அறம்- ஒரு குறுங்குறுங்கதை

(கோ__ மாவட்டத்தை சேர்ந்த என் பால்ய கால நண்பன் வீ___ அவர்களுடன் நான் ரசித்துப் படிக்கும் எழுத்தாளர்களில் ஒருவர் குறித்து விவாதிக்க நேர்ந்தது. அப்போது எழுதியது இது–  அதற்குமுன் ஒரு விஷயம்:

டா_____ (டால்ஸ்டாயை நினைவூட்டும் வகையில் பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரின் இடத்தில் உங்களுக்குப் பிரியமான எழுத்தாளரின் பெயரை இட்டு நிரப்பிக் கொள்ளுங்கள், இது அவரைப் பொருத்தமான முறையில் விவரிப்பதாக உங்களால் நினைத்துக் கொள்ள முடிகிறதென்றால். நான் குறிப்பிட்ட அந்த ஒரு எழுத்தாளரின் பெயரை வெளியிட்டு அவரை சங்கடப்படுத்த விரும்பவில்லை, அவருக்கு புகழ்ச்சி அறவே பிடிக்காதென்பதால். அத்தோடு, அவருடைய எதிர்மறை விமரிசகர்களின் நல்ல உள்ளங்களை ஊசி முனையளவும் புண்படுத்தக்கூட எனக்கு விருப்பமில்லை)

“தேவர்கள் ஏன் மனிதன் உயரும்போது அவனை அழிக்க முயற்சி செய்தார்கள் என்பது எனக்கு டா___ எழுதிய இந்த சிறுகதைகளைப் படிக்கும்போது புரிகிறது. இந்த ஈனப் பிறவி மேன்மை அடைவதா என்ற அறவுணர்வே தேவர்களை சீரழித்தது- பொறாமை அல்ல, அற உணர்வு.

தன் மேன்மை குறித்த நம்பிக்கை, தன் மேன்மைக்குகந்த அங்கீகாரம் தனக்கும் தன்னைப் போன்ற உத்தமர்களுக்கும் மட்டுமே பொருந்தக்கூடிய ஒன்று என்ற பிடிப்பு.  ஆசாபாசங்கள் மிகுந்த சாமானிய மனிதன், அவதூறுகளாலும் துரோகங்களாலும் கறைபட்ட எளியவன் ஒருவன் உன்னதத்தை நோக்கிய அவனது முயற்சியின் வெற்றி வெளிச்சத்தில் அவனுக்குரிய சிறுமைகள் மறக்கப்பட்டு விடக்கூடாதென்ற தார்மீக நியாயம்: இவைதான் தேவர்களை அசுரத்தன்மையுடன் செயல்படத் தூண்டியிருக்க வேண்டும்- அவன் மீண்டும் மீண்டும் காமத்திலும் குரோதத்திலும் தன்னிலை மறந்து தனக்கு சிறுமை தேடிக்கொள்ளும்போது அவர்களின் அந்தரங்கத்தில் இருந்த அறவுணர்வுதான் அவர்களுக்கு மன நிறைவு தந்திருக்க வேண்டும்.

ஆனால் இறுதியில் அழிந்தது உய்வு தேடி உயர்ந்த மானுடம் அல்ல- உன்னதங்கள் தமக்கு மட்டுமே உரியவை என்றும் குறைபட்ட மனிதர்களை அது சென்றடையலாகாது என்றும் வெஞ்சினம் கொண்ட தேவகணங்கள்தான்- அவர்களின் அறம் தன் அடையாளமிழந்து அதிகார வேட்கையின் வெற்று முழக்கமானது, நற்குணங்கள் இருண்மையடைந்து வீழ்ச்சியுற்றன.

எனக்கு எவ்வளவு கோபம் இருந்தாலும், ஒரு பேச்சுக்கு சொல்கிறேன், நானெல்லாம் அடையாளம் இல்லாதவன்- டா____ என்னை எப்படி வசைபாடினாலும் நான் அவரோடு என் நெஞ்சில் பகைமை கொண்டாட விரும்ப மாட்டேன். அவரோடு மோதுவது என்பது காட்டாறு போன்ற ஒரு இயற்கையின் சக்தியுடன் மோதுவது போன்றது.

கரைதட்டிய என் வீரத்தைப் பாராட்டி என்னைச் சுற்றி பலர் கூட்டமாய்க் கூடி நிற்கலாம். ஆனால் காலப்போக்கில் என்னைப் பாராட்டியவர்கள் என் வாழ்வை விட்டு அகல்வார்கள், எஞ்சிய நாட்களை தனிமையின் வலியுடன் வாழ வேண்டியவன் நான்தானே?

டா_____ எழுதும் கதைகளே அவரது அடையாளம். அவரது உயரிய எழுத்தை எந்த விமரிசனமும் எதுவும் செய்ய முடியாது. சொல்லப் போனால் அவர் இன்னும் இருபது ஆண்டுகள் கழித்தும் இதனினும் சிறந்த கதைகளை எழுதக் கூடும், ஆனால் அப்போது நான் எங்கே இருப்பேன், எனது விமரிசனங்கள் எங்கே இருக்கும்? அவரது கதைகளுக்கும் அவரது ஆளுமை குறித்த விமரிசனங்களுக்கும் எந்தப் பொருத்தமும் இருக்க முடியாது.

அவரைத் தனிப்பட்ட முறையில் விமரிசிப்பவர்களில் ஒருவனாக நானிருந்தால் அவர் எழுதி வெளிவரும் இதுபோன்ற ஒவ்வொரு சிறந்த கதையும் என் நெஞ்சில் இன்னும் அடர்ந்த இருண்மை சேர்க்கும், அதில் தொலைபட்டழிவது நானாகத்தான் இருக்கும். ”

உங்க ஆளுக்கு இது பொருந்துதா பாருங்க…

Advertisements

5 thoughts on “அறம்- ஒரு குறுங்குறுங்கதை

 1. கதை என்று பார்க்காமல் அந்த கதாபாத்திரங்களோடு வாழ்பவனே எழுத்தாளன். அந்த கதாபாத்திரங்களில் ஒன்றாக தானோ அல்லது தன்னைச் சுற்றியுள்ள ஒருவராகவோ இருக்கும் வாசகனே அந்த எழுத்தாளனின் ரசிகனாகிறான். எந்த கதையும் எத்தனை தடவை திருத்தினாலும் திருப்தி தராது சிறந்த எழுத்தாளனுக்கு. எந்த கதையும் எத்தனை தடவை படித்தாலும் புது புது கதையாக வடிவம் எடுக்கும் சிறந்த வாசகனுக்கு. பாஸ் நீ ஒரு சிறந்த வாசகன். சந்தேகமே இல்லை. வெறும் புகழ்ச்சி இல்லை. இந்த பின்னூட்டத்தை சிறப்பாக எழுத நினைத்தேன். ஏனோ உண்மைக்கு ஆடம்பர உடை பிடிப்பதில்லை.

  1. வீரா, என்னை அந்த எழுத்தாளரின் இடத்தில் பொருத்திப் பார்த்து விட்டாயே!

   இதைதான் கலியின் கூத்து என்று சொல்வார்கள் போல!

   வருகைக்கும் இடுகைக்கும் நன்றி, வீரா.

   நீயும் நிறைய எழுத வேண்டும்- மனம் வணங்கி ஏதோ ஒரு விஷயத்தைப் பற்றி நீ தொடர்ந்து எழுத வேண்டும், அதைப் பாராட்டி நான் பதிவு போட வேண்டும்- அந்த நாள் வர வேண்டும் என்பதே என் ஆசை.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s