கிரஹாம் க்வில்லியம் – சமூகம் சார்ந்தனவே குறைகள்

அசக்தர்களை, உடல் மற்றும் ஆரோக்கிய குறைபாடுள்ளவர்கள், பொருளாதார மற்றும் சமூக தளங்களில் பின்தங்கியவர்கள், இவர்களை எப்படி அணுகுகிறது என்பதைக் கொண்டுதான் ஒரு சமுதாயம் வளர்ந்திருக்கிறதா இல்லை இன்னும் சிறுபிள்ளைத்தனமான முன்முடிவுகளால் அவதிப்படுகிறதா என்பதை சொல்ல முடியும். அரண்மனை போன்ற கட்டிடங்கள், ராக்கெட் விடுவது, குண்டு வெடிப்பது, எதிரிகள் வாலாட்டினால் தலையில் ஒரு தட்டு தட்டுவது, என்னை எவனும் ஒண்ணும் பண்ண முடியாது என்கிற மாதிரி நாட்டாமை செய்வது, நண்பர்களுக்காக எதுவும் செய்வேன் என்று விதிகளையும் சட்டங்களையும் நினைத்தபடி வளைப்பது – எல்லாவற்றுக்கும் மேல், நான் வைத்ததுதான் சட்டம் என்று திமிராக நடந்து கொள்வது, எவனாவது எதுவாவது கேட்டால் கூச்சல் போடுவது ரகளை செய்வது போன்ற காரியங்கள் தேசங்களுக்கு உரியவையல்ல, தன் பொறுப்பை உணர்ந்த சமூக அமைப்புகளுக்கும் அழகல்ல இவ்வகைச் செயல்கள்- மீசை முளைத்து ஹார்மோன்கள் கலவரம் செய்யும் விடலைப் பருவத்துக்கு மட்டும் உரிய உயரிய குணங்கள்.

கார்டியனில் ரேக் க்வில்லியம் என்பவர் தன் மகனது மறைவு குறித்து எழுதிய அஞ்சலிக் குறிப்பு படித்தேன். தனது பதினைந்தாவது வயது வரை எல்லாரையும் போல் நன்றாக இருந்த கிரகாம் க்வில்லியம் ஒரு வைரல் காய்ச்சல் வந்தபின் தன் இரு கிட்னிகளின் செயல்பாட்டையும் இழகிறான். இது நடந்தது நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்.

நம்மூரானால் என்ன நடந்தது என்பது கூட தெரியாமல் உயிர் பிரிந்திருக்கும். அது இங்கிலாந்து. டயாலிசிஸ் செய்தார்களாம். வீட்டிலேயே டயாலிசிஸ் செய்து கொள்ளும் இயந்திரத்தை வடிவமைத்திருக்கிறார்கள். அதன் ரத்தம் பாய்ந்த பிளாஸ்டிக் போர்டுகளை தினமும் கையால் கழுவி சுத்தம் செய்ய வேண்டுமாம்.

தன் இளம் வயதில் விவசாயம் செய்ய வேண்டும் என்ற லட்சியம் கொண்டிருந்த கிரஹாம், உடல் நிலையின் காரணமாக தோட்டத்துறையில் ஈடுபட்டார். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட பின் ஸ்க்வாஷ் விளையாட்டு மற்றும் மலைகளில் நடத்தல் போன்றவை அவருக்கு சாத்தியப்பட்டன.

தன்னைப் போன்றே மாற்று சிறுநீரகம் பொருத்திக் கொண்ட ஒருவரை மணம் செய்துகொண்டார், அவர்களுக்கு குழந்தையும் பிறந்தது. விவாக ரத்து செய்து கொண்டார்கள், மறுமணம் செய்து கொண்டார்கள். நம் எல்லாரையும் போன்றே கழிந்தது இவர்கள் வாழ்வும்.

மாற்று சிறுநீரகத்தை உடல் ஏற்றுக் கொள்வதற்காக உட்கொண்ட மருந்துகள் கிரஹாமின் இதயத்தை பாதித்துவிட்ட காரணத்தால் பத்தாண்டுகளுக்கு முன் இதயத்தையும் அறுவை சிகிச்சையின் மூலம் மாற்ற வேண்டியிருந்தது.

உடல் உறுப்புகளை தானம் செய்வதன் அவசியத்துக்கு சான்றாக இருக்கிறது அவரது வாழ்வு. அறுபது ஆண்டுகள் கிரஹாம் வாழ்ந்தார் என்றால் அது இவருக்கு தங்கள் உறுப்புகளை தானம் செய்தவர்கள் தந்த கொடை, என்று சொன்னால் தவறில்லை என்று நினைக்கிறேன்.

“போகும்போது என்ன கொண்டுப் போகப் போகிறோம்?” என்று சர்வ சகஜமாகப் பேசுகிறோம். அதற்காக பணம் காசு வீடு வாசல் அந்தஸ்து என்று எதையும் சேர்ப்பதற்கு நாம் தயங்குவதில்லை. ஆனால் இவ்வளவையும் விட்டு விட்டுதான் போக வேண்டும், போகிறோம்.

எல்லாவற்றையும் விட்டுப் போகிறோம், ஆனால் எதற்கும் உதவாத இந்த ஈரல், இதயம், சிறுநீரகம் போன்ற நமக்கு வீணாய்ப் போன உடல் உறுப்புகளை விட்டுப் போகாமல் எரிக்கோ மண்ணுக்கோ தருகிறோம். இதை நம்மைப் போன்ற யாரோ ஒரு மனிதருக்குத் தந்தால் அது அவரது வாழ்வை நீட்டிக்குமல்லவா?

அப்படி ஒருவர் செய்ததால்தானே ஒரு பதினைந்து வயது பையன் அறுபது வயது வரை இந்த உலகில் வாழ முடிந்தது?

இந்த நன்னாளை கிரஹாம் க்வில்லியமின் நினைவுகளுக்கு அர்ப்பணிப்போம், அறம் சார்ந்த வாழ்வு வாழ்வோம்.

image credit- American Journal of Kidney Diseases

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s