பால் ஷெர்வுட்- மக்கள் நல மருத்துவம்

முதலாம் உலகப் போர் நடந்த கால கட்டத்தில் பால் ஷெர்வுட் சிறு குழந்தையாய் இருந்தார். அப்போது நடந்த சம்பவம் இது- இங்கிலாந்தின் வானில் வெடிமருந்துகளைத் தாங்கி மிதந்தன ஜெர்மானிய பலூன்கள்- ஜெப்பலின்கள். அவற்றில் ஒன்று தாக்கப்பட்டு, தன் நங்கூரத்தைக் கை விட்டது.

வானில் மிதக்கும் பலூனுக்கு எதற்கு நங்கூரம் என்று கேட்கிறீர்களா? அவை விண்மீன் பிடிக்கப் போகும் படகுகளின் நங்கூரம் அல்ல- வானையும் மண்ணையும் இணைக்கும் சங்கிலிகள். மின்சக்தி கடத்திகள். பனி உறைந்து கிடக்கும் பகுதிகளின் மேல் மிதக்கையில், பலூனிலிருந்து இந்த நங்கூரம் இறங்கும். உறைபனியை மின்சக்தி கொண்டு சூடாக்கி உருக்கும். தண்ணீரினுள் புகுந்த நங்கூரம், மின்சக்தி நிறுத்தப்பட்ட சிலபல பொழுதுகளில், பனிக்கட்டிகளின் இறுகிய பிடிகளில் நிலை கொள்ளும். பலூனில் இருந்து போர் வீரர்கள், சங்கிலியில் சறுக்கிக் கீழே இறங்கி வருவார்கள். பலூன் புறப்பட வேண்டுமானால், மீண்டும் மின்சாரம் பாய்ச்சி பனிக்கட்டியை உருக்கி நங்கூரத்தை மீட்டெடுத்துக் கிளம்புவார்கள். ஜெர்மன்காரன் மூளை எப்படி வேலை செய்திருக்கிறது பார்த்தீர்களா?

இந்த மாதிரியான பலூன் ஒன்று தாக்கப்பட்டதும், அதன் நங்கூரம் தரையை நோக்கி, குழந்தை பால் ஷெர்வுட் அமர்த்தப்பட்டிருந்த நடைவன்டியை சிதைக்க நழுவி வந்தது. சிதறிய நடைவண்டியை பதைப்புடன் தேடி வந்த அவனது தாயும் தாதிப் பெண்ணும் அதன் சிதறல்களைக் கண்டெடுத்தனர். குழந்தையைக் காணோம்.

அந்த அதிர்ஷ்டக்காரக் குழந்தை சற்று தொலைவில் இருந்த ரோடோடென்ட்ரன் செடிகளின் படுகையில் எந்த சேதாரமுமின்றி சிரித்துக் கொண்டிருந்தது.

oo0oo


பால் ஷெர்வுட் பணக்காரக் குடும்பத்தில் பிறந்தவர். அவரது அப்பா ஒரு புகழ் பெற்ற மருத்துவர். அரச குடும்பம் உட்பட இங்கிலாந்தின் பெரும்புள்ளிகள் அவரிடம் மருத்துவம் பார்த்துக் கொள்வார்கள். கிரீஸ் மற்றும் ஸ்பெயினின் அரச தம்பதியரின் குடும்ப மருத்துவராக அவர் இருந்தார்.

தன் தந்தையின் வழியில் பயணித்த பால் ஷெர்வுட் நிகழ்த்திய சாதனைகள் பல. மயக்க மருந்து செலுத்துவதில் தேர்ச்சி பெற்றிருந்தார் இவர் (அனெஸ்தடிஸ்ட்). அறுவை சிகிச்சை செய்யப்படும்போது எவ்வளவு ரத்தம் இழக்கப்படுகிறதென்று அளந்து அதே அளவில் ரத்தம் உள்ளே செலுத்தப்படவேண்டும் என்ற முறையை அறிமுகப்படுத்தியவர் இவரே. இதற்கு அப்போதிருந்த மருத்துவத்துறையில் பலத்த எதிர்ப்பு இருந்தது- ஒரு சிறிய அளவுக்கு மேல் ரத்தம் உடலினுள் செலுத்தப்பட்டால் நோயாளி மரணமடைந்து விடுவார் என்று நம்பினர். இருந்தும் தன் கருத்திலும் அதன் பயனிலும் நம்பிக்கை கொண்ட ஷெர்வுட் இந்த முறையைத் தொடர்ந்து பயன்படுத்தி பரவலான புழக்கத்துக்குக் கொண்டு வந்தார். அதே போல் இங்கிலாந்தின் முதல் இருதய மாற்று அறுவை சிகிச்சை நடத்திய மருத்துவர் குழுவில் இவரது பங்கு முக்கியமான ஒன்று.

