ஏன் மறைந்தவர்களை நினைத்துப் பார்க்க வேண்டும்?

எழுபத்தெட்டு வயதில் காலமான என் தந்தையார் டென்னிஸ் மிட்சல் தான் கொண்ட கொள்கைகளுக்கேற்ப வாழ்ந்தார். அவர் உலகளாவிய சமதர்மம் மற்றும் சுற்றுச்சூழல் அக்கறை கொண்டு இன்னும் நன்றாக செயல்படும்படி பல இளைஞர்களுக்கு ஒரு உத்வேகம் தருபவராக இருந்தார்.

அவர் மேற்கு யார்க்ஷைரில் ஹன்ச்லேட்டில் ஒரு உழைக்கும் வர்க்கக் குடுமப்த்டில் பிறந்தார். அவரது புத்திக் கூர்மையும் கணிதத் திறமும் எளிதில் புலனாயினதாய் இருந்தன. இருப்பினும் பதினாறு வயதுக்கு மேல் அவர் படிக்க குடும்பச் சூழ்நிலை இடம் தருவதாயில்லை. எனவே அவர் வேலைக்கு செல்ல வெளியே போக வேண்டியதாகியது. இடையிடையே ராயல் ஏர் போர்சில் தேசியக் கடமை ஆற்றினார்.

1950களின் துவக்க ஆண்டுகளில் டென்னிஸ் அரசு தொலைதொடர்புத் தலைமையகத்தில் இணைந்து, க்ளூசெஸ்ட்ர்ஷைரில் உள்ள செல்டன்ஹாம் சென்றார். 1956ல் பேரில் பூலை மணந்தார். அங்கு அவருக்கு ரூத், மேரி என்ற இரு பெண்கள் பிறந்தனர். அதன் பின் அவர் ஆஸ்திரெலியாவில் பணிபுரிய அனுப்பப்பட்டார். அங்கு கேயும் நானும் பிறந்தோம்.

அவர் ஒரு உண்மை ஊழியராக இருந்தார், நீண்ட காலம் அங்கு பணி புரிந்தார், ஆயினும் தனக்கு உண்மை எனத் தோன்றியதை அவர் வெளிப்படுத்தத் தயங்கியவரல்ல. அவர் அமைதிக்கான செல்தென்ஹாம் இயக்கம், என்ற அமைப்பில் உருப்பயனராக இருந்தார். அது பலமுகங்களிலும் அணு ஆயுதங்கள் கை விடப்பட வேண்டும் என்று வலியுறுத்திய இயக்கம். அவர் பணியாற்றிய அமைப்பில் மார்கரட் தாச்சரை எதிர்த்த வெகு சிலரில் அவரும் ஒருவர்.

டென்னிஸ் காலாற ஊர் சுற்றுவதில் தீவிரமான நாட்டம் கொண்டவராயிருந்தார். மலைகள், வாய்க்கால்கள், வெளிகள் போன்ற இடங்களுக்குத் திரும்பத் திரும்ப சென்றார். அவர் லீட்ஸ் யுனைடட் அணியை கூர்மையாக அவதானித்து ஆதரித்தார். அவர் பிரேஸ்ட்பரி இளைஞர் அணியை வழிநடத்துகையில் அவரது கால்பந்து மீதான நேசம் இன்னும் பலரைச் சென்றடைந்தது. அங்கு அவர் கண்ட வெற்றி, செல்தன்ஹாம் டவுன் அணியின் இளைஞர் அணியை வழிநடத்தும் வாய்ப்புக்கு வழிகோலியது. அங்கு அவர் அடையாளம் கண்டு அறிமுகப்படுத்திய பல வீரர்கள் தொழில்முறை ஆட்டக்காரர்களாக மலர்ந்தனர்.

1985ல் பணி மூப்பு எய்தியதும் ராண்டேவூ என்ற கல்விக்கான தர்ம ஸ்தாபனத்தை நிறுவினார். அதில் அவர் முழு மூச்சோடு ஈடுபட்டார். அது உலகளாவிய அமைப்பை மலர வேண்டும் என்று உறுதி பூண்டவராய் அவர் க்ளோபல் புட்ஸ்டெப்ஸ் என்ற அமைப்பை உருவாக்கினார். ரஷ்யாவில் சோச்சி கென்யாவில் கிசுமு போன்ற இடங்களுக்கும் செல்டன்ஹாமுக்கும் உறவுப் பாலம் அமைத்தார். அரசு மற்றும் ஊடகங்களின் சார்பு நிலைகளைத் தாண்டி பிற பண்பாடுகளை தங்கள் கண்களாலேயே காண வேண்டும் என்ற உந்துதலை இளைஞர்களுக்கு ஏற்படுத்தித் தந்தார் அவர்.

உலகளாவிய சுற்றுச் சூழலை மேலை நாட்டு வாழ்க்கை முறை கடுமையாக பாதிக்கிறது என்று அவர் நாட்பட நாட்பட கவலை அடைந்தார். இனி காரில் பயனிப்பதில்லை என்று உறுதி கொண்டார், அதை சாகும்வரை கடைபிடித்தார். அதற்கு பதிலாக அவர் பஸ்ஸில் பயணித்தார். அல்லது அவறரது நம்பிக்கைக்குரிய சைக்கிளில் பயணம் செய்தார்- அது போலந்தில் செய்யப்பட்டது, போலந்திலிருந்து அதை அவர் மிதித்து வந்திருந்தார்.

