கனத்த இதயத்துடன்…

வெகு நாட்களுக்குப் பின்னர் இந்த சூழ்நிலையில் இப்படிப்பட்ட ஒரு பதிவை எழுத வேண்டிய நிலை வந்திருக்க வேண்டாம். தமிழ் மீனவர்கள் இருவர் இலங்கைக் கடற்படையினரால் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட நிலையில் டிவிட்டரட்டியினர் அருமையான முறையில் தங்கள் கடும் கண்டனத்தையும் கவன ஈர்ப்பு இயக்கத்தையும் நிகழ்த்திக் காட்டி இருக்கின்றனர். இது ஒரு பெரிய விஷயம்- இதை நிகழ்த்திக் காட்டியவர்கள் அனைவரும் பாராட்டப்பட வேண்டியவர்கள். தனிப்பட்ட முறையில் நன்றிக்கும் உரியவர்கள்.

ஆனால் எனது டிவிட் ஒன்று கூட இதில் கிடையாது. எவ்வளவோ முறை நானும் ஜோதியில் ஐக்கியமாகும் வகையில் கிளிக் செய்ய முனைந்தேன்- ஆனால் எனக்கு மனம் ஒப்பவில்லை.

ஓரிரு நாட்கள் ஆன நிலையில், எனக்கு தற்போதுதான் ஏன் என்பது ஒருவாறு புரிகிறது- ஒரு நண்பர் என்னை டிவிட்டச் சொல்லிக் கேட்டுக் கொண்டபோது, “ஒரே கிளிக்கில் புனிதனாவதை விட பாவியாகவே இருந்துவிட்டுப் போகிறேன், விடுங்க!’ என்று பதில் சொன்னேன். ஒரு டிவிட் செய்திருந்தால் நான் ஒன்றும் சோடை போயிருக்க மாட்டேன்- ஆனால் இப்போது ஆற அமர அத்தனை பேர் செய்த டிவிட்டுகளையும் படிக்கும்போது அவற்றில் இருக்கிற தார்மீக நியாயம், கோபம் போன்ற உணர்வுகளையும் தாண்டி எத்தனை காழ்ப்பு- தனி மனித வசை தவிர, சாதி, மத, இன உணர்வுகள் எவ்வளவு தீவிரமாக வெளிப்படுகின்றன என்பதைப் பார்த்தால் தூக்கி வாரிப் போடுகிறது. எனது ட்விட், இறந்த மீனவர்கள் மற்றும் இருக்கும் மீனவர்களின் துயர நிலை குறித்த விழிப்புணர்வை மட்டும் ப்ரோமோட் செய்திருக்காது, இந்த வெறுப்பு உணர்வுகளையும் ப்ரோமோட் செய்திருக்கும்.

ஒரு அளவுக்குமேல், இந்த டிவிட்களைப் படிக்க முடியாமல் ப்ரைவேட் மோடுக்குப் போனேன், அதன் பின், இப்படிப்பட்ட கம்யூனிட்டியில் யாருடன் எதைப் பகிர என்ற விரக்தியில் இன்று காலை எனது டிவிட்டர் அக்கவுண்ட்டை டெலிட் செய்தேன்.

டிவிட்டரில் நான் இருப்பதன் முக்கிய காரணம், இணையத்தில் எனக்கு இலவசமாகப் படிக்கக் கிடைக்கும் அருமையான கட்டுரைகளை அங்கு பகிர்ந்து கொள்வதன் மூலம் என் நன்றியை (அவர்களுக்கு ஒரு லிங்க் கிடைக்கிறதல்லவா?!) காட்ட வேண்டும் என்ற நினைப்புதான். அந்த வகையில் தற்போது இன்னொரு அக்கவுண்ட் துவங்கி இருக்கிறேன்-

“Let him step to the music which he hears, however measured or far away.” – Henry David ThoreauSat Jan 29 07:16:53 via web

என்று ஒரு கீச்சு கீச்சி. இங்கு ஒரு நாற்பது ஐம்பது பேரைத் தொடர்கிறேன்: இவர்களில் யாரும் திடீரென்று ஒரு நாள் அறச்சீற்றம் கண்டு பொங்கி எழப்போவதில்லை. இவர்களைத் தவிர வேறு யாரையும் இன்னும் கொஞ்ச நாளைக்குத் தொடர்வதாயில்லை.

காரணம், ஆயிரம் குறைகள் இருந்தாலும் நான் பாலோ செய்யும் இவர்கள் இறந்து போய் வெகு காலம் ஆகிறது- காலம் சென்ற உணர்வுகளின் ஆதிக்கத்தில் இருப்பவனுக்கு காலமானவர்களின் கம்யூனிட்டி இருப்பதற்குப் பொருத்தமாகவே இருக்கிறது.

இழப்புகள் ஈடு செய்ய முடியாதவை. பேர், பொருள் என்றால் திரும்ப சம்பாதித்துக் கொள்ளலாம்- குறைந்தது அந்த நம்பிக்கையையாவது தக்க வைத்துக் கொள்ளலாம். ஆனால் உயிர் போனால், அந்தக் குடும்பத்துக்கு ஏற்படும் இழப்பு நினைத்துப் பார்க்க முடியாதது. அதிலும் அகால மரணமெனில் அதன் பாதிப்பை இன்னதென்று கற்பனையும் செய்து பார்க்க முடியவில்லை.

கொடூரமான வகையில் கொலை செய்யப்பட்ட இந்த இரு மீனவர்கள் மட்டுமின்றி, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கடலலைகளில் உயிரிழந்தவர்கள் அனைவரின் நினைவுக்கும் இந்தப் பதிவை சமர்ப்பிக்கிறேன்.

இது ஒன்றும் பெரிய சாகசச் செயலல்ல- ஆனால் முழு மனதுடன், எந்த தயக்கமும் இன்றி, உணர்வுப் பூர்வமான என்னாலான சிறு சொல், செயல்.

பசியோடு இருக்கிறவனுக்கு செங்கல்லைக் கொடுக்கிற மாதிரியான காரியம் இது- ஆனால் தனிப்பட்ட முறையில் வெறுப்புக்கு அப்பாற்பட்டவனாக இருக்க முயற்சி செய்வது, இத்தகைய நிகழ்வுகள் திரும்ப நேராதிருக்க என்னாலான ஒரு சிறு கல்- அதனால் ஒரு பயனும் இல்லாமல் இருக்கலாம், ஆனால் அதற்காக ஒன்றும் செய்வதற்கில்லை.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s