ஹாரி மூலிஷ்- வரலாற்றின் பிணைக் கைதி

ஹாரி மூலிஷ் டச்சு மொழி எழுத்தாளர்- “தன்னடக்கம் அவரது நற்குணங்களில் ஒன்றல்ல. தான் ஒரு சிறந்த சிந்தனையாளர் என்பதையும் எதைப் பற்றியும் எழுதக்கூடிய திறமை கொண்ட அசாதாரண எழுத்தாளர் என்பதையும் அவர் ரகசியமாக வைத்திருக்கவில்லை. அவரது கர்வத்துக்கு சிறந்த நகைச்சுவை உணர்வும் அவ்வப்போது வெளிப்படும் சுய எள்ளலும் சுவை கூட்டுவதாக இருந்தன” என்று கார்டியனில் எழுதுகிறார்கள். டச்சு மொழியல்லாமல் வேறு பரவலான மொழியில் எழுதியிருந்தால் அவருக்கு நிச்சயமாக நோபல் பரிசு கிடைக்கும் என்று அவரோடு பலரும் நம்பினார்களாம்.

அவர் எழுதிய, “தாக்குதல்” என்ற நாவல் முப்பத்திரண்டு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. 187ல் திரைப்படமாக வெளிவந்தபோது அதற்கு ஆஸ்கார் விருது கூட கிடைத்தது. இன்று அது ஒரு பள்ளி நூலாக இருக்கிறது.


image credit- cannon.org

நாஜிக்கள் ஹாலந்த்தைக் கைப்பற்றி ஆளும்போது நாஜிக்களுக்காக வேலை செய்யும் ஒரு டச்சு போலீஸ் தலைவரைக் கொலை செய்து ஒரு பாவமும் அறியாத ஒரு குடும்பம் வசிக்கும் வீட்டின் முன் போட்டுவிட்டு போய் விடுகிறார்கள். அதனால் கோபமடைந்த நாஜிக்கள் பொதுமக்களைக் கன்னா பின்னாவென்று சுடுகிறார்கள். அதில் கதை சொல்லியின் பெற்றோரும் பலியாகிறார்கள். யார் யார் ஏன் என்ன செய்தார்கள், யார் செய்தது தவறு என்ன நியாயம் இருக்கிறது என்று விவாதிக்கும் ஒழுக்கம் சார்ந்த கதையாக இது பேசப்படுகிறது.

1992ல் அவர் எழுதிய “சொர்க்கம் கண்டுபிடிக்கப்பட்ட கதை” என்ற நாவல் நான்கு ஆண்டுகளுக்குமுன் டச்சு மொழி நாவல்களிலேயே சிறந்ததாக வாக்கெடுப்பொன்றில் தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த நாவலில் இரண்டு அறிவுஜீவிகள் நண்பர்களாக இருக்கிறார்கள். இருவரும் ஒரு பாடகியைக் காதலிக்கிறார்கள். அவளுக்குப் பிறக்கிற குழந்தை வளரும்போது அது கடவுளின் தூதன் என்றுத் தெரிய வருகிறது. இதில் கடவுள் வருகிறார், சாத்தான் வருகிறார், தேவ தேவதைகள் மானுட விவகாரங்களில் மூக்கை நுழைக்கிறார்கள்- என்ன கதையோ புரியவில்லை. ஆனால் ஒன்று, ஹோமர், மில்டன், தாந்தே போன்றவர்களில் காவியங்களுக்கு ஒப்பான நூல் இது என்று ஒருவர் நூல்நயம் செய்திருக்கிறார்.

எது எப்படியோ, ஹாரி மூலிஷ் யூதகுடியில் பிறந்தவர். அவரது தந்தை ஒரு வங்கி நடத்தியவர். நாஜிக்களால் சிறை பிடிக்கப்பட்ட யூதர்களின் சொத்துக்களைத் தன் வங்கியில் வைத்துக் கொண்டவர். நாஜிக்களின் கூட்டாளி. இப்படி அவர்களுடன் ஒத்துழைத்தே தனது மனைவி மக்களை சாவிலிருந்து காப்பாற்றிக் கொண்டவர். போர் முடிந்ததும் மூன்றாண்டு சிறை தண்டனை பெற்றார்.

தனி மனித அளவில் எது எப்படி இருந்தாலும், ஒரு துரோகியின் மகனாக அறியப்பட்டவன், தன் வரலாற்றிலிருந்து மீண்டு, இப்படி புதினங்கள் படைப்பதும் அவை தேசத்தின் சிறந்த புனைவுகளை செய்தவனாகக் கொண்டாடப்படுவதும் அசாதாரணமான விஷயங்கள், இல்லையா?

தனது எண்பத்து மூன்றாவது வயதில் புற்று நோயால் காலமான அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s