இசபெல்லா காரோ – சைஸ் ஜீரோ

இசபெல்லா காரோ என்ற இளம் பெண் தனது இருபத்தெட்டாவது வயதில் காலமானார். அவர் நினைவுக்கு இப்பதிவை அர்ப்பணிக்கிறேன்.

அனோரெக்ஸியா என்றழைக்கப்படும் நோய் மேலை நாடுகளில் பரவலாக இளம் பெண்களை பாதிக்கும் ஒன்றாக வளர்ந்திருக்கிறது. அந்த நோயின் அறிகுறி, உணவை வெறுத்தல்- மிகக் குறைவாகவே உட்கொள்வர், உண்டதையும் வாந்தி எடுத்து வெளியேற்றி விடுவார்கள். இசபெல்லா காரோ, ஒரு சாக்லேட் வில்லையையும், ஒரு கோப்பை தேநீரையும் உண்டு வாழ்ந்த நாட்களும் இருக்கின்றன. ஏறத்தாழ ஐந்தரை அடி உயரம் இருந்த இவர், ஒரு காலத்தில் தனது எடையை இருபத்தைந்து கிலோவுக்குள் கட்டுப்படுத்தி வைத்திருந்தார்.

இந்த நோய் மேலை நாட்டுப் பெண்களைத் தாக்குவதற்கு எத்தனையோ காரணங்கள் சொல்லப்படுகின்றன. அவற்றில் மிக முக்கியமான குற்றச்சாற்று விளம்பர நிறுவனங்களை நோக்கி வைக்கப்படுகின்ற ஒன்று- உடல் மெலிந்த பெண்களை விளம்பரங்களில் பயன்படுத்துவதோடு மட்டுமில்லாமல், எடை கூடிய மாடல்களை மெலியும்படி அவர்கள் கட்டாயப்படுத்துவதாகவும் சொல்கிறார்கள். இந்த விளம்பரங்களைப் பார்த்து இளம் பெண்கள் அழகு குறித்த தவறான புரிதலை அடைந்து, உருண்டு திரண்ட அங்கங்களை அவலட்சணமாக நினைக்கிறார்கள்- இதுவே இந்நோய்க்குக் காரணம் என்ற கருத்து உண்டு, அது தவிர உளச் சிக்கல்களையும் விவாதிக்கிறார்கள்.

ஆனால் இவ்வகைப்பட்ட பெண்கள் மேலை நாடுகளிலும் நம் ஊர் நகர்ப்புறங்களில் இருக்கிற படித்த பெண்களின் மத்தியிலும் மட்டுமே காணப்படுவதால், விளம்பர நிறுவனங்களை பிரதான காரணமாக சுட்டுவதில் தவறில்லை என்று நினைக்கிறேன். இது குறித்து ஜெயமோகன்கூட ஐஸ்வர்யா ராய் குறித்த கட்டுரையில் எழுதியிருக்கிறார்.

எது எப்படியோ, மரணப் படுக்கையில் கிடப்பது போன்ற கோலத்தை சைஸ் ஜீரோ என்று பாராட்டி ரசிப்பதும், அதை சின்னஞ்சிறு பெண்கள் அடைய நினைப்பதும் வக்கிர உணர்வு என்றுதான் நினைக்கிறேன். இதைக்கூட சரி செய்ய முடியாத சமுதாயம் தன் தார்மீக நியாய உணர்வுகளை இழந்து விட்ட ஒன்று என்று தோன்றுகிறது, இந்த நாகரீகம் தன் அழிவை நோக்கியே போய்க் கொண்டிருக்கிறது. வெகு விரைவில் இதற்கும் நாம் அஞ்சலி செலுத்த வேண்டி வரும்- ஆனால் அது நமக்கு நாமே செலுத்திக் கொள்ளும் அஞ்சலியாக இருக்கும்.

ஒரு மாடலாக வாழ்ந்து மறைந்த இசபெல்லா காரோ அனோரெக்ஸியாவுக்கு நல்ல ஒரு மாடலாக இருந்திருக்கிறார். இந்தப் புகைப்படத்தில் இருப்பவர்தான் இவர்- இவரது வாழ்வு நமக்கு ஒரு படிப்பினை.

image credit- CBS News

பின் குறிப்பு-

இட்லி வடை மற்றும் தமிழ் பேப்பர் போன்ற தரமான இணைய தளங்களில் கலர் கலராக படம் போடுகிறார்கள், நீ மட்டும் ஏன் அழுது வடிகிறாய் என்று ஒரு நண்பர் என்னை மின்னஞ்சல் மூலம் திட்டியிருந்தார். அவர் சொல்வதும் நியாயம்தானே?

இதோ இந்தியாவின் சைஸ் ஜீரோ- கத்ரீனா கைப்!


image credit- India News

Advertisements

13 thoughts on “இசபெல்லா காரோ – சைஸ் ஜீரோ

 1. அனொரெக்சியா பெரிய சமூகச்சிக்கலாக இங்கு இருக்கிறதா என்ன.பட்டினிதானே இருக்கிறது.
  வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழுகிற அனேகபெண்கள் எலும்புதெரியத்தான் இருக்கிறார்கள்.
  40 வயது பெண்கள் 60 வயது தோற்றத்தோடு இருப்பார்கள்.
  chronological age and biological age.

  மேலை நாடுகளில் உடல் எடை கூடுவதுதான் பெருஞ்சிக்கலாக இருக்கிறது.

