ஒரு சிறு செய்தி

ஒரு பத்திருபது நாட்களுக்கு முன் இந்த ப்ளாகுக்கு கூகுள் ரீடரில் மட்டும் சரியாக பதின்மூன்று வாசகர்கள் இருந்தார்கள். பொறுமையின் திலகங்களான நண்பர்கள் பதின்மூவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளாவிட்டால் நான் மனிதனே அல்ல. அவர்கள் அனைவருக்கும் என் நன்றிகள்- நீங்கள் ஒவ்வொருவரும் உன்னதமானவர்கள், உங்கள் ரசனை நுட்பமான ஒன்று. உங்களைப் புகழ வார்த்தைகளே கிடையாது.

இப்போது என்ன பிரச்சினையென்றால் சென்ற ஓரிரு வாரங்களில் நம் வாசகர்களின் எண்ணிக்கை இருபத்து மூன்றாக உயர்ந்திருக்கிறது. இத்தனைக்கும் இந்தக் காலக்கட்டத்தில் மூன்றோ நான்கோ பதிவுகள்தான் போட்டிருக்கிறேன். நாற்பது வயது வரை அப்புவாக இருந்தவன் கோவைக்கு மூன்று நாட்கள் பயணம் போய் விட்டுத் திரும்ப வந்து தன் பழகிய அறையின் பழைய கண்ணாடியைப் பார்க்கும்போது அவன் ராஜா மாதிரி உயர்ந்திருப்பதை அறிந்தால் எப்படி இருக்கும்?

அப்படி இருக்கிறது எனக்கு இப்போது.

O0O0O

புதிதாக நம் பதிவோடையில் இணைந்து நம்மோடு பயணிக்கப்போகிறவர்கள் தேர்ந்த வாசகர்களாக இருப்பார்களோ என்று ஒரு ஐயமாக இருக்கிறது.  ப்ராஸ்டி என்ற கோமாளி பற்றியெல்லாம் இவர்கள் படிப்பார்களா என்று சந்தேகமாக இருப்பதால் கொஞ்சம் போல ட்ராக் மாற நினைக்கிறேன்-

தவிர, ஏன் மறைந்தவர்களை நினைத்துப் பார்க்க வேண்டும்? என்ற கேள்விக்கான நியாயங்கள் இன்றும் வலுவாக இருந்தாலும், இனியும் அவர்களை மறப்பதற்கில்லை என்று ஜெயமோகனின் அறம் சிறுகதைகளைப் படிக்கும்போது தோன்றுகிறது. நமக்குத் தெரிய வந்தவர்களின் வாழ்வை கதை கட்டுரைகள் வாயிலாகப் பதிவு செய்ய அவரது கதைகள் உத்வேகம் தந்திருப்பதாக நினைக்கிறேன். நம் நண்பர் கிரி தானும் தனக்குத் தெரிய வந்த ஒருவரைப் பற்றி கதை எழுதிக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார். அவர் அதைப் பதிவேற்றியதும் சொல்கிறேன்.

என்னைப் பொருத்தவரை, நான் எந்த நோக்கத்தில் நினைவுக் குறிப்புகளை ஆங்கிலத்தில் இருந்து தமிழ்ப்படுத்தித் தந்தேனோ அதன் நோக்கம் நான் நினைத்ததை விட சிறப்பாக நிறைவேறியிருக்கிறது. அதற்குக் காரணம் நான் கிடையாது என்பது எனக்கு நன்றாகவே தெரியும்- ஏதோ என்னாலான சிறு கல்லைப் போட்டேன், அவ்வளவுதான்.

ஆனால் கால நதியின் ஈரமில்லாப் படுகையைக் கடக்க நினைவுகளுக்கு சொல் வடிவம் தந்து அதை நேசத்தில் குழைத்து வலுவான ஒரு பெரும் பாலம் கட்டமைத்து வாழ்ந்தவர்களின் நினைவை வாழ்பவர்களின் இருப்போடு பிணைக்க வழி காட்டியிருக்கிறார் ஜெயமோகன் என்றால் தவறில்லை. இதை நிறைய பேர் நிறைய தடவை செய்திருக்கலாம். ஆனால் நான் இந்தக் கலை முழுமையடைவதை கடந்த சில வாரங்களாக நிகழ்காலத்தில் காண நேர்ந்தது ஒரு அரிய அனுபவமென்று நினைக்கிறேன்.  நண்பர் கிரி தன் கையில் வைத்திருக்கும் கதையே இந்த மாற்றத்துக்கு சாட்சி. அது அப்புறம்.

O0O0O0O

எது எப்படியோ, இனி இந்த ப்ளாக் புதிதாக வந்து சேர்ந்திருக்கும் தேர்ந்த வாசகர்களை வாழ்த்தி, அவர்களின் தேர்ந்த ரசனையை முன்னிட்டு “போக்குவரத்துச் செய்திகள்” என்று பெயர் மாற்றி, முகம் மாற்றி, காத்திரமான பதிவுகளை தரும் என்பதை அடித்துச் சொல்கிறேன்.

நன்றி. தொடர்பில் இருங்கள் 🙂

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s