விமானம் சுடப்பட்டு ஏறத்தாழ கருகிய நிலையில் கீழே விழும் படை வீரர்களுக்கு மருத்துவம் பார்ப்பது எளிதல்ல. முகம் பொசுங்கிய நிலையில், அதை கூடு கொண்டு போர்த்து மயக்க மருந்து செலுத்துவது முடியாத காரியம். இவர்களை குணப்படுத்த வேண்டி, நரம்புகள் மூலம் உடலினுள் மயக்க மருந்து செலுத்தும் முறையை வடிவமைத்தவர் பால் ஷெர்வுட். இவர் காட்டியதுதான் மயக்க மருந்து செலுத்தும் துறை முன்னேற்றப் பாதையில் எடுத்து வைக்க உதவிய முதல் வெளிச்சம்.

இந்த இரண்டு சாதனைகள் போதாதென்று தீராத முதுகு வலி சிகிச்சைக்கு The Sherwood Technique என்றொரு முறையை வடிவமைத்திருக்கிறார் இவர். முறுக்கிக் கொண்ட முதுகு நரம்புகள் வழியாக நோய் உடலெங்கும் பரவுகிறது என்று கண்டு, அதை நெகிழ்த்தி முதுகு வலி மட்டுமல்லாமல் அதன் பக்க விளைவாக ஏற்படக்கூடிய பல்வகை நோய்களையும் தீர்த்து வைத்திருக்கிறார் பால் ஷெர்வுட்.

மேலை மருத்துவம் டபுள் ப்ளைண்ட் சோதனை முறைகள் வழியாக நிரூபிக்கப்பட்ட உண்மைகளையே ஏற்றுக்கொள்வதை கொள்கையாக வைத்திருக்கிறது. ஆனால் அப்படி செய்வது தன்னிடம் சிகிச்சை பெறுபவர்களுக்கு செய்யும் அநீதி என்று பால் ஷெர்வுட் கருதியதால் இன்னும் அது பரவலான அங்கீகாரம் பெறவில்லை. இருந்தாலும் அது நல்ல ஒரு சிகிச்சையாகப் பலராலும் கருதப்படுகிறது.

இது தவிர அவர் இரண்டாம் உலகப் போரிலும் மருத்துவராகப் பணியாற்றி இருக்கிறார். இவரது சேவையைப் பாராட்டி யூகொஸ்லாவிய அதிபர் டிட்டோ பதக்கம் தர விரும்பினாராம். ஆனால் கம்யூனிஸ்டுகள் தரும் விருதுகளை யாம் ஏற்பதில்லை என்று இங்கிலாந்து அரசு அதற்கு அனுமதி மறுத்துவிட்டது.

பக்கவாதத்தால் இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்ட பால் ஷெர்வுட் தனது தொண்ணூற்று மூன்றாம் வயதில் காலமானார். பயனுள்ள வாழ்வு வாழ்ந்து பலரின் வாழ்வில் வெளிச்சம் கிடைக்கக் காரணமாயிருந்த அன்னாரின் நினைவுகளுக்கு இன்றைய பதிவை சமர்ப்பிக்கிறோம்.

இவரது முதுகு வலி குறித்த மேலதிக விபரங்கள் இங்கே. via bri’s soapbox.

image credit- The Independent

Advertisements

9 thoughts on “பால் ஷெர்வுட்- மக்கள் நல மருத்துவம்

 1. நன்றாக வருகிறது சார் தொடர்ந்து எழுதுங்கள்.உங்கள் மற்றையதுறை எழுத்துக்களை எங்கு தரப்போகிறீர்கள்
  டபுள் பைண்ட் என்று வந்திருப்பது டபுள் பிளைண்ட் தானே? டபுள் பைண்ட் தேடிப்பார்த்தேன் அப்படி ஒரு உளவியல் கோட்பாடு இருக்கிறதாமே.

