ஜார்ஜ் சார்பாக்- தொகுப்பு முகாம் முதல் நோபல் பரிசு வரை

தென் போலந்தில் டுப்ரோவிட்சியா என்ற கிராமத்தில் பிறந்தார் ஜார்ஜ் சார்பாக் . ஐரோப்பிய வரலாற்றின் வரைபடத்தைப் பல முறை திருத்தி எழுதிய ரத்த சரித்திரத்தை இவரது கிராமமும் தப்பவில்லை. இன்றைக்கு அந்த கிராமம் உக்ரைனின் கையில் இருக்கிறது.

இரண்டாம் உலகப் போர் நடந்த காலகட்டத்தில் நாஜிக்கள் போலந்து வருவதை உணர்ந்து, சார்பக்கின் பெற்றோர் பிரான்சு நாட்டுக்குப் புலம் பெயர்ந்தனர். கிழக்கு முகமாகப் பயணித்த ஹிட்லர் மேற்கை மட்டும் விட்டு வைப்பானா என்ன? பிரான்சையும் பிடித்தான்.


சார்பாக் ஹிட்லரை எதிர்த்துப் போரிட்டார். அது ஒன்றும் பிரயோசனப்படவில்லை. தனது பதின்மப் பருவத்தை Dachau என்ற தொகுப்பு முகாமில் கழிக்க நேர்ந்தது. அவரும் மற்ற கைதிகளும் தங்களுக்குக் கிடைத்த சொற்ப அளவிலான கஞ்சியில் ஆளுக்கு இரண்டு ஸ்பூன் என்று தங்களில் வலுவில்லாமல் இருக்கிறவர்களுக்குப் பகிர்ந்து தந்தார்கள். அவர்களால் அவ்வளவுதான் முடியும்.

இதை எல்லாம் விரித்துக் கூறி என்ன ஆகப் போகிறது? மனிதன் மிருகத்தைவிடக் கேடு கெட்டப் பிறவி. தனக்கு சரியாகத் தோன்றும் காரணங்களுக்காக எந்த ஒரு இழிசெயலையும் செய்யத் தயங்க மாட்டாதவன். சாதி, மதம், இனம், மொழி, குடும்பம், நீதி, நியாயம் என்ற பெயரில் அதையெல்லாம் நியாயப்படுத்திக் கொள்ளவும் அஞ்சாதவன். இதில் வலுக் குறைந்த கூட்டத்தில் மாட்டிக் கொள்பவர்கள் நிலை பரிதாபமானது. சார்பாக் அப்படி மாட்டிக் கொண்டவர்.

ஆனால் அதே மனிதனிடம் இரக்க உணர்வும் இருக்கிறது. அதையும் சொல்லத்தானே வேண்டும்? எந்த நிலையிலும் நான் மற்றவர்களுக்குக் கெடுதல் செய்ய மாட்டேன் என்று சொல்கிறவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஒரு வகையில் அறிவுக்கும் உணர்வுக்கும் இடையில் நம் வாழ்வு அல்லற்படுகிறது என்று சொல்லலாம்.

சார்பாக் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். அதற்கப்புறம் அவர் இயற்பியலில் பெரிய அளவில் பேசப்படுகிற விஞ்ஞானி ஆனதெல்லாம் வேறு கதை. அவர் வடிவமைத்த எந்திரம்தான் இன்றைக்கு தெய்வத் துகளைத் தேடுகிற LHC போன்ற அணுத் தகர்ப்பான்களுக்கு முன்னோடியாக இருக்கிறது. அதற்காக சார்பாக் நோபல் பரிசுகூட பெற்றார்.

அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

நன்றி- The Independent

Advertisements

25 thoughts on “ஜார்ஜ் சார்பாக்- தொகுப்பு முகாம் முதல் நோபல் பரிசு வரை

 1. //மனிதன் மிருகத்தைவிடக் கேடு கெட்டப் பிறவி. தனக்கு சரியாகத் தோன்றும் காரணங்களுக்காக எந்த ஒரு இழிசெயலையும் செய்யத் தயங்க மாட்டாதவன். சாதி, மதம், இனம், மொழி, குடும்பம், நீதி, நியாயம் என்ற பெயரில் அதையெல்லாம் நியாயப்படுத்திக் கொள்ளவும் அஞ்சாதவன். //

  ரிப்பீட்டு.. இதப்போயி பத்மஹாரி சாரோட பக்கத்துல சொல்லிடாதீங்க.. ஜாக்கிரத..

