சிறுகதையின் வடிவ அமைப்பைத் தீர்மானிப்பது எது?

என்னடா இவன் இருந்தாப்ல சிறுகதையோட வடிவம் அது இதுன்னுப் பேசறானேன்னு யாரும் கோபப்படாதீங்கப்பா. ஒரு வாசகனாத்தான் இதை எல்லாம் எழுதறேன், யாரையும் இப்படித்தான் நீயும் எழுதியாகணும்னு சொல்றதுக்காக இதை எழுதலே (அப்படியே நான் எழுதிட்டாலும்!).

Free Indirect Style பத்தி அங்க இங்க கொஞ்சம் கொஞ்சம் படிச்சேன். ரொம்ப ஆற்றல் வாய்ந்த உத்தி. உயர் இலக்கியத்துக்கு இது ஒரு ட்ரேட்மார்க். இதைப் பயன்படுத்தினால் எழுதுபவனும் படிப்பவனும் இருவருமே எளிதாக பாத்திரங்களுக்குள் போய் விடலாம். நல்ல எழுத்தாளர்கள் இதைக் கையாள்வதில்தான் தனித்து நிற்கிறார்கள். இப்படி என்னென்னவோ சொல்றாங்க. மேல பாத்த சுட்டியைத் தட்டி இங்க இருந்து தப்பிச்சுப் போகாதவங்க, நான் இனி எழுதறதைப் படிச்சுத்தான் ஆகணும். விதி.

இரவுக்கு முன்பு வருவது மாலை என்ற நாவலில் ஆதவன்-

தியாகராஜரின் சமாதி. மெயின் ரோட்டை விட்டு விலகி ஒரு ஒதுக்குப்புறமான இடத்தில் இருந்தது. அருகில் சில குடிசைகள் இருந்தன. ஏழைகள் வாழும் பகுதி. சமாதி நன்றாகச் செலவழித்துக் கட்டப்பட்டிருந்தாலும், எளிமையாகச் சுத்தமாக இருந்தது. அநாவசியத் தடபுடல்கள் இல்லை; படாடோபம் இல்லை. நுழைந்தவுடன் ஒரு பெரிய ஹால். ராமாயணத்திலிருந்து சில தேர்ந்தெடுத்த காட்சிகளைச் சித்தரிக்கும் படிமங்கள், ஹாலைச் சுற்றிலும் வைக்கப்பட்டிருந்தன. சுவர்களில் தியாகராஜ கீர்த்தனைகள் பொறிக்கப் பட்டிருந்தன. ஹாலை அடுத்து ஒரு சிறிய கோயில். தியாகராஜர் ஆராதித்த ராமர். தியாகராஜரின் உருவப்படம். பின்பக்கத்தில் அந்த சமாதியைக் கட்டுவித்த பெங்களூர் நாகரத்தின அம்மையாரின் சிலை இருந்தது. சற்று தூரம் நடந்து சென்றால் ஒரு படித்துறை. குதூகலமாக, சுருதி சுத்தமாக ஓடும் காவேரி. யார் பார்க்க வேண்டுமென்று, புகழ வேண்டுமென்று ஓடுகிறது அந்த காவேரி. யார் கேட்க வேண்டுமென்று, ரசிக்க வேண்டுமென்று தன் கீர்த்தனைகளை இயற்றினார் தியாகராஜர்? யாருக்கும் எதற்கும் கவலைப்படாமல் தன் சொந்தப் போக்கில், சொந்த நியமங்களுக்கு உட்பட்டு ஓடும் காவேரியைப் பார்த்து சங்கருக்குப் பொறாமையாக இருந்தது.

காவேரியில் காலை நனைத்துக் கொண்டார்கள். படித்துறையில் சிறிது நேரம் உட்கார்ந்தார்கள். சங்கர் கண்களை மூடிக் கொண்டான். நதியோடும் ஓசை; மர இலைகளின் சலசலப்பு; பட்சிகளின் குரல்- ஓசைகளின் அழகும் அருமையும் தெரிய வேண்டுமானால், குருடனாகப் பிறக்க வேண்டுமென்று அவன் நினைத்தான். படிப்பு, நாகரிகம், வக்கணையான பேச்சும் பாவனைகளும்- ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையிலும் மட்டத்திலும் புழங்குவதற்காக அவன் அணிய வேண்டியிருந்த எண்ணற்ற போர்வைகளைக் கழற்றி எறிந்துவிட்டு இந்த நதிக்கரையில், இந்த ஓசைகளின் மத்தியில், பெயர் இல்லாமல் டெலிபோன் நம்பர் இல்லாமல் இப்படியே உட்கார்ந்திருக்க முடியுமானால்! ஸ்லேட்டில் பழைய பாடத்தை அழித்துவிட்டு புதிய பாடத்தை எழுதுவது போல், இந்தப் பழைய சங்கரை அழித்துவிட்டு ஒரு புதிய சங்கரை உருவாக்க முடியுமானால்!

