ஆல்வின் லாசன்- நனவிலி மனதின் ஆழ் நினைவுகள்

நாம் யார் என்ற கேள்வி நம் எல்லாருக்கும் இருக்கிறது. கேள்வியாக இல்லை என்றாலும் நான் இன்னார் என்ற நிலைப்பட்டு உறுதியாக இருக்கிறது- இதை நான் யார் என்ற உணர்வு இருக்கிறது என்று சொல்லலாம். சில பேருக்கு இதில் குழப்பம் நேர்கிறது. அந்தக் குழப்பம் ஆளாளுக்குத் தகுந்த மாதிரி வெளிப்படுகிறது.

தனது எண்பதாவது வயதில் மறைந்த ஆல்வின் லாஸன், இது குறித்து ஒரு அறிதலை உண்டாக்க முயற்சித்தார். ஆங்கில இலக்கியப் பேராசிரியராக இருந்த லாசன், வேற்று கிரகவாசிகளை சந்தித்தவர்கள் குறித்து சில ஆய்வுகள் செய்தார். அந்த ஆய்வுகளின் முடிவில், இந்த அனுபவங்கள் நாம் கருவறையிலிருந்து புவியில் பிறந்த நனவிலி மனதின் நினைவுகளின் புறப்பாடுகளே என்று அவர் தீர்மானம் செய்தார்.

நீண்ட, கடின அனுபவத்தின் வாயிலாக, குகை போன்ற ஒன்றினூடு பயணித்து, வெளிச்சம் மிகுந்த நுழைவாயில் வழியாக விடுபட்டு கட்டற்ற வெளியில் வித்தியாசமான உருவங்களால் சோதிக்கப்படும் புலன் வாயிலான அறிதல்கள் நம் பிரப்பனுபவத்திலும் வேற்று கிரக வாசிகளின் சந்திப்பிலும் நேர்வது அவரை சிந்திக்கச் செய்தது.

நாம் இன்னது என்று அறிவதற்கில்லாத பொருட்கள் வானில் சஞ்சரிக்கின்றனவென்பது உண்மைதான் எனினும் அதில் குட்டி குட்டி பச்சை மனிதர்கள் நம்மைப் பிடித்துக் கொண்டு போவதற்காகப் பறந்து வருகிறார்கள் என்பதை தான் நம்பவில்லை என்று அவர் சொல்கிறார். கார்ட்டூன்களில் காணப்பட்டும் பர்ஸ் வாயும் சூம்பிய தலையும் ஓட்டை கண்ணுமாய் இருக்கிற வேற்று கிரக வாசிகள், நம் கருவரைக்கால உருவம் குறித்த நினைவுகள் என்கிறார் அவர்.

அவர் சொல்வதில் உண்மை இருக்கலாம் என்றே நானும் நினைக்கிறேன். நேற்று வந்த செய்தி-

பதினான்கு வாரத்திலேயே கருவறையில் இருக்கும் சிசுக்களுக்கு பழகிப் பார்க்க ஆசை வந்து விடுகிறதாம். பதினான்காவது வாரமான குழந்தை தன் கருவறையின் சுவர்களை ஆய்வு செய்தால், இரட்டையாராக இருக்கும் சிசுக்கள் ஒருத்தரையொருத்தர் நோக்கி சைகை செய்து இயங்குகிறார்கள் என்று சொல்கிறார்கள் (சான்று- PLOS One)

சிசுக்களுக்குத் தன்னைக் குறித்த பிரக்ஞை இருக்கும், அது நினைவுகளூடாக வேற்று கிரக வாசிகள் உருவில் புறப்படக் கூடும் என்பது நம்புவதற்கு அவ்வளவு கடினமான விஷயமாக இல்லை.

via http://www.myspace.com/kidphenomaliengang

இது தவிர, லாசன் நம்மைப் போன்ற சாதாரணர்களை ஹிப்னடைஸ் செய்து, “உன்னை வேற்றுக் கிரகவாசிகள் கடத்திச் செல்கிறார்கள், என்ன நடக்கிறது சொல்,” என்று கேட்கையில், அவர்கள் சொன்னதும் வெற்றுக் கிரக வாசிகளால் கடத்தப்பட்டவர்கள் சொன்னதும் ஒன்றாகவே இருந்ததாம்.

எனவே இதெல்லாம் நனவிலி மனதின் ஆழ் நினைவுகள் என்று அவர் சொல்வது ஒப்புக் கொள்ளும்படி இருக்கிறது என்று நினைக்கிறேன்.

