பெயர்க் காரணம்- தொடர் பதிவு

நண்பர் ஸஸரிரி கிரி அவர்கள் பெயர்க் காரணம் குறித்து தொடர்பதிவிட என்னை அழைத்திருக்கிறார். என்னை என்றால் என்னை மட்டுமல்ல, “பதிவைப் படிக்கும் எல்லோரையும் இந்தத் தொடர்ப்பதிவைத் தொடர அழைக்கிறேன்,” என்று போர்வை அழைப்பு (blanket call என்பதன் முழிபெயர்ப்பு) விடுத்திருக்கிறார். நன்றி கிரி, நல்ல பதிவு- அதற்கு திருஷ்டி பரிகாரமாக இதோ இந்தப் பதிவையும் படித்து விடுங்கள்.

“ஆர்ப்பரிக்கும் சித்தம் என்னகமாகிய அளப்பரி கடலில் சாந்தமுற்றது- அபாக்கிய கணத்தில் வணிகனொருவன் தன் கலத்துடன் தன்னுலகையும் இழந்தது போல” என்பது அஷ்டவக்ர கீதையின் வாக்கியம் (2.24)

இதையே ஷேக்ஸ்பியர், தன் வெனிஸ் நகர வர்த்தகன் என்ற நாடகத்தில் இவ்வாறு எதிரொலிக்கிறார் (3-2)

சலானியோ-
அ! இதற்கென்ன சொல்வாய் நீ? கேள், இதுதான் முடிவு, அவன்
தன் கப்பலை இழந்து விட்டான்.
சலாரியோ-
அவனது இழப்புகளுக்கு இது முடிவாகட்டும் என நான் வேண்டுவன்.

கீழை தேச மேலை தேச செவ்விலக்கியங்களை ஆய்வு செய்து இந்த ப்ளாகுக்கு “போக்குவரத்து செய்திகள்” என்று பெயர் வைத்து, “சவம், சும்மாக் கெடக்க மாட்டே?”” என்று பயங்கரமான உட்பொருள் பொதிந்த ஹெட்டரை வைத்தேன் என்று சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன்.

ஆனால் உண்மை அதுவல்ல தோழர்களே.

ஐந்து ஆண்டுகளுக்கு முன் 72,05,847 வாகனங்கள் தமிழக சாலைகளில் பயணித்தன. கூடுதலாக கடந்த ஐந்து ஆண்டுகளில் எண்பத்து மூன்று லட்சத்துக்கும் அதிகமான வாகனங்கள் சாலைக்கு வந்துள்ளன. போக்குவரத்துத் துறையில் மட்டும் 1.12 லட்சம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.

இத்தனை பேர் தமிழக சாலைகளைக் களமாய்க் கொண்டு செயல்படுகின்றனர். இவர்களில் மிக அற்பமான அளவில் “போக்குவரத்துச் செய்திகள்” என்று கூகுளிட்டால்கூட நமக்கு தினமும் ஆயிரம் ஹிட்கள் கிடைக்கும்.

இதுதான் இந்த ப்ளாகின் பெயர்க்காரணம் என்பதைத் திறந்த மனதுடன் வெளிப்படுத்துகிறேன். ஆனால் பாருங்கள், தினமும் நாற்பது ஹிட்கள் கிடைத்தால் பெரிய விஷயமாக இருக்கிறது. இப்படி பேர் வைத்தது தவிர, நூற்றுக்கணக்கான ஹிட்கள் கிடைக்கும் நாட்களில் என் வீட்டு வாசலில் இருக்கும் பிள்ளையாருக்கு சிதறு தேங்காய் வேறு உடைக்கிறேன்- ஒன்றும் புண்ணியமில்லை. இதை சொல்வதில் எனக்கு எந்த வெட்கமும் இல்லை.

நான் சொல்லி யாரும் எதுவும் செய்யப்போவதில்லை என்பது எனக்கு நன்றாகவே தெரியும் – இருந்தாலும் ஒரு அசட்டு நம்பிக்கையில், எனக்கு லேட்டஸ்டாக அறிமுகமான எழுத்தாளர்- காலம் தன் கைகளில் இவருக்காக பல பரிசுகளையும் உயர் விருதுகளையும் ஏந்தி நிற்கிறது- திரு மண்குதிரை அவர்களைத் தன் பெயர்க்காரணம் குறித்து தொடர்பதிவிட அழைக்கிறேன்.

நன்றி.

image credit- ice carving secrets

Advertisements

6 thoughts on “பெயர்க் காரணம்- தொடர் பதிவு

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s