வால்டர் ஐஸார்ட்- அமைதியின் அறிவியல்

முந்நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும் இருபத்தொரு புத்தகங்களையும் இரு புதிய துறைகளையும் சமைத்தவரைக் குறித்து, நோபல் பரிசு வென்ற பொருளாதார நிபுணர் பால் க்ரக்மேன், தன் அபரித அறிவை வீணடித்தவர் என்று சொல்கிறார்- அப்படியானால் வால்டர் ஐஸார்ட் இன்னும் எத்தனை சாதித்திருக்கக் கூடும் என்று வியப்பாக இருக்கிறது.

1919ஆம் ஆண்டு பிலடெல்பியாவில் யூத சமயத்தை சார்ந்தவர்களுக்குப் பிறந்தவர் ஐஸார்ட். பிற்காலத்தில் க்வேக்கர் (காந்தியடிகளின் தென்னாப்பிரிக்க அனுபவங்களில் இவர்களைக் குறித்து நிறைய வரும். அவரது நெருங்கிய நண்பர்களில் மூவர் க்வேக்கர்கள் என்று நினைக்கிறேன்) பிரிவு கிருத்தவராக மாறினார்- இரண்டாம் உலகப் போரில் தன் சமய நம்பிக்கைகள் காரணமாக தன்னால் போர் புரிய இயலாது என்று ஒரு மனநல காப்பகத்தில் எடுபிடியாக பணி புரிந்தார்.

ஐஸார்டின் பங்கீடுகளில் குறிப்பிடத்தக்கவை இரண்டு- ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஏன் சில குறிப்பிட்ட தொழில் நிறுவனங்கள் அமைகின்றன, அவை அமைவதால் எப்படிப்பட்ட மாற்றங்கள் நேர்கின்றன, உள்நாட்டில் நிகழ்கிற குடியேற்றம் அப்பகுதியின் பொருளாதாரத்தை எப்படி மாற்றுகின்றது என்பனவற்றைப் பேசும் பிராந்திய அறிவியல் நிறுவனர்களில் மிக முக்கியமான ஒருவர் ஐஸார்ட்.


image credit: Chronicle Online

கல்வி சார்ந்த துறைகளில் இந்த அளவு சாதிப்பதே பெரிய விஷயம் என்று தோன்றுகிறது. ஆனால் ஐஸார்ட், இன்னும் ஒரு படி மேலே போய் அமைதி மற்றும் போர் அறிவியல் என்ற துறையும் நிறுவப்படக் காரணமாக இருந்திருக்கிறார். எத்தனைதான் கருத்து, வேதாந்தம், சித்தாந்தம் என்று பேசினாலும், அறிவியலுக்கே உரிய கறாரான பார்வை அமைதி எத்தகைய சூழல்களில் குலைக்கப்படுகிறது, எத்தகைய காரணிகள் அமைதிக்கு அடிகோலுகின்றன என்பன விருப்பு வெறுப்பற்ற ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு விடை காணப்படவேண்டியது அவசியம்தானே?

ஐஸார்ட் வித்தியாசமான மனிதராக இருந்திருப்பார் போலிருக்கிறது. இவர் மூன்று மகன்கள் இரண்டு மகள்கள் பன்னிரண்டு பேரக் குழந்தைகள் மற்றும் நான்கு கொள்ளுப் பேரப் பிள்ளைகளை விட்டுச் செல்கிறார் என்பதைத் தாண்டி இவரது வாழ்வு குறித்த விபரங்கள் இணையத்தில் கிடைப்பதாகத் தெரியவில்லை.

அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

தொடர்புடைய சுட்டிகள்:
The New York Times
Marginal Revolution
Cornell Chronicle

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s