பெட்டி பிரஞ்ச் – சிரிக்க அஞ்சாத ஒரு பெண்

சாதனையாளர்களுக்கு மட்டும்தான் சரித்திரத்தில் இடம் பெரும் தகுதி இருக்கிறதா என்ன? சாமானியர்கள் தம்மளவில் அசாதாரணமான வாழ்வு வாழ்ந்தவர்கள்தான்-  இது அவர்களோடு நெருங்கிப் பழகியவர்கள் மட்டுமே அறிந்திருக்கக்கூடிய ஒன்று.  உலக வரலாற்றில் இடம் பெறாதிருந்திருக்கலாம், ஆனால் எப்போதும் தன் கணவனை அல்லது மனைவியை அஞ்சி நடுங்கி அடக்க ஒடுக்கமாக உட்கார சொன்ன இடத்தில் உட்கார்ந்து படுக்கச் சொல்கிற இடத்தில் படுத்து எழுகிற ஒருத்தியோ ஒருத்தனோ தன்னிச்சையாக அறச் சீற்றம் கொண்டு ஆத்திரமாக கன்னத்தில் அறைந்தால், அது தன் எல்லைகளை நீண்ட போராட்டத்துக்குப் பின் விரித்துக் கொண்ட வகையில் அவர்கள் வாழ்வில் அரிய நிகழ்வுதானே? இதுதான் நம் எல்லாருக்கும் அன்றாட வாழ்வில் சாத்தியப்படக் கூடிய சாதனைகள்.

பெட்டி பிரஞ்ச் ரொட்டி செய்கிற ஒருவருக்குப் பிறந்தவர்.  வாழ்நாள் முழுதும் வறுமையில், பொருளாதார நிர்பந்தத்தில் அவதிப் பட்டதாகத் தெரிகிறது. இருந்தும் அவர் மெச்சத்தக்க ஒரு நகைச்சுவை உணர்வு கொண்டவராக இருந்தார் என்கிறார் அவரது நண்பர்.

உருளைக் கிழங்கு தோட்டத்தில் அவர் வேலை செய்த நாட்களை நினைவு கூர்கிறார் இந்த நண்பர். நாளெல்லாம் உருளைக் கிழங்கைக் கெல்லி மூட்டைகளில் சேகரம் செய்வது என்பது எவருடைய முதுகையும் முறித்து விடும். ஆனால் பிரஞ்ச் அப்போதும் விளையாடக் கூடியவராகவே இருந்தாராம். தங்கள் தாய் வேலை செய்கிற தோட்டத்துக்குச் சென்று அவரை சந்தித்துவிட்டுத் திரும்புகிற அவரது குழந்தைகள் வீட்டுக்கு வருகையில், அவர்கள் உடம்பெல்லாம் கரடு கரடாக புடைத்திருக்குமாம். சட்டையைக் கழட்டினால் உருளைக் கிழங்குகள் கீழே விழுந்து உருண்டோடும், என்கிறார் இவர்.

ஒரு முறை வீட்டில் துணி உலர்த்துகிற கம்பியிலிருந்து பல துணிகள் திருட்டுப் போய் விட்டனவாம். இந்த குற்றம் குறித்து விசாரிக்க வந்த வயோதிக காவல் அதிகாரி,  சம்பவம் நடந்த இடத்துக்கு வந்ததும் விசாரணையைத் தொடராமல்,  அங்கேயே மண்டியிட்டு திருடர்கள் தங்கள் தவறை உணர்ந்து திருந்தி பாவம் தொடாத வாழ்வு வாழ பிரார்த்தனை செய்யத் துவங்கி விட்டாராம். இதைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்த பெட்டி பிரஞ்ச் சற்று நேரத்திலேயே அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் வீட்டிலிருந்து குழந்தைகளின் பயன்படுத்தப்பட்ட துணிகளை அள்ளி வந்தாராம்- அவர்கள் அனுமதியுடன் தான்…

தனது எழுபத்து ஒன்றாம் வயதில் இயற்கை எய்திய அன்னாரின் நினைவுகளுக்கு இந்த இனிய இளங்காலைப் பொழுதோடு இப்பதிவையும் அர்ப்பணிக்கிறோம்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s