“ஏய் நிஷ்டையா?” என்றான் கிச்சா.

சங்கர் கண்களைத் திறந்தான்.

இங்கு எது ஆதவன் குரல், எது சங்கரின் குரல் என்று பார்க்கலாம், சுவையாக இருக்கும். சங்கரின் குரல் இடாலிக்கில்.

===>

தியாகராஜரின் சமாதி. மெயின் ரோட்டைவிட்டு விலகி ஒரு ஒதுக்குப்புறமான இடத்தில் இருந்தது. அருகில் சில குடிசைகள் இருந்தன. ஏழைகள் வாழும் பகுதி. சமாதி நன்றாகச் செலவழித்துக் கட்டப்பட்டிருந்தாலும், எளிமையாகச் சுத்தமாக இருந்தது. அநாவசியத் தடபுடல்கள் இல்லை; படாடோபம் இல்லை. நுழைந்தவுடன் ஒரு பெரிய ஹால். ராமாயணத்திலிருந்து சில தேர்ந்தெடுத்த காட்சிகளைச் சித்தரிக்கும் படிமங்கள், ஹாலைச் சுற்றிலும் வைக்கப்பட்டிருந்தன. சுவர்களில் தியாகராஜ கீர்த்தனைகள் பொறிக்கப் பட்டிருந்தன. ஹாலை அடுத்து ஒரு சிறிய கோயில். தியாகராஜர் ஆராதித்த ராமர். தியாகராஜரின் உருவப்படம். பின்பக்கத்தில் அந்த சமாதியைக் கட்டுவித்த பெங்களூர் நாகரத்தின அம்மையாரின் சிலை இருந்தது. சற்று தூரம் நடந்து சென்றால் ஒரு படித்துறை. குதூகலமாக, சுருதி சுத்தமாக ஓடும் காவேரி. யார் பார்க்க வேண்டுமென்று, புகழ வேண்டுமென்று ஓடுகிறது அந்த காவேரி. யார் கேட்க வேண்டுமென்று, ரசிக்க வேண்டுமென்று தன் கீர்த்தனைகளை இயற்றினார் தியாகராஜர்? யாருக்கும் எதற்கும் கவலைப்படாமல் தன் சொந்தப் போக்கில், சொந்த நியமங்களுக்கு உட்பட்டு ஓடும் காவேரியைப் பார்த்து சங்கருக்குப் பொறாமையாக இருந்தது.

காவேரியில் காலை நனைத்துக் கொண்டார்கள். படித்துறையில் சிறிது நேரம் உட்கார்ந்தார்கள். சங்கர் கண்களை மூடிக் கொண்டான். நதியோடும் ஓசை; மர இலைகளின் சலசலப்பு; பட்சிகளின் குரல்- ஓசைகளின் அழகும் அருமையும் தெரிய வேண்டுமானால், குருடனாகப் பிறக்க வேண்டுமென்று அவன் நினைத்தான். படிப்பு, நாகரிகம், வக்கணையான பேச்சும் பாவனைகளும்- ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையிலும் மட்டத்திலும் புழங்குவதற்காக அவன் அணிய வேண்டியிருந்த எண்ணற்ற போர்வைகளைக் கழற்றி எறிந்துவிட்டு இந்த நதிக்கரையில், இந்த ஓசைகளின் மத்தியில், பெயர் இல்லாமல் டெலிபோன் நம்பர் இல்லாமல் இப்படியே உட்கார்ந்திருக்க முடியுமானால்! ஸ்லேட்டில் பழைய பாடத்தை அழித்துவிட்டு புதிய பாடத்தை எழுதுவது போல், இந்தப் பழைய சங்கரை அழித்துவிட்டு ஒரு புதிய சங்கரை உருவாக்க முடியுமானால்!

“ஏய் நிஷ்டையா?” என்றான் கிச்சா.

சங்கர் கண்களைத் திறந்தான்.

