க்ளிக்! வெளிச்சம்! – சுஜாதாவுக்கு அஞ்சலி

நைலான் கயிறு என்னுடைய முதல் நாவல். இது குமுதம் இதழில் 14 வாரங்கள்,  1968ல் வெளிவந்தது. இந்தக் கதையின் அமைப்பில் இப்போது இதை நோக்கும்போது பல திருத்தங்கள் செய்யலாம் எனத் தோன்றுகிறது. செய்யவில்லை. காரணம், இதை எழுதும்போது இருந்த என் இளமையும் தமிழில் புதியதாகப் பல முயற்சிகள் வசன நடையில் செய்து பார்க்கவேண்டும் என்கிற ஆர்வமும் இப்போது எனக்கு இல்லை. இடைப்பட்ட நாட்களில் எத்தனையோ சுகதுக்கங்களைப் பார்த்துவிட்டேன். உலகத்தைத் திருத்தும் உத்தேசத்தைக் கைவிட்டுவிட்டேன்,”

என்று எழுதுகிறார் சுஜாதா, நைலான் கயிறு நாவலின் முன்னுரையில் (என் கையில் இருப்பது கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட 2010ஆம் ஆண்டு பிரதி).

0o0o0o

சுநந்தா தன் டைரியில் எழுதுகிறாள்-

அன்புள்ள கடவுளுக்கு, உங்களுக்கு என் மகா மகா வந்தனங்கள் பல. என்னைப் படைத்ததற்கு. என்னை இந்த வருஷம் பதினெட்டு வயதாக்கி எனக்கு மனத்தைக் கொடுத்து, தனிமையைக் கொடுத்து, கிருஷ்ணன் என்ற அழகான அயோக்கியனைக் கொடுத்து, அவனுடைய மகா தீவிரமான ஆண்மை என்கிற வலிமைப் புயலிலே என்னை அலைக்கழிக்க வைத்து என்னை மறந்து நான் செந்தீயால் எரிந்த மூன்று இரவுகளுக்காக, வலித்த வலிகளுக்கு, சிந்தின கண்ணீருக்கு, சிரித்த சிரிப்புக்கு, என் இதயத்தின் படபடப்பை எனக்குக் கேட்க வைத்ததற்கு, என்னிடமிருந்து பிரவாகமாய்ப் பாய்ந்த ஆசைக்கு, நான் பிறவி எடுத்ததற்கு, தாங்க் யூ காட்.”

இத்தனையும் ஒற்றை வாக்கியத்தில். படிப்பதில் உங்களுக்கு ஏதேனும் சிரமம் தெரிந்ததா? அதுதான் வாத்தியார்.

சுநந்தா எழுதுகிறாள்-

“எதனால் நடந்தது? என் தனிமையாலா? எந்தச் சந்தர்ப்பத்தில் நான் விட்டுக் கொடுத்தேன்? மார்மேல் ஜாஸ் ரெகார்ட்களை அணைத்துக் கொண்டு வந்தானே, வந்து கதவில் பிரேம் போட்டாற் போல் நின்றானே? அப்போதா?”

அறுபதுகளின் இறுதிகள் நம் பண்பாட்டின் வேர்களை மேற்கத்திய நாகரீகம் வலிமையாகத் தாக்கத் துவங்கிய காலமாக இருந்திருக்க வேண்டும்.

௦௦௦௦௦௦

“அவன் அதற்குப் பதில் சொல்லாமல் இடி இடிப்பது போல் சிரிக்கிறான். அவள் முகத்தைப் பார்ப்பதற்காகக் காரினுள் இருந்த ரேடியோவின் பொத்தானை அமுக்குகிறான். ரேடியோவில் இருந்து முதலில் லேசான வெளிச்சமும் அதைத் தொடர்ந்து இசையும் பிறக்கிறது.

அந்த மங்கிய வெளிச்சத்தில் அவள் அவனை என்னவோ கேட்பதுபோல் புருவங்களை நெறித்துப் பார்க்கிறாள். அவனோ ஒரு புன்னகையால் அவளிடம் யாசிப்பது போல் எதற்கோ கெஞ்சுகிறான்.

