பேபி மேரி ஆஸ்போர்ன்- ஒரு நடிகையின் கதை

இதைக் கேளுங்கள்- அமெரிக்காவில் சென்ற நூற்றாண்டுகளின் துவக்கப் பத்தாண்டுகளில் ஒரு பெண் இருந்தாள். அவள் ஒரு குழந்தை. ஏழை வீட்டுப் பெண். அவளது அம்மாவுக்கு நடிகை ஆக ஆசை. குழந்தையைப் பார்த்துக் கொள்ள ஆள் இல்லாததால் அவளையும் அம்மா ஸ்டூடியோக்களுக்கும் ஷூட்டிங்களுக்கும் அழைத்துப் போகிறாள்.

கதையின் இந்தத் திருப்பத்தை நீங்கள் எதிர்பார்த்திருப்பீர்கள்- குழந்தை படு சுட்டி. அவள் நடித்த படங்கள் பெரிய அளவில் ஹிட் ஆகி அவள் ஒரு ஹாலிவுட் நட்சத்திரமாகிறாள்- அவளது பெற்றோர்கள் தங்கள் பெண்ணை வைத்து சொந்த படம் எடுக்கிறார்கள்.

கதையின் இந்தத் திருப்பத்தையும் நீங்கள் கணித்திருப்பீர்கள். படம் எடுத்த பெற்றோர் கையை சுட்டுக் கொள்கிறார்கள். குழந்தை நட்சத்திரம் தனது எட்டாவது வயதில் திரைத் துறையை விட்டு விலக வேண்டியதாகிறது. பெற்றோர் விவாக ரத்து பெறுகிறார்கள்.


image credit- classicmoviekids

அடுத்த திருப்பத்தையும் கணித்திருப்பீர்கள்- ஓய்வு பெற்ற நடிகை தனது இருபதாவது வயதில் மணம் முடிக்கிறாள். ஒரு பெண் குழந்தைக்குத் தாயாகிறாள். ஐந்தாண்டுகளுக்குப் பின் விவாக ரத்து செய்கிறாள். ஏழ்மை. ஒரு மளிகைக் கடையில் பணி புரியும் நிலைமை.  ஒரு ஆறேழு ஆண்டுகளுக்குப் பின் மறுமணம்- நல்ல வேளையாக இந்தக் கல்யாணம் நல்லபடியாக நிலைத்து நிற்கிறது.

அவள் மளிகைக் கடையில் வேலை செய்கிற காலத்தில் கதையில் ஒரு திருப்பம் வருகிறது. அதை நீங்கள் எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள். இத்தனை செயற்கையான திருப்பத்தை வைத்து கதை எழுதியவனைத் திட்டித் தீர்ப்பீர்கள்- அவளுக்கு தொலை பேசியில் ஒரு அழைப்பு வருகிறது.

அவள் இத்தனை நாட்களாய் யாரைத் தன் பெற்றோர் என்று நினைத்துக் கொண்டிருந்தாளோ, அவர்கள் அவளது உண்மையான பெற்றோர் கிடையாது. அவள் ஒரு தத்துப் பெண். அவளது உண்மையான பெற்றோர் வேறிருவர். அவளைத் தத்துக் கொடுத்த நிஜ அப்பா- மூச்சை இழுத்துப் பிடித்து நிறுத்திக் கொள்ளுங்கள், மக்களே: மூர்ச்சையாகி விழுந்து விடப் போகிறீர்கள்-

ஒரு தொழிலதிபராக வளர்ந்து கோடீஸ்வரராகி விட்டிருக்கிறார். அத்தனை சொத்துக்களையும் தன் பெண், இந்த மாஜி நடிகை, பெயருக்கு உயில் எழுதி வைத்து விட்டு இப்போது இறந்து விட்டார். “உன் சொத்துகளை வந்து வாங்கிப் போ!” என்று தொலைபேசியில் அழைத்திருக்கிறார் வக்கீல் சார். சில பல ஆண்டுகள் போனபின் மறுபடியும் நடிகை ஸ்டூடியோக்களுக்குத் திரும்புகிறார்.

ஆனால் நண்பரே, நீங்கள் எதிர்பார்த்த திருப்பம் இங்கே வருவதில்லை- ஏமாந்துவிட்டீர்கள் நீங்கள். அம்மா ரொம்ப உஷார்- படமெடுக்கும் ஆசையெல்லாம் எள்ளளவும் கிடையாது. இப்போது இவர் எடுத்திருக்கும் அவதாரம் காஸ்ட்யூம் டிசைனராக.

இதற்கப்புறம் கதை சுவாரசியப்படாது. எனவே, மார்லன் பிராண்டோவுக்கு காட் பாதர் திரைப்படத்தில் ஆடை டிசைன் பண்ணும் காட்சியோடு படத்தை முடிக்கிறோம்.

நடிகையின் பெயர் பேபி மேரி ஆஸ்போர்ன். தனது தொன்நூற்றொன்பதாம் வயதில் காலமானார். அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

தொடர்புடைய சுட்டி- The New York Times

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s