ஆடினரி காத்து

பதிவு போட்டு ரொம்ப நாள் ஆச்சா, சும்மா ஒரு இதுக்கு- என்ஜாய் பண்ணுங்க!

Advertisements

10 thoughts on “ஆடினரி காத்து

  1. உங்கள் ஆதரவுக்கும் ஊக்குவிப்புக்கும் நன்றி.

   என்ன ஒரு பிரச்சினை என்றால், “அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்” என்று பதிவை முடிப்பது குறித்து எனக்கு ஒரு ஐயம் வந்து விட்டது. அப்படி முடிக்காமல் பதிவு எழுதுவது நியாயம் இல்லை என்ற எண்ணம் ஒரு பக்கம். இது செயற்கையாக இருக்கிறது என்ற எண்ணம் மறு பக்கம்.

   இந்த முரண்களைத் தீர்த்துக் கட்டிவிட்டு ஓட்டத்தைத் தொடர்வதாக இருக்கிறேன்.

   நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

 1. ரொம்ப சரி. ஆனால் அஞ்சலிப் பதிவுகளுக்கு என ஒரு தளம் தமிழில் அவசியம். (இதுவும் உங்கள் / வரசித்தன் வாயிலாக நான் புரிந்துகொண்டது) அது உங்களதாக இருந்தால் மெத்த மகிழ்வேன். லைவ்லி பிளானெட் ஆக இருக்க வேண்டும் என்று இல்லை. நீங்கள் அதற்கென தனித் தளம் துவக்கினாலும் சரி.

  1. இங்கேயே தொடரலாமேன்றுதான் இருக்கிறேன். பார்ப்போம், ஒரு சிறு தேக்க நிலை, அவ்வளவுதான். இன்றோ நாளையோ தொடர்கிறேன்..

 2. சார் என்ன இது இதற்காக எழுத்துவதை நிறுத்திருக்கிறீகளா? வேலைப்பளு என்று நினைத்தேன்.
  இதைக்கிளப்பியதில் எனக்கும் பங்கு இருக்கிறதோ.இதை அக்கு வேறு ஆவி வேறாக அலசுவோம்

  ஆன்மா சாந்தியடைப்பிரார்த்திக்கிறோம் என்பது எனக்கு இப்படித்தான் விளங்குகிறது.
  ஆன்மாக்களில் சாந்தியடையாதவை சாந்தியடைந்தவை என இரண்டு வகை இருக்கவேண்டும். சாந்தியடைவது தான் உயர்ந்த நிலை. சாந்தியடையாத ஆன்மாக்கள் ஆவிகளாய் அலைகின்றன.
  எனவே உயிரோடிருப்பவர்கள் இறந்தவர்கள் சாந்தியடையவேண்டும் என்று இறைவனை .
  பிரார்த்திக்கிறார்கள்.
  சாதரணமாய் ஒரு மரணத்தின் பின் ஆன்மா சுற்றிக்கொண்டிருந்துவிட்டு அந்தியேஷ்டி ஆட்டைத்திவசம் போன்றவை முடிய?? சாந்தியடைந்துவிடுகிறது

  மிக அண்மையில் இறந்தவர் இன்னும் ஆவி நிலையில் இருப்பதால் ஆன்மா சாந்தியடையப்பிரார்த்திப்பது வழமை.ஏனென்றால் மேற்படி ஐதிகங்கள்.

  சாந்தியடையாதவர்கள் ஆவிகளாக சுற்றிக்கொண்டு டம்ளர்கள் மூலம் பேசிக்கொண்டிருப்பார்கள்

  காலமாகி வருடக்கணக்காகிவிட்டவர்களுக்கு அது பொருத்தமாகுமா?

  (தெவசத்தில் பிதிர்களுக்கு பிண்டம் வைக்கும் போது ??மூன்று தலைமுறைக்கு வைக்கிறார்கள் மூன்று தலைமுறைக்கு முந்தியவர்கள் வேறுபிறப்பு எடுத்துவிட்டிருப்பார்கள் காகமாய் வந்து பிண்டம் உண்ண மாட்டார்கள்).