லாசனின் வாழ்க்கை பற்றிப் பேசாமல் அவர் சொன்னது குறித்துப் பேசுவதில் பிழையொன்றுமில்லை. நாம் நினைக்கப்படுவது நம் செயல்களால்தானே?

அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

சான்றுகள்- டெலகிராப், எல்ஏ டைம்ஸ்

இங்கே இருக்கிறது அவர் எழுதிய ஒரு கட்டுரை- The Abduction Experience: The Birth Trauma Hypothesis.

Advertisements

27 thoughts on “ஆல்வின் லாசன்- நனவிலி மனதின் ஆழ் நினைவுகள்

 1. உயிர்வாழ்வு ஒரு தொடர்ச்சியாக இருக்கிறது. இதில் consciousness தன்னுணர்வு இடையில் வந்து சேர்கிறது.கொஞ்ச காலம் இருந்து விட்டு இல்லாமல் போய்விடுகிறது.விந்துவுக்கும் முட்டைக்கும் தன்னுணர்வு இல்லை?.சேர்ந்துவரும் கரு வளர்ந்து ஒருகட்டத்தில் மூளை உருவாகும்போதுதான் சில புலன்களை தூண்டல்கள் அங்கு பதிவாகக்கூடும்.அவை இப்படி வெளிப்படுகின்றனவோ.

  1. இது ஆச்சரியமாகவே இருக்கிறது. ஆனால் ஒன்று மூளை என்பது நினைவுகளை பதிவு செய்து வைத்துக் கொள்கிற இடம்தான் என்று நினைக்கிறேன். செல்களுக்கே நினைவு இருக்கிறது என்று சொல்கிறார்களே?

   http://www.cell.com/biophysj/abstract/S0006-3495(04)74378-7

   🙂

   1. செல்களுக்கென்ன நிக்கல் உலோகத்திற்கு கூட வடிவங்களை நினைவு ?! வைத்துக்கொள்ளும் பண்பு உள்ளது என ஒரு புத்தகத்தில் படித்தேன்.

    1. வாங்க வாங்க, அதிலென்ன சந்தேகம்?

     நிக்கல் செல்லுக்கு நினைவுத்திறன் இல்லாவிட்டால் அது எப்படி கால்குலேட்டரில் போடுகிற கணக்குகளுக்கு சரியான விடை சொல்ல முடியும்? நிச்சயமா அதுக்கு என்னை விட அதிகமா ஞாபக சக்தி இருக்கு.

     நீங்க படிச்சது உண்மைதாங்க. நான் சொல்றேன், நம்புங்க.

     கேள்விக்குறிக்கும் ஆச்சரியக் குறிக்கும் தேவையே இல்லை.

     1. ரைட்டு.. இதில் ஆச்சர்யக்குறி நிக்கலின் நினைவை நாம் நினைவென்று குறிப்பிடலாம எனும் சந்தேகத்தின் விளைவுதான்..

       1. என்ன பண்றது.. இணையத்துல ரெண்டு வாரமா செந்தமிழ்ல விவாதிச்சு எனக்கு பேச்சுத் தமிழே மறந்துபோச்சு… முதல்ல இன்டர்நெட்ட கட் பண்ணனும்…

   2. மூலையின் நினைவாற்றலைத்தான் நாம் நம்ம நினைவாற்றல் என்கிறோம்.
    நோய்எதிர்ப்பு சக்தி என்பது உடலின் நினைவு ஆற்றல்.அதில் கலங்கள் நினைவில்வைத்திருந்துகுறிப்பிட்ட வைரஸ்/பக்டீரியாக்களைக்கண்டவுடன் எந்திரன் ரஜனிபோல அவற்றுக்கு எதிராய் இரட்டிப்படைந்து படை உருவாக்கிப்போரிடுகின்றன.இல்லையா

    1. மூளை என்று வந்திருக்கவேண்டும். மூலை என்று வந்து விட்டது.இயந்திரத்துக்கும் மனிதனுக்குமான உறவில் நிகழ்ந்த தவறு.
     மூளையை மூலையில் விடுகிறதோ என்னவோ.

     1. நீங்கள் சொல்கிற மாதிரிதான் தெரிகிறது. ஆனால் இந்த நினைவு விஷயம் பிரம்மாண்டமானதாக இருக்கிறது. ரூபர்ட் ஷெல்ட்ரேக் போன்றவர்களின் மார்பிக் பீல்ட்கள் குறித்து அறிந்திருப்பீர்கல்தானே?

      http://www.skepdic.com/morphicres.html

      நினைவு என்பது மர்மமான ஒன்றே.

