ஜெனி அந்தோனியோ- அன்பெனும் அருமருந்து

இன்று சில சுட்டிகள் மட்டும் என்று நினைக்கிறேன்.

ஜெனி அந்தோனியோ: பதின்மப் பருவங்களில் கதை கவிதைகள் எழுதினார். தேவாலயங்களில் துதிப்பாடல்கள் பாடி வளர்ந்தார். உயிரியல் பட்டப்படிப்பு மேற்கொண்டு, மரபியலில் முனைவர் பட்டம் பெற்றார். அதன்பின்தான் அவரை உளச்சிதைவு பீடித்தது. செவியில் வசைமாரிப் பொழியும் குரல்கள்.

தன் நிலையை மறைக்கவில்லை. வெளிப்படையாக அது குறித்து ஊடகங்களிலும் அமைப்புகளிலும் விவாதித்து, உளச்சிதைவால் அவதிப்படுபவர்கள் புரிந்துக் கொள்ளப்ப்படவும், அவர்கள் வாழ்வு மேம்படவும் உழைத்தார்.

“ஒரு நாள் நான் அரை கவனத்துடன் வானொலி கேட்டுக் கொண்டிருந்தேன். ஒரு பெண்மணி தன் வாழ்வில் ஒரு அனுபவத்தை விவரித்துக் கொண்டிருந்தார். அவள் வெஸ்ட்மின்ஸ்டர் பாலத்தில் நின்று கொண்டிருந்தாள், திடீரென்று கீழே ஓடுகிற தேம்ஸ் நதியில் குதித்துவிட்டாள். அவளை ஆற்றுநீர் சிறிது தூரம் இழுத்துச் சென்று கரை சேர்த்தது, அவள் உயிர் பிழைத்தாள். இந்த நிகழ்ச்சி அதிர்ச்சி தரும் ஒன்றாய் இருந்தது என்றால் அதற்கு வானொலியில் பெசிக்கொண்டிருந்த பெண் இதை மிக சாதாரணமான தொனியில் சொன்னார் என்பதும் ஒரு முக்கியமான காரணம். எங்கேயோ கேட்ட குரலாக இருக்கிறதே என்று தோன்றியது, அப்புறம்தான் இது ஜேனியின் குரல் என்று அடையாளம் கண்டு கொண்டேன்,” என்று சொல்கிறார் அவரது நண்பர் ஒருவர்.


image credit: The Independent

ஜெனி இங்கிலாந்தில் உள்ள அனைத்து மனநல அமைப்புகளிலும் பங்கீடளித்துள்ளார். மனச்சிதைவுக்கான அணுகுமுறை குறித்த வழிமுறைகளை வகுப்பதில் இவருக்கு முக்கிய பங்கிருந்திருக்கிறது.

இவர் துரதிருஷ்டவசமாக மரணமடைந்தார் என்பது செய்திகள் வாயிலாக அறியப்படுகிறது. காலமாகையில் ஐம்பத்து மூன்று வயது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

இவர் எழுதிய பரிசு பெற்ற கவிதை ஒன்று இங்கிருக்கிறது- Ophelia in London

தன் உளச்சிதைவு குறித்து அவர் சொல்வது இங்கே- ‘How I live with schizophrenia’

நேச்சர் தளத்தில் அவரது நண்பர் ஒருவர் பதிவிட்ட உள்ளத்தைத் தொடும் அஞ்சலி இங்கே- A very special feature

Independent நாளிதழில் விபரமான குறிப்புகள்- Janey AntoniouLives Remembered, By Catherine White

Advertisements

6 thoughts on “ஜெனி அந்தோனியோ- அன்பெனும் அருமருந்து

  1. இதைப்பற்றி நிறையச்சொல்லலாம்.இப்போதும் ஒரு படம் டீவியில் போய்கொண்டிருக்கிறது.Crazy people. எப்படி எல்லாம் சிந்திக்கிறார்கள் என்று பார்க்கிறபோது அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.இந்தப்பெண் போல பலர் வரவேண்டும்.
    அவர்களை ஆதரித்து முக்கியத்துவம் கொடுக்க உங்களைப்போல பலர் உருவாகவேண்டும்.

    மாமரம் உற்சாகப்படுத்தியா கனிகளைத்தருகிறது. அதன் இயல்பு கனிதருவது. உங்கள் இயல்பு சார்
    (ஒண்ணு சொன்னா ஆயிரம் ஒண்ணுக்கிருந்தா கடல். ஆ பஞ்ச்)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s