  மகாத்மா காந்தி, நேரு , பாரதியார், காமராஜர் அம்பேத்கர் போன்றவர்களைப்பற்றி எழுதி விட்டு இறுதியில் அவர்கள் ஆன்மா சாந்தியடையவேண்டும் என்று சொன்னால் அது பொருத்தமாயிருக்குமா?

  ரமண மகரிஷியைப்பற்றி எழுதிவிட்டும் அப்படிச்சொன்னால் அது சரியாகாதே? ஆன்மாக்களை ஜட்ஜ் பண்ணி சாந்தியடையாதவை என்று தீர்மானித்து…அவைகளை மாத்திரம் சாந்தியடைய..

  கடவுளே

  எனக்கு இப்படியெல்லாம் தோன்றி குழப்பமாகிறது.

  மேலே சும்மா ஊரில் ’பெரியவர்கள்’ பேசிக்கொள்வதைப்பார்த்து நினவில் வந்ததை சும்மா ஒரு கருத்துக்கு 🙂 தர்க்கரீதியாக தர்க்கம்பண்ண தெரியாதவிடயத்தை எடுத்து… ஒரு இதுக்காக…..பெரிசா எடுத்துக்காதீங்க சார்
  தவறுகளைப்பொறுத்தால் என் மனம் சாந்தியடையும்

  வாழ்ந்தவர்களை நினைவு கூர்ந்து வணக்கத்தைச்செலுத்துதல் ஸ்தூல உலகில் அவர்கள் இருப்பின் மூலம் விட்டுச்சென்றவைகளை நினைத்துப்பார்த்தலை
  செய்வது ஒரு நல்ல முயற்சி – நினைவுக்குறிப்புகளை முடிக்கும்போது அவர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தத்தான் வேண்டும்.நீங்கள் எழுதவேண்டும் தொடர்ந்து.

  நன்றி

  1. நீங்கள் சொல்வதில் தவறொன்றும் இல்லை டாக்டர். ஆன்மா சாந்தியடைவது என்பதற்கு நீங்கள் சொல்கிற பொருள்தான் வருகிறது. நாமாக ஒரு அர்த்தம் கொடுத்துவிட்டு அதுதான் சரி என்று சாதிப்பது சரியாக இருக்காது. இதைத் திருத்திக் கொள்ளவே வேண்டும்.

   ஆனால் இல்லாதவர்களுக்கு என்னவென்று அஞ்சலி செலுத்துவது என்று தெரியவில்லை. சரியான பார்வை கிடைக்காததால் எழுத மனம் போக மாட்டேனென்கிறது.

   இனி .O. _/\_ என்ற குறியீட்டைப் பதிவின் இறுதியில் பயன்படுத்தப் போகிறேன்- அதுஎனக்கு ஓரளவு சாந்தி தரக்கூடும்.

   உங்கள் பகிர்தலுக்கு மிக்க நன்றி.

 3. நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துகிறேன். அல்லது இன்றைய பதிவை அவர் நினைவுக்கு சமர்ப்பணம் செய்கிறேன் இப்படி ஏதாவது..?.
  சட்டென்று ஏதாவது எழுதி பிரேக்கை பிரேக் பண்ணுங்கள்

 4. “இன்றைய பதிவை அவர் நினைவுக்கு சமர்ப்பணம் செய்கிறேன்” என்பது மிகவும் பொருத்தமாக இருக்கிறது நன்றி. இனி எழுதுவதில் பிரச்சினை இருக்காது என்று நினைக்கிறேன்…. மிக்க நன்றி.

   1. ஆமாம், பதிவுலகில் நட்பை விட சிறந்ததாக நாம் எதையும் சம்பாதித்துவிடப் போவதில்லை, உண்மைதான். அதற்காகவே நான் ப்ளாக் பண்ண ஆரம்பித்தது குறித்து சந்தோஷப்படுகிறேன்.

    எனக்கு இதைவிட உயர்ந்ததாக வேறெந்த சாதனையும் என்னால் செய்ய முடியாது என்று நினைக்கிறேன். உங்களுக்கெல்லாம் நன்றிகள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s