அப்போது ரேடியோவிலிருந்து ஒரு ‘ட்ரம்ப்பட்’டின் எக்காள ஒலி நீண்டு விம்மி விம்மி வெறி மிகுந்து எழுந்து முழங்குகிறது. அதைத் தொடர்ந்து படபடவென்று நாடி துடிப்பதுபோல் அமுத்தலாக நடுங்கி அதிர்கின்ற காங்கோ ‘ட்ரம்’களின் தாளம்… அவன் விரல்களால் சொடுக்குப் போட்டு அந்த இசையின் கதிக்கேற்பக் கழுத்தை வெட்டி இழுத்து ரசித்தவாறே அவள் பக்கம் திரும்பி ’உனக்குப் பிடிக்கிறதா’ என்று ஆங்கிலத்தில் கேட்கிறான். அவள் இதழ்கள் பிரியாத புன்னகையால் ‘ஆம்’ என்று சொல்லித் தலை அசைக்கிறாள்.”

இதை எழுதியது ஜெயகாந்தன்- அக்கினிப் பிரவேசம்!

ஜெயகாந்தனை இந்தக் கதையை எழுத வைத்த தார்மீக நியாயங்கள் குறித்த அக்கறையே சுஜாதாவையும் நைலான் கயிறை எழுத வைத்திருக்க வேண்டும் (“உலகத்தைத் திருத்தும் உத்தேசத்தைக் கைவிட்டுவிட்டேன்,” என்கிறாரே இப்போது)- உலகமயமாக்கத்தின் வலிமையான துவக்கங்களின் விளைவாக நாம் எதிர்கொண்ட பண்பாட்டு சிக்கல்களுக்கு சுஜாதா நமக்கு அளித்த எளிய தீர்வுகள் அவரை மேம்போக்கான எழுத்தாளராகச் சித்தரித்து விட்டன. ஆனால் அவர் எவரையும் விட தீவிரமாகவும் துல்லியமாகவும் அதன் பிரச்சினைகளை அறிந்திருந்திருப்பார் என்பது என் எண்ணம்.

சுஜாதாவின் கதைகளில் அவர் சொன்னதை மட்டும் படித்துச் செல்லாமல், அவர் பட்டும் படாமலும் தொட்டுக் காட்டும் விஷயங்களை கவனமாகப் படித்தால், அவரது இடம் சரியான வகையில் அறியப்படக் கூடலாம் என்று நினைக்கிறேன்.

காலம்தான் இதற்கு விடை தர வேண்டும்.

௦௦௦௦

“ரோஹிணி, எல்லா கேஸிலும் ஒரு க்ளிக் சப்தம் உண்டு. அது எப்போது எவர்மூலம் கேட்கும் என்பது தெரியாது. ஆனால் நிச்சயம் ஒரு தருணத்தில் கேட்கும். அப்போது பளிச்சென்று எல்லாம் புரியும். இப்போது உன் எதிரே தெரிவது ஒரு நிழல் பிம்பம். ஒரு அவுட்லைன். வெளிக்கோடு. உள்ளே முகம், மூக்கு எல்லாம் நிழலிரவில் இருக்கிறது. க்ளிக்! வெளிச்சம்! எல்லாம் எல்லாம் அதன் அதன் இடத்தில் விழுந்து விடும். அப்புறம் ஜன கண மண!”

என்கிறார் ராமநாதன், நைலான் கயிறில்.

இதை நான் நம்புகிறேன்- இந்த க்ளிக் சப்தத்துடன் சுஜாதாவின் எழுத்தின்மேல் மீள்வெளிச்சம் விழுந்ததும் – “நீராடும் கடலுடுத்த” என்று அடுத்த ஆட்டம் ஆரம்பிக்கப் போகிறது.

அதுவரை காத்திருப்போம்.

