கைப்பற்ற வேண்டி நாஜி ராணுவத்தினர் இருந்த பகுதிக்குள் ஒற்றை ஆளாய் ஊடுருவியவர்; அது கைமாறிப் போகையில் அவரது ப்லாடூன் தப்ப வேண்டி காயமடைந்த நிலையிலும் போரிட்டு மாட்டிக் கொண்டவர். இரண்டு முறை தப்ப முயற்சி செய்து, மூன்றாம் முயற்சியில் வென்று, இத்தாலியின் அப்ரூசி மலைத்தொடர்களில் தன்னைப் போல் தப்பி வந்த சக கைதிகளுடன் சேர்ந்து பதுங்கி வாழ்ந்தார்.

பதுங்கி வாழ்ந்தார் என்றால் ஒரு சுண்டெலி போல் நடுங்கிக் கொண்டல்ல, சிங்கம் குகையில் இருப்பதுபோல் வீரமாக வளம் வந்தார் அவர்-

ஒரு தடவை பக்கத்து ஊரில் ஒரு திருவிழா. அவரும் அவரது கூட்டாளிகளும் அங்கு போய் வேடிக்கை பார்க்காமல் இருக்க முடியவில்லை. திருவிழா எங்கும் ஜெர்மானியப் போர் வீரர்கள். அசரவில்லை ரென்டெல். அங்கு ஒருக் கூடாரத்தில் துப்பாக்கி சுடும் போட்டி. சரியாக சுடுபவர்களுக்கு இலவசமாகப் புகைப் படம் எடுத்துத் தரப்படும். ஜெர்மானிய சிப்பாய்கள் தப்பும் தவறுமாக சொதப்பிக் கொண்டிருந்தார்கள். பொங்கி எழுந்தார் ரென்டெல். துப்பாக்கியைப் பிடுங்கிக் குறி பார்த்து சுட்டார். பளிச்சிட்டது காமிரா. தன் புகைப்படத்தைப் பெற்றுக் கொண்டு நடையைக் கட்டினார்.

இன்னொரு சமயம். ரோமில் மறைந்திருந்த நாட்கள். சும்மா இருக்க முடியாமல் ஒபேரா கச்சேரி கேட்க அரங்குக்குப் போனார்கள். அங்கும் ஜெர்மானிய ராணுவம். வியர்த்தாரில்லை ரென்டெல்- நடுநாயகமாக இருந்த ஒரு ராணுவ அதிகாரியிடம் போய் தன் அரைகுறை இத்தாலிய மொழியில் பேசி அவரது ஆட்டோகிராப்பை வாங்கி வந்தார். நடுங்கிப் போய் விட்டனராம் அவரது சகாக்கள்- “நீ யாரிடம் கையொப்பம் வாங்கி வந்திருக்கிறாய் தெரியுமா? அவர்தான் ரோமை நிர்வகிக்கும் தலைமை ராணுவ அதிகாரி!”

வீரமும் வேண்டும், விவேகமும் வேண்டும். கூடவே கொஞ்சம் விளையாட்டுத்தனமும் வேண்டும். அப்போதுதான் வாழ்க்கையை வாழ்ந்த மாதிரி இருக்கும், இல்லையா?

நமக்கு நல்லதொரு முன்னுதாரணம் கற்பித்த அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம் (என்னப்பன் முருகன் தன் தகப்பனைப் போல் கோபக்காரன்தான். ஆனாலும் சிறுபிள்ளை ஆயிற்றே- ரென்டெல் செய்கிற விளையாட்டுத்தனங்களை கோபிக்காமல் அவரைத் தன் கூட்டாளியாக சேர்த்துக் கொள்வான் என்று நம்புகிறேன்)

Advertisements

5 thoughts on “பிரிகேடியர் டென்னிஸ் ரெண்டெல்- எலியல்ல, சிங்கம்

  1. 🙂 ஏன் சார், நல்லா இல்லியா?

   ஒரு மனிதனின் வாழ்க்கையில் வரலாறே இருக்கிறது. அதைக் கொஞ்சம் போல புரட்டிப் பார்த்தால்தானே நடந்தது மறக்காமல் இருக்கும்? நமக்கும் படிப்பினை கிடைக்கும்?

 1. வீரத்துடன் விவேகம். கூட விளையாட்டு. நல்லாயிருக்கே.
  இப்படி பார்ப்போம்.
  வீரத்துடன் விளையாடுவதும், விளையாட்டில் வீரத்தை காண்பிப்பதும் சிலர்.
  விவேகத்துடன் விளையாடுவதும், விளையாட்டில் விவேகத்தை காண்பிப்பதும் சிலர்.
  வீரத்தை விவேகமாக பயன்படுத்தும் சிலருக்கு மட்டும் ஒரு கேள்வி. வீரத்தை விவேகமாக பயன்படுத்தினால் விவேகமே வீரமாகி விடுகிறதே? ஏன்?
  ஒன்றுமில்லை. இனிமேலும் இருக்கிறவர்களைப் பற்றி வீரமாக எழுதினால் விவேகமாக பின்னூட்டம் எழுதறோம். இல்லாவிடில் விளையாட்டு என்று எண்ணிவிடாதீர். எச்சரிக்கை. கிரிக்கெட்டு தவிர என்று நீர் சொல்லியதை மறவாதீர். (ஆமாம். கிரிக்கெட் தவிர என்பது கிரி (கெட்டு) தவிர என்று அந்த பதிவரை மட்டும் ஒதுக்கும் திட்டமா? அவருக்காக குரல் கொடுக்க ஒரு கூட்டமே விவேகத்துடன் வீரமாய் இருக்கிறது. விளையாட்டு வேண்டாம்.

 2. அவர் ஒரு எழுத்தாளருங்க. பதிவாளர கிடையாது. அவரை ஒதுக்கற அளவுக்கு நமக்கு வெய்ட் கிடையாது.

  வீரம், விவேகம் பத்தி ஏதேதோ சொல்லி இருக்கிங்க. வீரா கிட்டயே மோத நான் என்ன கிறுக்கா? அதனால இத விளையாட்டுக்கு நான் வரல.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s