  1. 🙂

   நாங்க எப்பவும் இப்படி தனியா எங்க ரூமில தனியா இருக்கும்போது மட்டும்தான் இப்படியெல்லாம் பேசிக்குவோம். இதை வெளிய சொல்ல நான் என்ன முட்டாளா?

  1. 🙂 ஒரு டாக்டரா சொல்லுங்க.

   இந்த பூமி ஒரு பெண் என்று வைத்துக் கொள்வோம். இந்த மனிதர்கள் இங்கு செய்யும் செயல்களை வைத்து பூமிக்கு புற்று நோய் வந்துவிட்டது என்று தானே சொல்வீர்கள்?

   அப்போது ஒரு டாக்டராக உங்கள் ட்ரீட்மென்ட் எப்படி இருக்கும்?

   🙂

   1. புற்றை -வெட்டியெறிந்தோ கதிர்வீச்சால் கருக்கி அழிக்கவேண்டியிருக்கும் அப்படியென்றால் ஹிட்லரின் கருத்துக்கல்லவா நெருங்கி வருகிறது.
    சிலமனிதர்கள் சில மனிதர்களை அப்படிச்சொல்லித்தானே அழிக்கிறார்கள்.

    பூமி என்பது பெரிய வட்டம்.மற்றவை சின்ன வட்டம்.

    ஒரு இனம் வளர்ந்து மற்றைய இனங்களின் வளங்களை உறிஞ்சி ஆக்கிரமித்தல் தான் புற்று நோய்.
    மனித இனம் மற்றைய உயிரினத்தை அப்படிச்செய்துவிட்டது.சரி
    மனித இனங்களுக்குமிடையில் அது நிகழுகிறது இல்லையா?.

    1. அவ்வளவு அராஜகமான முடிவு எடுக்க வேண்டியதில்லை என்று நினைக்கிறேன். நோய் இன்னும் அந்த அளவு முற்றிப் போகவில்லை என்று தோன்றுகிறது. மனிதர்களில் நல்லவர்களும் இருக்கிறார்களே, பெருவாரியான அளவில்…

     1. 🙂 அப்போ கெட்டவர்களை அழித்து பூமியையும் நல்லவர்களையும் காக்க வேண்டுமா?
      புராணத்துக்கு வந்துவிட்டோமா

      பூமாதேவி பாரங்கூடி..

      ஒருத்தருக்கு நல்லவர் இன்னொருத்தருக்கு கெட்டவர் எப்படி கெட்டதை கண்டுபிடிப்பது…:)

      1. கொஞ்சம் கெடுபிடியான கேள்வி. இது என் கோணம் மட்டும்- கெட்டவர்களை அழித்து நல்லவர்களைக் காப்பாற்றுவது என்ற பேச்சுக்கே இங்கு இடமில்லை. என்னால் இன்னார்தான் நல்லவர் இன்னார் கெட்டவர் என்று யாரையும் கை காட்ட முடியாது. நான் உட்பட, எல்லாரிடமும் எல்லாமும் கலந்து கட்டிதான் இருக்கிறது.

        1. நன்றி. ஆனால் நல்லது கெட்டது என்ற ஒன்று இருக்கத்தான் செய்கிறது என்று நினைக்கிறேன். அதே போல் தாங்கள் செய்கிற செயல்களால், அவற்றின் விளைவுகளால் நாம் மற்றவர்களுக்கு நல்லவர்களாகவும் கெட்டவர்களாகவும் இருக்கிறோம் என்றும் நினைக்கிறேன். என் கோணம் என் குறைப் பார்வையால் உருவான ஒன்றே.

         ஆமாம், அது என்ன தாவோ? நான் தெரிந்து கொள்ளலாமா?

         1. நல்லது முழுமையாகவும் அல்லது கெட்டது முழுமையாகவும் உள்ள ஒன்றைச்சொல்லமுடியாது.விஷம் என்பது கூட ஒரு நிலையில் மருந்தாகிறது.

          Tao- La tsu -ஐச்சொன்னேந் தாவோவில் என்று வந்திருக்கவேண்டும் லா ட்சு.

          நீங்கள் அறியாதிருப்பீர்களா என்ன

          1. தாவோ படித்த நினைவு. நீங்கள் குறிப்பிட்ட ஒரு அத்தியாயத்திலிருந்து மேற்கோள் காட்டுகிறீர்கள் என்று நினைத்தேன்.

