பில் வைட்- எலும்புக் கூடுகளும் காலத்தின் வேரும்

நாம் நமக்கு ஆர்வமிருக்கிற துறைகளில் தொடர்ந்து கவனம் செலுத்துவது நமக்கு மட்டும் நல்லதல்ல, அது மானுட சமுதாயத்துக்கே புதிய கதவுகளைத் திறந்து விடுவதாக இருக்கிறது. இங்கே பாருங்கள், ஆஸ்டியோஆர்கியோலஜி என்று எதையாவது கேள்விபட்டிருக்கிறீர்களா?

1944ஆம் ஆண்டு பிறந்த பில் வைட் வேதியியலில் பட்டப்படிப்பு முடித்துவிட்டு கிளாக்ஸோ ஸ்மித் க்ளைன் நிறுவனத்தில் ஆய்வுப் பணியாளராக இணைந்தார். முப்பதாண்டுகாலப் பணியில் தனக்கு கிடைத்த நேரத்தில் பொழுதுபோக்காக அகழ்வாய்வு குறித்த ஆராய்ச்சிகள் செய்தார். தன் பணியிலிருந்து விடை பெற்றதும் முறைப்படி தொல்பொருள்துறையில் பட்டயப் படிப்பு முடித்து விட்டு, அதைத் தொடர்ந்து மானுட எலும்பு எச்சங்களின் ஆய்வுகள் குறித்து சிறப்புப் பயிற்சி பெற்றார்.


லண்டன் ம்யூசியத்தில் உள்ள பதினேழாயிரத்துக்கும் மேற்பட்ட அளவிலான அகழ்ந்த எலும்புக் கூடுகள் இவரின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டன. அவற்றை ஆய்ந்து “லண்டன் உடல்கள்” மற்றும் “லண்டனின் புதைந்த எலும்புகள்” என்ற இரு கண்காட்சிகள் நடத்தினார். இரண்டுமே பெருமளவில் பொதுமக்களின் ஆர்வத்தைத் தூண்டி பெரும் பாராட்டு பெற்றன.

லண்டன் உடல்கள் என்ற கண்காட்சி கற்காலம் முதல் சமகாலம் வரையிலான லண்டன் வாசிகள் உடலில் ஏற்பட்ட மாற்றங்களை எலும்புக்கூடுகள் வாயிலாக வெளிப்படுத்தியது. லண்டன் எலும்புகள் என்ற கண்காட்சி காலம்தோறும் லண்டன்வாசிகள் எத்தகைய உணவுண்டனர், அவர்களின் ஆரோக்கியம் எப்படி இருந்தது, எவ்வகை நோய்களால் பீடிக்கப்பட்டனர், அவர்களுடைய வாழ்வு முறை எப்படி இருந்தது என்ற தகவல்களைத் திரட்டித் தருவதாக இருந்தது.

இது எல்லாம் பெரிய அளவிலான சாதனையாகத் தெரியாமல் இருக்கலாம்- ஆனால் இப்படி நினைத்துப் பாருங்கள், உங்கள் பிறந்த ஊரில் கண்டெடுத்த எலும்புகளை வைத்து ஒருவர் கண்காட்சி அமைக்கிறார்- அது கற்காலம் முதல் இக்காலம் வரையிலான வரலாறு பேசுகிறது என்றால் அது நம் நாம் குறித்த அடையாள உணர்வுகளை எவ்வளவு ஆழப் பதிப்பதாக இருக்கிறது, நாமே பத்தாயிரம் ஆண்டுகளைக் கடந்து வந்த உணர்வைத் தருகிறது, இல்லையா?

காலத்தின் வேர்களை எலும்புகள் வாயிலாக அகழ்வாய்வு செய்த பில் வைட் தனது தொண்ணூற்று மூன்றாம் வயதில் காலமானார். அன்னாரது நினைவுகளுக்கு இப்பதிவை அர்ப்பணிக்கிறோம்.

image credit- Telegraph

Advertisements

9 thoughts on “பில் வைட்- எலும்புக் கூடுகளும் காலத்தின் வேரும்

 1. ச்சே! என்ன ஒரு வேலை சார்! அவனவன் காலா காலத்துக்கும் கம்ப்யூட்டரையும் லெட்ஜரையும் கட்டிக்கிட்டு மாரடிச்சு செத்துப் போயிடறான். இவனப் போல வாழனும் சார்!

   1. ஒரு எழுத்தாளர் நீங்க இப்படி அலுத்துக்கலாமா?

    பேனாவையும் பேப்பரையும் எடுத்துக்கிட்டு கற்பனைக் குதிரையைத் தட்டி விடுங்க!

     1. என்ன அப்படி சொல்லிட்டீங்க?

      வரும் பொங்கல் சமயத்துல நீங்களும் குட்டி லேஜண்டா அவதாரம் பண்ணப் போறதா பட்சி எஸ்எம்எஸ் பண்ணிச்சே?

      பட்சி சொன்னது எப்பவும் பலிக்கும், தெரியுமில்ல?

  1. சாய், அது குறித்து எழுதுவதற்குத் தோதாய் யாராவது காலமாகட்டும், அப்போது பார்க்கலாம்!

   யாரும் தப்பா நினைச்சுக்காதீங்க, இது ஜோக் மட்டுமே.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s