உலகம்- ஒரு சிறிய வரலாறு

உலகத்தில் எது நடந்தாலும் அதற்கு ஒரு காரணம் இருக்கிறது என்று நினைக்கிறேன். இது சம்பந்தமாக ஒரு அறிவியல் கோட்பாடு வைத்திருக்கிறேன் 🙂

நாம் வாழும் உலகத்தின் இயல்பைத் தீர்மானிப்பது நிகழ்தகவு விதிகள்தான். இந்த உலகில் உள்ள ஒவ்வொரு அணுவும், அல்லது இந்த உலக அணு, உலகாகிய நூல், ஏதோ ஒன்று – நிகழ்தகவு சாத்தியங்கள் நிறைந்த ஒரு மேகத்தில் இருக்கிறது. எதுவும் எங்கேயும் இருக்கலாம்- சில இடங்களில் சாத்தியங்கள் மிகுந்திருக்கின்றன, சில இடங்களில் குறைந்திருக்கின்றன என்று சொல்கிறார்கள். இதைப் பார்க்கும்போது நிகழ்வுகள் ஒன்றையொன்று தொடர்ந்து சங்கிலி போல் வருவதில் ஆச்சரியமில்லை.

நான் கோம்ப்ரிச் என்ற பெயரையே நினைத்து ஆண்டுகள் பல ஆகியிருக்கும். ஒரு திகைப்பு உணர்வுடன் அவர் எழுதிய புத்தகத்தைப் படித்திருக்கிறேன். உலகத்தில் கலை குறித்து சொல்வதற்கு இருக்கிற அனைத்தையும் அவர் சொல்லி விட்டார் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். இப்போதும்கூட, தானே தனியாக படைப்பவன் என்று கிடையாது, மிஞ்சிப்போனால் ஜீனியஸ் என்பவன் நம்மை விட ஒரு அடி முன்னே செல்கிறவன் என்று நான் நினைத்தால் அதற்குக் காரணம் அவர்தான் (அதற்காக அந்த ஒரு அடியை குறைத்து மதிப்பிடுகிறேன் என்று நினைக்க வேண்டாம்- எவ்வளவு பெரிய பயணமும் காலடியில் எடுத்து வைக்கிற முதல் அடியில்தான் துவங்குகிறது என்று சொல்வார்கள்: இந்த முதல் அடியை ஜீனியஸ்கள்தான் எடுத்து வைக்கிறார்கள்).

விஷயத்துக்கு வருகிறேன். இங்கு கிரி கோம்ப்ரிச்சை நம் கவனத்துக்கு கொண்டு வந்தாரா? பாருங்கள், இரண்டு நாள் கூட ஆகவில்லை, மழை பெய்வதற்கு முன் தூறல் விழுந்த மாதிரி, கிரியின் நினைவூட்டலைத் தொடர்ந்து நிகழ்தகவு மேகம் கோம்ப்ரிச் எழுதிய “உலகம்- ஒரு சிறிய வரலாறு” என்ற புத்தகத்தை நம் கையில் கொண்டு வந்து தந்திருக்கிறது – இங்கே பாருங்கள்.

சிறிய வரலாறு என்றவுடன் ஏதோ முப்பது, நாற்பது பக்கங்கள் இருக்கும் என்று நினைத்து ஏமாந்துவிட வேண்டாம் நண்பர்களே, இந்த 304 பக்க புத்தகம் குழந்தைகளுக்காக எழுதப்பட்ட வரலாறு.

படித்துப் பார்த்துவிட்டு எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள்.

image credit – tom moody

3 thoughts on “உலகம்- ஒரு சிறிய வரலாறு

    1. சொல்லவே வேண்டாம் சார்! 🙂

      நீங்க எப்பவும் உள்ளேதான் ஐயா- உங்களையும் இன்னும் மூணு பேரையும் நினைச்சுதானே பதிவே போடறோம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s