மைக்கேல் ஹகோபியன்- நினைவுகளின் காவலன்

“நீ ஒரு மக்களை அழிக்கலாம், ஆனால் அவர்களுடைய குரல்கள் ஓயாது,” என்று சொல்வாராம் மைக்கேல் ஹகோபியனின் பாட்டி. மைக்கேல் ஹகோபியனின் வாழ்வு அந்தக் குரல்களைப் பதிவு செய்து ஆவணப்படுத்துதலுக்குக் கொடுக்கப்பட்டது.

1915 முதல் 1918 வரையிலான மூன்றாண்டுகளில் ஒட்டோமான் பேரரசில் ஏறத்தாழ ஒன்றரை மில்லியன் ஆர்மீனியர்கள் கொல்லப்பட்டனர் என்கிறார்கள். இதை இன்னும் துருக்கி ஏற்கவில்லை. சம அளவில் மூன்று லட்சம் ஆர்மீனியர்களும் மூன்று லட்சம் துருக்கியர்களும் ரஷ்யர்கள் தந்த ஊக்கத்தால் ஆர்மீனியர்கள் ஒட்டோமான் அரசுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த போராட்டத்தில் இறந்தனர் என்று சொல்கிறது- ஒன்றுக்கு ஒன்று சரியா போச்சு, யாரும் இதைப் பற்றி இனிப பேச வேண்டாம். இதுதான் இன்றைய துருக்கியின் நிலைப்பாடு. இந்த நிகழ்வு நடந்து நூறாண்டுகள் கழியப் போகும் இன்றைய நிலையில் அன்று நடந்தது ஒரு இனப்படுகொலை என்று அங்கீகரித்துள்ள நாடுகள் மொத்தம் இருபதுதான்.

இந்த நிலையில் நிகழ்வுகள் குறித்த நினைவுகளை நிலை நிறுத்த வேண்டியது எவ்வளவு அவசியம் என்பதை சொல்ல வேண்டியதில்லை. மைக்கேல் ஹகோபியன் தன் ஆவணப் படங்கள் வழியாக அதை செய்தார்.

துருக்கியில் இப்போதும் இருக்கும் ஆர்மீனிய ஊரான கார்பேட் என்ற இடத்தில் பிறந்த மைக்கேல் ஹகோபியன் இரண்டு வயது குழந்தையாக இருந்த போது ஊருக்குள் கலவரம் நடக்கிறது என்று பயந்த அவரது தாயார் தன் குழந்தையை புழக்கடையில் இருந்த கிணற்றுக்குள் ஒளித்து வைத்தாராம்- அதிர்ஷ்டமிருந்தால் குழந்தை பிழைத்துக் கொள்ளட்டும் என்று. ஏழு ஆண்டுகள் அந்த கலவர பூமியில் சமாளித்துவிட்டு அமெரிக்காவில் குடியேறினர் அவரது பெற்றோர்.

ஆனால் மற்றவர்களில் பலருக்கு அந்த அதிர்ஷ்டமில்லை. சிரியாவின் பாலைவனங்களுக்கு விரட்டப்பட்ட லட்சக்கணக்கான ஆர்மீனியர்கள் பசியால் செத்தார்கள். இதில் பிழைத்தவர்களை வைத்து இந்த நிகழ்வை ஹகோபியன் “செம்பெருக்கேடுத்தொடிய நதி” என்ற திரைப்படம் வழியாக ஆவணப்படுத்தினார். இது பெருமளவில் கவனிக்கப்பட்டு பல பரிசுகள் பெற்றது.

இதையன்றி இருபது ஆண்டு காலம் ஆய்வு செய்து நானூறு பேரைப் பேட்டி கண்டு, “மறக்கப்பட்ட இனப்படுகொலை” என்ற ஆவணப்படத்தையும் எடுத்திருக்கிறார்.

இவரது ஆவணப்படங்களில் ஐந்து இந்த தளத்தில் காணக் கிடைக்கிறது- Culture Unplugged. எததனையோ உலக சினிமா விமரிசனம் எழுதுகிறோம், இப்போது நடந்து கொண்டிருக்கிற உலகத் திரைப்பட விழாவில் சினிமா பார்ப்பதற்காக எலும்பைத் தேடி நாய் ஓடுகிற மாதிரி தியேட்டர் தியேட்டராய் வியர்க்க விருவிருக்க ஒடி படம் பார்த்து பதிவு தேத்துகிறோம். பைசா செலவில்லாமல் வீட்டிலிருந்தே பார்க்க முடிகிறது, இந்த மாதிரி படங்களை. யாராவது இது குறித்து எழுதலாமே?

சிறுபான்மையினர் வாழ்வு குறித்த அக்கறை கொண்ட இவர் இந்தியாவிலும் ஒரு படம் எடுத்திருக்கிறாராம். ஒரு குடும்பத்தின் வாழ்வில் அறுபதாண்டு கால இடைவெளியில் ஏற்படும் மாற்றங்களை ஆவணப்படுத்தும் வகையில் பெங்காலில் வாழும் ஒரு இசுலாமிய குடும்பத்தைப் பற்றி 1950 மற்றும் 1978 ஆகிய ஆண்டுகளில் படம் பிடித்து வைத்திருக்கிறார். இது அப்புறம் என்ன ஆயிற்றென்று தெரியவில்லை- Atlantis Foundation

தொண்ணூற்று எட்டு வயதுகள் வாழ்ந்து மறைந்த அன்னாரின் நினைவுகளுக்கு இந்தப் பதிவை அர்ப்பணிக்கிறோம்.

Advertisements

2 thoughts on “மைக்கேல் ஹகோபியன்- நினைவுகளின் காவலன்

  1. தெரிவு நான் செய்ததில்லைங்க. பெரியவராப் பாத்து காலம் வந்ததும் கூட்டிட்டுப் போயிட்டாரு.

    எழுத்து குறித்த ஊக்கத்துக்கு நன்றி. அதுவும் நீங்கள் சொல்வதென்றால் அதைப் பெறுவதில் இரட்டிப்பு மகிழ்ச்சி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s