     2. எரிக் காண்டல் தன் சுயசரிதையில http://nobelprize.org/nobel_prizes/medicine/laureates/2000/kandel-autobio.html நினைவு பற்றி என்னென்னவோ எழுதி இருப்பார்… படித்த நினைவு, எல்லாம் மறந்து போச்சு 😦

      நினைவு என்பது ஒரு பெரும் புதிர் என்றுதான் சொல்லத் தொன்றுகிறது, மறுபடி மறுபடியும்…

      1. நினைவு என்பது புதிர்.மூளை இன்னும் புதிராகவே இருக்கிறது.
       மூளை பற்றி இன்னும் மனித மூளைக்குப்பிடிபடவில்லை இன்னும்.
       இந்த ஐகாபன் மூலக்கூறுதான் இதைச்செய்கிறதா?

       முந்தைய பிறப்பின் ஞாபகங்கள் முந்தைய மூளையோடு போவதில்லை?

       1. மூளையைப் பற்றிப் படிப்பதே சுவாரசியமான ஒன்று. நமது மூளையில் நம் முன் பிறவிகளான தவளை, பாம்பு மூல முதற்கொண்டு குரங்கு மூளை வரை ஒவ்வொரு படிமனாக instinct என்ற வகையிலான (பழக்க தோஷம் என்று சொல்வோம்) அனிச்சை செயல் புரிய உந்தும் ‘நினைவுகளாக’ இருக்கின்றன.

        தொடர்புடைய சுட்டிகள்- http://en.wikipedia.org/wiki/Triune_brain,
        http://www.wired.com/wiredscience/2010/07/brain-evolution/

        🙂

        1. ஆரம்பத்தில் சக்கரம் கண்டுபிடித்தார்கள்.பிறகு வண்டி.ஒற்றைச்சில்லு இரட்டைச்சில்லு.திறந்த வண்டி.பிறகு மூடி சொகுசு கரவன் வண்டியாகிக்கூடவிட்டது.
         இந்த நவீன வண்டியில் ஆரம்பகாலவண்டிகளின் கூறுகள் அனைத்தும் இருக்கின்றன அல்லவா.

         மூளையும் அப்படித்தானென்றால் கூர்ப்புக்கருத்துக்கு சாதகமாயிருக்கிறது.
         அந்த வண்டியின் evolution போல

         மூளையும் உருவாகியிருக்கிறது என்றாகிறது

       2. உங்களளவுக்கு எனக்கு மனித உடலைப்பற்றி தெரியாது. இருப்பினும் எனது சொந்த சிந்தனையின் படி எனக்கு மறுபிறப்புக்களில் நம்பிக்கை இல்லை. ஆன்மாவிலும் நம்பிக்கை இல்லை.

        என்னைப் பொறுத்தவரை உடல் ஒரு இயந்திரம். மூளை ஒரு கணினி. அதில் புறமனது ரேம். அடிமனது ஹார்ட் டிஸ்க். மனம் என்பது ஹார்ட் டிஸ்கில் பதியப்பட்டிருக்கும் (தனித்துவமான) இயங்குதளம் (மென்பொருள்).

        1. அந்தக் கணினி குறிப்பிட்ட நேரத்திற்கு ஒருமுறை பவர் மனேஜ்மன்ட் செய்வதற்காக உடல் இயந்திரத்தின் அதிமுக்கிய பகுதிகள் தவிர்ந்த மீதி பகுதிகளை ஓய்வெடுக்க அனுமதிக்கின்றது. (தூக்கம்) அதேசமயம் கணினியின் ஒருசில பகுதிகளும் தமது வேலையை குறைத்துக்கொள்கின்றன.

         அப்போது கணினி தன்னில் பதிந்துள்ள தரவுகளைக் கொண்டு உண்மை போன்ற (வர்ச்சுவல் ரியாலிட்டி)ஸ்க்ரீன் சேவர்களை உடனுக்குடன் உருவாக்கி ஓடவிடுகின்றது (கனவு). அதில் வயர்லஸ் கருவிகள் (டெலிபதி) மூலம் பிற கணினிகளிலிருந்து பெறப்பட்ட தரவுகளையும் பயன்படுத்துகின்றது.

         பல காலம் கழிந்ததும் இயந்திரத்தின் பகுதிகளும் கணினியின் பகுதிகளும் மெல்ல மெல்ல செயலிழக்கின்றன. (முதுமை) கடைசியில் பவர் சப்ளை முற்றிலும் நின்றுவிடுகின்றது. (மரணம்)

         இங்கே, மென்பொருளான மனம் இன்னொரு கணினியுள் தானாகச் செல்வது சாத்தியமில்லையே?