மறைந்த மாபெரும் எழுத்தாளர் சுஜாதாவுக்கு என் பணிவான அஞ்சலிகள்.

Advertisements

6 thoughts on “க்ளிக்! வெளிச்சம்! – சுஜாதாவுக்கு அஞ்சலி

 1. நண்பரே – எனக்கும் ஜெயகாந்தனின் அக்னிப் பிரவேசம் ரொம்பவே பிடித்த கதை. சரியாகச் சொன்னீர்கள் – அறுபதுகளின் பண்பாட்டு தாக்கம் சுஜாதா, ஜெயகாந்தன் கதைகளில் அதிகமாக வெளிப்பட்டது. ஹிப்பித் தலை, நுனிநாக்கு ஆங்கிலம், பாப்/ஜாஸ் குழுக்களின் பாடல் வரிகள், வீட்டுக்கடங்காத பிள்ளைகள் என பண்பாட்டை துரத்தியபடி, பல சமயம் அதையும் ஓவர்டேக் செய்த பாத்திரங்கள் இவர்களது படைப்புகளில் வெளிப்பட்டது இல்லையா?

  //சுஜாதாவின் கதைகளில் அவர் சொன்னதை மட்டும் படித்துச் செல்லாமல், அவர் பட்டும் படாமலும் தொட்டுக் காட்டும் விஷயங்களை கவனமாகப் படித்தால், அவரது இடம் சரியான வகையில் அறியப்படக் கூடலாம் என்று நினைக்கிறேன்.//

  உண்மைதாங்க. அவரோட ஒரு கட்டுரை மிகப் பிரபலமாக இருந்தபோது, என் மகன் அமெரிக்காவிலிருந்து அப்படி என்னப்பா எழுதியிருக்கீங்கன்னு கேட்டான்னு அடுத்த வாரம் எழுதியிருந்தார் – இதில் பல கதைகள் ஒளிந்திருக்கின்றன. இது போல் பல விஷயங்கள் சொல்லாமல் சொல்லிச் சென்றிருக்கிறார் 🙂

  1. தங்கள் கமெண்ட்டுக்கு மிக்க நன்றி. என்னை இது ஊக்குவிப்பதாக இருக்கிறது.

   முதல் தடவை இங்கே பின்னூட்டம் போடுவதால் ஒரு விஷயத்தை நான் சொல்ல வேண்டியிருக்கிறது- நீங்கள் சுவாரசியமாகவோ கருத்துச் செறிவுடனோ மெனக்கெட்டோ உங்கள் பின்னூட்டத்தை எழுதியிருப்பதாக எனக்குத் தோன்றினால் அதை அப்படியே தூக்கிக் கொண்டு போய் பதிவாக போட்டு விடுவது இங்கே வழக்கம், அப்புறம் வருத்தப்படக் கூடாது. 🙂

   நண்பர் வரசித்தன் அந்த வகையில் இங்கே ரொம்பவும் அடிபட்டிருக்கிறார்….

 2. //முதல் தடவை இங்கே பின்னூட்டம் போடுவதால் ஒரு விஷயத்தை நான் சொல்ல வேண்டியிருக்கிறது- நீங்கள் சுவாரசியமாகவோ கருத்துச் செறிவுடனோ மெனக்கெட்டோ உங்கள் பின்னூட்டத்தை எழுதியிருப்பதாக எனக்குத் தோன்றினால் அதை அப்படியே தூக்கிக் கொண்டு போய் பதிவாக போட்டு விடுவது இங்கே வழக்கம், அப்புறம் வருத்தப்படக் கூடாது//

  அடடா! இதென்ன வம்பாபோச்சு. இது வேற யாரோட டெக்னிக் மாதிரி இருக்கு..இருங்க மாட்டிவிடறேன் 😉

  1. யாருங்க அவர்? யாரா இருந்தாலும் எங்க இருந்தாலும் அங்கியே அப்படியே இருக்கட்டும்- நாமல்லாம் ரொம்ப லைட் வெய்ட்டு.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s