  1. எனக்குத் தெரிந்து, என் நண்பர் ஒருவர் உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் தன் மகள் சாப்பிட மறுக்கிறாள் என்று சொல்லியிருக்கிறார்- உடன் வேலை செய்யும் பெண்கள் தங்கள் பெண்களைப் பற்றி இவ்வகை குறை சொல்கின்றனர். பொதுவாக பெண்கள் சாப்பிடும் அளவும் குறைய ஆரம்பித்திருக்கிறது.

   எனக்கு இது குறித்து விபரங்கள் சரியாக தெரியவில்லை.

   http://www.pep-web.org/document.php?id=ijp.065.0315a என்ற தளத்தில் “Alarmingly, the incidence of the illness appears to be on the increase: up to 200% in the last decade (cf. Life Magazine, 1982). I say ‘alarmingly’ both because the illness is serious (a 10–15% estimate of fatality) and because the long-term progn..” என்றும் http://lib.bioinfo.pl/pmid:2053633 என்ற ஆய்வில் ” CONCLUSIONS: Anorexia nervosa is more common than previously recognized. Among girls 15-19 years old it is a very common chronic illness. Its incidence has increased among females 15-24 years old but not among older women or among males,” எழுதியிருக்கிறது.

   இது எந்த அளவுக்கு உண்மையாகவோ பொய்யாகவோ இருப்பினும் இங்கு நகர்ப்புறங்களில் இருக்கும் பதின்ம வயதுப் பெண்கள் உண்டி சுருக்க ஆரம்பித்து விட்டனர் என்று பேசிக்கொள்ளப்படுகிறது.

 2. உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு என்றது ஔவை .உண்டியைக்கண்டு உவ்வே என்பது அனொரெக்ஸியா.காய்ச்சல் நேரம் வருவது.
  அனொரெக்சியா நேவோசா என்றால்தான் அது உண்டி சுருக்கும் நோய்.பதின்மவயதில் சாப்பாடு குறைவது சகஜம் தான்.ஆனால் அது நோய் என்று சொல்வதற்கில்லை.
  இன்றைய பதின்ம வயதுக்காரர் வீட்டுணவைச்சாப்பிடமறுத்தாலும் பாஸ்ட் புட் ஐ ஒரு பிடிபிடிப்பார்கள்.ஐஸ்கிறீம் விடமாட்டார்கள்.நொறுக்ஸ் சாப்பிடுவார்கள்.
  நோய்க்காரர் அப்படியல்ல.
  ஆனால் உங்கள் தகவல் பெற்றோருக்குத்தெரிந்திருப்பது நல்லது( டாக்டர்களுக்கும் நல்லது)உங்கள் பதிவு மக்களுக்கு சொல்லவேண்டியதைச்சொல்லுகிறது.

  ஆனால் பயப்படும்படி இல்லை என்றுதான் தோன்றுகிறது

  நீங்கள் சொல்வது போல ஊடகங்கள் கொண்டாடக்கூடாது.இங்கு மெலிவை அழகென்று இன்னும் சொல்லத்தொடங்கவில்லை.
  எதற்கும் கொஞ்சம் உங்கள் ஏரியாவை அவதானித்துப்பாருங்கள் …….

  உங்கள் ஏரியாவில் யாரும் சாப்பிடாவிட்டால் ’’நட்பாஸைக்கூட்டிவாங்க’’ என்று ஆட்கள் சொல்லவேண்டும்

  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  1. 🙂

   உங்களுக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்- இந்த ஆண்டு மன நிறைவு பெறக்கூடிய அளவுக்கு பெரிய பெரிய சாதனைகள் புரிய வாழ்த்துகள்.

   டாக்டர் கிட்டேயே உடல்நலம் குறித்து எதிர்த்துப் பேச நான் என்ன அவ்வளவு பெரிய முட்டாளா?

   நீங்கள் சொல்வதுதான் சரி, எனக்கு சந்தேகமே இல்லை.

   //எதற்கும் கொஞ்சம் உங்கள் ஏரியாவை அவதானித்துப்பாருங்கள் …….//- எத்தனையோ டாக்டர்கள் எனக்கு என்னென்னவோ பிரிஸ்கிரைப் பண்ணிஇருக்கிறார்கள். ஆனால் இவ்வளவு பயனுள்ள ஒன்றை யாரும் ப்ரிஸ்க்ரைப் பண்ணினதில்லை.

   நன்றி டாக்டர், இதை நான் பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ளப் போகிறேன்- “டாக்டர் சொல்லி இருக்கார்,” என்று என்னை என் மனைவிடம் இருந்து காப்பாற்றிக் கொள்ள. இனி என் உடல் புண்ணாகாது!

   இப்போதுதான் எனக்கு ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் புத்தாண்டு பிறக்கிறது 🙂
   /

      1. நட்பாஸ்

       அடக்கத்தைப்போதிக்கிறார் செயல் மூலம்.

       அவர் டாக்டர், எஞ்சினியர், அணுவிஞ்ஞானி, பொருளியல் வல்லுனர் எதுவாக இருந்தாலும் அவர் எப்போதும் நட்பாஸ் ஆகவேதான் தெரிவார்.அதுதான் அவரின் சிறப்பியல்பு என்று நினைக்கின்றேன்.மிகவும் சிரமமான காரியம்

       சகஜ சமாதியில் இருக்கிறாரோ என்ற சந்தேகம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s