  1. டபுள் ப்ளைண்ட்தான் சரி. இதற்குத்தான் படித்தவர்களைக் கேட்டு திருத்திக் கொள்ள வேண்டும் என்பது.- நான்தான் குருட்டுத்தனமாக தட்டச்சு செய்து விட்டேன். திருத்தி விடுகிறேன். நன்றி.

   உங்களுக்கு படிக்கிற தொல்லையைத் தர வேண்டாம் என்று பார்த்தேன், கேட்டு விட்டீர்கள், அதனால் சொல்கிறேன்: எழுத்து குறித்த விஷயங்களை வேறொரு புதிய இடத்தில் எழுதுகிறேன்- அங்கே பின்னூட்ட வசதி இல்லை. அவகாசப்பட்டால் படித்துப் பாருங்கள், உங்கள் பொழுது வீணாகக் கூடாது என்றுதான் எதுவும் சொல்லவில்லை.

   இங்கே இருக்கிறது- நேரம் கொஞ்சம் பற்றாக்குறையாக இருக்கிறது- அதனால் ஒரு வாரமாக எதுவும் எழுதவில்லை, எப்படி இருக்கிறதென்று சொல்லுங்கள்… http://patthotontru.blogspot.com/

   மிக்க நன்றி.

 2. அந்தத்தளம் தவறாமல் படிக்கின்றேன் தொடக்கத்திலிருந்தே :).
  டபுள் பைண்ட் என்பதை தேடிப்பார்த்தேன் ஒரு கோட்பாடு சொல்லுகிறார்கள் படித்துப்பாருங்கள் http://en.wikipedia.org/wiki/Double_bind சுவாரசியந்தான்.
  தட்டச்சும்போது ஏற்படும் தவறுகள் வழமைதானே.எழுதியவரே proof பார்க்கிறபோது தவறுகள் திருத்தப்படாமலேயே விடப்படுவதும் அதிகம் என்று நினைக்கிறேன்

  1. எப்படி சார் படிக்கறீங்க? நான் சொல்லவேயில்லியே. அப்புறம் எப்படி தெரிஞ்சது?

   எதிரிகளைக் குழப்பறதுக்காக ஒரே உரலிய வர்ட்பிரஸ், ப்ளாக்ஸ்பாட் ரெண்டிலயும் ஒப்பன் பண்ணியிருக்கேன். நீங்கள் எதை சொல்கிறீர்கள்?

   டபுள் பைண்ட் கேள்விப்பட்ட மாதிரி இருக்கிறது- படித்துப் பார்க்கிறேன். தூண்டுதலுக்கு நன்றி.

  2. அட அந்த சுட்டில முதல் வரியே, “Not to be confused with double-blind, a method to eliminate bias in scientific experimentation.” 🙂

   என்னிய மாதிரி நிறைய பேரு குழம்பிக்கிட்டுத் திரியறாங்க போல இருக்கு!

   இருதலைக் கொள்ளி எறும்பு என்று இங்கே சொல்வார்கள்…

   ஆனால் அப்படி ஒரு எறும்பை நான் பார்த்ததில்லை. அதுதான் டபுள் பைண்ட் போல இருக்கிறது!

 3. அடடே நான் வேட்பிரஸ் ஐச்சொன்னேன் இப்பத்தான் ப்ளக்ஸ்பொட்டை பார்க்கிறேன்.நீங்க கில்லாடி கிச்சாமி .நல்லாயிருக்கிறது அந்தப்பதிவு. இணையத்தில் பதிவுமறைவா இருக்கிற ஆள் நீங்கதான். வேட்பிரஸ் அப்படியே நகராமல் சுட்டிகளோடு நிற்கிறதே என்று பார்த்தேன்.கேட்டேன் நல்லதாகப்போய்விட்டது.சந்தோஷம்

  1. நன்றி. வர்ட்ப்ரஸ் தளம் முக்கியமாக அந்த சுற்றுச் சூழல் பற்றி எழுத நினைத்துத் திறந்து வைத்தது. பார்க்கலாம், அதையும் தொடரவே எண்ணம்! 🙂

   படிக்க நீங்கள் எல்லாம் இருக்கும்போது எழுதுவதற்குக் கசக்கிறதா என்ன!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s