அறம் வெல்க!

நமது டிவிட்டர் நண்பர் vNattu அவர்கள் அண்மையில் இவ்வாறு குறைபட்டுக் கொண்டார்-

http://twitter.com/#!/vNattu/status/60628859267198976

உடுக்கை இழந்தவன் கை போல என்று ஏதோ வள்ளுவர் சொன்னாரே, அந்தக் குறளை நான் தினமும் நாலு தடவை- மின்சார ரயிலில் ஏறும்போதும் இறங்கும்போதும்- மனதில் நினைத்துப் பார்ப்பதுண்டு. அது எனக்கு ஹனுமான் சாலீசா பாராயணம் செய்தது மாதிரியான ஒரு மனவலிமையைத் தருகிறது.

வள்ளுவர் வாக்குப்படி நண்பர் மனமகிழ இதோ என்னாலான ஒரு சிறு பதிவு:

எவ்வளவுதான் ஆணவம் படைத்தவனாக இருக்கட்டும், அவனுக்குள்ளும் மனசாட்சி என்று ஒன்று உண்டு. அது எப்போது வேண்டுமானாலும் விழித்துக் கொள்ளும்.  தன் தவறை உணர்ந்து மனம் திருந்திய நிலையில் அவன் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் சத்தியத்தின் வடிவாகும்- அதற்கு சத்தியத்தின் வலிமை உண்டு: அசோகச் சக்ரவர்த்தி கலிங்க யுத்தத்துக்குப் பின் மனம் வருந்தி சொன்ன சொற்கள் என்றும் சரித்திரத்தை நீங்காது: இதோ இந்த நீண்ட உரையைப் போல.

என்னை மன்னிக்க வேண்டுகிறேன், எனக்கு பேரரசனாகும் ஆசை கிடையாது, அது என் பிழைப்பல்ல.  எனக்கு யாரையும் ஆட்சி செய்யவோ, வெல்லவோ ஆசை கிடையாது.  இயன்றவரை அனைவருக்கும் நான் உதவியாய் இருக்க வேண்டுமென்றே விரும்புகிறேன்- யூதன், யூதனல்லாதவன், கருப்பு மனிதன், வெள்ளை மனிதன் அனைவருக்கும் உதவ நினைக்கிறேன். நாமனைவரும் ஒருவருக்கொருவர் உதவியாய் இருக்கவே விரும்புகிறோம், மனிதர்களின் இயல்பு அப்படி.  நாமனைவரும் அடுத்தவரின் மகிழ்ச்சியோடு உறவாடி வாழ நினைக்கிறோம், அவர்களின் துயரோடல்ல. இந்த உலகில் அனைவருக்கும் இடமிருக்கிறது, இந்த பூமி செழுமை வாய்ந்தது, அது நம் ஒவ்வொருவருக்கும் தேவையானதைக் தர வல்லது.

நாம் வாழும் வகை சுதந்திரமாகவும் அழகாகவும் இருக்கக் கூடும். ஆனால் நாம் அதற்கான வழியை மறந்து விட்டோம்.

பேராசை மனிதர்களின் ஆன்மாவுக்கு விஷம் வைத்துவிட்டது, உலகை வெறுப்பால் வேலி கட்டி பிரித்து வைத்திருக்கிறது…

என்று துவங்கும் இந்த உரையைக் கேட்டவர் யாரும் இதை மறக்க முடியாது. நீங்களும் கேளுங்கள், படித்துப் பாருங்கள். 

“மனிதனின் ஆன்மாவுக்கு சிறகுகள் தரப்பட்டு விட்டன, அவன் உயரப் பறக்கத் துவங்கி விட்டான்,” என்ற இந்த மாபெரும் சர்வாதிகாரியின் கனவுகள் மெய்ப்பட்டு, மானுடம் தன் உயர்ந்த லட்சியங்களை வெல்லும் நாள் வரும் என்ற நம்பிக்கையே நமக்கு இது போன்ற நாட்களின் கசப்பு நினைவுகளை மறந்து நன்னாட்களை அமைத்துக் கொள்ளும் உத்வேகம் தரும் என்று நினைக்கிறேன்.

அறம் வெல்க!

2 thoughts on “அறம் வெல்க!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s