போரும் அமைதியும்- ஐந்து நிமிட உலக வரலாறு

இங்கு தற்போது ஐரோப்பியர்களின் மறைவு குறித்தே எழுதப்படுவதால், இந்தக் காணொளியைக் காண்பது பயனுள்ளதாக இருக்கக் கூடும். இன்றைக்கு நாம் மேலைப் பண்பாடு என்று போற்றுகிறோமில்லையா, தொழில்நுட்பம் தொடங்கி இலக்கியம் வரை நாமெல்லாம் அவர்களின் எதிரொலிகளாய் இருந்தாலே போதுமென்பது அறிவுஜீவிதமாக இருக்கிறது, அதை விடுங்கள்- இந்த பண்பாட்டின் இதயம் ஐரோப்பாவே என்றுகூட சொள்ளலாம்.

அந்த இதயம் கடந்த ஆயிரம் ஆண்டுகளில் போரால் எவ்வளவு காயப்பட்டிருகிறது என்று பாருங்கள்- நாம் இவர்களின் விஷயங்களைப் படிக்கும்போதும் விவாதிக்கும்போதும் அவற்றின் பின்னணியில் போர்களில் வலியும் காழ்ப்பும் உள்ளது என்ற உண்மையை மறக்கக் கூடாது.

மேலை நாட்டு நாகரீகம் அமைதியான சூழலில் உருவான ஒன்றல்ல- ஆன்மாவின் இருப்பைக் குலைக்கக் கூடிய போர்க்கருவிப் பட்டறையில் வார்த்தெடுத்த ஒன்று. நாம் அவர்கள் அரசியல், உளவியல், சமூகம் மற்றும் இலக்கியம் போன்ற துறைகளில் எழுதி வைத்த விஷயங்களைப் படிக்கும்போது இதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

அதை விடுங்கள், நாம் காணொளியைப் பார்ப்போம்.

உலகம் எங்கும் அப்படித்தானே என்று கேட்பீர்கள், இல்லையா? உண்மைதான். ஆனால் எனக்கு அவர்கள் அளவுக்கு வேறு யாரும் அறிவுசார் தளத்தில் ஆதிக்கம் செலுத்துகிற மாதிரி தெரியவில்லை அவ்வளவுதான்.

இதோ உலகம் பற்றி எரிகிறது-

என்றைக்கு எல்லாமே பொசுங்கிப் போகுமோ என்று திகிலாக இருக்கிறது, இல்லையா?

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s