ஜூலி க்ளமன்ட்ஸ்- பூக்களைக் கொண்டு ஒரு மறுமலர்ச்சி

இன்று ஒரு சில தேவையில்லாத விஷயங்களில் மனதை அலைய விட்டதால் வழக்கம் போல் பதிவிட இயலவில்லை. இப்போதுதான் ஒருவாராக மீண்டெழுந்து வருகிறேன். அன்னாரது ஆன்மாக்கள் என்னை மன்னிக்குமாக.

ஜூலியா க்ளமன்ட்ஸ். 1906ஆம் ஆண்டு இங்கிலாந்தில் பிறந்தவர். ஏழு குழந்தைகளில் மூத்தவர். இவரது பத்தாம் வயதில் தந்தை இறந்து விடவே, பதினான்காம் வயதில் படிப்பு தடைப்பட்டது. கப்பல் நிறுவனம் ஒன்றில் சேர்ந்து உலகைச் சுற்றிப் பார்க்க ஆசைப்பட்டார். தாயார் அனுமதிக்கவில்லை. எப்படியோ அவரது அனுமதி பெற்று பெல்ஜியம் சென்றார், பிரஞ்சு கற்றுக் கொண்டார், இன்னும் என்னன்னவோ. எழுத்தாளராக மாறி பத்திரிக்கைகளில் வணிக எழுத்து சாதித்தார்.

இரண்டாம் உலகப் போர் காலத்தில் செஞ்சிலுவை சங்கத்தின் விவசாய நிதி அமைப்பில் வேலை செய்தார். அவர் வாழ்வின் திருப்பு முனை 1947ல், அவரது நாற்பத்தொன்றாம் வயதில் நேர்ந்தது.

இங்கிலாந்து பொருளாதார அளவில் இரண்டாம் உலகப் போர் காலத்தில் கொடுத்த விலை மிக அதிகம். அதை அக்கால அன்றாட வாழ்வு குறித்த கதைகளைப் படித்தால் ஓரளவு தெரியும். அமெரிக்காவில் ஒரு மலர்க் கண்காட்சிக்கு அழைக்கப்பட்டிருந்தார் க்ளமன்ட்ஸ். அவர் அந்த சமயத்தில் “என் தோட்டம்” என்ற பத்திரிக்கையில் பணி புரிந்து கொண்டிருந்தார் என்று நினைக்கிறேன்.

நெட் கர்டன், நெட்டாலான திரைச்சீலை, அதைக் கிழித்து ஒட்டு போட்டு ஆடையாக வடிவமைத்து அதை அங்கு அணிந்திருந்தார். அமெரிக்காவில் எல்லாரும் சகல சௌபாக்கியங்களோடும் சந்தோஷமாக இருக்கிறார்கள். தனது அமெரிக்க பயணம் பற்றி இங்கிலாந்துக்கு வந்து உரையாற்றினால் போகிற பக்கமெல்லாம் அழுது வடியும் ஆடை அணிந்த அழுது வடியும் பெண்கள். அத்தனை பிரச்சினை, துக்கம். இதை எப்படி மாற்றுவது என்று ஒரு சந்திப்பின்போது நினைத்தார். தான் தயாரித்து வைத்திருந்த உரையைக் கிழித்தெறிந்தார் க்ளமன்ட்ஸ்.

சாதாரண விஷயம்தான். “பூக்களைக் கொண்டு ஆன்மாக்களை மீட்டெடுத்த படையின் தலைவி,” என்று பெவர்லி நிக்கல்ஸ் இவர் குறித்து சொல்கிறார். ஏறத்தாழ இரண்டு மில்லியன் மகளிர் மலர்க்கொத்து அலங்கார அமைப்பில் ஆர்வம் கொள்ளத் தனியொரு பெண், இவர் காரணமாக இருந்தார்.

அந்த நாள் இவர், தன் உரையைக் கிழித்துப் போட்டு விட்டு, தன் முன் மேசையில் இருந்த மலர்க் கோப்பையில் இருந்து மூன்று மலர்களை பறித்து அழகாக இணைத்து வைத்தார். “போர் நடந்த ஏழு ஆண்டுகளில் வீட்டை அலங்கரிக்கக் கூடிய சாமான்கள் வாங்க இயலாதவர்களாக இருந்தார்கள் பெண்கள், தங்கள் ஆடைகள், உணவு, வீடு எதிலும் அவர்களது படைப்புத் திறனைக் காட்ட முடியாமல் துவண்டு போயிருந்தார்கள்,” என்கிறார் ஜூலி க்ளமன்ட்ஸ் “ஆக்கப்பூர்வமான ஏதேனும் ஒன்றில் போரால் களைத்திருந்த பெண்களை ஆர்வமாய் ஈடுபடுத்த வேண்டும் என்ற ஆசை என்னில் கனன்றெழுந்தது. பூக்களே எளிதில் கிடைக்கக் கூடியனவாய் இருந்தன, எனவே அவையே நினைவுக்கு வந்தன.”

மலர்கள், இந்தப் பெண்களுக்கு வாழ்வின் வண்ணங்களை ரசிப்பதற்கான கதவுகளைத் திறந்தன. இவர் துவங்கி வைத்த இந்த முயற்சி, ஒரு இயக்கமாக மலர்ந்தது. அவர் ஒரு நாளைக்கு பதினான்கு மணி நேரம் உழைக்க வேண்டிய நிலையும் வந்தது.

அது என்ன இயக்கம், எப்படி வளர்ந்தது, அவருக்கு என்ன கௌரவங்கள் கிடைத்தன என்பதையெல்லாம் டெலிகிராப் நாளேட்டில் படித்துக் கொள்ளுங்கள்.

image credit- The Telegraph

சாதாரண விஷயம்தான். ஆனால் அது பலர் வாழ்வில் மறுமலர்ச்சி உண்டாக்கத்தக்கதாய் இருந்திருக்கிறது. இந்த மாதிரி நபர்கள் இறக்கும்போது கூட நாம் அவர்களைஒரு கணமேனும் நினைத்துப் பார்க்காமல் இருந்தால் எப்படி?

தனது நூற்று நான்காம் வயதில் காலமான அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s