===

இது ஆச்சா? அடுத்தது- எல்லாக் கதையும் இந்த மாதிரி ரொம்ப நுட்பமா இருந்தாகணுமா இல்லை அப்பட்டமா மிகை உணர்ச்சியோட பேசலாமா? அப்படி கொஞ்சம் செயற்கை கலந்து மிகை உணர்ச்சி கூட்டி எழுதப்பட்ட கதைகள் உயர் இலக்கியம் ஆகுமா ஆகாதா? இப்ப வருவது என் கருத்து- நீங்க சொல்லுங்க உங்க கருத்தை:-

பெர்னார்ட் ஷாவின் நாடகங்கள் போன்ற கருத்துக் களத்தில் செயல்படும் டிரமாடிக்கான கதைகள் உரை வாயிலாக வெளிப்படுவதை நோக்கியே போக வேண்டும் என்று நினைக்கிறேன். உணர்வுகள் மேலோங்கிய நிலையில்தான் நீண்ட உரைகள், உரையாடல்கள் நிகழ வேண்டும், இல்லையா? அப்பத்தான் வாசகன் ஈடுபாட்டோட பாத்திரங்களின் எண்ண ஓட்டத்தைத் தொடர முடியும், இல்லீங்களா?

இல்லாவிட்டால் இவ்வகைக் கதைகளை நுட்பமாக எழுதும்போது நீண்ட உரைகள், விவாதங்கள் கதையில் வந்தால் அவை இடைச்செருகல்கள் மாதிரி ஆகி விடும். எனவே கதையின் வடிவம் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் கருத்துகள் வெளிப்படுவதை நோக்கியே செல்ல வேண்டும்.

ஏன் இப்படி என்பதற்கு இரு உதாரணங்கள்-

அ முத்துலிங்கம் எழுதிய என்னைக் கொல்லட்டும் என்னை உதைக்கட்டும் என்ற கட்டுரையில் (?!), முதலில் வைரத்தை நதிநீரோட்டத்தில் சட்டத்துக்குப் புறம்பாக சலிக்கும் பெண்களைச் சந்திக்கிறார்.

இந்த ஒதுக்குப்புறமான இடத்தை அவர்கள் பிடித்திருக்கிறார்கள். தினமும் காலையிலிருந்து இரவு வரைக்கும் அரிப்பார்கள். இன்னும் ஒரு வைரமும் அகப்படவில்லை. ‘கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறதா?’ இது என் கேள்வி.

‘ஏழைகளுக்கு அதிர்ஷ்டம் அடிக்கக்கூடாதா?’ இது அவர்கள்.

‘வைரம் கிடைத்ததும் அந்தப் பணத்தை என்ன செய்வதாக உத்தேசம்?’

இதற்கு சின்னப்பெண் மறுமொழி கூறினாள். ‘அதோ, அங்கே தெரிகிறதே ஒரு பெரிய பளிங்குவீடு. அதைச் சொந்தமாக்குவேன்.’ அவள் வெடிப்பதுபோல வாயைத் திறந்து சிரித்தாள்.

முத்துலிங்கம் அவர்களைப் புகைப்படம் எடுக்கிறார். அது குறித்து இப்படி எழுதுகிறார்-

நான் அந்தப் பெண்களை எடுத்த படம் அருமையாக விழுந்திருந்தது. பார்த்தால் தாயும் மகளும் என்று சொல்லவே முடியாது. அக்காவும் தங்கையும் போலவே தோளுக்கு மேல் கைபோட்டபடி நின்றார்கள். நான் பெரிய புகைப்படக்காரன் அல்ல; என்னுடைய காமிராவும் பெரிய விலையுயர்ந்த காமிரா என்று சொல்வதற்கில்லை. ஆனால் அந்தப் படத்தில் எல்லா அம்சங்களும் பொருந்தியிருந்தன. பூச்சொரிந்த மலையும், உயர் மரங்களும், படிகம் போன்ற ஆற்று நீரும், அடக்க முடியாமல் எழும்பிய சிரிப்பை கொஞ்சமாக வெளியே விடும் பெண்களும். அவர்களின் அழகு அப்படி அபூர்வமாக அமைந்ததற்கு காரணம் அந்தக் கண்களில் துள்ளிய சூரிய ஒளிதான்.

அவர் மறு தடவை அந்தப் பக்கம் போகும்போது வேறு இருவர் அங்கே. இந்தப் பெண்களைப் போலீஸ் பிடித்துக்கொண்டு போய் விட்டதாம். அதை சொல்லிவிட்டு முத்துலிங்கம் சொல்கிறார்,

திரும்பவும் காருக்குள் ஏறியதும் இன்னொரு தடவை அந்தப் படத்தை வெளியே எடுத்துப் பார்க்கத் தோன்றியது. மனைவி ‘கண்கள் என்ன பளபளப்பாக இருக்கின்றன’ என்றார். உண்மைதான், எப்படியும் ஒரு பளிங்குவீடு வாங்கவேண்டும் என்ற கனவு அந்தப் பெண்களின் கண்களில் மினுமினுத்தது. உற்றுப் பார்த்தபோதுதான் அது சூரிய ஒளி இல்லை, வைரக் கற்கள் என்பது தெரிந்தது.

