பிரட் ஹார்ஜ்ஷைமர் – செய்ந்நன்றி மறவாப் பெருந்தகை

1943. பிரட் ஹார்ஜ்ஷைமர் பயணித்துக் கொண்டிருந்த விமானம் பசிபிக் பெருங்கடலில் ஜப்பானியப் போர் விமானங்களால் சுட்டு வீழ்த்தப்பட்டது. அவரது அதிர்ஷ்டம் அந்த விமானம் ந்யூ இங்கிலாந்து என்ற தீவின் அடர்ந்த காடுகளுக்குக்குள் விழுந்தது. முப்ப்பதொரு நாட்கள் அவர் அந்தக் காட்டில் உயிருக்குப் போராடினார்.

அவரைக் கண்டெடுத்த தீவின் பழங்குடியினர் தங்கள் குடிசைக்கு அவரை அழைத்துபோய் பாதுகாத்தனர். தீவு ஜப்பானியரின் ஆட்சியில் இருந்த காலம். ஏழு மாதங்கள் அவர் அந்தப் பழங்குடியினரின் அரவணைப்பில் பிழைத்திருந்தார். மறைவிடமும் உணவும் தந்தது மட்டுமல்லாமல் அவருக்கு உடல் நலம் குன்றியபோது அவருக்கு மருத்துவமும் செய்து அவரது உயிரைக் காப்பாற்றினார்கள்.

ஒரு நீர்மூழ்கிக் கப்பல் அவரைக் காப்பாற்றி ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச் சென்றது. போர் முடிந்ததும் அவர் தன் தாயகமான அமெரிக்காவுக்குத் திரும்பினார். அங்கு அவர் ஒரு கணினி நிறுவனத்தில் விற்பனையாளராகப் பணியாற்றினார். திருமணம் செய்து கொண்டார், குழந்தைகள் பிறந்தன. ஆனால் அவரது உயிரைக் காப்பாற்றிய மக்களின் நினைவு மனதை நீங்கவில்லை- “அதைப் பற்றி நினைக்க நினைக்க, நான் எவ்வளவு கடன்பட்டிருக்கிறேன் என்ற உணர்வு அதிகரிக்கவே செய்தது,” என்றார் அவர்.

பதினேழு ஆண்டுகள் கழித்து, தன் குடும்பத்தோடு அவர் ந்யூ இங்கிலாந்துத் தீவுக்கு இரண்டாம் முறை வந்தார். ஐந்து டாலர், பத்து டாலர் என்று நண்பர்களிடமிருந்து வசூல் செய்த பதினைந்தாயிரம் டாலர் தொகையுடன். அதன் பின் இன்னும் மூன்று ஆண்டுகள் ஆன பின் மீண்டும் வந்தார், இம்முறை நிரந்தரமாகக் குடியேற – தன்னிடமிருந்த காசில் அந்த கிராமவாசிகளுக்குப் பள்ளிக்கூடம் கட்டித் தந்தார் . அதைத் தொடர்ந்து வந்த பத்தாண்டுகளில் மருத்துவமனை, பள்ளிகள், நூலகங்கள் என்று பல சேவைகளையும் அவர் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் விரிவுபடுத்தினார்.

தன் மறைவுக்கு மூன்றாண்டுகள் முன் ஒரு பேட்டியில், “இவர்கள் என் உயிரைக் காப்பாற்றியவர்கள். இவர்களுக்கு என்னால் என்ன கைமாறு செய்துவிட முடியும்?” என்று கேட்டிருக்கிறார் பிரட் ஹார்ஜ்ஷைமர்.

நம்மில் மரணத்தை நேருக்கு நேர் சந்தித்தவர்கள் மிகக் குறைவானவர்களே, உண்மைதான். ஆனால் நம் ஒவ்வொருவருக்கும் நாம் வாழ வழி காட்டியவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்! அவர்கள் இல்லாமல் நாம் இன்று இப்படி இருக்க முடியுமா?

நன்றி மறவாமல் தன் வாழ்நாள்தோறும் செஞ்சோற்றுக் கடன் தீர்த்த பிரட் ஹார்ஜ்ஷைமர் தொண்ணூற்று நான்காண்டுகள் வாழ்ந்து மறைந்தார். அன்னாரது நினைவுகளுக்கு இந்தப் பதிவை அர்ப்பணிக்கிறோம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s