க்லென் லிட்டில்- ப்ராஸ்டி என்ற கோமாளி.

“அவர் ஒரு ட்ரில் சார்ஜண்ட் மாதிரி- ஆனால் கொஞ்சம் காமடியாய் இருப்பார்,” என்று சொல்கிறார்கள். “நீ எப்போதும் நேர்த்தியாக இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார், சனிக்கிழமை மூன்று காட்சிகள் செய்திருந்தாலும்கூட பார்வையாளர்கள் முன் கலைந்த தலையும் கசங்கின உடுப்புமாய் வரக்கூடாதென்பார்- கோமாளிகள் குறித்த குழந்தைகளின் கனவைக் கலைக்கக் கூடாதென்பதில் அவர் அவ்வளவு உறுதியாய் இருந்தார்,” என்கிறார்கள்.

க்லென் லிட்டில், ப்ராஸ்டி என்கிற கோமாளி, தனது எண்பத்து நான்காவது வயதில் காலமானார். 1925ஆம் ஆண்டு பிறந்தவர்.  அமெரிக்கக் கடற்படைப் போர் வீரர்- வலது நுரையீரலின் ஒரு பகுதியைத் தன் பணி நிமித்தமாக தேசத்துக்குத் தியாகம் செய்தவர்.

1956ல் கோமாளித்தனத்தைத் தொழிலாகத் தேர்ந்தெடுத்தார்.  1962ல் கோமாளித்தன சுயதொழில் முனைவரானார். 1968ல் துவக்கப்பட்ட கோமாளிக் கல்லூரியின் முதலாமாண்டு மாணவராகத் தேர்ச்சி பெற்றார். தனது 44வது வயதில் ஒரு சர்க்கஸில் கோமாளி வேலைக்குச் சேர்ந்தார்.  1970ல் கோமாளிகளுக்கு பாஸ் என்று பதவி உயர்வு பெற்றார். 1980 முதல் கோமாளிகளின் செயலாக்க இயக்குனராகப் பணியாற்றினார். 1983ல் மாஸ்டர் கோமாளியாக கௌரவிக்கப்பட்டார். இவரையும் சேர்த்து உலகில் நான்கு கோமாளிகள்தான் இந்த உயரிய அங்கீகாரம் அளிக்கப்பட்டவர்கள். 1991ல் கோமாளிகளின் சர்வதேசப் புகழ் அரங்கின் உறுப்பினராக அங்கீகரிக்கப்பட்டார்.  க்லென் லிட்டில், ப்ராஸ்டி என்கிற கோமாளி, கோமாளிகள் கல்லூரியில் பேராசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார்.

இவை தவிர, நிக்சன், கார்ட்டர், ரீகன், புஷ் போன்றவர்களுக்கும் வெள்ளை மாளிகையில் கோமாளித்தனம் செய்து காட்டி இருக்கிறார்-கேளிக்கையாகவா கல்வியாகவா என்பது எனக்கு ஐயமாக இருக்கிறது- என்ன ஒரு கோமாளித்தனமான எண்ணம்!

கோமாளிகளின் செயலாக்க இயக்குனராகப் பணியாற்றுகையில், தொழிலை சரியாக செய்யாத கோமாளிகளை சர்க்கஸ் காட்சி முடிந்ததும்,  தனது கோமாளி வேடத்தைக் கூட கலைக்காமல் பெரும் உணர்ச்சிக் கொந்தளிப்புடன் திட்டித் தீர்ப்பது அவரது வழக்கமாம். “என்னை இவர்கள் சீரியசாகவே எடுத்துக் கொள்ள மாட்டேனென்கிறார்கள்,” என்ற இவரது ஆதங்கத்தை அங்கு ஒரு தடவை வந்திருந்த நிருபருடன் பகிர்ந்து கொண்டாராம்- ஒரு புலிக் கூண்டின் மேலேறி அமர்ந்த கோலத்தில்.

குழந்தைகளும் பெரியவர்களும் விலாவும் வயிறும் வலிக்கச் சிரிக்கிற இந்தப் புனிதப் பணி நிமித்தமாக க்லென் லிட்டில்- ப்ராஸ்டி என்கிற கோமாளி.  ஏழு விலா எலும்புகளை உடைத்துக் கொண்டிருக்கிறார், இவரது கால் முட்டிகள் இரண்டும் வீணாய்ப் போயின, இன்னும் ஏராளமான விபத்துகள்: கை விரல்கள் கூடக் கோணி நின்றன.

அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

தொடர்புடைய சுட்டிகள்: The New York Times, Wikipedia

Advertisements

One thought on “க்லென் லிட்டில்- ப்ராஸ்டி என்ற கோமாளி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s