ஜூடிட் நாகி- விபத்தாய் அமைந்த வாழ்வு

“சாக்கடையில் கிடந்த எனக்கு வாழ்வு கொடுத்தவர்,” என்று தன் கணவரைக் குறித்து விளையாட்டு போல் பெருமைப்பட்டுக் கொண்ட ஜூடிட் நாகியின் வாழ்க்கையில் ஒரு விபத்து திருப்பு முனையாக அமைந்தது, இன்னொரு விபத்து முற்றுப் புள்ளி வைத்தது.

உணவு, காயம், நோய் போன்ற மாற்றங்களை நம் உடலில் உள்ள திசுக்கள் எப்படி சமாளிக்கிறது என்பதை ஆயும் துறை proteomics என்று சொல்கிறார்கள். ப்ரோடீன்கள் குறித்த ஆய்வு மிகவும் சுவையான ஒன்று என்பது மட்டும் இப்போது தெரிகிறது. ஹங்கேரியில் பிறந்து இங்கிலாந்தில் குடியேறிய சூடித் நாகி இத்துறையில் ஒரு முக்கியமானவராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டார். ஆனால் துரதிருஷ்டவசமாக அவரது வாழ்வுக்கு ஒரு கொடிய விபத்து முற்றுப் புள்ளி வைத்து விட்டது.

தன் துறை சார்ந்த ஒரு ஆய்வுக்கு இங்கிலாந்து வந்திருந்தபோது நாகி ஒரு டாக்ஸி இடித்து அடிபட்டு கீழே விழுந்து விட்டார். அப்போது அந்த பக்கமாகப் போய்க கொண்டிருந்த மிகேல் நடால் என்ற பெயர் கொண்ட மருத்துவர் ஒருவர் ஓடோடி வந்து அவரைக் காப்பாற்றினார். அப்புறம் இந்த நிகழ்வைத் தொடர்ந்து திரைப்படங்களில் வருகிற மாதிரி காதல் வயப்பட்டு அவரையே கை பிடித்தார்.

இனிமையான மண வாழ்வில் நான்கு குழந்தைகளை ஈன்றெடுத்த நிலையில் தன் மகன் படிக்கிற பள்ளியில் ஒரு பெற்றோர் ஆசிரியர் சந்திப்புக்கு சென்று கொண்டிருக்கையில் கார் விபத்துக்குள்ளாகி மரணமடைந்தார்.


image credit: this is london

அவர் பயணித்த கார் இந்தியாவில் தயாராகி விற்பனையாகும் ரேவா என்று தெரிகிறது. மின்சக்தியில் செலுத்தப்படும் அந்தக் கார் மிக மென்மையானது என்று சொல்லி இங்கிலாந்தில் விபத்தின் விளைவுகளை சோதிக்கும் அமைப்பு எங்கள் விலையுயர்ந்த டம்மிகளை இந்த சோதனைக்கு உட்படுத்தி அவற்றை வீணடிக்க விரும்பவில்லை என்று மறுத்து விட்டதாம். ஒரு நாற்பது கிலோமீட்டர் வேகத்தில் போய் இடித்துக் கொண்டாலே சின்னா பின்னமாகி விடும் என்று சொல்கிறார்கள்.

மின்சக்தி கார் வாகனமொன்றில் பயணித்து இறந்த முதல் நபர் இவர்தான். அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

தொடர்புடைய சுட்டிகள்:
Guardian
Live
EV-INF

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s