அவ்வளவுதான் கதை. ஆசை, பேராசையில் இருக்கிற அப்பாவித்தனம், பணம் பாஷாணம் என்று எந்த விளக்கமும் இல்லை. இந்த உரைகளை எல்லாம் நாமே எழுதிக் கொள்ள வேண்டும். இதைப் பற்றியெல்லாம் விவாதமாக முத்துலிங்கம் எழுதியிருந்தால் எவ்வளவு கொடுமையாக இருக்கும்?

நுட்பமான உண்மைகளை சொல்லும் கதைகள்தான் நுட்பமாக எழுதப்பட வேண்டும். பட்டவர்த்தனமாக விஷயங்களைப் பேசும் கதையில் எல்லாம் அப்பட்டமாக வெளிச்சம் போடப்பட வேண்டும், மிகையுணர்ச்சி இருந்தால் கூட தப்பில்லை. அப்போதுதான் கதை கருத்துகள் வெளிப்படுவதையும் அவற்றுக்கிடையான போராட்டங்களையும் தாங்கக்கூடிய கனம் கொண்டதாக இருக்கும்.

இன்னொரு கதை நம்ம ப்ளாகில் அண்மைக்காலமாகத் தென்படும் ரா கிரிதரன் எழுதியது. மௌன கோபுரம். சும்மா செய்திக் குறிப்பு மாதிரி உணர்ச்சிகளை ரொம்ப மட்டு பண்ணி எழுதியிருக்கார். ஒரு பார்சி முதியவர், பம்பாயில் உள்ள கழுகுகளின் எண்ணிக்கை குறைவதை தினமும் கணக்கு பண்றார். அதுக்காக அவங்க கோயிலுக்குப் போய் கவலைப்படறார், கழுகுகளைக் காப்பாத்த ஆசைப்படறார். எதுக்காக? மரண பயம். சாவும் அதன் பின்னும். அருமையா எழுதியிருக்கார் கிரிதரன்.

இங்கேயும் மரணம்னா என்ன, அதுக்கு அப்புறம் என்ன ஆகும் அப்படியெல்லாம் பேச முடியாது. பேசினா நல்லா இருக்காது. அவரோட பயம் உள்ள இருக்கறதுதான் கதைக்குப் பொருத்தம். உணர்ச்சிகள் உள்ளடங்கிய கதைக்குத் தகுந்த வடிவத்தை அவர் தேர்ந்தெடுத்திருக்கார்.

வாதம் விவாதங்கள் வழியா நகரும் கதைகளுக்கு அதுக்குத் தகுந்த வடிவத்தைத் தேர்ந்தெடுப்பதுதான் சரியா இருக்கும். அந்த வாதம் விவாதம் பண்ற இடத்தை நோக்கி உணர்ச்சிகள் வாசகனைக் கொண்டு வரணும். அந்த மாதிரி கதைகளே தேவையான்னு நீங்க கேட்டா பதில் இல்ல. அதே மாதிரி எதையுமே சொல்லாம மூடி மறைச்சு புதிர் மாதிரி எழுதற கதை உங்களுக்கு வேணாம் நுட்பமா இருக்கலாம், எங்களுக்கு குறுக்கெழுத்துப் போட்டி வெச்சா மாதிரி இருக்கு, ஏன் எங்க உயிரை வாங்கறீங்க, அப்படின்னு கேக்கற வாசகர் கிட்டயும் பேச முடியாது, இல்லையா?

உனக்குப் படிக்கத் தெரியலைன்னு திட்டலாம். உனக்கு எழுதத் தெரியலைன்னு திட்டிக்கிட்டே போயிருவான். தேவையா இது? ரெண்டும்தான் இருக்கட்டுமே- ஒன்றோன்றும் ஒவ்வொரு நோக்கத்தில் எழுதப்படுகின்றன, ஒவ்வொரு தேவையை நிறைவேற்றுகின்றன, சரிதானே இது?

——–

ஜெமோ ஏன் மிகை உணர்ச்சியோட (சில சமயம் செயற்கையான காட்சி அமைப்பு மற்றும் உணர்ச்சி வேகத்தோட) கதைகளை எழுத வேண்டி வருதுன்னு இது நியாயப்படுத்துன்னு நினைக்கறேன்- ஹி ஹி :))

அப்பாடா ஒரு வழியா பாயிண்டுக்கு வந்தாச்சு!

பின்குறிப்பு: எதுக்கும் இந்தக் கட்டுரையையாவது படிச்சுருங்க- How Fiction Works Discussion Review: Free Indirect Style BY ANNE STAMESHKIN

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s