        2. இது கொஞ்சம் சின்னப்புள்ளைத்தனமா இருந்திருக்கும். சமாளிச்சுக்குங்க..

         (கணினி கொஞ்சம் தெரிந்ததால் எல்லாவற்றையும் கணினியாகவே சிந்திக்கிறேன் போலிருக்கின்றது)

        3. அப்போ பென் டிரைவ் என்ன? சும்மா ஜோக்கு!

         உண்மையில கலக்கறீங்க. இதை விரிவா எழுதிக் கொடுங்க. சிறப்புப் பதிவா போட்டுரலாம்! 🙂

         1. பென் டிரைவ் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இன்டெல் முயற்சி செய்கிறது.

          ஹாரி பாட்டர் நாவல்களில் மந்திரம் மூலமாக மனிதர்களின் மெமரியை எடுத்துச்செல்ல முடியும் எனக் காட்டுவார்கள்.

          1. இன்டெல் கண்டு பிடிக்கறதுக்குள்ள நீங்க கண்டு பிடிச்சு பெரிய பேர் வாங்க வாழ்த்துகள்.

           மந்திரம் போட்டு மெமரி என்னங்க, மனுசனையே தூக்கிட்டுப் போலாம்!

 2. உண்மைதான், இதுவரை வந்த எல்லா ஏலியன் படங்களிலும் (அவதார் தவிர) புத்திசாலிகளான ஏலியன்கள் நம்மை அடிமைப்படுத்த, எமது மண்ணைச் சூறையாட விரும்புவதாக சித்தரிக்கப்படுவதற்குக் காரணமும் மனித இனத்தின் பண்புகள்தான் போலிருக்கிறது..

  (நாம மத்த உயிர்களை சூறையாடும் பாவத்திற்கு ஏலியன்கள் அதேபோல தண்டனை தந்தால் எப்பிடியிருக்கும்னு கற்பனை பண்றாங்க போலிருக்கு…)

  1. என்னங்க இது அநியாயம், நம்ம புரட்சி இயக்குனர் ஸ்பீல்பெர்க் அண்ணன் எடுத்த ஈ.டி. படத்தை மறந்துட்டீங்களே… அதே மாதிரி உங்க ஊர்காரர் ஆர்தர் ஸி கிளார்க் கூட 2001- A Space Odyssey, Rendezvous with Rama மாதிரியான கதைகளில் ஏலியன்களை ரொம்ப புத்திசாலியா, நல்லவங்களா காட்டியிருக்கார், அதை மறந்துட்டீங்களா?

   உண்மையிலே இன்னி தேதிக்கு ஏலியன்கள் இங்கே வந்தா அவங்க ரொம்ப நல்லவங்களாதான் இருக்கோணும்னு ஒரு தியரி இருக்கு. உங்களுக்கே தெரிஞ்சிருக்கும், அணு ஆயுதம், ஒளியைவிட வேகமான பயணம் மாதிரியான தொழில் நுட்ப வளர்ச்சியை வெச்சுக்கிட்டு ஒத்தரை ஒத்தர் அடிச்சுக்காம ஒத்துமையா வாழக் கத்துக்கிட்டாதான் அப்படி வேற்று கிரகம் செல்வதெல்லாம் சாத்தியம்னு சொல்றாங்க.

   அப்படி பாத்தா ஏலியன்களோட பறக்கும் தட்டு பங்க்சர் ஆகி இங்க எங்கியாவது விழுந்தா அவங்களை மனுசங்க கிட்டயிருந்து அந்த ஆண்டவனாலும் காப்பாத்த முடியாது!

   1. கவிப்பேரரசு வைரமுத்துவின் ‘விதிவிலக்கிலாத விதியுமல்ல’ எனும் பாடல் வரிகளின் படி ஒரு சில exceptions இருக்குதுதான் (எப்படியெல்லாம் சமாளிக்கவேண்டியிருக்கு..) ஆனா பொதுவா ஏலியன் திரைப்படங்கள் இதுமாதிரிதானே..

    //அப்படி பாத்தா ஏலியன்களோட பறக்கும் தட்டு பங்க்சர் ஆகி இங்க எங்கியாவது விழுந்தா அவங்களை மனுசங்க கிட்டயிருந்து அந்த ஆண்டவனாலும் காப்பாத்த முடியாது!//

    இது சூப்பர்…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s