பெரில், அவரது பிள்ளைகள் மற்றும் எட்டு பேரப்பிள்ளைகளும் அவரது பிரிவின் துயர் ஆற்றுகிறார்கள்.

ஐயா, இது கார்டியனின் வந்த இரங்கற் கட்டுரை.

மறைந்தவர்கள் நினைவிலும் மறைந்தவர்கள் ஆவார்கள் எனில், வாழ்பவர்கள் வாழ்வது எதற்காக? மேலை நாடுகளில் அஞ்சலிக் கட்டுரைகள் மிகப் பிரபலமாக இருப்பது அவர்கள் உயிரையும், நினைவையும் எவ்வளவு அருமையாகப் போற்றுகிறார்கள் என்பதைக் காட்டுகிறது.

நண்பர் ஆர்வி சிலிகான் ஷெல்ப் என்ற புக்ப்ளாக் துவங்கும்போது அவருக்கே இவ்வளவு வரவேற்பு இருக்கும் என்பது தெரியாது. ஆனால் ஆங்கில மொழியில் அவற்றுக்கு இருக்கும் மரியாதையைப் பார்த்தால் இன்னும் நூறு புக் ப்ளாகுகளுக்கு தமிழில் இடம் இருக்கிறதென்று தோன்றுகிறது.

அதே போல் இந்த வகையான அஞ்சலிகளுக்கும் ஒரு இடம் இருக்கிறது. யாராவது இதற்கென்றே ஒரு வலையேடு துவங்க வேண்டும். அதன் பின் பாருங்கள், எப்படி பிச்சுக் கொண்டு போகிறதென்று.

எல்லாரும் செய்வதையே வெறும் பிரபலத்துக்காக எதற்காக செய்வது? இதில் நாட்டமுள்ளவர்கள் கொஞ்சம் கூட யோசிக்காமல் இவ்வகைக் கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்துப் பதிவு செய்யத் துணியலாம்.

அப்போதுதான் தமிழ் வாழும். ஒருத்தருக்கு அஞ்சலி செய்யும்போது நாம் அவர் ஒருவரை மட்டும் நினைவு கூர்வதில்லை- ஒரு சகாப்தத்தைக் குறுக்கு வெட்டாய்த் திருப்பிப் பார்க்கிறோம். இணையத்திலும் அச்சு ஊடகத்திலும் இவை பெருமளவில் இடம் பெரும் நாள், தமிழ் தன் பொறுப்பை உணர்ந்த நாள் எனக் கொண்டாடப்படும்.

Advertisements

5 thoughts on “ஏன் மறைந்தவர்களை நினைத்துப் பார்க்க வேண்டும்?

 1. //மறைந்தவர்கள் நினைவிலும் மறைந்தவர்கள் ஆவார்கள் எனில், வாழ்பவர்கள் வாழ்வது எதற்காக?//

  “ஹாட்ஸ் ஆப்” சார். உங்க பயணம் இப்போ புரியுது.

  வாழ்த்துக்கள்!!!

  1. நன்றி கிரி நல்ல பின்னூட்டம்! ஆனா, ஏன் என்னைத் தொப்பியைக் கழட்ட சொல்றீங்க? 🙂

   மேலை நாடுகளில் obituaryகளைத் தொகுத்து புத்தகமே போடுகிறார்கள். Times இதழில் வருகிற அஞ்சலி கட்டுரைகள் இவ்வகையில் மிகப் பிரபலம். நானே படித்திருக்கிறேன்.

   இங்கே அது என்னவோ தப்பு என்கிற மாதிரி பேசிக் கொள்கிறார்கள். ஜெயமோகன் அவர்கள் மிக சிறப்பாக நினைவாஞ்சலி வரைவார். ஆனால் அவர் என்னமோ அடுத்தவன் சாகவே காத்துக் கொண்டிருகிற மாதிரி புறம் பேசுகிறார்கள். இதனாலேயே அவரும்கூட அண்மையில் ஓரிரு அஞ்சலிகளைத் தவிர்த்து விட்டதாக நினைக்கிறேன்.

 2. நல்ல கருத்து நட்பாஸ்.சினிமா தவிர வேறு எதையும் சிந்திக்க முடியாத நிலைக்கு நாங்கள் போய்க்கொண்டிருக்கிறோம்.
  “காலமாகிவிட்ட உன் தாத்தா பற்றி ஒரு நினைவுக்குறிப்பை இந்ததளத்தில் எழுதியிருக்கிறேன்” என்று நண்பனுக்கு சொன்னால் அவன் மனம் திருப்தியடையும்.அல் அவர் படத்தை போட்டால் பலர் பின்னுட்டமாக அஞ்சலிக்குறிப்பு எழுதுவார்கள். ஓருவர் பற்றிய பலர் நினைவுகள் அவரை மீண்டும் இணையத்தில் உருவாக்கும் ..
  அவசர உலகத்தில் அச்சடித்த மட்டையை வாங்கி அனுப்புகிறநிலையில் நான்கு வசனம் எழுதுவார்களா என்ன.?

  1. தமிழிலும் நிச்சயம் வரவேற்பு கிடைக்கும். யார் முனைகிறார்கள் பார்க்கலாம்.

   என்னைப் பொருத்தவரை தமிழில் யாரும் தன் சூழலைத் தாண்டி சிந்திக்காமலிருக்கக் காரணம், இப்படி நாம் மறந்து போய் விடுவதுதான். பார்க்கலாம், நிலைமை மாறாமலா போய் விடும்?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s