ராபின் டே- பிளாஸ்டிக் நாற்காலிகளைக் கண்டு பிடித்தவர்.

நம் ஒவ்வொருவர் வீட்டிலும் குறைந்தது இரண்டு பிளாஸ்டிக் நாற்காலிகளாவது இருக்கும் என்று நினைக்கிறேன். என் வீட்டில் ஏழு! அவற்றை நாம் வணிகப் படைப்புகளாகவே நினைக்கிறோம். அவற்றுக்கும் ஒரு செவ்வியலுக்குரிய கூறு இருப்பது நமக்குத் தெரியாது.

இந்த பிளாஸ்டிக் நாற்காலிகளை வடிவமைத்தவர் பெயர் ராபின் டே. 1915ஆம் ஆண்டு ஹை வைகோம்ப் என்ற ஒரு சிற்றூரில் பிறந்தவர். அந்த ஊரில் இருப்பவர்களின் பெருந்தொழிலே மரச்சாமான்கள் செய்வதுதான். ராபின் டே நன்றாக ஓவியம் வரையக்கூடியவராக இருந்ததால் அவர் ஒரு தொழிர்கல்விக் கூடத்தில் படித்தார். அங்கிருந்து ராயல் காலேஜ் ஆப் ஆர்ட்ஸில் பட்டப்பதிப்பை முடித்தார். அவர் படித்த காலத்தில் கலைகளுக்குத் தரப்பட்ட கல்வி அளவுக்கு தொழிர்கல்விக்குத் தரப்படவில்லை என்றுத் தெரிகிறது. அவர் கலை பயின்றது அவர் விரும்பிய மரச்சாமான் செய்யும் தொழிலுக்கு அவரைத் தயார் செய்யவில்லை என்றே சொல்ல வேண்டும். மரசாமான்களைக் கலைக் கண்ணோடு படிக்க இயலாத நிலையில் கட்டிடக்கலை நிபுணர்களுக்கு மாதிரிகள் செய்து கொடுத்தார். அதன் பின் ஒரு கல்லூரிக் கலைக்கூடத்தில் ஆசிரியராக இருந்தார். இருபத்தைந்து வயதில் ஒரு அழகிய பெண்ணின் கை பற்றினார். மோரோ என்ற கட்டிடக் கலைஞருடன் இணைந்து கண்காட்சிகளுக்கு படைப்புகள் செய்து கொடுத்தார். அவை பெருமளவில் வரவேற்பு பெற்றன.

ராபின் டேயின் வாழ்வில் திருப்புமுனை என்றால் அது 1048ம் ஆண்டு ந்யூ யார்க் ம்யூசியம் ஆப் மாடர்ன் ஆர்ட் நடத்திய ஒரு போட்டியில் அவர் வெற்றி பெற்ற நிகழ்வு என்றுதான் சொல்ல வேண்டும். அது குறைந்த விலை அறைக்கலன்கள் (furnitures) வடிவமைக்கும் போட்டி. ராபின் டே கலை என்பது காரியத்துக்கு உதவக்கூடியதாக இருக்க வேண்டும் என்ற கொள்கையில் உறுதியாக இருந்தார். அவர் பல்வகை சேகரிப்புப் பேழை வடிவமைத்து பரிசு பெற்றார். அதைப் பார்த்த ஒரு அறைக்கலன் நிறுவனம் அவரிடம் நாற்காலிகள் செய்து தரும்படி கேட்டுக் கொண்டது. அவர் வடிவமைத்த ஒட்டுப் பலகை நாற்காலிகள் பெரும் வரவேற்பு பெற்றன.

அதைத் தொடர்ந்து அவருக்கு ராயல் பெஸ்டிவல் ஹால் ஒன்றை வடிவமைக்கும் வாய்ப்பு கிடைத்தது. இம்முறை வாகன தயாரிப்பு முறைகளைப் பயன்படுத்த முடிவு செய்த ராபின் டே ஒடிசலான ஸ்டீல் ராடுகளையும் ஒயிலாய் வளைந்த பிளைவுட் ஆசனங்களையும் பொருத்தி அமைத்த நாற்காலிகள் பெரும் வரவேற்பு பெற்றன. அந்த காலத்தில் பரவலாக தென்பட்ட நாற்காளிகளோடு ஒப்பிடுகையில் இவை காற்றில் மிதப்பனவாகத் தெரிந்தனவாம். இதன் பரிணாம வளர்ச்சியாகவே அடுத்து பிளாஸ்டிக்கைப் பயன்படுத்தினார் டே.

இன்னும் நிறைய சொல்லிக் கொண்டு போகலாம், அவரது வேறு பல சாதனைகள், ஆடை வடிவமைப்பில் புகழ் பெற்ற மனைவி என்று.

ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாளர் என்ற அளவில் நம்மால் மறக்கப்பட முடியாதவர் ராபின் டே, இல்லையா? இனி எனக்கு பிளாஸ்டிக் நாற்காலிகளைப் பார்க்கும் போதெல்லாம் இவர் நினைவு வரும் என்பது உறுதி.

அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

தொடர்புடைய சுட்டிகள்-
Independent
Co-operative Design

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s