நீ வாழப் பிறந்தவன்!

இது ஒரு திருத்தப்பட்ட மீள்பதிவு 🙂

 

ஒரு மாற்றத்துக்காக இன்றைக்கு நம்மை இணையதளம் போன்ற பொதுவெளிகளில் விரும்பத்தகாத பின்னூட்டங்கள்  இட்டு வெறுப்பேற்றுபவர்களை நாம் எப்படி கையாள்வது என்பதைப் பார்ப்போம்:

இவை குறிப்புகள்தான்- இங்கே முழுமையும் படிக்கவும்: Mashable

  1. எத்தனை பேர் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள் என்பதைவிட எத்தனை பேர் புரிந்து கொள்கிறார்கள் என்பதே முக்கியம்: ஆயிரம் பேர் இருந்தால் போதும், அவர்கள் மூலம் உங்கள் செய்தி எண்ணற்றவர்களைச்  சென்றடையும்.
  2. நூற்றுக்குப் பத்து பேர் நீங்கள் சொல்வதை எல்லாம் தன்னைக் குறித்து சொன்னதாகவே நினைப்பார்கள். அதற்குத் தயாராக இருங்கள். ஒவ்வொருத்தருக்கும் பதில் சொல்லிக்கொண்டு இருப்பது வீண் வேலை, என்கிறார் பெர்ரிஸ்- தராதரம் பார்த்து பின் வினையாற்றுங்கள்.
  3. எல்லாரும் விரும்ப வேண்டும் என்று நினைப்பது உங்களை சராசரி ஆளாக மாற்றி விடும்: அடிக்கடி மன்னிப்பு கேட்பது, எப்படியாவது ஒத்த கருத்தை உருவாக்கிக் கொள்வது, இதெல்லாம் வீணர்களுடன் தொடர்ந்து வழக்காடவும், நீங்கள் விரும்பும் விஷயங்கள் ஒதுக்கப்படவுமே வழி வகுக்கும்.
  4. நீ உருப்படியாக ஏதாவது செய்கிறாய் என்றால் நூற்றுக்கு தொன்னூத்தைந்து பேர் உனக்கு எதிர்மறை கருத்து தெரிவிப்பவர்களாகவே  இருப்பார்கள்- முப்பத்தைந்து மொழிகளில் என்னைத் திட்டுகிறார்கள் என்கிறார் பெர்ரிஸ்.
  5. முன்னேற வேண்டுமானால் முட்டாளாக இருக்க பயப்படக் கூடாது- உங்கள் மீதான விமரிசனங்களை ரசிக்கப் பழகுங்கள், சொல்லப்போனால் திட்டுபவர்களை இன்னும் நிறைய திட்ட வகை செய்து வளர்த்து விடுங்கள்- வயிற்றெரிச்சல் பட்டு சாகட்டும்.
  6. வாழ்ந்து காட்டுங்கள்: அதுதான் உங்கள்மீது கடுப்பாக இருப்பவர்களை இன்னும் கடுப்பேற்றித் தோற்கடிக்க  சிறந்த வழி- எனது வசவுகள் உங்களை பாதிக்கவில்லை என்றால் நான் தோற்றுவிட்டேன் என்றுதானே பொருள்?
  7. அமைதியாக உன் வேலையைப் பார்: நீ இந்த உலகத்தின் மீது எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தப் போகிறாய் என்பதில் உன் முழு கவனமும் இருக்கட்டும், மற்றவர்கள் உன்னை  பாதிக்காதபடிக்கு நீ உன்னைத் தற்காத்துக் கொள்.

(டிம் பெர்ரிஸ் வாரத்துக்கு நான்கே மணி நேரங்கள் வேலை செய்து வெற்றிகரமாக வாழ வழி சொல்பவர்!- அவரது வலைத்தளம் இங்கே.)

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s