           தாவோயிசத்தில்தானே யின்-யாங் வருகிறது…

 2. மனிதர் மிருகங்களை விடக்கேவலமானவர்கள் என்பது……….. கொஞ்சங்கூட மனிதாபிமானமில்லாத கூற்று

  அபராஜிதன் கருத்துக்கள் ஏன் ஏலியனபிமானம் மிக்கனவாக இருக்கின்றன?

  1. அபராஜிதன் சின்னப் புள்ளை இல்லியா, அவருக்கு இன்னும் பழைய நினைப்புகள் மறக்கவில்லை போலிருக்கிறது. அதனால் ஏலியன்கள் அவருக்கு சகோதரர்கள் மாதிரி தெரிகிறார்களோ என்னவோ! 🙂

   1. இருக்கலாம்.. வாய்ப்பிருக்கின்றது. ஆனால் அதற்கும் மேலே போய், எனக்கு போன பிறவி நினைவுகள் வந்துதான் நான் விலங்குகளுக்கு சார்பாகப் பேசுகின்றேனோ என்னவோ…

    1. சே சே… விளங்குகளுக்குப் பேசத் தெரியாதே. 🙂

     நீங்கள் மனிதனின் சார்பாக மனிதன் மனிதனாக இருக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள். யார் கேட்கிறார்கள்?

  2. //கொஞ்சங்கூட மனிதாபிமானமில்லாத கூற்று//

   யாரோ சொன்னார்கள் “முதலில் நான் ஒரு இந்தியன். அதன் பிறகுதான் தமிழன்” என்று. அதேபோல முதலில் நான் ஒரு உயிரினம், அதன் பிறகுதான் மனிதன். இல்லையா?

   1. ஏங்க கோபப்படறீங்க? மனித அபிமானம் = மனிதனின் மேல் சிறப்பு அபிமானம் இல்லாமல் பேசுகிறீர்களே என்று சொன்னா பஞ்ச் டயலாக் எடுத்து விடறீங்களே?

    நீங்க உயிரினம் இல்லைன்னு யாரு சொன்னா? சொன்னவனைக் காட்டுங்க, தூக்கிறலாம்!

 3. என்ன சார்ஸ்? ஆரம்பத்தில் வரசித்தன் சார் மனிதர்களை அழிக்க வேண்டும்னு சொன்னார். பாஸ்கர் சார் ‘இல்லை, மனிதர்களை அழிக்குமளவுக்கு அவர்கள் பெரும் தவறேதும் செய்யவில்லை என்றார். இப்போது டாக்டர் அபராஜிதனுக்கு மனிதாபிமானம் இல்லையா என்கிறார்.. (இவங்கள புரிஞ்சுக்கவே முடியலையே..)

  1. அழிச்சுறலாமான்னு கேட்டாருங்க. அவ்வளவுதான். மருத்துவரானா புற்று நோய்க் கிருமியை அழிக்கணும். நான் மருத்துவரா நீங்க என்ன செய்வீங்கன்னு கேட்டேன். அவரு மருத்துவரா இதைதான் சென்ஜாகனும், செஞ்சிடலாமா அப்படின்னு கேட்டாரு. அவ்வளவுதான்.

   அப்புறம் மனிதாபிமானத்தோட போனாப் போறாங்க, பொழைச்சுப் போகட்டும் அப்படின்னு விட்டுட்டோம். மனுசங்க தப்பிச்சுட்டாங்க, அவ்வளவுதான் மேட்டர்.

   இப்ப நீங்க என்ன சொல்றீங்க? போட்டுரலாமா வேணாமா? மனிதாபிமானத்தோட சொல்லுங்க.

   1. //இப்ப நீங்க என்ன சொல்றீங்க? போட்டுரலாமா வேணாமா? மனிதாபிமானத்தோட சொல்லுங்க.//

    ஒரேடியாப் போட்றலாம்.. நோ ப்ராப்ளம்..

    என்ன பாஸ்கர் சார், தூக்கிரலாம் போட்டுரலாம்னு வன்முறை கொப்பளிக்கப் பேசுறீங்க? என்னாச்சு?

    1. நோ மோர் கொஸ்சீன்ஸ்.

     போற போக்கைப் பாத்தா வெட்டு குத்துன்னு என்னை இழுத்து விடாம நீங்க ஓய மாட்டீங்க போல இருக்கு!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s